கிருஷ்ணகிரியில் கழகத் தலைவர் பங்கேற்ற காமராசர் விழா

கிருஷ்ணகிரி, நுகர்வோர் சேவை மையம் நடத்திய கல்விக்கண் தந்த கர்மவீரர் காமராசரின் 113 வது பிறந்த நாள் விழா கல்வி விழிப்புணர்வு விழாவாக நடைபெற்றது.
இவ்விழாவை ஒட்டி கிருஷ்ணகிரியில் 21.07.2015 செவ்வாய் மாலை 6 மணியளவில் கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இவ்விழாவிற்கு நுகர்வோர் பொதுச்சேவை சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் ராஜேஷ் ஜெயராமன் தலைமை தாங்கினார்.
இந்த விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு விருதுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். உரையில் காமராசருக்கும் பெரியாருக்குமான உறவு, கல்விப் பெருக்கத்துக்கு ஆற்றிய பணிகள், பசுவதை தடை குறித்து அவரது எதிர்ப்பால் அவர்மீது இந்து மதவெறி அமைப்பினரின் தாக்குதல் ஆகியவற்றை விளக்கிப் பேசினார்.
விழாவின் தொடக்கத்தில் புதுவை அதிர்வுக் கலைகுழுவின் பறையிசை, கலைநிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் பல்வேறு அரசியல் அமைப்புச் சேர்ந்தவர்களும், இலக்கிய அமைப்பினரும் உரையாற்றினர். முன்னதாக கிருட்டிணகிரியில் கழகத் தலைவர் பங்கேற்ற காமராசர் விழா கிருஷ்ணகிரி கொத்தபேட்டா நகராட்சி குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற கோருவதை விளக்கியும், மரணதண்டனை வழக்கின் போக்கைக் குறித்தும், பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

பெரியார் முழக்கம் 30072015 இதழ்

You may also like...

Leave a Reply