Tagged: ஆகமம்

ஆகமத்துக்குள் பதுங்கும் பார்ப்பனர்களே! இதற்கு என்ன பதில்?

ஆகமத்துக்குள் பதுங்கும் பார்ப்பனர்களே! இதற்கு என்ன பதில்?

இந்து சமூகத்தில் அனைத்துப் பிரிவினருக்கும் அர்ச்சகராகும் உரிமை மீண்டும் மறுக்கப்பட்டுள்ளது. ஆகமங்களைப் பின்பற்றும் கோயில்களின் நடைமுறைகள் அப்படியே தொடர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆகமங்களுக்கு சட்டப்பூர்வ ஏற்பை வழங்கியிருக்கிறது. “பிராமணர்களில்”கூட எல்லோரும் கருவறைக்குள் சென்று பூஜை செய்து விட முடியாது. அதற்குரிய ஆகம தகுதி பெற்றவர்கள்தான் பூஜை செய்ய முடியும் என்று பார்ப்பனர்கள் தொலைக்காட்சி விவாதங்களில் நியாயப்படுத்துகிறார்கள். ஆனால், அதற்குரிய ஆகமத் தகுதி பெற்ற பார்ப்பன ரல்லாத ‘சூத்திரர்’களுக்கு முற்றிலும் உரிமை கிடையாது. பார்ப்பனர்கள் இப்போது கோயில்களில் வழிபாடுகளில் ‘ஆகம’ விதிகளை அப்படியேதான் பின்பற்றி வருகிறார்களா? அவை மீறப்படாமல் இருக்கிறதா என்பதைக் கண்காணிக்க ஏதேனும் அமைப்பு இருக்கிறதா? அல்லது இப்போது ஆகமக் கோயில்களில் அர்ச்சகர் வேலை பார்க்கும் அய்யர், அய்யங்கார், சாஸ்திரிகள் ஆகமங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் என்பதற்கு ஏதேனும் தேர்வுகளோ – அதில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றுகளோ இருக்கிறதா? எதுவும் இல்லை. அவர்கள் பின்பற்றுவதுதான் ஆகமம். அவர்கள் நடத்துவது எல்லாமே முறையான...

ஆகமம்

ஆகமம்

‘ஆகமம்’ என்பதன் பொருள் ‘ஒரு ஏற்பாடு’ என்பதுதானே ஒழிய அதற்கு வேறு பொருளொன்றும் இல்லை. ஏற்பாடு என்பவையெல்லாம் காலத்திற்கு, நிலைமைக்கு ஏற்றவைகளே ஒழிய முக்காலத்திற்கும் எல்லா சந்தர்ப்பங்களுக்கும் ஏற்றவையல்ல. மற்றும் எந்த ஏற்பாடும் மனிதனால் செய்யப்படுபவை. ஆகமம் என்னும் சொல்லைப் போலவே ‘அய்தீகம்’ என்னும் தன்மையும் உண்டு. அய்தீகம் என்பதற்குப் பொருள் ஆதார மில்லாமல் தொன்று தொட்டு நடந்துவரும், சொல்லி வரும் விஷயங்களுக்குச் சொல்லும் சொல்லாகும். – பெரியார் (‘விடுதலை’ 29.11.1969; தந்தை பெரியார் 92ஆவது பிறந்த நாள் மலர், 1970)

கர்ப்பகிரக ‘தீண்டாமை’யை மீண்டும் உறுதிப்படுத்தியது உச்சநீதிமன்றம்

கர்ப்பகிரக ‘தீண்டாமை’யை மீண்டும் உறுதிப்படுத்தியது உச்சநீதிமன்றம்

தமிழகக் கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனம் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், என்.வி. இரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த நவம்.16, 2015இல் வழங்கிய 54 பக்க தீர்ப்பு, குழப்பங்களையே உருவாக்கியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். வழக்கின் பின்னணி குறித்து சுருக்கமாக இப்படிக் கூறலாம். தமிழ்நாட்டில் ஆகமக் கோயில்களில் அர்ச்சகர்களாவதற்கு பரம்பரை அடிப்படையில் (அப்பா-மகன்-பேரன் என்று அடுத்தடுத்த வாரிசுகளாக) உரிமை உண்டு என்று 1959ஆம் ஆண்டு இந்து அறநிலையத் துறை சட்டம் ஏற்பு வழங்கியது. கோயில் கர்ப்பகிரகத்தில் கடவுளிடம் நெருங்கும் உரிமை பார்ப்பனருக்கு மட்டுமே உண்டு என்று கூறுவதன் வழியாக ஏனைய பார்ப்பனரல்லாத மக்கள் ‘சூத்திரர்’ என்ற இழிவுக் குள்ளாக்கப்படுவதை பெரியார் சுட்டிக்காட்டி, போராட்டங்களைத் தொடங்கினார். இதைத் தொடர்ந்து அன்றைய கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் ஜாதி வேறுபாடின்றி அனைவரும் அர்ச்சகர் ஆவதற்கும், பரம்பரை அர்ச்சகர் முறையை ஒழித்தும், ‘இந்து அற நிலையத்துறை’ சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு தமிழக சட்டமன்றத்திலும்,...