இந்து முன்னணி சலசலப்புகளை முறியடித்து நம்பியூரில் நடந்த பரப்புரைப் பயண நிறைவு விழா
office 2010 key
windows 7 key sale
windows 10 home-key
windows 10 education
windows 10 pro key
office 2016 key
windows 10 key
office 2013 key
windows 7 key
Buy Windows 7 |
Sale Windows 7 Ultimate Keys |
Windows 10 Home Key Sale |
windows 8.1 key sale |
Windows 10 Product Key Sale |
Microsoft Office 2016 Serial Keys |
Windows 7 Professional Download ISO |
MS Office 2016 Key For Activation Latest Full Free Download |
How to download and install the Microsoft Office 2016 |
Windows 10 Product Key [UPDATED] |
Windows 7 Ultimate ISO download |
Legit Windows 7 Product Key Online Store, PayPal Support |
Windows 10 PRO ISO 32 Bit / 64 Bit Official Full Free |
Office 2013 Product Key |
How To Find Microsoft Windows Product Keys |
Where to Download Windows 7 (Free & Legally) |
How to Find Your Windows 7 Product Key |
‘எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்; எங்கள் இளைய தலைமுறைக்கு வேலை வேண்டும்’ என்ற முழக்கத்தை முன் வைத்து ஈரோடு வடக்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் தொடர்ந்து நடத்திய பரப்புரைப் பயணத்தின் நிறைவு விழா 13.12.2015 அன்று நம்பியூரில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கழகத்தின் வெளியீட்டு செயலாளர் இராம. இளங்கோவன் தலைமையில் தோழர்கள் வாரம் ஒரு நாள் என்று திட்டமிட்டு 8 வார காலம் இந்தப் பயணத்தை நடத்தி முடித்துள்ளனர். அதன்படி செப்டம்பர் 22ஆம் தேதி கொளப்பலூர் பகுதியில் முதல் பரப்புரைப் பயணம் தொடங்கியது. தொடர்ந்து கோபி நகரம், பவானி ஒன்றியம், அம்மாப்பேட்டை ஒன்றியம், அந்தியூர் ஒன்றியம், சத்தியமங்கலம் ஒன்றியம், நம்பியூர் ஒன்றியம் பகுதிகளில் கிராமம் கிராமமாக சுமார் 50 கிராமங்களில் பயணம் எழுச்சியுடன் நடந்தது. மூடநம்பிக்கைகளை விளக்கிடும் அறிவியல் நிகழ்ச்சி, பார்ப்பன மதவாதம், தமிழ் மக்களை அடிமைப்படுத்தும் சூழ்ச்சிகள், தனியார் துறைகளில் இடஒதுக்கீடு உரிமைகள் ஆகிய கருத்துகளை முன் வைத்து தோழர்கள் மக்களை சந்தித்துப் பேசினர். நல்ல வரவேற்பு கிடைத்தது என்று கழகத் தோழர்கள் மிகவும் உற்சாகத்துடன் தெரிவித்தனர்.
ஆங்காங்கே ‘இந்து முன்னணி’ என்று கூறிக் கொண்டு விவரம் புரியாத பார்ப்பன சூழ்ச்சிகளுக்கு பலியான ஒரு சில “சூத்திரர்கள்” காட்டிய எதிர்ப்புகளை முறியடித்து அவர்களுக்கும் உண்மைகளை புரிய வைத்து தோழர்கள் உரையாற்றினர். மக்கள் ஆதரவோடு எழுச்சி நடைபோட்ட பயணத்தைக் கண்டு ஆங்காங்கே சலசலப்புக் காட்டியவர்கள் பின்வாங்கி ஓட்டம் பிடித்தனர். கடந்த டிசம்பர் 2ஆம் தேதி நம்பியூர் பேருந்து நிலையம் அருகே பயணத்தின் நிறைவு விழா பொதுக் கூட்டம் மிகச் சிறப்பாக நடந்தது. மேட்டூர் டி.கே.ஆர். குழுவினரின் பகுத்தறிவு இசையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. பெருமளவில் மக்கள் திரண்டு வந்திருந்தனர். இருக்கைகள் நிரம்பி வழிந்தன. நம்பியூர் ஒன்றிய செயலாளர் இரமேசு தலைமை தாங்கி, பார்ப்பனியம் தமிழர்களை அடிமைப்படுத்துவதை பல்வேறு சான்றுகளை எடுத்துக் காட்டி உரையாற்றினார். மாவட்ட தலைவர் நாத்திகஜோதி, மாவட்ட செயலாளர் வேணுகோபால், கழகத் தோழர் அழகிரி, ஏலத்தூர் கழகத் தோழர் செல்வக்குமார், கழக வெளியீட்டுச் செயலாளர் இராம. இளங்கோவன், அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, தலைமைக் கழகப் பேச்சாளர் கா.சு. வேலுச்சாமி ஆகியோர் உரையாற்றினர்.
தமிழ்நாடு அறிவியல் மன்ற உறுப்பினர்களுக்கு பெயருடன் அடையாள அட்டைகள் தயாரிக்கப்பட் டுள்ளன. இந்த அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்வை மன்ற அமைப்பாளர் திருப்பூர் சிவகாமி அறிமுகப்படுத்தி உரையாற்ற கழகத் தலைவர் கொளத்தூர் மணி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கினார். (மேலே உள்ள படம்) தொடர்ந்து கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றினர்.
பெரியார் முழக்கம் 17122015 இதழ்