Tagged: மதுரை திவிக

மதுரையில் நீட்டுக்கு எதிராக போராடிய தோழர்கள் கைது !

மதுரையில் நீட்டுக்கு எதிராக போராடிய தோழர்கள் கைது !

மதுரையில் நீட்டுக்கு எதிராக போராடிய தோழர்கள் கைது ! 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது தமிழக அரசு ! நள்ளிரவில் சிறையில் அடைப்பு ! தமிழக காவல்துறையின் அராஜகம் ! நேற்று 07.09.2017 அன்று காலை மதுரை தமுக்கம் மைதானத்தில் நீட் தேர்விற்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், மாணவி அனிதா மரணத்திற்கு நீதி கேட்டும் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட பல்வேறு முற்போக்கு அமைப்புகள் கலந்து கொண்டன.போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் கூட்டியக்கத் தோழர்கள் மீது காவல்துறை வன்முறையை ஏவி கடுமையாக தாக்கியுள்ளது.இத்தாக்குதலில் திராவிடர் விடுதலைக் கழக மாவட்டச்செயலாளர் தோழர் மணியமுதன் மா.பா. அவர்களுக்கு காலில் பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது.காவல்துறையின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் மாணவர்கள்,இயக்கத்தோழர்கள் பலருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.போராட்டத்தில் ஈடுபட்ட தோழர்கள் 75 பேரை தமிழக காவல்துறை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது...

கழகத் தலைவர் கொளத்தூர் மணி காவல்துறையால் தடுத்து வைப்பு

உயர்நீதி மன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக ஆக்க கோரிப்ு லவரையற்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வரும் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களை திண்டுக்கல்லில் காவல் துறையினர் மதுரைக்குள் அனுமதிக்காமல் தடுத்து வைத்துள்ளனர்.

காவிகள் நுழையா தமிழகம், கலவரம் இல்லா தமிழகம் – சுவரொட்டியில் மதுரை திவிக பதிலடி

மதுரை முழுதும் பாஜகவினர் நூற்றுக்கணக்கான இடங்களில் “கழகங்கள் இல்லா தமிழகம் ” என்ற விளம்பரத்தை செய்துள்ளது. அதற்கு பதிலடியாக காவிகள் நுழையா தமிழகம், கலவரம் இல்லா தமிழகம் – என்ற தலைப்பில் பிரம்மாண்ட சுவரொட்டிகளை தயாரித்து மதுரை மாவட்ட திவிக தோழர்கள் மதுரையெங்கும் ஒட்டியுள்ளார்கள்  

மாட்டிறைச்சிக்கு ஆதரவாக மதுரையில் கழக சுவரொட்டிகள்

மதுரையில் மாட்டிறைச்சிக்கு எதிராக இந்துத்வா கும்பலால் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளுக்கு அருகிலேயே மாட்டிறைச்சியை ஆதரித்து  திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் செய்தி மணி அமுதன்

பழங்குடிகளின் உரிமை மீட்பு கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை 17022017

மதுரையில் காவல் துறைக்கு கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி கடும் கண்டனம்.. குறவர் சமுதாய மக்களை திருடர்களாக சித்தரித்து தொடர்ச்சியாக அவர்கள் மீது பொய் வழக்கு போடும் போக்கை தொடரும் காவல் துறையினருக்கு தோழர் கொளத்தூர் மணி கடும் கண்டனத்தை தெரிவித்து இன்று மதுரையில் நடைபெற்ற குறிஞ்சியர் நலச்சங்கம் சார்பிலான கண்டன ஆர்பாட்டத்தில் தலைமை உரையாற்றினார். இந்த ஆர்பாட்டத்தில் பல்வேறு தோழமை அமைப்புத் தோழர்கள் கலந்து கொண்டனர். செய்தி மா பா மணிகண்டன் உரிமை

மதுரையில் நந்தினி படுகொலைக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் ! 31012017

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 31.1.2017 அன்று காலை 11 மணியளவில் மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மதுரை மாவட்ட கழகச்செயலாளர் தோழர் மா.பா.மணிகண்டன் தலைமை தாங்கினார்

மதுரையில் கழகம் ஆர்ப்பாட்டம் 31012017

31012017 காலை 11 மணிக்கு மதுரை ரயில் நிலையம் எதிரில் தங்கை நந்தினிக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்.. அனைவரும் வருக திராவிடர் விடுதலைக் கழகம் மதுரை.9600408641

தீண்டாமை ஒழிப்பு பிரிவு முற்றுகை போராட்டம் மதுரை 31012017

தீண்டாமை ஒழிப்பு பிரிவு முற்றுகை போராட்டம் மதுரை 31012017

அரியலூர் நந்தினிக்கு நீதிவழங்கு. திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மதுரையில் செயல்படாத காவல்துறையின், “தீண்டாமை ஒழிப்பு பிரிவு” முற்றுகை போராட்டம்….! நாள்:31.01.2017. செவ்வாய்க்கிழமை. நேரம்:காலை11.00 மணி.  

ஜாதி கலவரங்களை தூண்டும் பேச்சு மதுரை திவிக மனு 04012017

கல்வி, பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கியுள்ள தேவர் சமூக மக்களை முன்னேற்றாமல், அவர்களை மூளை சலவை செய்து வன்முறையாளர்களாக மாற்றும் விதமாகவும், இரு தரப்பினரிடையே ஜாதி கலவரங்களை தூண்டும் விதமாகவும், பட்டியலின மக்களை கொலை செய்யம் படியும், இழிவுபடுத்தியும் பேசிய. -தமிழ் நாடு தேவர் பேரவை தலைவர். முத்தையா என்பவரை கைது செய்யக் கோரியும், இது போன்ற வன்மம் கக்கும் ஜாதி சங்கங்களை தடை செய்ய கோரியும் மதுரை திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பிலும், புரட்சிகர இளைஞர் கழகம் சார்பிலும் மதுரை காவல் ஆணையாளர் அவர்களிடம் புகார் மனு 04012017 அன்று மாலை 5 மணிக்கு தோழர் மணிகண்டன் அவர்களால் அளிக்கப்பட்டது. உடன் புரட்சிப் புலிகள் மாவட்ட நிர்வாகிகள் பீமாராவ், அகிலன், ஆதித்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் சிதம்பரம், திவிக மாநகர் பொறுப்பாளர் காமாட்சி ஆகியோர் கலந்து கொண்டனர். விரைந்து நடவடிக்கை எடுப்பதாக காவல் துறையினர் உறுதியளித்துள்ளனர்.

மதுரையில் கழக பொதுக்கூட்டம் !

புரட்சியாளர் அம்பேத்கர் தந்தை பெரியார் நினைவு நாளையொட்டி மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் மா.பா. மணிகண்டன் தலைமை வகித்தார். மாநகர் பொறுப்பாளர் காமாட்சி பாண்டி வரவேற்புரையாற்றினார். மாவட்ட அமைப்பாளர் மாப்பிள்ளை சாமி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக மாவட்ட துனை செயலாளர் பிலால் ராஜா வாழ்த்துரை வழங்கினார். கழக தலைவர் கொளத்தூர் மணி, ஆதித்தமிழர்கட்சித் தலைவர் கு. ஜக்கையன் ,கழக மாநில பரப்புரை செயலாளர் ஆகியோர் சிறப்புரையாற்றினார். மேலூர் சத்திய மூர்த்தி நன்றி தெரிவித்தார். காவை இளவரசனின் மந்திரமா தந்திரமா நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியில் 200 க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர். தோழர்கள் திருப்பதி, அழகர், பேரையூர் ராஜேஷ்,தளபதி உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டில் மதிமுக நகர செயலாளர், இளங்குமரன் மதிமுக ஒன்றிய செயலாளர், ஜெயராஜ் ஆகியோர் ,தமிழ்நாடு முஸ்லீம் முனேற்ற கழக தோழர்கள்...

மதுரையில் 480 தோழர்கள் கைது ஆணவக் கொலைகளைத் தடுக்காத காவல்துறை அலுவலகம் முற்றுகை

ஆணவக் கொலைகளைத்  தடுக்கத் தவறிய காவல்துறையைக் கண்டித்து, தென்மண்டல காவல் துறை ஐ.ஜி. அலுவலகத்தை முற்றுகை இடும் போராட்டம் 3.11.2016 அன்று, காலை 11-00 மணியளவில் நடைபெற்றது. மதுரை, புதூர் பேருந்து நிலையத்தில் அணி திரண்ட தோழர்களிடையே கூட்டமைப்பின் தலைவர்கள் உரையாற்றினர். போராட்ட ஒருங்கிணைப்பாளர்  தமிழ்ப்புலிகள்கட்சித் தலைவர் நாகை. திருவள்ளுவன் நோக்க உரையாற்றினார். திராவிடர் விடுதலை கழகத் தலைவர்கொளத்தூர்மணி, சி.பி.எம்.எல். மக்கள் விடுதலைக் கட்சியின் மீ.த.பாண்டியன், த.பெ.தி.க. பொதுச்செயலாளர் கோவை இராமக்கிருட்டிணன், மனிதநேய மக்கள் கட்சிப் பொதுச்செயலாளர் அப்துல் சமது, எச்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் தெகலான் பாகவி, ஆதிதமிழர்ப் பேரவைத் தலைவர் இரா.அதியமான், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் புதுக் கோட்டை செரீப், மக்கள் ஜனநாயக முன்னேற்றக் கழகப் பொதுச் செய்லாளர் பிரிசெல்லா பாண்டியன், இளந்தமிழகம் செந்தில், மே 17 இயக்கம் திருமுருகன் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தமிழ்நேசன், விடுதலைக் கட்சி துணைப் பொதுச்செயலாளர் ஆற்றலரசு ஆகியோர் உரையாற்றிய பின்னர்...

தென்மண்டல ஐ.ஜி.அலுவலக முற்றுகை – ஆணவக்கொலை மதுரை 03112016

ஆணவக் கொலைகளைத்  தடுக்கத்  தவறிய காவல்துறைக் கண்டித்து, தென்மண்டல காவக்துறை ஐ.ஜி. அலுவலகத்தை முற்றுகை இடும் போராட்டம்  3-11-2016 அன்று, காலை 11-00 மணியளவில் நடைபெற்றது. மதுரை, புதூர் பேருந்து நிலையத்தில் அணிதிரண்ட தோழர்களிடையே கூட்டமைப்பின் தலைவர்கள் உரையாற்றினர். போராட்ட ஒருங்கிணைப்பாளர்  தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் நாகை.திருவள்ளுவன் நோக்க உரையாற்றினார். திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சி.பி.எம்.எல். மக்கள் விடுதலைக் கட்சியின் மீ.த.பாண்டியன், த.பெ.தி.க. பொதுச்செயலாளர் கோவை இராமக்கிரிட்டிணன், மனிதநேய மக்கள் கட்சிப் பொதுச்செயலாளர் அப்துல் சமது, எச்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் தெகலான் பாகவி, ஆதிதமிழர்ப் பேரவைத் தலைவர் இரா.அதியமான், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் புதுக்கோட்டை செரீப், மக்கள் ஜனநாயக முன்னேஏற்றக் கழகப் பொதுச் செய்லாளர் பிரிசெல்லா பாண்டியன், இளந்தமிழகம் செந்தில், மே 17 இயக்கம் திருமுருகன் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தமிழ்நேசன், விடுதலைக் கட்சி துணைப் பொதுச்செயலாளர் ஆற்றலரசு போன்றோர் உரையாற்றிய பின்னர் ஐ.ஜி...

தென் மண்டல ஐ.ஜி அலுவலக முற்றுகைப் போராட்டம் மதுரை 03112016

இன்று 03112016 பெரியாரிய, தலித்திய, தமிழ்த்தேசிய மற்றும் முற்போக்கு இயக்கங்கள் ஒன்றிணைந்து நடத்தும் தென் மண்டல ஐ.ஜி அலுவலக முற்றுகைப் போராட்டம். நெல்லையில் திண்டுக்கல் சிவகுருநாதன், பெண் காவலர் ராமு, திண்டுக்கல்லில் பாண்டிச்செல்வி, தேனியில் தங்கபாண்டியன் ஆகியோரின் கொலைகளுக்கு காரணமான சாதி வெறி கொலையாளிகளை கைது செய். குற்றவாளிகளை தப்பவிடாதே! சாதிவெறிக்கு துணை போகாதே! சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்று. சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு பாதுகாப்பு வழங்கு. சாதி ஆணவப் படுகொலைகளுக்கு சிபிஐ விசாரணை நடத்து. உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் தென் மண்டல ஐ.ஜி அலுவலக முற்றுகைப் போராட்டத்தினை அனைத்து தோழமை இயக்கங்களும் இணைந்து நவம்பர் 3 அன்று நடத்த உள்ளோம். வாய்ப்புள்ளோர் பங்கேற்கவும்

மதுரையில் ரயில் மறியல் போரட்டம் (14.10.2016) ! 67 பேர் கைது !

ரயில் மறியல் போரட்டம் (14.10.2016) ! 67 பேர் கைது ! காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழர் நலனுக்கு எதிராக செயல்படும் மதவெறி பாஜகவின் மத்திய அரசை கண்டித்து திராவிடர் விடுதலைக் கழக ஒருங்கிணைப்பில் தோழமை அமைப்புகள் பங்கேற்ற ரயில் மறியல் போராட்டம் 14.10.2016 காலை 11 மணியளவில் மதுரை ரயில் நிலையம் முன்பு நடைபெற்றது. கழக அமைப்புச்செயலாளர் ரத்தினசாமி,பொருளாளர் துரைசாமி,பரப்புரை செயலாளர் பால்.பிரபாகரன்,மாவட்ட செயலாளர் மணிகண்டன் மா.பா.,தோழர் காமாட்சி பாண்டி,மாவட்ட செயலாளர் திலீபன் செந்தில், மாவட்ட அமைப்பாளர் மாப்பிள்ளை சாமி உள்ளிட்ட கழக தோழர்களும்,தோழர் மீ.த.பாண்டியன் (சி.பி.எம்.எல். மக்கள் விடுதலை),மேரி (சி.பி.எம்.எல்.மக்கள் விடுதலை), சிதம்பரம்(ஆதித்தமிழர் கட்சி),தமிழ் நேயன் (தமிழ் தேச மக்கள் கட்சி), குமரன்,புரட்சிகர இளைஞர் முண்ணனி, நாகை.திருவள்ளுவன்(தமிழ் புலிகள் கட்சி), ஆதவன் (ஆதித்தமிழர் பேரவை), பரிதி (தமிழ் தமிழர் இயக்கம்), தோழர் ரபீக்(இளந்தமிழகம்), அண்ணாமலை (சட்டபஞ்சாயத்து இயக்கம்) ஆகியோர் உள்ளிட்ட இயக்க தோழர்கள் இப்போராட்டத்தில் கலந்து...

மதுரையில் ரயில் மறியல் போராட்டம்!

14.10.2016 மதுரையில் ரயில் மறியல் போராட்டம்! கழக தலைவர் தலைமையில் நடக்கவுள்ளது. காவிரி பிரச்சனையில் தமிழர்களுக்கு துரோகம் இழைக்கும் மத்திய ஆளும் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் ஐ கண்டித்து. தோழமை அமைப்புகள் பங்கேற்கின்றன.

மாட்டிறைச்சி எனது உணவு, எனது உரிமை – கருத்தரங்கம் மதுரை 25092016

தமிழ்புலிகள் கட்சி நடத்தும் கருத்தரங்கம் பகல் 1.30 மணிக்கு தோழர் கொளத்தூர் மணி அவர்களின் பார்ப்பனீயத்தின் உணவு கோட்பாடு – தலைப்பில் கருத்துரை

மதுரையில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் 01092016

1-9-2016 அன்று பிற்பகல் 2-00 மணிக்கு மதுரை ஓபுலா படித்துறையில், மக்கள் உரிமைக் காப்பாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பில், மனித உரிமைக் காப்பாளர் ஹென்றி திபேன் மீது பொய்வழக்கைப் பதிவு செய்த காவல்துறையைக் கண்டித்தும்,  வழக்கைத் திரும்பப்பெற வலியுறுத்தியும் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மதுரை மாவட்டம், மொட்டமலையைச் சேர்ந்த அலைகுடிகளான குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கூலிவேலை செய்துவந்தவர்களை சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்து, 63 நாட்கள் சட்டவிரோதமாக அடைத்துவைத்து சித்திரவதை செய்துவருவதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு போட்டு விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்தனர் தோழர் ஹென்றி திபேனும், உதவும் குரல் அமைப்பினரும். தொடர்ந்து சட்ட்விரோதமாகக் காவலில் வைத்ததோடு, சித்திரவதை செய்தும், பெண்களைப் பாலியல் துன்புறுத்தலும் செய்த காவல்துறையின்ர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தக்கலையிலும், மதுரையிலும் அர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன. அவ்வார்ப்பட்டத்தின்போது காவல்துறையினரை மிரட்டியதாக, பிணையில் வர முடியாத பிரிவுகளில் எட்டு நாட்கள் கழித்து தோழர் ஹென்றி திபேன் மீது பொய்வழக்கில் புனைந்ததைக் கண்டித்து...

ஹென்றி திபேன் மீதான பொய்வழக்கினை திரும்பபெறக் கோரி குரல் முழக்க தொடர் ஆர்ப்பாட்டம்

மதுரையில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் ! கழக தலைவர் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்! தமிழகத்தில் சமூக செயல்பாட்டாளர் மீது திட்டமிட்டு பதிவுசெய்யப்படும் பொய் வழக்குகள், தாக்குதல்கள் ஆகியவற்றை தடுத்து நிறுத்தக்கோரியும், மனித உரிமை செயற்பாட்டாளர் தோழர் ஹென்றி டிபேன் அவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை திரும்ப பெற வலியுறுத்தியும் இந்த தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. நாள் : 01.09.2016 வியாழக்கிழமை. இடம் : ஒபுளா படித்துறை,மதுரை. நேரம் : காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை. இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு தோழமை அமைப்புகளின் தலைவர்களும் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர்.   உண்மையை பேசுவது போலீசுக்கு பிடிக்காது…! குமுறும் ஹென்றி டிபேன் விகடன் செய்தி படிக்க இங்கே சொடுக்கவும்

மதுரை நகரில் கழக மாநாட்டின் எழுச்சி

மதுரையில், ‘திராவிடர் விடுதலைக் கழகம்’ மக்களைப் பிளவு படுத்தும் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாட்டை 27.2.2016 அன்று ஒபுளா படித் துறையில் சிறப்புடன் நடத்தியது. மாவட்ட செயலாளர் மா.ப.மணிகண்டன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செந்தில் வரவேற்புரையாற்ற, மாவட்ட அமைப்பாளர் மாப்பிள்ளை சாமி முன்னிலை வகித்தார். வழக்கறிஞர் பகத்சிங், கழகப் பிரச்சார செயலாளர் பால்.பிரபாகரன், ஆதித் தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் இரா. செல்வம், கம்யூனிஸ்ட் மா.லெ.மாவட்டச் செயலாளர் மேரி ஆகியோரைத் தொடர்ந்து எ.ஸ்.டி.பி.ஐ.மாநில செயலாளர் நெல்லை முபாரக், கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் சிறப்புரையாற்றினர். சகாயராஜ் நன்றி கூறினார். மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, மாநில பொருளாளர் துரைசாமி, விருதுநகர் கணேசமூர்த்தி, விஜயகுமார், சூலூர் பன்னீர்செல்வம், காளையார் கோயில் முத்துகுமார், தனபால், சங்கீதா, வழக்கறிஞர் பொற்கொடி ஆகியோர் மாநாட்டின் வெற்றிக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கினர். காவல்துறை விதித்த தடையை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்துஅனுமதி...

இழிவொழிப்பு மகளிர் மாநாடு – ஆதித்தமிழர் பேரவை மதுரை 08032016

“தாய் நாடு தாய்த் திருநாடு” எனப் பெண்களை உயர்த்திப்பிடித்து தம்பட்டமடிக்கும் இம்மண்ணில் தான் பெண்கள் தங்களின் தலையில் “மனிதன் கழிக்கும் மலத்தை” சுமந்து “தேசிய அவமானமாகவும்” வலம்வருகிறார்கள்.இந்திய நாட்டின் ஒட்டுமொத்த மலமள்ளும் தொழிலாளர்களில் 80 சதத்திற்கும் அதிகமானோர் பெண்கள்தான். இக்கொடுமையை சகித்துக் கொண்டு வேடிக்கை பார்ப்பதுதான்  மனித இனத்திற்கு “பேரவமானம்”. சக பெண்கள் இழிவைச் சுமக்க சகித்துக் கொண்டு வேடிக்கை பார்ப்பது பெண்ணியவாதிகளுக்கு பெருமையாக இருக்கின்றதா? ‘பீப்’ பாடலுக்கு எதிராக பீரிட்டுக் கிளம்பிய பெண்ணியவாதிகளின் குரல்கள் “பீயை” சுமக்கும் பெண்களைப் பற்றி பேசாமல் மவுனம் காப்பது பேரிழுக்கு இல்லையா? இழிவென்று தெரிந்தும் இதை ஏன் செய்கிறார்கள் என்று பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்திவிட்டு நழுவிக்கொள்வதுதான் முற்போக்காளர்களின் முற்போக்கான சிந்தனையா? இதுவெல்லாம் ஒரு பிரச்சினையா? என அலச்சியத்தோடு அணுகும் அதிகாரிகளும், காவல்துறையும் கள்ளச்சாரயம் காய்ச்சுவதையும், கஞ்சா விற்பதையும், குழந்தைத்தொழில் முறையையும் “விரும்பி செய்தால்” விட்டுவைக்குமா? தமிழ் ஈழமும், காவிரி முல்லைப் பெரியாறும், அணுஉலையும், மீத்தேனும் பொதுப் பிரச்சினைகள் என்றால் இதுமட்டும் தனிப்பிரச்சினையா? இவர்கள் செய்யவில்லை என்றால் இதை நாம்தானே செய்யவேண்டும் என்ற சுயநல சாதிய...

பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு மதுரை 27022016

மதுரை மாவட்ட திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் மதுரையில் வரும் 27.2.2016 சனிக்கிழமை அன்று ”மக்களை பிளவு படுத்தும் பார்பன மதவாத எதிர்ப்பு மாநாடு ” நடக்கவிருக்கிறது. பறை இசை மற்றும் பள்ளத்தூர் நாவலரசு அவர்களின் இசை நிகழ்ச்சியோடு தொடங்கி கழக தலைவர் தோழர் ”கொளத்தூர் மணி ”அவர்கள், கழக பொதுசெயலாளர் தோழர் ”விடுதலை ராஜேந்திரன்” அவர்கள் , எஸ்டிபிஐ கட்சி தலைவர் தோழர் ”தெகலான் பாகவி” அவர்கள், தமிழ் புலிகள் கட்சி தலைவர் தோழர் ”நாகை திருவள்ளுவன்” அவர்கள், ஆதி தமிழர் பேரவை தெற்கு மாவட்ட செயலாளர் தோழர் ”இரா .செல்வ குமார்” அவர்கள் ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளார்கள் அனைவரும் வருக

பெரியார் பிறந்தநாள் விழா – மதுரை

மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்த நாளன்று மாலை 3 மணி அளவில் மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கம் எழுப்பப்பட்டது . மதுரை மாவட்டத் தலைவர் திலீபன் செந்தில்,மாவட்ட செயலாளர் மணிகண்டன் மா.பா,மாவட்ட அமைப்பாளர் மாப்பிள்ளை சாமி,மற்றும் கழக தோழர்கள் கலந்து கொண்டனர்