“என் பிள்ளைகளை கொலை செய்வதாக மிரட்டினார்கள்”: சங்கர்ராமன் மனைவி கண்ணீர் பேட்டி
ஜெயேந்திரனும் அவரது கூட்டாளிகளும் சங்கர்ராமன் கொலை வழக்கில் விடுதலையாகி விட்டார்கள். முதலில் குற்றவாளிகளை அடையாளம் காட்டிய சங்கர்ராமன் மனைவியும், மகளும் இறுதியில் அடையாளம் காட்ட அஞ்சினர். என் பிள்ளைகளை கொலை செய்து விடுவதாக மிரட்டியதே காரணம் என்கிறார், சங்கர்ராமனின் மனைவி, ‘ஜுனியர் விகடன்’ ஏட்டுக்கு (4.12.13) அவர் அளித்த பேட்டி இது.
3369 நாட்கள்… 24 குற்றவாளிகள்… 1873 பக்க குற்றப் பத்திரிகை… 189 அரசு தரப்பு சாட்சிகள்… என்ற பீடிகையோடு நடந்த சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜெயேந்திரர், விஜேயேந்திரர் உள்ளிட்ட அத்தனை பேரையும் விடுதலை செய்துள்ளது புதுவை நீதிமன்றம்.
தமிழகத்தில் நடந்தால் நியாயமான விசாரணை நடக்காது என்று வேறு மாநிலத்துக் மாற்ற ஜெயேந்திரர் வைத்த கோரிக்கையை ஏற்று சங்கர் ராமன் கொலை வழக்கு புதுவைக்கு மாற்றப்பட்டது. கடந்த 2005 ஆம் ஆண்டு தொடங்கி 9 ஆண்டுகள் நடந்தது வழக்கு. இந்த வழக்கில் நீதிபதி சி.°.முருகன் கடந்த 27 ஆம் தேதி தீர்ப்பளித்தார்.
‘சாட்சிகளில் பெரும்பாலானவர்கள் பிறழ் சாட்சியாக ஆனார்கள்’ என்று குறிப்பிட்ட நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்வதாக அறிவித்தார். “சங்கரராமன் குடும்பத்தினரே சரியாக ஒத்துழைக்கவில்லை” என்ற அரசு வழக்கறிஞர் தேவதா° சொல்லி இருக்கிறார்.
தீர்ப்பு வெளியான சில நிமிடங்களில் காஞ்சி புரத்தில் சங்கரரமன் குடும்பத்தினரைச் சந்தித்தோம். கண்ணீரோடு முடங்கிக் கிடந்த சங்கரராமனின் மனைவி பத்மா, சோகம் அப்பிய முகத்துடன் பேசினார். “என் கணவர் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாதவர். பாவிகள் அவரைத் துள்ளத் துடிக்க அவர் வேலை செய்த கோயிலிலேயே வெட்டிக் கொன்னாங்க. கொலையில் சம்பந்தப்பட்டவங்க பெரிய இடம்னு தெரிஞ்ச பிறகும் விடாம வழக்கை நடத்த ஒத்துழைப்பு தந்தோம். ஒருநாள், விசாரணைக்காக போனபோது நீதிமன்ற வளாகத்திலேயே வெச்சி மூணு பேர், ‘சாட்சியத்தை மாத்தி சொல்லலைன்னா உன் பிள்ளைங்களை ஆசிட் தொட்டியில வீசிடுவோம். அடையாளம் தெரியாம போயிடுவாங்கனு மிரட்டினாங்க. கோயில்ல வெச்சி ஒரு உயிரைப் பறிக்கத் துணிஞ்சவங்க… இதையும் செய்திடுவாங்கன்னு பயந்து போனேன். அவருதான் போயிட்டாரு…. என் பிள்ளைகளையாவது காப்பாத்துவோம்னு நீதிமன்றத்துல மாத்திச் சொல்ல வேண்டியதாகிடுச்சி” என்ற பத்மாவின் கண்களில் கண்ணீர் கொட்டுகிறது. துடைத்துக் கொண்டு தொடர்கிறார்.
“போலீ°காரங்க அடையாள அணிவகுப்புக்கு தனி வேன்ல அழைச்சிட்டுப் போனாங்க. நீதிமன்றத்துல குற்றவாளிகளை சரியா நான் அடையாளம் காட்டினேன். உயிருக்கு பயந்துதான் இந்தக் காரியத்தைச் செய்தேன். அவ்வளவு அச்சுறுத்தல் இருந்த சூழலில், எங்களை மறுபடியும் தனி வேன்ல கூட்டிட்டு வந்து வீட்டுல விட்டிருக்க லாம். ஆனா, போலீ°காரங்க, சர்வசாதாரணமா ப°ல திரும்பிப்போகச் சொன்னாங்க. எப்போ என்ன நடக்குமோன்னு பயந்துக்கிட்டுத்தான் ப° ஏறினேன்.
அன்னிக்கு நடுராத்திரி 12 மணிக்கு தன்னந்தனியா வீடுவந்து சேர்ந்தோம். அதுல இருந்து யாரையுமே நாங்க நம்பலை. யார் மேலயும் நம்பிக்கை வைக்கிற நிலையில் நாங்க இல்லை. நாங்க யாரைப் பகைச்சிக் கிட்டோமோ அந்தப் பெரியவங்க எதையும் செய்யத் துணிந்தவங்க. குற்றவாளிகளை அடையாளம் காட்டிட்டு வந்த அன்றைக்கு எங்க உயிருக்கு ஏதாவது ஆகியிருந்தா யார் பொறுப்பு? அநாதையா தானே இருக்கோம்?
இனி நமக்கு யாரும் பாதுகாப் பில்லைனு முடிவு பண்ணித்தான் சாட்சியை மாத்திச் சொன்னோம். ஆனா, அந்த ஒரு காரணத்துக்காக எங்க ஒத்துழைப்பு இல்லைன்னு அரசு வக்கீல் சொல்லியிருக்கார். இது நியாயமா? அதுக்காக அவா அத்தனை பேரையும் விட்டுர்றதா?” என்று கேட்ட பத்மா, எதையோ யோசித்தவராக இருந்தார்.
“கடவுள் எல்லாத்தையும் பார்த்துண்டு இருக்கார். அவா பெரிய இடம். அவாளை எதிர்த்துப் போராட எங்களிடம் தெம்பும் திராணியும் இல்லை. நான் ஜெயலலிதா அம்மாவைத்தான் நம்புறேன். வழக்கை இத்தோட விட்டுடாம மறுபடியும் அப்பீல்
போக நடவடிக்கை எடுக்கணும். எத்தனை வருஷ மானாலும் எங்களுக்கு நீதி கிடைக்கணும். இது முதல்வர் அம்மா வுக்கு கண்ணீரோட நான் வைக்கிற கோரிக்கை” என்றார் வழிந்த கண்ணீரை துடைத்தபடி.
அம்மா பேசுவதை கலங்கிய நிலையில் கவனித்தபடி இருந்தார், அவரது மகன் ஆனந்த் சர்மா. “குற்றம் நிரூபணம் ஆகாததால் குற்றம்சாட்டப் பட்டவர்கள் விடுவிக்கப்படுவதாக தீர்ப்பில் கூறப் பட்டுள்ளது. சங்கரராமன் கொலையில் இவர் களுக்குத் தொடர்பில்லை என்றால் சங்கரராமனை கொன்றது யார்? தன்னைத் தானே கத்தியால் வெட்டிக் கொண்டு செத்துப் போக என் தந்தை என்ன மனநோயாளியா?
2001 இல் சீனா செல்ல இருந்த ஜெயேந்திரரை, ‘மடாதிபதிகள் கடல் கடந்து செல்லக்கூடாது’ என வழக்குப் போட்டுப் போகவிடாமல் என் தந்தை தடுத்தார். தொடர்ந்து மடத்தின் அட்டூழியங்களை வெளியில் சொன்னார். ஜெயேந்திரர், விஜயேந்திரர் மற்றும் அவரைச் சேர்ந்தவர்களின் முறைகேடான செயல்களைச் சொந்தப் பெயரிலும் புனை பெயர் களிலும் புகார்களாக எழுதினார்.
இதற்கு ஆதாரமான கடிதங்களை முக்கிய ஆதாரங்களாக காவல்துறையினர் எங்கள் வீட்டிலிருந்து கொண்டு சென்றனர். அதிலேயே என் தந்தைக்கும் ஜெயேந்திரர் தரப்புக்கும் இருந்த பகை வெளிப்படையாகத் தெரியும்.
உத்திரமேரூர் நீதிமன்றத்தில் இரகசிய வாக்க மூலமாகவே இதைக் கூறியிருக்கிறேன். அடையாள அணிவகுப்பிலும் சரியான குற்றவாளிகளை அடையாளம் காட்டினோம். அதை ஏற்றுக் கொண்டனர். ஆனால், புதுவை நீதிமன்றத்தில் முதல் விசாரணையின்போது உயிர் பயத்தினால் நாங்கள் சாட்சியத்தை மாற்றிச் சொல்ல வேண்டியதானது. ஏற்கெனவே கொலை பாதகம் செய்த அவர்களின் மிரட்டலுக்கு எங்களைப் போன்ற சாமான்யன் பயப்படாமல் இருக்க முடியுமா? ஆண்டவன் நீதிமன்றத்தில் நிச்சயம் அவர்களுக்கு தண்டனை உண்டு” என்றார் விரக்தியும் வேதனையும் கலந்த குரலில்.
சங்கரராமனின் மருமகன் கண்ணனிடம் பேசினோம். “இந்த தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. போதிய ஆதாரங்கள் இருந்தும் ஒட்டு மொத்தமாக அத்தனை பேரையும் விடுவித்திருப்பது அதிர்ச்சி யளிக்கிறது” என்று சொன்னார்.
பெரியார் முழக்கம் இதழ் 05122013