மேட்டுப்பாளையத்தில் கழகப் பரப்புரை!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பெரியாரின் 148 வது பிறந்த நாள் விழா தெருமுனைக் கூட்டம் அக்-10 மாலை 4.30 மணி அளவில் அன்னூர் கஞ்சப்பள்ளி பிரிவு பேருந்து நிறுத்தத்தில் விஷ்ணு தலைமையிலும், மாலை 6 மணி அளவில் அபிராமி தியேட்டர் முன்பு தென்றல் இராமச்சந்திரன் தலைமையிலும், நகரச் செயலாளர் அமுல்ராஜ் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. கூட்டத்தில் யாழினி கிருஷ்ணன் பகுத்தறிவுப் பாடல்களைப் பாடினர்.

பரிமளராஜன் (முகநூல் பொறுப்பாளர்), இக்பால் (மதிமுக), சந்திரசேகர் (தபெதிக), இரவிச்சந்திரன் (கலைஞர் பேரவை), வேலுச்சாமி (திக), அமைதி (இராமச்சந்திரன் அவர்களின் பேத்தி), பத்மநாபன் (ஜாஒவிமு), நிர்மல்குமார் (மாநகரச் செயலாளர்) ஆகியோர் உரையாற்றினர். நிறைவாக கழகப் பொருளாளர் துரைசாமி நிறைவுரையாற்றினார். சூலூர் பன்னீர்செல்வம் நன்றியுரையாற்றினார்.

தோழமை அமைப்பினர் ரங்கராஜ் பக, ஆதரவாளர் பைசல், தமிழ்ப் புலிகள் கட்சித் தோழர்கள், இராமச்சந்திரன் அய்யா குடும்பத்தினர் அறிவுக்கொடி, இந்திரஜித் ஆகியோர் கலந்து கொண்டனர். தோழர்கள் சூலூர்.பன்னீர்செல்வம், முகில்ராசு, யாழினி, கிருஷ்ணன் ஆகியோர் கடைகளில் துண்டறிக்கை வழங்கி நன்கொடை வசூலித்தனர்.

பெரியார் முழக்கம் இதழ் 22102026

You may also like...