பெண்களை இழிவுபடுத்தும் ‘அய்யப்பன் பக்தி’
office 2010 key
windows 7 key sale
windows 10 home-key
windows 10 education
windows 10 pro key
office 2016 key
windows 10 key
office 2013 key
windows 7 key
Buy Windows 7 |
Sale Windows 7 Ultimate Keys |
Windows 10 Home Key Sale |
windows 8.1 key sale |
Windows 10 Product Key Sale |
Microsoft Office 2016 Serial Keys |
Windows 7 Professional Download ISO |
MS Office 2016 Key For Activation Latest Full Free Download |
How to download and install the Microsoft Office 2016 |
Windows 10 Product Key [UPDATED] |
Windows 7 Ultimate ISO download |
Legit Windows 7 Product Key Online Store, PayPal Support |
Windows 10 PRO ISO 32 Bit / 64 Bit Official Full Free |
Office 2013 Product Key |
How To Find Microsoft Windows Product Keys |
Where to Download Windows 7 (Free & Legally) |
How to Find Your Windows 7 Product Key |
இந்து பார்ப்பனிய மதம், பெண் களுக்கு எதரானது என்று பெரியார் இயக்கம் கூறினால் இந்துக்களைப் புண்படுத்துவதாக கூக்குரலிடு கிறார்கள். இந்துப் பெண்களை அவமதிப்பதும், இந்துக்களுக்கு எதிரானதுதானே என்ற கேள்விக்கு வாய் திறக்க மாட்டார்கள்.
இந்து ஆண்களைவிட இந்துப் பெண்கள்தான் மதச்சடங்குகளையும், வழிபாடுகளையும் கடுமையாக பின்பற்றுகிறார்கள் என்றாலும், இந்துப் பெண்கள் அவர்கள் பார்ப்பன உயர் ஜாதியாக இருந்தாலும்கூட வேதம் படிக்கவோ, அர்ச்சகர் ஆகவோ உரிமை கிடையாது.
சபரிமலை அய்யப்பன் பக்தர்களாக விரதம் மேற்கொள்ளவும் அந்தக் கோயி லுக்குள் நுழையவும் தடைப்படுத்தப் பட்டுள்ளதோடு அது அய்யப்பனை அவமதிக்கும் செயலாகவே பிரகடனப் படுத்துகிறார்கள்.
அண்மையில் அய்யப்பன் கோயில் தேவஸ்தான தலைவர் பிரயார் கோபால கிருஷ்ணன், “கோயில் களுக்குள் வரும் பெண்களுக்கு மாத விடாய் ஆகிறதா என்பதை சோதிக்கும் கருவி ஒன்றை கண்டுபிடிக்க வேண்டும். அதற்குப் பிறகு பெண்களை கோயில்களுக்குள் உள்ளே விடுவது பற்றி யோசிக்கலாம்” என்று பெண்களை இழிவுபடுத்தியிருக்கிறார். சுயமரியாதை உள்ள பெண்களிட மிருந்து இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
“இரத்தம் வருவதில் மகிழ்ச்சி” என்ற வாசகத்தை நாப்கின் காகிதங்களில் எழுதி அதைக் கையில் பிடித்து புகைப்படம் எடுத்து அனுப்புமாறு சமூக வலை தளங்கள் வழியாக பெண் களுக்கு வேண்டுகோள் விடுத்து, தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய் துள்ளனர்.
“இதே சுத்தமற்ற இரத்தத்தில்தான் உங்கள் அம்மாவின் கருவறையில் இருந்தீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்” என்றும், அந்த தேவஸ்தான தலைவருக்கு பெண்கள் பதிலடி தந்து வருகிறார்கள். இந்த எதிர்ப்புகள் பாராட்டி வரவேற்கப் பட வேண்டியதாகும்.
“விரதம் இருந்ததாகக் கூறி சபரி மலைக்குப் போகும் ஆண் பக்தர்கள் உண்மையாகவே விரதத்தைக் கடை பிடித்தார்களா என்பதைக் கண்டு பிடிக்க கருவி வரவேண்டும்” என்று, இவர்கள் ஒரு போதும் கூற மாட்டார்கள்.
பம்பை ஆற்றை – ஆடைகளை வீசி அசுத்தப்படுத்தும் ‘அய்யப்பர்களுக்கு’
6 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கலாம் என்கிறது கேரள உயர்நீதி மன்றம்.
சபரிமலை, பம்பையில் கண் காணிப்பு கேமிராக்கள் பொருத்தப் பட்டு மக்கள் கண்காணிக்கப்படுவதாக நிர்வாகம் கூறு கிறது.
மாலை போடும் ஆண்கள் எல்லோரும் ‘ஒழுக்கசீலராக’ இல்லை என்பதற்கு இவை உதாரணங்கள்.
அய்யப்பன் – இப்படியெல்லாம் பெண்களுக்கு தடை விதிக்கிறானா என்பதை கண்டறிவதற்கும் அங்கே அர்ச்சகராக உள்ள பார்ப்பன நம்பூதிரிகள் ‘ஒழுக்க சீலர்களாக’ வாழ்கிறார்களா என்பதைக் கண்டறி வதற்கும் ஒரு கருவி வருமானால் இவர்கள் ‘புனித’ முகம் கிழியும்.
அப்போது கோயில் கருவறைக் குள்ளிலிருந்து தாயின் ‘கருவறை’யை இழிவுபடுத்தும் இவர்களின் சாயம் வெளுத்து விடும்!
பெரியார் முழக்கம் 17122015 இதழ்