மோடியின் ஓராண்டு – மதவெறிக் கூச்சல்கள்
• ‘இராஜிவ் காந்தி ஒரு நைஜிரிய நாட்டுப் பெண்ணை (கருப்பர் இனம்) திருமணம் செய்திருந்தால், காங்கிரஸ் கட்சி, அவரை தலைவராக ஏற்றிருக்குமா?’ என்று மத்திய அமைச்சர் கிரி ராஜ்சிங் என்பவர் பேசினார். (மோடியே, இதற்காக இவரை மன்னிப்புக் கேட்கச் சொன்னார்)
• டெல்லி சட்டசபை தேர்தலில் ஒட்டு கேட்ட மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோஷி, ‘இராமனின் பிள்ளைகளை தேர்ந்தெடுக்கப் போகிறீர்களா? முறை தவறிப் பிறந்தவர் களை தேர்ந்தெடுக்கப் போகிறீர்களா?’ என்று வாக்காளர்களிடம் பேசினார். (வாக்காளர்கள், ‘இராமனின் பிள்ளைகள்’ வேண்டாம் என்று தீர்ப்பளித்தனர்)
• காந்தியைக் கொன்ற கோட்சே, ஒரு தேசபக்தர் என்றார், உ.பி. நாடாளுமன்ற உறுப்பினர் சாக்ஷி மகராஜி. ‘காந்திக்கு பதிலாக நேருவை கோட்சே சுட்டுக் கொலை செய்திருக்க வேண்டும்’ என்றார், கேரளாவைச் சார்ந்த ஒரு பா.ஜ.க. தலைவர்.
• ‘இந்துப் பெண்கள் நான்கு குழந்தைகளைப் பெற்று, அதில் ஒரு குழந்தையை கோயிலுக் கும், ஒரு குழந்தையை ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் முழுநேர சேவைக்கு அனுப்ப வேண்டும்’ என்று பேசியவரும், இதே சாக்ஷி மகராஜ் என்பவர்தான். ‘இந்துப் பெண்கள் ஒவ்வொரு வரும் 5 குழந்தைகள் பெற வேண்டும்’ என்று மற்றொரு பா.ஜ.க. பிரமுகர் சியாமன் கோஸ் என்பவர் பேசினார். சாத்வி பார்ச்சி என்ற பா.ஜ.க. பெண் துறவி, ‘இந்துப் பெண்கள் 4 குழந்தைகள் பெற வேண்டும்; மற்றவர்களைப் போல் 40 நாய்க்குட்டிகளை அல்ல’ என்று மதவெறியைத் தூவினார்.
• ‘முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் பகுதிகளில்தான் வன்முறைகள் வெடிக்கும்’ என்று பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப் பினரான யோகி ஆதித்யநாத், உ.பி. இடைத் தேர்தலில் பிரச்சாரம் செய்தார். ‘நீங்கள் ஒரு இந்துப் பெண்ணை திருமணம் செய்தால், நாங்கள் 100 முஸ்லிம் பெண்களை எடுப்போம்’ என்று மதவெறியை கக்கியவரும், இதே ஆதித்யநாத்தான்.
• ‘இந்தியாவில் வாழும் முஸ்லிம்களின் வாக்குரிமையை பறிக்க வேண்டும்’ என்று மகாராஷ்டிரா பா.ஜ.க. தலைவர் சஞ்சய் ராவுத் என்பவர் வெளிப்படையாக பேசினார்.
• ‘அன்னை தெரசா, இந்தியாவுக்கு சேவை செய்ய வரவில்லை. கிறி°தவர்களாக மதமாற்றம் செய்வதே அவரது நோக்கம்’ என்று பேசினார், ஆர்.எ°.எ°. தலைவர் மோகன் பகவத்.
• ‘பிரபல இந்தி திரைப்பட நடிகர்கள் சத்ருகான், சல்மான்கான், அமீர்கான் நடித்த திரைப்படங்களைப் பார்க்காதீர்கள். அவர்கள் படங்களின் சுவரொட்டிகளை கிழித்து, நெருப்பில் போட்டு, ‘போகி’ கொண்டாடுங்கள்’ என்று பேசினார், வெறிப் பேச்சுக்கு புகழ் பெற்ற பா.ஜ.க. தலைவர் சாத்வி பிராச்சி.
• ‘பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க முடியாது; வீட்டுக்கு ஒரு காவலரை நிறுத்தினாலும் இருக்கத்தான் செய்யும்’ என்று பேசினார் மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டில்.
• ‘சிகரெட் பிடிப்பதால் புற்றுநோய் வராது’ என்று பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப் பினர்கள் சியாம் சரண் குப்தா, இராம்நாத் சர்மா ஆகியோர் கூறினர். இவர்கள் இருவரும் புகைப் பழக்கத்துக்கு எதிரான செயல்திட்டக்குழுவில் உறுப்பினர்கள். ஒருவர் புகையிலை வர்த்தகம் செய்பவர்.
பெரியார் முழக்கம் 11062015 இதழ்