பெரியார் நினைவுநாள் : கழகம் முன்னெடுக்கும் நிகழ்ச்சிகள்

ஈரோடு வடக்கு : தந்தை பெரியாரின் 50வது நினைவுநாளை முன்னிட்டு ஈரோடு வடக்கு மாவட்டக் கழகம் சார்பில் எது திராவிடம்? எது சனாதனம்? தெருமுனைக் கூட்ட நிறைவுப் பொதுக்கூட்டம் 24.12.2023, ஞாயிறு மாலை 6 மணியளவில் குருவரெட்டியூர் பிரகலாதன் நினைவரங்கத்தில் நடைபெறுகிறது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பேராசிரியர் ஜெயராமன் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.

சேலம் : சேலம் மாவட்டக் கழகம் சார்பில் 119 தெருமுனைக் கூட்டங்களை எழுச்சியுடன் நடத்தி முடித்துள்ளது. 120வது கூட்டம் பொதுக்கூட்டமாக 23.12.2023 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு கொளத்தூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெறுகிறது.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பேராசிரியர் ஜெயராமன் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். நிகழ்வில் டி.கே.ஆர் இசைக் குழுவின் இசை நிகழ்ச்சி நடைபெறும்.

தஞ்சாவூர் : பேராவூரணி கழகம் சார்பில் பெரியார் 50வது நினைவு நாள் – வைக்கம் நூற்றாண்டு – அம்பேத்கரின் 67வது நினைவுநாள் – எது திராவிடம்? எது சனாதனம்? கொள்கை விளக்கக் கருத்தரங்கம் 24.12.2023 ஞாயிறு மாலை 4 மணிக்கு பேராவூரணி பேரூராட்சி திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. கருத்தரங்கில் கழகப் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன், கழக தஞ்சை மாவட்டத் தலைவர் சாக்கோட்டை இளங்கோவன், தமிழ்வழி கல்வி இயக்கத் தலைவர் சின்னப்பத்தமிழர் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் கருத்துரையாற்றவுள்ளனர்.

பெரியார் முழக்கம் 21.12.2023 இதழ்

You may also like...