Tagged: ராஜாஜி

எல்லை மீட்பு: ராஜகோபாலாச்சாரிக்காக பல்டி அடித்த ம.பொ.சி.!

எல்லை மீட்பு: ராஜகோபாலாச்சாரிக்காக பல்டி அடித்த ம.பொ.சி.!

தேவி குளம், பீர்மேடு பகுதிகளை தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்ற போராட்டம் தொடர்பாக தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சிவ ஞானத்துக்கும் பெரியாருக்குமிடையே நடந்த கடிதத் தொடர்புகள் குறித்து பெரியார் நிகழ்த்திய உரை, 5.1.2012 மற்றும் 12.1.2012 இதழ்களில் வெளியிட்டிருந் தோம். தேவிகுளம், பீர்மேடு என்ற பகுதிகளை தமிழகத்தோடு இணைத்துக் கொள்வதையும் தாண்டி, தமிழ் நாட்டின் முழுமையான தன்னாட்சிக் கோரிக்கைகளாக, ராணுவம், வெளி நாடு உறவு நீங்கலாக, ஏனைய அனைத்து உரிமைகளும் தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட வேண்டும். இந்தியை தேசிய மொழியாக்கும் முயற்சியை கைவிட வேண்டும்; தமிழ்நாட்டின் எல்லைகளை நிர்ணயிப்பதில் எல்லை ஆணையம் செய்துள்ள ஓர வஞ்சனைகளை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் போராட்டத்தில் இணைக்கப்பட வேண்டும் என்று பெரியார் வலியுறுத்தினார். இதை பெரியாரிடம் ஒப்புக் கொண்ட ம.பொ.சி., பிறகு, தனது போக்கை மாற்றிக் கொண்டதை பெரியார், அதில் விரிவாக விளக்கி இருந்தார். தொடர்ந்து பெரியார் உரையின் நிறைவு பகுதியை இங்கு வெளியிடுகிறோம். “இதையெல்லாம்...

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (19) தமிழகத் தலைநகராக சென்னை தொடர பெரியாரின் பங்களிப்பு வாலாசா வல்லவன்

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (19) தமிழகத் தலைநகராக சென்னை தொடர பெரியாரின் பங்களிப்பு வாலாசா வல்லவன்

சென்னையை ஆந்திராவுக்கு தலைநகராக்க வேண்டும் என்ற திட்டத்தை வகுத்துத் தந்ததே பிரதமர் நேரு தான் என்ற கருத்தை வலியுறுத்தி, 13.2.1953 அன்று சென்னை கடற்கரையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பெரியார் பேசினார். பெரியார் உரையின் தொடர்ச்சி இது. சென்னை நகரம் பறி  போவதை எதிர்த்து பெரியார் ஏதும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு மறுப்பாக பல வரலாற்றுத் தகவல்களை முன்வைக்கிறது கட்டுரை. (சென்ற  இதழ் தொடர்ச்சி) கடற்கரைக் கூட்டத்தைத் தமிழ்நாடு காங்கிரஸ்  கட்சி முன் நின்று நடத்தியிருக்கிறது. ம.பொ.சி எனது போராட்டத்தில் கூறியிருப்பதுபோல இராஜாஜி சொல்லி ம.பொ.சி ஏற்பாடு செய்ததல்ல. மேலும் பெரியாரின் கடற்கரைச் சொற்பொழிவிலிருந்து தெரிந்து கொள்வது என்னவென்றால் மேயரின் அலுவலகத்தில் நான்கு நாட்களுக்கு முன் நடைபெற்ற அனைத்துக்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கடற்கரையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட் டுள்ளது தெரிய வருகிறது. பெரியாரின் கிளர்ச்சியைக் காட்டித்தான் முதலமைச்சர் இராஜாஜி காங்கிரஸ் கட்சியின் மேலிடத்தில் “சென்னை யில்...

‘ஆனந்த விகடனு’க்கு பெரியார் பேட்டி: “எங்க வூட்டு மோர், எங்க வூட்டு தண்ணீரை சுத்தப்படுத்திடுமா?”

‘ஆனந்த விகடனு’க்கு பெரியார் பேட்டி: “எங்க வூட்டு மோர், எங்க வூட்டு தண்ணீரை சுத்தப்படுத்திடுமா?”

மறைந்த பத்திரிகையாளர் சாவி, தந்தை பெரியாரை திருச்சி பெரியார் மாளிகையில் சந்தித்து எடுத்த இந்தப் பேட்டி, 4.4.1965 ‘ஆனந்த விகடன்’ இதழில் வெளி வந்துள்ளது. அப்பேட்டியை மீண்டும் 15.1.2014இல் அந்த ஏடு மறு வெளியீடு செய்துள்ளது. பல்வேறு வரலாற்றுத் தகவல்கள் அடங்கிய அந்த சந்திப்பை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவு செய்கிறது. திருச்சி பெரியார் மாளிகைக்குள் காலடி எடுத்து வைக்கும்போதே, எங்கள் பார்வையில் பட்ட கறுப்புச் சட்டை இளைஞர், “ஐயா, உள்ளேதான் இருக்கார். நீங்க வரப்போறீங்கன்னு சொல்லியிருக்கேன். உள்ளே போங்க” என்று புன்சிரிப்போடு வழி காட்டுகிறார். உள்ளே… கட்டிலின் மீது சம்மணமிட்டு அமர்ந்திருந்த பெரியாரைப் பார்த்ததும், ‘வணக்கம் ஐயா!’ என்று கும்பிடுகிறோம். “வாங்க… வாங்க… ரொம்ப சந்தோசம்…” எங்களை மிக்க மகிழ்ச்சியுடன் வரவேற்றபடியே, “இப்படி உட்காருங்க” என்கிறார். சாதாரண வெள்ளைப் பனியன். நாலு முழம் வேட்டி. வயிற்றின் நடுப் பாதியில் வேட்டியின் இரு முனைகளையும் பனியனுக்கு மேல் கட்டியிருக்கிறார். அந்த முனைகள்...

‘ஆனந்த விகடனு’க்கு பெரியார் பேட்டி: “காந்தி எங்க வீட்டுக்கு வந்திருக்கார்! ”

‘ஆனந்த விகடனு’க்கு பெரியார் பேட்டி: “காந்தி எங்க வீட்டுக்கு வந்திருக்கார்! ”

  மறைந்த பத்திரிகையாளர் சாவி, தந்தை பெரியாரை திருச்சி பெரியார் மாளிகையில் சந்தித்து எடுத்த இந்தப் பேட்டி, 4.4.1965 ‘ஆனந்த விகடன்’ இதழில் வெளி வந்துள்ளது. அப்பேட்டியை மீண்டும் 15.1.2014இல் அந்த ஏடு மறு வெளியீடு செய்துள்ளது. பல்வேறு வரலாற்றுத் தகவல்கள் அடங்கிய அந்த சந்திப்பை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவு செய்கிறது. (சென்ற இதழ் தொடர்ச்சி) “வைக்கம் வீரர்னு உங்களுக்கு எப்படிப் பேர் வந்தது?” – மணியன் கேட்கிறார் “அதுவா? அது ஒரு கதை… சொல்றேன். நீங்க என்னமோ கேட்டீங்களே என்னது?” என்று என் பக்கமாகத் தலையைச் சாய்த்து காதைக் கைவிரல்களால் அணைத்துக் கேட்கிறார். “காந்தியை நீங்க சந்திச்சிருக்கீங்களா?னு கேட்டேன்…” என்கிறேன் நான். “எங்க வூட்டுக்கே வந்து தங்கியிருக்காரே. சட்டசபைப் பிரவேசத்துக்கு காங்கிரஸை அவர் அனுமதிச்சபோது நான் ‘கூடாது’னு தடை பண்ணினேன்; எதிர்த்தேன்; வாதாடினேன். அவர் சொன்னார்: “நீ என்ன இப்படிச் சொல்றே? மோதிலால் நேரு, சி.ஆர்.தாஸ் இவங்களையெல்லாம் நினைச்சுப்...

‘ஆனந்த விகடனு’க்கு பெரியார் பேட்டி: “ஆட்சி அமைக்க என்னை அழைத்தார்கள்! ”

‘ஆனந்த விகடனு’க்கு பெரியார் பேட்டி: “ஆட்சி அமைக்க என்னை அழைத்தார்கள்! ”

மறைந்த பத்திரிகையாளர் சாவி, தந்தை பெரியாரை திருச்சி பெரியார் மாளிகையில் சந்தித்து எடுத்த இந்தப் பேட்டி, 4.4.1965 ‘ஆனந்த விகடன்’ இதழில் வெளி வந்துள்ளது. அப்பேட்டியை மீண்டும் 29.1.2014இல் அந்த ஏடு மறு வெளியீடு செய்துள்ளது. பல்வேறு வரலாற்றுத் தகவல்கள் அடங்கிய அந்த சந்திப்பை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவு செய்கிறது. (சென்ற இதழ் தொடர்ச்சி) “ராஜாஜி உங்களை ஜெயில்ல போட்டாரே, அது எப்போ?” “முப்பத்தேழுலே நடந்த எலக்ஷன்ல ஜஸ்டிஸ் கட்சி தோத்தது. அப்ப அந்தக் கட்சிக்கு பொப்பிலி ராஜாதான் தலைவர். பொப்பிலி, பெத்தாபுரம் எல்லாரும் தோத்துப் போனாங்க. காங்கிரஸ் ஜெயிச்சுட்டுது. ராஜாஜி, மந்தரிசபை அமைச்சாரு. அப்பத்தான் கட்டாய இந்தியைக் கொண்டு வந்தாங்க. நான் எதிர்த்தேன். புரோகிபிஷனைக் காரணம் காட்டி விற்பனை வரிபோட்டாங்க. என்னை ஜெயில்ல போட்டாங்க. ஜஸ்டிஸ் கட்சி மெம்பர்களைப் பழிவாங்க ஆரம்பிச்சாங்க. நான் ஜெயிலுக்குள்ளே இருக்கிறபோதே பொப்பிலி எல்லாம் சேர்ந்து, என்னை ஐஸ்டிஸ் கட்சித் தலைவனாக்கிட்டாங்க.” “அப்புறம் எப்ப...

வினாக்கள்… விடைகள்…!

வினாக்கள்… விடைகள்…!

ஈ.வெ.கி.எஸ். இளங்கோவன் அணியிலிருந்த மொடக்குறிச்சி முன்னாள் சட்டமன்ற உறுப் பினர் ஆர்.எம். பழனிச்சாமி, அமைச்சர் சிதம்பரம் அணியில் சேர்ந்தார்.  – தினமலர் செய்தி இனி எதிர்காலத்தில் இளங்கோவன் அணி யுடன் கூட்டணியோ, தொகுதிப் பங்கீடோ கிடையாது என்று பேட்டி அளித்தாரா? தன்னை ஒரு டீக்கடைக்காரர் என்று கூறிக் கொள்ளும் மோடிக்கு, ஹெலிகாப்டரில் பயணம் செய்ய எங்கிருந்து பணம் வந்தது?  – கெஜ்ரிவால் கேள்வி இது என்ன கேள்வி? ‘சாமான்யன்’ மோடிக்கு, ‘சாமான்யர்’ அம்பானி உதவிடக் கூடாதா? மனிதாபிமானம் இல்லாமல் பேசக் கூடாது. திருவனந்தபுரம் விரைவு ரயிலில் பயணம் செய்த முதியவரின் கையை எலி கடித்ததால் ரயில் ஈரோட்டில் 30 நிமிடம் தாமதமாகப் புறப்பட்டது.    – செய்தி எல்லா இரயில்களிலும் எலிகளுக்காக நான்கு ஏ.சி. கோச்சுகளை தனியாக ஒதுக்கியிருந்தா, இந்தப் பிரச்சினை வந்திருக்காதுல்ல. ஒருபோதும் சுயமரியாதையை விட்டுக் கொடுக்க முடியாது.    – தா. பாண்டியன் ஆமாம்! விட்டுக் கொடுக்கவே கூடாது. அது சரி; நீங்கள்...

ஆச்சாரியார் அரசியலின் கைத்தடியே ம.பொ.சி. பெரியார் தமிழ் இனத்தின் பகைவரா? (3) வாலாசா வல்லவன்

ஆச்சாரியார் அரசியலின் கைத்தடியே ம.பொ.சி. பெரியார் தமிழ் இனத்தின் பகைவரா? (3) வாலாசா வல்லவன்

பெரியாருக்கு எதிராக அவ்வப்போது சில வரலாற்றுப் புரட்டர்கள் புறப்படுவதும், பதிலடி கிடைத்தவுடன் பதுங்குவதும் வாடிக்கையாகி விட்டது. ‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மையில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு. 2ம் பாகம் படிக்க வழக்குரைஞர் பா.குப்பன் பெரியார் மீது சுமத்தும் மற்றொரு குற்றச்சாட்டு “தமிழ்ப் பார்ப்பனர்களிடம் சினப் பாய்ச்சல்; தெலுங்குப் பிராமணர்களிடம் இனப்பாசம்!” (பக் 53) என்று எழுதியுள்ளார். எந்த ஆதாரத்தின் அடிப்படையில் பா.குப்பன் தமிழ்ப் பார்ப்பனர் தெலுங்குப் பார்ப்பனர் என்று வரையறை செய்தார் என்பது அவருக்கே வெளிச்சம். பழந்தமிழகத்தில் பார்ப்பனர் என்ற சாதியே கிடையாது. தொல்காப்பியர் காலக் கட்டத்தில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு வட இந்தியப் பார்ப் பனர்கள் தமிழகத்தில் வந்துள்ளனர். தொல்காப்பி யத்திலேயே வடமொழிச் சொற்களைச் சேர்ப் பதற்கான விதிகளை அவர் உருவாக்கியதிலிருந்தே இதனை நாம் உணர முடிகிறது. பெரியாரியல் வாதிகளும், மார்க்சிய வாதிகளும், உண்மையான தேசிய இன விடுதலையில் அக்கறை உள்ளவர்களும் தலைவர்களின் அரசியல்...