“எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்” சேலம் மாவட்டத்தில் 9 நாள் எழுச்சிப் பரப்புரை

“எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்” என்ற முழக்கத்தை முன் வைத்து சேலம் மேற்கு மாவட்டத்தின் சார்பாக ஐந்து நாட்கள் பரப்புரைப் பயணம் நடைபெற்றது. பயணத்தின் தொடக்க விழா பொதுக் கூட்டம் மார்ச் 21ஆம் தேதி மாலை 6 மணிக்கு தாரமங்கலத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் சூரியக்குமார் தலைமையேற்க, காவை. இளவரசனின் ‘மந்திரமா தந்திரமா?’ நிகழ்ச்சி நடைபெற்றது. பரப்புரைப் பயணத்தை விளக்கி, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சிறப்புரை யாற்றினார்.
மார்ச்-22 : நங்கவள்ளி அருகே உள்ள மசக் காளியூரில் மாலை 7 மணிக்கு பரப்புரை நடை பெற்றது. இதில் தோழர்கள் நங்கவள்ளி அன்பு, சேலம் பிரபு பயணத்தை விளக்கி உரையாற்றினர். சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் சி.கோவிந்தராஜ், ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சியை நடத்திக் காட்டினார்.
மார்ச்-23 : மேட்டூர் ஆர்.எ°. பகுதி வைதீ°வரா பள்ளி அருகில் மாலை 6 மணிக்கு பரப்புரை நடைபெற்றது. பயணத்தை விளக்கி நங்கவள்ளி அன்பு உரையாற்றினார். இரவு 8 மணிக்கு
ஆர்.எ°. பகுதி என்.எ°.கே. நகரில் பரப்புரை நடைபெற்றது.
மார்ச்-24 : மேட்டூர் அணை சிறிய பூங்கா அருகில் மாலை 5 மணிக்கு பரப்புரை நடைபெற்றது. பயணத்தை விளக்கி சேலம் மாவட்ட அமைப்பாளர் டைகர் பாலன் உரையாற்றினார்.
மேட்டூர் அணை தந்தை பெரியார் பேருந்து நிலையத்தில் இரவு 7 மணிக்கு பரப்புரை நடை பெற்றது. பயணத்தை விளக்கி சேலம் மாவட்ட அமைப்பாளர் டைகர் பாலன், சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சூரியக்குமார் ஆகியோர் உரையாற்றினர்.
மார்ச்-25 : கொளத்தூர் தந்தை பெரியார் பேருந்து நிலையத்தில் மாலை 6 மணிக்கு பரப்பரை நடைபெற்றது. பயணத்தை விளக்கி தோழர்கள் டைகர் பாலன், சூரியக்குமார், காவை சித்துசாமி, பெரியார் பெருந்தொண்டர் பட்டுக்கோட்டை சதாசிவம் ஆகியோர் உரையாற்றினர்.
பயணம் நடைபெற்ற ஐந்து நாள்களிலும், பறை முழக்கம், வீதி நாடகம், மேட்டூர் டி.கே.ஆர். இசைக் குழுவினரின் ஜாதி ஒழிப்பு மற்றும் பகுத்தறிவு பாடல்களை பாடினர்.
“எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்” என்ற திராவிடர் விடுதலைக்கழகத்தின் முழக்கத்துடன் கருப்பு பனியன் அணிந்து தோழர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி: சி. கோவிந்தராஜ்
(பயணத் தொடர்ச்சி அடுத்த இதழில்)

பெரியார் முழக்கம் 02042015 இதழ்

You may also like...

Leave a Reply