மேட்டூர் ஆர்.எஸ்-இல் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம்!

மேட்டூர் ஆர்.எஸ் நகரக் கழக சார்பில் “மோடி ஆட்சி தொடரலாமா?” நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் 10.04.2024 அன்று மேட்டூர் ஆர்.எஸ் வணிக வளாகம் முன்பு நடைபெற்றது.
பாடகர் கோவன் குழுவின் கலை நிகழ்ச்சி மற்றும் கலகக்காரன் குழுவின் தெருக்கூத்து நாடகத்துடன் பொதுக்கூட்டம் தொடங்கியது.
பொதுக் கூட்டத்திற்கு கழகத் தலைமைக் குழு உறுப்பினர் அ.சக்திவேல் தலைமை தாங்கினார், RS பகுதித் தலைவர் முரளிதரன் வரவேற்புரையாற்றினார்.
திமுக தலைமைக் கழகப் பேச்சாளர் கவிஞர் வைரமணி, கழக மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு ஆகியோர் உரையாற்றினார்கள்.
நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். நிறைவாக RS பகுதி செயலாளர் கு.விவேக் நன்றி கூற பொதுக் கூட்டம் நிறைவுபெற்றது.

பெரியார் முழக்கம் 18.04.2024 இதழ்

You may also like...