வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (15)
நீதிக்கட்சித் தலைவரை பதவி விலக மிரட்டினார் ராஜாஜி! வாலாசா வல்லவன் ‘குணா’வின் வாரிசாக கிளம்பி யுள்ள ஒருவர் அண்மையில் வெளி யிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு. 1938 இல் இந்தி எதிர்ப்பின் போது இராஜாஜி நீதிக் கட்சியின் தலைவர் பொப்பிலி அரசரை அக்கட்சியின் தலைவர் பதவியை விட்டு விலகுமாறு மிரட்டினார். பொப்பிலி அரசர் பயப்பட வில்லை. இராஜாஜியும் சும்மா இருக்க வில்லை. ஜமின்தாரி ஒழிப்பு மசோதாவை கொண்டு உங்கள் ஜமின் சொத்துகளை அரசுடைமை ஆக்கி விடுவேன் என்று மிரட்டியதால், மற்ற ஜமீன்தார்கள் பொப்பிலி அரசருக்கு நெருக்கடி கொடுத்து நீதிக்கட்சி தலைவர் பதவியி லிருந்து விலகி விடுமாறு வற்புறுத்தினர். பொப்பிலி அரசர் விலகி விட்டால் நீதிக் கட்சியை ஒழித்து விடலாம் என இராஜாஜி கனவு கண்டார். பொப்பலி அரசர் நீதிக் கட்சி தலைவர் பதவியிலிருந்து விலகி விட்டார். இந்த நிலையில்தான். கி.ஆ.பெ. விசுவநாதமும் ஏ.டி. பன்னீர் செல்வமும் பெல்லாரி சிறையில் இருந்த பெரியாரை...