வினாக்கள்… விடைகள்…!
நிர்வாகிகள் ஒருபுறமும், தலைவர்கள் ஒருபுறமும் வேட் பாளர்கள் மறுபுறமும் ஒருங்கிணைப்பின்றிச் செயல்பட்டதால் தான் காங்கிர° தோற்றது. – சோனியா
அப்படி, விளக்கமாக சொல்லுங்க. நாங்ககூட, ஏதோ, வாக் காளர்கள்தான் தோற்கடிச்சுட்டதா தப்பாகவே புரிஞ்சுகிட் டோம்!
நாடாளுமன்ற தேர்தல் கூட்டடணி பற்றி முடிவு செய்ய அ.தி.மு.க. பொதுக்குழு ஜெயலலிதாவுக்கு அதிகாரம். – செய்தி
அதிகாரத்தை அம்மா முறையாகப் பயன்படுத்தி, வெற்றிக் கூட்டணியை அமைக்காவிட்டால், எந்த நேரத்திலும் பொதுக் குழு அதிகாரத்தைப் பறித்துவிடும், எச்சரிக்கை!
அமெரிக்காவுக்கான இந்திய பெண் தூதர் கைது பிரச்சினையை – பத்திரிகைகள் பக்கம் பக்கமாக செய்தி போடுகிறதே! – ஒரு வாசகரின் வியப்பு
அதெல்லாம் ஒன்றுமில்லை. அந்தப் பெண் தூதர் படத்தை வெளியிடத் தடைபோட்டுவிட்டால் செய்தியும் நின்று விடும்.
தூதர் தேவயானி மீது அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்கை அந்நாடு திரும்பப் பெற வேண்டும் என்பதுதான் இப்போதைய முக்கிய கோரிக்கை. – அமைச்சர் கமல்நாத்
விடாதீங்க…. வழக்கை திரும்பப் பெறாவிட்டால், அவசரமாக இந்திய நாடாளுமன்றத்தைக் கூட்டி சட்டத் திருத்தம் கொண்டு வருவோம் என்று எச்சரியுங்க!
இலங்கை கடற்படையின் மீனவர் கைதைக் கண்டித்து அண்ணா சாலையில் மீன் பிடிக்கும் போராட்டம் நடத்திய மீனவர்கள் கைது. – செய்தி
அண்ணாசாலையில் மீன் பிடித்தாலும் கைதுதான்!
மாநகராட்சி சட்டத்தின்படி விதிமுறைகளை மீறி வைக்கப்படும் பேனர்கள் உடனே அகற்றப்படுகின்றன. – அதிகாரிகள் மாநாட்டில் சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர்
‘அம்மா’ என்ற மூன்று எழுத்துகளோடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட அம்மாவின் படமும் இல்லாவிட்டால், கண்டிப்பாக ‘பாரபட்சமின்றி’ நடவடிக்கை எடுக்கப்படும்.
கோட்டையில் நடந்த அதிகாரிகள் மாநாட்டில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள் முதல்வரை ‘அம்மா’, ‘அம்மா’ என்று விளித்து புகழ் மாலைகளைக் குவித்தனர். – ஜூனியர் விகடன் செய்தி
இது ஒரு தவறா? “இந்தியாவை வழி நடத்தும் மகத்தான சக்தி எங்கள் அம்மா” என்று ஒரு தீர்மானம்கூட போடாமல் கட்டுப்பாடாக நடந்து கொண்டார்களே; அதை எல்லாம் பாராட்ட மாட்டீங்களா?
காங்கிரசோ, பா.ஜ.க.வோ மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது. – இந்திய கம்யூனி°ட் கட்சி மூத்த தலைவர் ஏ.பி. பரதன்
தோழர், இதிலேயாவது கம்யூனி°ட் கட்சியின் பெயரை சேர்த்து சொல்லக் கூடாதா? கட்சியை மறந்தே போயிட்டிங்க போல.
தேவயானி மீது புகார் கொடுத்த வேலைக்காரப் பெண்ணின் பெற்றோருக்கு அமெரிக்கா அவசர அவசரமாக விசா அளித்தது ஏன்? – பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத்
நல்ல கேள்வி! அதோடு மோடிக்கு அமெரிக்காகாரன் விசா மறுப்பதையும் சேர்த்துக்குங்க. அப்பத்தான் அமெரிக்காகாரன் மானம் போகும்!
பெரியார் முழக்கம் இதழ் 19122013