அம்பேத்கர் சிலைக்கு கழகம் மரியாதை!

கடலூர்: ஏப்ரல்-14 புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளில் கடலூர் மாவட்டக் கழகத்தின் சார்பாக கடலூர் மஞ்ச குப்பத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு பெரியார் சிவா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி, ராஜேந்திரன், திராவிட மகிழன், சத்யா, சதீஷ், திருமூர்த்தி, அசோக், வீரா, அறிவழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நங்கவள்ளி: ஒன்றிய கழகத்தின் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கர் 135 வது பிறந்தநாளையொட்டி ஏப்ரல்-14 காலை 11.00 மணியளவில் நங்கவள்ளியில், சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் தலைமையில் நங்கவள்ளி பேருந்து நிலையத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து முழக்கம் எழுப்பப்பட்டது. நங்கவள்ளி நகரச் செயலாளர் சந்திரசேகரன், சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தங்கதுரை, சேலம் மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் பிரபாகரன், தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் கவியரசு, நங்கவள்ளி பகுதி புகழேந்தி, பிரபாகரன், ஹரி, தினேஷ், சித்திக் உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டனர்.

சென்னை: ஏப்ரல் 14, காலை 9 மணிக்கு அடையாறு அம்பேத்கர் மணிமண்டபம், பெரிய மேடு, மந்தைவெளி ஆகிய இடங்களில் உள்ள அம்பேத்கர் சிலைகளுக்கு தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் தலைமையில் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மாவட்டத் தலைவர்கள் மா. வேழவேந்தன், சேத்துப்பட்டு இராசேந்திரன், மாவட்ட அமைப்பாளர்கள் ம.கி. எட்வின் பிரபாகரன், ந. தட்சிணாமூர்த்தி, மாவட்டத் துணைச் செயலாளர் இராவணன், சுகுமார், பிரகாஷ் மாஸ்டர், அனிதா மணிரத்னம், சு. கோபிநாத் (திருவல்லிக்கேணி பகுதி தலைவர்), மயிலை மனோகர், சிவா, தேன்மொழி, மனோஜ், எழிலரசன், காயத்ரி, லட்சுமணன், ப்ரவீன் aks, பாரி சிவா, தினகரன், பிரீத்தி, உதயகுமார், அஸ்வின், பிரனேஷ், மஞ்சுநாதன், பிரபாகரன், ஜெயந்தி, ஜேம்ஸ், தினியா, சஞ்சய், குறளரசி, ஆர்த்தி, நஜ்முனிஷா, அகராதி, இயல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர்.

ஈரோடு: தெற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு ஏப்ரல்-14 அன்று காலை படத்திற்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டது. மாவட்டத் தலைவர் செல்வராஜ் மற்றும் தோழமை இயக்கத் தோழர்கள் கலந்து கொண்டனர்.

திருப்பூர்: மாவட்டக் கழகத்தின் சார்பில் ஏப்ரல்-14 அன்று காலை 09.30 மணியளவில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில் அம்பேத்கர் சிலைக்கு கழகப் பொருளாளர் துரைசாமி தலைமையில் மாவட்டத் தலைவர் முகில் ராசு முன்னிலையில் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. மாவட்ட அமைப்பாளர் சங்கீதா கொள்கை முழக்கங்களை எழுப்பினார்கள். அண்ணல் அம்பேத்கர் அவர்கள் குறித்தும் அவர் ஆற்றியபணி குறித்தும் இனி நாம் மேற்கொள்ளவிருக்கும் செயல்பாடுகள் குறித்து கழகத்தின் மாவட்டத் தலைவர் முகில் ராசு உரையாற்றினார். நிறைவாக கழகப் பொருளாளர் துரைசாமி நிறைவுரையாற்றினார். தமிழ்நாடு மாணவர் கழக யாழினி சமத்துவ நாள் உறுதிமொழியினை கூற உறுதி மொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. கழகத் தோழர் இனியன் நன்றியுரையாற்றினார். மாநகரத் தலைவர் தனபால், மாநகர செயலாளர் மாதவன், தெற்கு பகுதி பொறுப்பாளர் ராமசாமி, வடக்கு ஒன்றிய அமைப்பாளர் அய்யப்பன், ராஜ்குமார், குணா, கருணாநிதி, மார்க்சிய முற்போக்கு அமைப்பு தமிழமுதன், சரசுவதி, யாழினி உள்ளிட்ட கழகத் தோழர்கள் திரளாக கலந்து கொண்டார்.
கோவை: புரட்சியாளர் அம்பேத்கரின் 135 வது பிறந்தநாளையொட்டி கோவை மாவட்டக் கழகம் சார்ப்பில் வடகோவை உணவுகிடங்கில் உள்ள சிலைக்கு மாநகர துணைத் தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. நிர்மல்குமார், வெங்கட், கிருஷ்ணன், நிலவழகன், சத்தியமூர்த்தி, தரணி, கதிரவன், நவீன் கலந்து கொண்டனர்.

You may also like...