மன்னையில் வாசகர் வட்டம் தொடக்க விழா பெரியாருக்கு எதிராக அம்பேத்கரை நிறுத்த சதி
சென்னை ஐஐடியில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் தடை செய்யப்பட்டதை கண்டித்து திருவாரூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் ஜூன் 4ம் தேதியன்று மன்னார்குடியில் பொதுக்கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. முறையாக 5 நாட்களுக்கு முன்பே காவல்துறையில் அனுமதி கேட்டும் காவல்துறை திடீரென அனுமதி மறுத்தது. அதைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி குமாரசாமி திருமண அரங்கத்தில் கடந்த ஜூன் 15ம் தேதி மாலை கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று கவிஞர் கலைபாரதி உரையாற்றினார். திராவிடர் விடுதலைக்கழக திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு கருத்தரங்கத்திற்கு தலைமையேற்றார். திராவிடர் விடுதலைக்கழக தலைமைக்குழு உறுப்பினர்கள் தூத்துக்குடி பால்பிரபாகரன், திருப்பூர் துரைசாமி, ஈரோடு இரத்தினசாமி, கோபி, இராமஇளங்கோவன், தமுமுக மாவட்ட செயலாளர் நூர்தீன் ஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றினர். அம்பேத்கர் பெரியார் “சமூக விடுதலையின் கலகக் குறியீடுகள்” என்ற தலைப்பில் திராவிடர் விடுதலைக்கழக தலைவர் தோழர் கொளத்தூர்மணி உரையாற்றினார். அவர் தனது...
