Category: கருவூல கட்டுரைகள்

வினாயகன் கதை அன்றும், இன்றும்! வினாயகன் பிறப்புப் பற்றி பெரியார் எழுதிய கட்டுரை.

சதுர்த்தி விநாயகர் எனும் கடவுள் இந்த நாட்டிலே உற்பத்தியான கடவுள் என்றும் சொல்ல முடியாது. வடநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டு இங்கே இவ்வளவு கூத்தடிக்கப்படுகிறது. ஆற்றங்கரையோரம், அரசமரத்தின் கீழ், குளத்தங்கரையிலும், வீதிகளின் சந்தியிலும் வைக்கப்பட்டு இருக்கும் இந்தக் கடவுளின் யோக்கியதையைச் சொல்லப் போனால் அது ஏனைய `கடவுள்’களுக்கு மிகவும் வெட்கக் கேடாகும். அதாவது, இவருடைய பிறப்பின் வரலாறு அந்தப் பார்ப்பனர்களாலேயே எழுதப்பட்ட புராணங்களில் இருந்து பார்த்தாலும் கூட மிக மிக மோசமாக உள்ளது. விநாயகர் பிறப்புப் பற்றி மூன்று வரலாறு உள்ளது. நம் மக்களுக்கு இவற்றில் இருந்து `இது உண்மையில் கடவுள்’ என்று சொல்ல முடியுமா என்பதை அறிய முடியவில்லை. சிவன் என்ற கடவுளின் மனைவி பார்வதி குளிக்கப் போனாளாம். தான் குளிக்கின்றபோது யாராவது அந்த அறைக்குள் புகுந்துவிடக்கூடாதே என்று பயந்து குளிக்கும் அறைக்கு வெளியே காவல் வைப்பதற்கு ஒரு உருவத்தை உற்பத்தி செய்தாளாம். அந்த உருவத்தை எப்படி உற்பத்தி செய்தாள்...

விநாயகர்  சிலை ஊர்வலங்களில் பங்கேற்பது – அம்பேத்கர் கொள்கைக்கு இழைக்கும் துரோகம்!

விநாயகர் சிலை ஊர்வலங்களில் பங்கேற்பது – அம்பேத்கர் கொள்கைக்கு இழைக்கும் துரோகம்!

14.10.1956 அன்று நாக்பூரில் புத்தமார்க்கம் தழுவிய அம்பேத்கர், மதமாற்றத்துக்குத் திரண்டிருந்த இலட்சக் கணக்கான மக்களிடம் 22 உறுதி மொழிகளைக் கூறி ஏற்கச் செய்தார். விநாயகன்,  இலட்சுமி, இராமன், கிருஷ்ணன் மற்றும் இந்துக் கடவுள்களை வணங்க மாட்டேன் என்பதே அந்த உறுதி! புரட்சியாளர் அம்பேத்கர் கொள்கைகளை ஏற்றுக் கொண்ட எந்த அம்பேத்கரிஸ்டும் ஒருபோதும் விநாயகர் சிலை ஊர்வலத்தில் பங்கேற்க மாட்டார்கள்; பங்கேற்கவும் கூடாது. விநாயகர் சிலை ஊர்வலத்தில் பங்கேற்பது அம்பேத்கர் உழைத்த இலட்சியத்துக்கு செய்யும் துரோகம். அம்பேத்கர் – நாக்பூரில் எடுத்த உறுதிமொழிகளை இங்கு வெளியிடுகிறோம்: பிரம்மா, விஷ்ணு, சிவன் மூன்றையும் கடவுளாகக் கருதி நான் வணங்க மாட்டேன். இராமன், கிருஷ்ணன் இரண்டும் அவதாரமென எண்ணி நான் வணங்க மாட்டேன். விநாயகன், லட்சுமி மற்றும் இந்து தேவதைகளை தெய்வங்களாக ஏற்று நான் வணங்க மாட்டேன். கடவுள் பிறந்ததாகவோ, அவதாரம் எடுத்து வந்ததாகவோ நான் நம்ப மாட்டேன். மகாவிஷ்ணுவின் அவதாரம்தான் புத்தர் என்ற விஷமத்தனமான...

நீதிபதி ஏ.பி. ஷா பரபரப்பான பேட்டி தேசபக்தி – தொழிற்சாலையின் உற்பத்திப் பொருள் அல்ல!

நீதிபதி ஏ.பி. ஷா பரபரப்பான பேட்டி தேசபக்தி – தொழிற்சாலையின் உற்பத்திப் பொருள் அல்ல!

ஒற்றைக் கலாச்சாரத்தை வலிந்து திணிப்பது இந்தியாவை அழித்து விடும் என்று டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் சட்ட ஆணையத்தின் தலைவராகவும் இருந்த அஜித் பிரகாஷ் ஷா (ஏ.பி.ஷா). ‘இந்து’ ஆங்கில நாளேட்டுக்கு (ஆக.9, 2017) அளித்த பேட்டியில் எச்சரித்துள்ளார். ‘தேசியம்’ என்பது குறித்து அவர் கூறுகையில், ‘தேச பக்தி, தேசியம்’ என்பவை வரையறைகளுக் குட்பட்டதே ஆகும். நைஜிரிய நாட்டின் எழுத்தாளர் சிம்மானந்தா நாகோசி அடிச்சே தேசியம் – தேசபக்தியை “ஒற்றைக் கதையாடலின் ஆபத்து” என்று கூறுகிறார். ஒரே கண்ணோட்டத்தில் தேசியத்தைப் பார்க்க முடியாது. ‘தேசியம்’ என்பது பன்முகத் தன்மையானது என்ற புரிதல் அவசியம். பல்வேறு இனங்கள் கலாச்சாரங்களை உள்ளடக்கியதே ‘தேசியம்’ என்ற புரிதலுக்கு வராமல் ஒற்றைப் பண்பாடு கொண்டதே  தேசியம் என்று செயல்பட்டால் அது ‘பாசிசம் –நாசிசம்’ என்ற இட்லர், முசோலினியின் கோர முகமாகிவிடும். தேசியத்தை மதத்தின் அடிப்படையில் கட்டமைப்பது ஆபத்தானது. சட்டத்தின் அதிகார முனையில் திணிக்கப்படும் கலாச்சார தேசியம் வெறுப்பையும்...

சமஸ்கிருதப் பண்பாட்டின் எதிர்ப்பே தமிழர்களுக்கான திராவிடம் – த பரமசிவம் மலேசியா

தமிழ்மலர் நாளேட்டில் (02.07.2017) இனியும் வேண்டுமா திராவிடம்? என்ற தலைப்பில் எழுத்து வித்தகர் வே.விவேகானந்தன் எழுதியுள்ள கட்டுரை மாநாட்டின் நோக்கத்தை திசைதிருப்புவதாகவும் முரண்பட்ட வாதங்களையும் உள்ளடக்கியதாகவும் இருக்கிறது திராவிடத்தைத் தூக்கி நிறுத்துவதற்காகவே கூட்டப்பட்ட இந்த மாநாட்டுக்கு தமிழ் உணர்வாளர்கள் வரச்செய்வதற்காக தமிழ் உணர்வாளர்கள் மாநாடு என்று தலைப்பிட்டு ஏமாற்றுவேலை செய்துள்ளனர் என்று குற்றம் சாட்டுகிறது அக்கட்டுரை. மாநாட்டின் தலைப்பு இனத்தால் திராவிடன், மொழியால் தமிழன், உலகத்தால் மனிதன் என்பதாகும். மாநாட்டு சுவரொட்டி அழைப்பிதழ் அறிவிப்புகளும் விளம்பரங்களும் இதை வெளிப்படையாகவே பறைசாற்றுகின்றன. இதில் ஏமாற்றுவதற்கு என்ன இருக்கிறது? திராவிட மொழிக்குடும்பத்தை ஆராய்ந்த கால்டுவெல் – தேவநேயப் பாவாணர் போன்ற ஆய்வாளர்கள் திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த மொழி தமிழ் என்பதையும், இந்தோ அய்ரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சார்ந்த சமஸ்கிருதத்திலிருந்து தமிழ் முற்றிலும் வேறுபட்டது என்பதையும் தங்கள் ஆய்வுகள் வழியாக நிலைநாட்டினர். தமிழுக்கு மூலம் சமஸ்கிருதம் என அதுவரை ஆரியப் பார்ப்பனர்கள் கூறிவந்த கருத்தை ஆழமாக மறுத்தன இந்த...

பார்ப்பனர்கள் பூர்வீகக் குடிகள் என்ற பொய்மை வாதம் உடைந்து சுக்கு நூறானது

பார்ப்பனர்கள் பூர்வீகக் குடிகள் என்ற பொய்மை வாதம் உடைந்து சுக்கு நூறானது

மரபணு சோதனை ஆய்வு வெளிப்படுத்தும் மகத்தான முடிவுகள் சிந்துவெளி நாகரிகத்தின் இறுதி காலத்தில் சமஸ்கிருதத்துடன் ஆரியம் நுழைந்தது ஆரியர்கள் இந்தியாவில் குடியேறினார்கள் என்பதை பார்ப்பனிய அறிஞர்கள், சங் பரிவாரங்கள் முதலானோர் எப்போதும் மறுத்தே வந்திருக்கின்றனர். அதற்கு ஆதாரமாக வரலாற்று அறிஞர்கள் என்ற போர்வையில் சில வரலாற்று அணுகுமுறை அற்றோர் இறக்கிவிடப்பட்டனர். அவர்கள் எழுதிய நூல்கள், வைத்த வாதங்கள் அனைத்தும் வரலாற்று அணுகுமுறையின் தொழில்நுட்ப சொற்களை தவறாக பயன்படுத்தி, குதர்க்கவாதங்களோடு ஆரிய குடியேற்றத்தை மறுத்தன. மாறாக ஆரியர்களே இங்குள்ள பூர்வகுடி மக்கள் என்பதை வலிந்தும் பொய்யாகவும் பேசினர். மோடியின் தலைமையில் நடக்கும் பா.ஜ.க ஆட்சியில் இதை அடிப்படையாக வைத்தே வரலாற்றை மாற்றுகிறார்கள். இன்னும் மோசமாக புராணப் புரட்டுக்களையே அறிவியல் கண்டுபிடிப்புகள் என்றெல்லாம் பேசுகின்றனர். நாட்டின் பிரதமரே உலக அறிஞர்கள் – அறிவியலாளர்கள் கூட்டத்தில் அதை வெட்கம் கெட்டு பேசுகிறார். இதை ஆரம்பத்திலிருந்தே வரலாற்று அறிஞர்கள் மறுத்து வந்திருக்கின்றனர். அதற்கு சமீபத்திய வரவாக இந்த...

புராணங்கள், வரலாறுகளில் – பார்ப்பன சூழ்ச்சிகளும் – படுகொலைகளும் பார்ப்பன பயங்கரவாதங்கள் பற்றிய ஒரு தொகுப்பு: விடுதலை இராசேந்திரன்

புராணங்கள், வரலாறுகளில் – பார்ப்பன சூழ்ச்சிகளும் – படுகொலைகளும் பார்ப்பன பயங்கரவாதங்கள் பற்றிய ஒரு தொகுப்பு: நந்தன் : தில்லை நடராசன் கனவில் வந்ததாகக் கூறி, சிவபக்தனாகி, ஆண்டவனை தரிசிக்க வந்தவன் நந்தன். தீண்டப்படாத சமூகத்தைச் சார்ந்தவன். கொள்ளிடம் என்ற சிற்றூரிலிருந்து புறப்பட்டு தில்லைக்கு நடராசனை தரிக்க வந்தபோது தீட்சதப் பார்ப்பனர்கள் தீயில் குளித்து தீட்டைப் போக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர். நந்தன் தீயில் குதித்தான். அப்போது தில்லை நடராசன் நேரில் தோன்றி, எதிரே இருந்த நந்தியை விலகச் சொல்லி, நந்தனுக்கு கர்ப்பக்கிரகத்துக்கு வெளியில் வைத்தே ‘தரிசனம்’ தந்ததாக ‘பெரிய புராணத்தில்’ சேக்கிழார் எழுதியுள்ளார். உண்மை என்னவென்றால், நந்தன் தீயில் எரிக்கப்பட்டான் என்பதே. சம்பூகன் : பார்ப்பனர்கள் மட்டுமே கடவுளை நேரடியாக தவம் செய்ய உரிமை பெற்றவர்கள். ராமன் ஆட்சியில் சம்பூகன் என்ற ‘சூத்திரன்’ கடவுளை நோக்கி நேரடியாக தவம் செய்தான். பார்ப்பனர்கள் – இதை அதர்மம் என்று கூறி,...

பெரியார் ஒருவரே நவீனத்தின் அடையாளம்

பெரியார் ஒருவரே நவீனத்தின் அடையாளம்

மார்க்சிய சிந்தனையாளரும் இந்திய தத்துவ மரபுகள் குறித்து ஆய்வு நூல்களை எழுதியவருமான பேராசிரியர் ந.முத்து மோகன், ‘உங்கள் நூலகம்’ மாத இதழுக்கு (ஏப். 2017) அளித்துள்ள பேட்டி இது. (கடந்த இதழ்களின் தொடர்ச்சி) தேசியம் எதிர் காலனியம் – ஏகாதிபத்தியம் என்ற முரண்நிலை சட்டகங்களுக்குள், பெரியார், அம்பேத்கர் போன்ற சாதி எதிர்ப்புத் தலைவர்கள் காலனியத்திற்கு ஆதரவாளர் என்றும் விமர்சனம் செய்துவருகின்றோம். இந்த முரண்நிலை சட்டகம் இன்னும் நம்மிடையே வலுவாக இருக்கின்றது. இந்த விமர்சனத்தை எவ்வாறு பார்க்கின்றீர்கள்? இந்தியாவில் காலனியம் குறித்த விவாதங்கள் இன்னும் முழுமை அடையவில்லை. இன்னும் இந்த விவாதங்களில் குறைபாடுகள், இடைவெளிகள் இருக்கின்றன. வரலாற்றுரீதியாக அதிகமாக இந்தியச் சமூகம் தேங்கி நின்றதைக் காலனியம் உடைத்து, முன்னுக்குத் தள்ளியது என்பார் மார்க்ஸ். கம்யூனிஸ்ட் அறிக்கையில் மார்க்ஸ் ஒன்றரை பக்கத்திற்கு முதலாளி யத்தின் புரட்சிகரமான பணிகள் என்று சில விசயங் களைக் குறிப்பிடுவார். நிலவுடைமைமுறை உறவுகளை உடைத்தெறிந்து, இதுவரை கல் போல உறைந்து...

ஆரியப் பார்ப்பனர் மேலானவர் என்ற பொய்மையை தகர்த்தெறிந்த மரபணு ஆய்வு

ஆரியப் பார்ப்பனர் மேலானவர் என்ற பொய்மையை தகர்த்தெறிந்த மரபணு ஆய்வு

பிரம்மாவின் முகத்தில் பிறந்தவர்கள் ‘பிராமணர்கள்’; தோளில் பிறந்தவர்கள் ‘சத்திரியர்’; தொடையில் பிறந்தவர்கள் ‘வைசியர்’; காலில் பிறந்தவர்கள் ‘சூத்திரர்’ இவர்கள் அடிமையான வர்கள் என்று சமூகத்தை பிறப்பின் அடிப்படையில் கூறு போட்டு வருகிறது பார்ப்பனியம். “சூரிய சந்திரன் தோன்றிய காலத்திலிருந்தே இருந்து வருவது ஆரிய இனம்; இதற்கு தோற்றமே இல்லை. நாம் எல்லோரிலும் உயர்ந் தவர்கள்” என்று கூறுகிறார், ஆர்.எஸ்.எஸ்.சுக்கு தத்துவத்தை உருவாக்கிய கோல்வாக்கர். ஆரியர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள். அவர்களின்  வேத கலாச்சாரமே ‘பாரத’த்தின் கலாச் சாரம். ‘அவாளி’ன் சமஸ்கிருதப் பண்பாடே புனித மானது” என்று இப்போதும் பார்ப்பனியம் வரலாற்றைக் கட்டமைக்கிறது. அனைத்து வாதங்களையும் தவிடுபொடியாக்கும் ஆய்வு சர்வதேச விஞ்ஞானிகளால் இப்போது கண்டறியப்பட் டுள்ளது. பிரிட்டன் ஹர்ட்டர்ஸ் ஃபீல்டு பல்கலைக் கழக விஞ்ஞானி பேராசிரியர் மார்ட்டின் பி. ரிச்சர்ட்ஸ் தலைமையில் 16 விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வு 3 மாதங்களுக்கு முன்பு விஞ்ஞான ஆய்வு இதழில் (bmc Evolutionary biology) வெளியிடப்பட்டு உலகம்...

ஜாதிவேறுபாடுகளை ஒழிக்க முன்வாருங்கள்!  வேளாளர் – சத்திரியன் – வைசியர் என்று  பட்டம் சூட்டிக்கொள்ள துடிப்பது பெருமைக்குரியது அல்ல!

ஜாதிவேறுபாடுகளை ஒழிக்க முன்வாருங்கள்! வேளாளர் – சத்திரியன் – வைசியர் என்று பட்டம் சூட்டிக்கொள்ள துடிப்பது பெருமைக்குரியது அல்ல!

உரிமைக்காக ஜாதி மாநாடுகள் கூட்டுவதை ஆதரித்த பெரியார், ஜாதி பெருமைக்காகக் கூட்டப்படுவதை அழுத்தமாகக் கண்டித்திருக்கிறார். “இந்த நாடு பல சாதி, பல வகுப்பார் அடங்கியதாக இருக்கிறது. எப்போது நமது நாட்டில் சாதி வகுப்பு ஏற்பட்டு அதனுள் உயர்வு தாழ்வு அமைக்கப்பட்டுப் போய்விட்டதோ அன்று முதலே தனிச்சாதி மாநாடு கூட வேண்டியது அவசியமேற்பட்டுவிட்டது. ஒவ்வொரு சாதியாரும் தனித்தனியாக மாநாடுகள் நடத்திக் கொண்டிருந்தால் எப்போதுதான் ஒன்று சேருவது என்று பலபேர் குற்றஞ் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். சிலர் இத்தகைய மாநாடுகளை வகுப்பு மாநாடுகள் என்று சொல்லி மாநாட்டிற்கு வரமுடியாதென்று மறுக்கவும் பார்த்திருக்கிறேன். இத்தகைய காரணங்களைக் கொண்டு வகுப்பு மாநாடு கூட்டுவோரைக் குறை கூற முடியாது.  இத்தகைய மாநாடுகள் கூட்ட வேண்டியது மிகவும் அவசியமாகவே இருக்கிறது. ஒருவகுப்பார் தாங்கள் தாழ்ந்த நிலைக்குள்ளாக்கப்பட்டு, இழிவுபடுத்தப்பட்டு வருவதை உணராதிருக்கும் வகையில் ஒருவித ஏற்பாடும் செய்யாமல் தான் இருப்பார்கள். அவர்களுக்குத் தாங்களும் மனிதர்கள், தாங்களும் மற்றோருக்குச் சமமானவர்களே, தங்களைத் தாழ்ந்தவர்களெனக் கூறுவது...

தமிழர்களின் கடவுள் மறுப்பு மரபு சங்க இலக்கியத்திலிருந்து சுயமரியாதை இயக்கம் வரை முனைவர் க.நெடுஞ்செழியன்

நாத்திகம் என்பது வடசொல், இச்சொல்லிற்கு மறுப்பது என்பது பொருள். ஒருவர் கொள்கையை மற்றவர் ஏற்காத போது அல்லது அதனை மறுக்கின்ற போது அப்படி மறுக்கின்றவர் அக் கொள்கையைப் பொருத்த மட்டில் நாத்திகராவார். மாணிக்கவாசகர். ஆத்திகர் மானார் அயலவர் கூடி நாத்திகம் பேசி நாத்தழும் பேறினர் எனக் குறிப்பதில், நாத்திகம் எனும் சொல், சிவனை முழுமுதற் கடவுளாக ஏற்காத தன்மையைச் சுட்டக் காணலாம். ஆயினும் நாத்திகர் எனும் சொல் கடவுள் கோட்பாட்டை – வைதிகப்பண்பாட்டைமறுத்தவர்களைகுறித்தே வழங்கப்பட்டுள்ளது. வடமொழி அறநூல்களில் நாத்திகர்களாகக் குறிக்கப் பெறுபவர்கள் பேச்சுக் கலையிலும் தருக்கவியலிலும் வல்லவர்களாகத் திகழ்ந்துள்ளனர். இதனை, உலகத்துப் பொருள்களின் தோற்றக் கோடுகள், இயற்கையாக நிகழ்வனவெனவும், அவற்றிற்கு ஒரு கருத்தா வேண்டாமையின் கடவுள் இல்லை எனவும் அக்கடவுள் முதலிய பொருள்களைப் பற்றிக் கூறும் வேதனங்கள் (வேதங்கள்) பிரமாணமாகாவெனவும் துணிந்து, யுக்தி வன்மையைக் கடைப்பிடித்து நிகழ்வது நாத்திகமாகும். என சுக்கிர நீதி குறிக்கும். இந் நூற்பாவிற்கு விளக்கம் அளிக்கும் தேவிபிரசாத்...

இஸ்லாம் குறித்து பெரியார் பார்வை

[இஸ்லாம் குறித்து பெரியார் நபிகள் விழாவிலே பேசிய கருத் துகளின் தொகுப்பு; இஸ்லாமிய மதத்தின் மீதான தனது விமர் சனங்களை இஸ்லாமியர்களிடையே பெரியார் பேசியதை இத் தொகுப்பிலிருந்து அறியலாம்] மதம் வாழ்க்கைக்கு தேவையா? மக்கள் காட்டுமிராண்டிகளாய் இருந்த காலத்தில்-கல்வி அறிவு உலக அனுபவம் ஞானம் இல்லாதிருந்த காலத்தில்மக்களை நல்வழிப்படுத்து வதற்கு என்று ஒரு சமயம் மதம் என்பதாக கற்பனை செய்து மக்களுக்கு ஒரு பயத்தை உண்டாக்கி அவர்களது ஞானமற்ற சுதந்திரத்தை அடக்க ஏற்பாடு செய்ததாக இருக்கலாம். ஆனாலும் இன்று உலகம் பொருள் தத்துவ ஞானமும் விஞ்ஞான ஞானமும் ஏற்பட வசதி ஏற்பட்டு பெருகிவரும் நாளில் காட்டு மிராண்டித்தன காலத்தில் ஏற்படுத்தப்பட்ட மதமும், மத உணர்ச்சியும் எதற்கு என்றுதான் கேட்கின்றோம். இந்தப்படி நாம் சொல்லும் போது இதற்கு வேறுவழியில் சமாதானம் சொல்லமுடியாத மக்கள் சிலரால் இரண்டு விதமான கேள்விகள் கேட்கப்படுகின்றன. அவையாவன, ஒன்று “மதத்தை ஒழிக்கவேண்டும் என்று சொல்லுகின்ற நீங்கள், அந்த இடத்தில்...

ஜாதி-இந்துத்துவ எதிர்ப்பை உள்ளடக்கியதே சரியான பொருள் முதல்வாதம்

ஜாதி-இந்துத்துவ எதிர்ப்பை உள்ளடக்கியதே சரியான பொருள் முதல்வாதம்

பெரியார் ஒரு வித்தியாசமான பொருள் முதல்வாதி. அவர் கொச்சைப் பொருள்முதல்வாதி அல்ல, அப்படி வரையறுப்பது தவறு. மார்க்சிய சிந்தனையாளரும் இந்திய தத்துவ மரபுகள் குறித்து ஆய்வு நூல்களை எழுதியவருமான பேராசிரியர் ந.முத்து மோகன், ‘உங்கள் நூலகம்’ மாத இதழுக்கு (ஏப். 2017) அளித்துள்ள பேட்டி இது. (கடந்த இதழ்களின் தொடர்ச்சி) சாதி, கற்பு போன்ற ஆதிக்கச் சொல்லாடல்களை மட்டுமில்லாமல், காதல், தொண்டு, பொதுநலம் போன்ற சொல்லாடல்களையும் நிராகரித்த பெரியார், இந்தியத் தத்துவ மரபில் சொல்லப்படும் விதண்டா வாதியா? காதல், தொண்டு, பொதுநலம் போன்றவற்றை மிகைப்படுத்தும் போதுதான் பெரியார் நிராகரித்து எழுதியுள்ளார். ஆனால் அவற்றையெல்லாம் அவர் முழுக்கவும் நிராகரிக்கவில்லை. இவற்றின் நியாயமான அர்த்தப்பாட்டில் அதனை அங்கீகரிப்பார். சாதி, வருணம், மதம் பற்றிப் பேசும் போதெல்லாம், அவை வெறும் சுயநலக்காரர் களுடைய நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டன, இலாபங்களுக்காக உருவாக்கப்பட்டன. இவை யெல்லாம் எந்தவித பொதுநோக்கங்களும் இல்லாதவை என்று நிராகரிப்பார். இது போன்று காதல், தொண்டு, பொதுநலம்...

பெரியார் பேசிய பகுத்தறிவு – மேற்கத்திய இறக்குமதி அல்ல!

பெரியார் பேசிய பகுத்தறிவு – மேற்கத்திய இறக்குமதி அல்ல!

மார்க்சிய சிந்தனையாளரும் இந்திய தத்துவ மரபுகள் குறித்து ஆய்வு நூல்களை எழுதியவருமான பேராசிரியர் ந.முத்து மோகன், ‘உங்கள் நூலகம்’ மாத இதழுக்கு (ஏப். 2017) அளித்துள்ள பேட்டி இது. (சென்ற இதழ் தொடர்ச்சி) சுயமரியாதை, பகுத்தறிவு, மானம், அறிவு ஆகிய பெரியாரின் சொல்லாடல்களை எவ்வாறு புரிந்து கொள்வது? குறிப்பாக, பெரியாரின் பகுத்தறிவு வாதம் நவீன ஐரோப்பாவின் அறிவு வாதம் (ரேசனலிசம்) போன்றதா? பெரியாருடைய சுயமரியாதை, பகுத்தறிவு, மானம் அல்லது தன்மானம், அறிவு முதலான கருத்துகள் மேற்கத்திய ரேசனலிச (மேல் நாட்டு பகுத்தறிவு வாதம்) சாயல் கொண்ட கருத்துகள் போலத் தோற்றம் அளிக்கும். ஆனால், பெரியார் மேற்கத்திய பகுத்தறிவு வாதங்களை எல்லாம் கற்றுத் தேர்ந்து, ஓர் அறிவுத்தளத்தில் நின்று அவற்றைக் கையாண்டார் என்பது மாதிரியெல்லாம் எனக்குத் தெரியவில்லை. அவரிடம் ஓர் உள்ளூர் தன்மை உண்டு. அதாவது இங்குள்ள சமூக-பொருளாதார-பண்பாட்டு-அரசியல் தளங்களில் நின்று இந்தச் சொற்களை உருவாக்கினார் போலத் தெரிகின்றது. காங்கிரஸ்காரர்கள் சுயராஜ்யம் என்று...

கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரை காந்தியின் கபட வாதங்கள்: தோலுரித்தவர் அம்பேத்கர்

காந்தியின் கபட வாதங்களை அம்பேத்கர் எப்படி எதிர் கொண்டார் என்பதை விளக்கி கழகத் தலைவர் கொளத்தூர் மணி அம்பேத்கர் பிறந்த நாளில் சேலத்தில் ஆற்றிய உரையின் சென்ற இதழ் தொடர்ச்சி: இட ஒதுக்கீடு என்பதைகூட, பதவி பெறும் நோக்கத்திற்காக அம்பேத்கர் சொல்லவில்லை. அனைத்து சமுதாய மக்களுக்கும், ஆட்சியிலும், அதிகாரங்களிலும் பங்கு இருக்க வேண்டும் என்பதுதான் அதற்கு அவர் கொண்ட பொருள். அவர் சொன்ன முறையும், அவருக்கு பின்னால் வந்தவர்கள் அதை எடுத்துக் கொண்ட முறையும் வெவ்வேறாக இருக்கிறது. நவீனத்துவத்தின் எதிரியாக இருந்தவர் காந்தி. அவருக்கு எதிர்ப்பைக் காட்டுவதற்கான அடையாளமாக, மிடுக்கான உடையோடும், பெருமித தோற்றத்தோடும் அம்பேத்கர் இருந்தார். அது அவர் விரும்பி ஏற்றுக் கொண்டதல்ல. ஆனால், அவருக்கு பின்னால் வந்த தலைவர்கள் அவரை போல் உடைகளை, காலணிகளை அணிவதுதான் அம்பேத்கரியம் என்று கருதிக் கொண்டார்கள். அவர் ஆட்சி அதிகாரத்தை, அரசியல் அதிகாரத்தை சமூக விடுதலைக்கு ஒரு வழியாக மட்டும் வைத்திருந்தார். இப்போது...

இராஜீவ் காந்தி – கொலை அல்ல, மரணதண்டனை

இராஜீவ் காந்தி – கொலை அல்ல, மரணதண்டனை

மறைந்த எங்கள் தோழர் முத்துகுமாருக்கு நடக்கின்ற இந்த வீரவணக்கப் பொதுக்கூட்டத்திற்கு வந்து மேடையிலும் எதிரிலும் அமர்ந்திருக்கின்ற தமிழர்களே, அனைவருக்கும் வணக்கம். இன்று ஈழத்தில் நம்முடைய இன சொந்தங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற வேளையில், அதற்கு நாம் தெரிந்தோ தெரியாமலோ விரும்பியோ விரும்பாமலோ நாடாக ஏற்றுக்கொண்டிருக்கின்ற இந்திய நாடு உதவிக்கொண்டிருக்கின்ற வேளையில், பல்வேறு சிக்கல்களைப் பற்றி கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதற்காக இந்த மேடையில் அமர்ந்திருக்கின்றோம், உரையாடிக்கொண்டிருக்கிறோம். இந்த வேளையில் நான் ஒரு செய்தியை மட்டும் பேச நினைக்கிறேன். நான் பேச நினைப்பது, இந்த நாட்டில் தொடர்ந்து பேசப்பட்டுக் கொண்டிருக்கிற சில முழக்கங்கள். ‘மறக்க மாட்டோம், மன்னிக்க மாட்டோம்’ -இது காங்கிரஸ் முழக்கம்; ‘ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு’ – இது மார்க்சிஸ்டு முழக்கம்; ‘சகோதர யுத்தம், சர்வாதிகாரி’ – திமுக முழக்கம். இதில் ஒரு முழக்கத்தை மட்டும், – நாம் யாரை ஒழிக்க நினைக்கிறோமோ – அந்த காங்கிரசின் முழக்கத்தை மட்டும் எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். ‘மறக்க...

கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரை அம்பேத்கர் – ஜாதித் தலைவரல்ல; சமூக விடுதலையின் புரட்சியாளர்

அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர் என்று கூறுவது தவறு. அவர் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர் என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி கூறினார். 14.4.2011 வியாழக்கிழமை அம்பேத்கர் பிறந்த நாளில் சேலத்தில் ஆற்றிய உரை: புரட்சியாளர் அம்பேத்கரை நாம் எப்படி புரிந்து கொள்ள வேண்டும்? நாம் ஏன் அவரை மற்றவர்களிடம் இருந்து பிரித்து வேறுபடுத்தி தனித்துவமாக பார்க்கிறோம் என்பதில்தான் அம்பேத்கருக்கு பிறந்த நாள் எடுப்பதன் பலனாக இருக்கும். புரட்சியாளர் அம்பேத்கர் பல சிறப்புகளை கொண்டவர். அவர் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்திருந்தாலும், வெளிநாடுகளுக்கு  சென்று படிக்கிற வாய்ப்பினைப் பெற்றார். அங்கு போய் ஆய்வு பட்டங்களையும், பல உயர் பட்டங் களையும் பெற்றார். தத்துவ துறையில், பொருளியல் துறையில், சட்டத் துறையில் பட்டங்களைப் பெற்று திரும்பி வந்தார் என்றால் பெயருக்கு பின்னால் போட்டுக் கொள்வதற்காக அல்ல. இந்த இந்திய சமுதாயத்தை திருத்த பலர் வந்தார்கள். இந்த சமுதாயத்தில் இருக்கிற கேடுகளை நீக்க...

ஜாதி சங்க மாநாட்டில் பெரியார் – வன்னியக்குல மாநாட்டில் பெரியார்

1930-ம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற வன்னியக்குல மாநாட்டில் பெரியார் சகோதரர்களே, பொதுவாக இதுபோன்ற ஜாதி மகாநாடுகள் இனி கூட்டுவதாயிருந்தால் தங்கள் ஜாதி பெருமையைப் பற்றி பாட்டி கதைகள் பேசி அர்த்தமற்றதுமான பெருமைப் பாராட்டிக்கொள்ளுவதற்காகக் கூட்டுவதாய் இருக்கக்கூடாது என்றும் தங்கள் ஜாதியோ சமூகமோ இன்னும் தனியாகவே பிரிந்திருக்கும்படி வெறும் தங்கள் ஜாதி உயர்வையே பேசிக்கொண்டிருக்கக் கூட்டப்படக் கூடாது என்றும் முதலில் தெரிவித்துக்கொள்கிறேன். இம்மகாநாட்டின் பயனாகவாவது நீங்கள் உங்களுக்கு மேல்ஜாதி ஒன்று இருக்கின்றது என்று எண்ணிக் கொண்டிருப்பதையும் அடியோடு ஒழித்துவிட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஏனெனில், நீங்கள் சிலஜாதிக்குப் பெரியார்கள் ஆகவேண்டுமேன்றும் ஆசையால் செய்யும் முயற்சியானது மற்றொரு ஜாதியைவிட நீ்ங்கள் கீழ் ஜாதியென்று நீங்களாகவே ஒப்புக்கொண்டவராகிறீர்கள். இதனால் உங்களாலேயே உங்களுக்கு கீழ்ஜாதி பட்டம் நிலைத்துவிடுதோடு நீங்கள் மேல்ஜாதி என்கின்ற தத்துவம் தகறாரில் இருந்துவிடுகின்றது. உதாரணமாக இப்பொழுது நீங்கள் உங்களை வன்னியகுல சத்திரியர் என்றும் சொல்லிக்கொள்ளுகிறீர்கள். இதனால் நீங்கள் தங்களை பிராமணர்கள் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு...

திராவிடர் விடுதலைக் கழகத்தின் வெளியீடுகள்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் வெளியீடுகள்

மனு நீதி : ஒரு குலத்துக்கொரு நீதி- பெரியார், விலை-ரூ.10. தனியார் துறையில் இடஒதுக்கீடு ஏன்? எதற்கு?-விடுதலை இராசேந்திரன் விலை-ரூ.30. இந்து மதப் பண்டிகைகள்-பெரியார். விலை-ரூ.30. கடவுளர் கதைகள்- சாமி. விலை-ரூ.20. இளைஞர்களே உங்களுக்குத் தெரியுமா? விலை-ரூ.20. உயர் எண்ணங்கள்-பெரியார். விலை-ரூ.30. பெரியாருக்கு எதிரான முனைமழுங்கும் வாதங்கள்-கொளத்தூர் மணி. விலை-ரூ.50. இவர்தான் பெரியார்-தஞ்சை மருதவாணன். விலை-ரூ.20. திராவிட இயக்க வரலாற்றுச் சுவடுகள்-தஞ்சை மருதவாணன். விலை-ரூ.30 ஈழம் முதல் அணுஉலை வரை-கொளத்தூர் மணி. விலை-ரூ.30 பண்பாடு-சமூகம்-அரசியலில் ‘மனு’வின் ஆதிக்கம்- விடுதலை இராசேந்திரன், விலை-ரூ.10 ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஜாதி ஒழிப்பு மலர். விலை-ரூ.100 பேய், பில்லி-சூன்யம், பொய். விலை – ரூ.30. ‘சமஸ்கிருத’ படையெடுப்பு. விலை – ரூ.30. விஞ்ஞானிகளை அழித்த மதவெறி. விலை – ரூ.30. வளர்ந்தது விஞ்ஞானம்; வீழ்ந்தன மூடநம்பிக்கைகள். செங்குட்டுவன்-விலை-ரூ.20. வரலாற்றில் பார்ப்பனிய வன்முறைகள்-அப்துல் சமது உரை- விலை-ரூ.10. தொடர்புக்கு: தலைமைக் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம் 95,...

பசுவதை தடை சட்டம் கோருவது அரசியல் சட்டத்தின் நோக்கத்தையே சிதைப்பதாகும்

பசுவதை தடை சட்டம் கோருவது அரசியல் சட்டத்தின் நோக்கத்தையே சிதைப்பதாகும்

“அடிப்படை உரிமைகள் மனிதர்களுக்கானதே தவிர, விலங்குகளுக்கு அல்ல” என்றார் அம்பேத்கர். பசுவதை தடை சட்டத்தை மாநில அரசுகள் இயற்ற வேண்டும் என்பது அரசியல் சட்டத்தின் நோக்கத்துக்கே எதிரானது என்பதை விளக்கி, ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் வெளி வந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள். அரசியல் சட்டம் உருவாக்கப்பட்ட நோக்கத்தி லிருந்து விலகிப் போய் நீதிமன்றம் சட்டத்துக்கு மாறான தீர்ப்புகளை வழங்கி வருகிறது என்பதற்கு, ஒரு உதாரணம், ‘பசுவதைத் தடைச் சட்டம்’ குறித்து 2005ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பு என்று உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்.14 அன்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். மக்களின் பாதுகாப்புக்காக உறுதி செய்யப்பட்ட சட்டங்களை அதன் நோக்கத்திலிருந்து திரித்து விடுவதும் அதிலிருந்து விலகி நின்று முடிவுகள் எடுப்பதும் கடும் எதிர்விளைவுகளை உருவாக்கி விடும் என்று கட்டுரை எடுத்துரைக்கிறது. இதற்கு அமெரிக்காவின் விண்வெளி...

சுயமரியாதைக்காகப் போராடுகிறோம் டாக்டர் அம்பேத்கர்

சுயமரியாதைக்காகப் போராடுகிறோம் டாக்டர் அம்பேத்கர்

கடந்த காலங்களில் புலால் உண்ணாமைக்கான தொரு இயக்கம் நம்மிடையே இருந்தது. அதன் பிறகு தான் அந்த கருத்தாக்கம் தீண்டப்படும் சாதியினரின் சிந்தனையில் மின்னலைப்போல் உதித்தது. உயிரோடு இருக்கும் எருமையின் பாலை அவர்கள் மட்டுமே குடிக்க வேண்டும்; செத்துப்போன அதே மாட்டின் பிணத்தை நாம் தூக்கிச் சுமக்க வேண்டும். என்ன ஒரு விந்தை இது நாம் அவர்களைக் கேட்க வேண்டும். மரித்துப் போன உங்கள் தாயின் பிணத்தை மட்டும் ஏன் நாங்கள் சுமக்க அனுமதி மறுக்கிறீர்கள்? செத்த மாட்டை நம்மிடம் தருவதுபோல் அவர்கள் தாயின் பிணத்தையும் நம்மிடம் தானே தரவேண்டும். சிலர் எப்போதோ ‘கேசரி’ இதழில் எழுதியிருந்தார்கள். ‘சில கிராமங்களில் ஒவ்வொரு ஆண்டும் 50 விலங்குகள் வரை செத்துப் போகின்றன. அவற்றின் இறைச்சி தோல், கொம்பு, எலும்பு, கால் பாதம், வால் இவற்றையெல்லாம் விற்பதால் 500 ரூபாய் வரை கிடைக்கும். தின்னக்கூடாது என்று இறைச்சியை ஒதுக்கி விட்டாலும் மற்றவைகளால் கிடைக்கக்கூடிய வருமானம் என்பது...

பெரியார் மறைவு – தலைவர்கள் இரங்கல் தொகுப்பு

பெரியார் இறந்த போது பல தலைவர்களும் பத்திரிக்கைகளும் வெளியிட்ட இரங்கல் செய்தியை ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் தென்மொழி இதழில் சுருக்கமாக தொகுத்து வெளியிட்டார். கடைசியில் அவர் ஆசிரியர் குறிப்பாக எழுதியது முக்கியமான ஒன்று. பெரியார் மறைவுக்குப் பின்னர் அவரைப் பற்றிய பலரின் கருத்துரை * கவர்ச்சி மிக்கத் தலைவர். எப்பொழுதுமே போராடியவர் – குடியரசுத் தலைவர் வி.வி.கிரி. * ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்துகளை எதிர்த்து அறைகூவி நின்றவர் அவர் – தலைமை அமைச்சர், இந்திராகாந்தி * நாடு மாபெரும் புரட்சியாளரை இழந்து விட்டது. வாழ்க்கை முழுவதும் இந்து குமுகாயத்தில் புரட்சியான மாறுதலை உண்டாக்கியவர் பெரியார் – நடுவணரசு அமைச்சர். செகசீவன்ராம். * இடைவிடாமல் சாதிக் கொடுமைகளையும், மூட நம்பிக்கைகளையும் எதிர்த்துப் போராடிய வீரர் – நடுவணரசு அமைச்சர். சி.சுப்பிரமணியம் *ஈ.வெ.இரா. ஆர்வமிக்க குமுகாயச் சீர்திருத்தக்காரர் – தமிழக ஆளுநர். கே.கே.சா. *குமுகாயச் சமநிலைக்காக அரும்பாடுபட்ட பெரியாரைத் தமிழகம் என்றும் மறக்காது –...

தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டுமான தலைவரா அம்பேத்கர்? – கொளத்தூர் மணி உரை 14042011 சேலம்

தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று அரசே அறிவித்தப்பின்னாலும், இன்று தமிழ் புத்தாண்டு என்று அனைத்து தொலைக் காட்சிகளிலும் அறிமுகபடுத்திக் கொண்டிருக்கிற இந்த ஏப்ரல் 14 இல், அம்பேத்கரை நினைவு படுத்தி பேசுவதற்காக அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் கூடியிருக்கிறோம். புரட்சியாளர் அம்பேத்கரை நாம் எப்படி புரிந்துகொள்ள வேண்டும்? நாம் ஏன் அவரை மற்றவர்களிடம் இருந்து பிரித்து வேறுபடுத்தி தனித்துவமாக பார்க்கிறோம் என்பதில்தான் அம்பேத்கருக்கு பிறாந்த நாள் எடுப்பதன் பலனாக இருக்கும். புரட்சியாளார் அம்பேத்கர் பல சிறப்புகளை கொண்டவர். அவர் ஓர் தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்திருந்தாலும், வெளிநாடுகளுக்கு சென்று படிக்கிற வாய்ப்பினை பெற்றார். அங்குபோய் ஆய்வு பட்டங்களையும், பல உயர் பட்டங்களையும் பெற்றார். தத்துவ துறையில், பொருளியல் துறையில், சட்டத்துறையில் பட்டங்களை பெற்று திரும்பி வந்தார் என்றால் பெயருக்கு பின்னால் போட்டுக்கொள்வதற்காக அல்ல. இந்த இந்திய சமுதாதாயத்தை திருத்த பலர் வந்தார்கள். இந்த சமுதாயத்தில் இருக்கிற கேடுகளை நீக்க வேண்டும்...

தமிழர் புத்தாண்டு தை முதல் நாளே! தமிழர் இல்லந்தோறும் விழா எடுப்போம்!

தமிழர் புத்தாண்டு தை முதல் நாளே! தமிழர் இல்லந்தோறும் விழா எடுப்போம்!

தமிழக முதல்வர் ஜெயலலிதா-இந்துத்துவ உணர்வோடு தமிழ்ப் புத்தாண்டை சித்திரைக்கு மாற்றினாலும் தமிழர் புத்தாண்டு தை முதல் நாளே என்பதை ஆணித்தரமாக விளக்கும் கட்டுரை இது. கட்டுரை ஆசிரியர் ‘சோதிடப் புரட்டு’ நூலை எழுதிய கனடா வாழ் சிந்தனையாளர் நக்கீரன். பஞ்சாங்கத்தில் உள்ள 60 ஆண்டுகளில் ஒன்றேனும் தமிழில் இல்லை. தமிழன் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் தன்மானம் உள்ள ஒருவனாவது அவற்றைத் தமிழ் ஆண்டு என்று ஒப்புக் கொள்ள மாட்டான். இந்த அறுபது ஆண்டுகளை கடவுளர்களோடு தொடர்புபடுத்தி, ஆபாசம் வழியும் கதைகளையும் புராணிகர்கள் உருவாக்கி விட்டார்கள். நாரதரும் கிருஷ்ணனும் உறவு கொண்டு பெற்ற குழந்தைகளே ‘பிரபவ முதல் அட்சய முடிய 60 ஆண்டுகள்’ என்று தமிழ்க் கலை களஞ்சியமான ‘அபிதான சிந்தாமணி’ கூறுகிறது. இதற்குப் புராண ஆதாரங்கள் வேறு உள்ளன. இந்த 60 ஆண்டுகளுக்கு மேல் 61 ஆவது ஆண்டைக் குறிக்கப் பெயர் இல்லை. மீண்டும் ‘பிரபவ’ ஆண்டிலிருந்து தான் தொடங்க...

முகமூடி போட்டு பாபர் மசூதியை இடித்த கும்பல்

முகமூடி போட்டு பாபர் மசூதியை இடித்த கும்பல்

தமிழ்நாடு மாணவர் கழக சார்பில் “யார் தேச விரோதிகள்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னையில் திராவிடர் விடுதலைக் கழக தலைமை அலுவலகத்தில் 5.2.2017 அன்று மாலை நடைபெற்றது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையின் விரிவாக்கம். (சென்ற இதழ் தொடர்ச்சி) மத நம்பிக்கைகள் உணர்வுகளோடு பிணைந்து கிடக்கின்றன. இந்த உணர்வுகளை மதவெறியாகக் கட்டமைக்கப்படுவது மிக மிக எளிது. பகுத்தறிவை மறுக்கும் வெற்று உணர்வுகள் அவ்வளவு ஆபத்தானவை. ‘நாம் எல்லோரும் இந்து; அதுவே நமக்குப் பெருமை அதுவே நமது அடையாளம்; அதுவே நமக்கான நாடு’ என்று பேசுவதும் உணர்வுகளைத் தூண்டி அதை வெறியாக மாற்றுவதும் தான் சங்பரிவார்களின் தொடர்ந்த வேலைத் திட்டமாக இருக்கிறது. அதற்காகவே அவர்கள் நிகழ்வுகளை திட்டமிட்டு உருவாக்கு கிறார்கள். இந்த உணர்வுகளை ஒரு முனைப் படுத்துவதற்கு ஒரு எதிரியை கட்டமைக்க வேண்டிய அவசியம் வந்துவிடுகிறது. இஸ்லாமியர்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள். பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிரி நாடு என்ற இவர்களின் முழக்கம்,...

நான் ஒரு ‘தேசத் துரோகி’

நான் ஒரு ‘தேசத் துரோகி’

நான் ஒரு தேசாபிமானியல்லன். அது மாத்திரமல்ல; தேசாபிமானத்தைப் புரட்டு என்றும், அது தனிப்பட்டவர்களின் வயிற்றுச் சோற்று வியாபாரம் என்று சொல்லியும், எழுதியும் வரும் தேசத் துரோகியாவேன். ஒரு காலத்தில் தேசாபிமானத்துக்காகச் சிறை செல்லும்படியான அவ்வளவு தேசாபி மானியாய் இருந்து, பல முறை சிறை சென்று வந்துதான் அதன் அனுபவத்தைச் சொல்லு கிறேனே ஒழிய, வெளியில் இருந்து வேடிக்கை மாத்திரம் பார்த்துவிட்டு நான் இப்படிச் சொல்ல வரவில்லை. இதனால் பாமர மக்கள் தூஷணைக்கும், பழிப்புக்கும்கூட ஆளாகியிருக்கிறேன் என்றாலும் எனது உறுதியான எண்ணத்தை நான் மாற்றிக் கொள்ள முடியவில்லை. ‘நாட்டுக்கு நல்ல துரை வந்தாலும், தோட்டிக்குப் புல் சுமக்கும் வேலை போகாது’ என்பதுதான் தேசாபிமானிகளின், மகாத்மாக் களின் சுயராஜ்ய தர்மமாகும். இந்த சுயராஜ்யம் வருவதைவிட இப்போது இருக்கும் பரராஜ்யமே மேலானது என்பது எனது கருத்து. இன்றைய பரராஜ்யத்தில் தோட்டி சுமக்கும் வேலையை விட்டு மந்திரி வேலை செய்தாலும் செய்யக் கூடும். ஆனால், அவனவன் சாதித்...

என்னை “மகாத்மா”வாக்கி விடாதீர்கள்!

என்னை “மகாத்மா”வாக்கி விடாதீர்கள்!

நண்பர்களே, முதலில் ஒரு விஷயத்தைச் சொல்லிக் கொள்ளுகிறேன். அதாவது சாப்பாட்டு ஜாகைக்குப் போகும் வழியில் என்னைப் பற்றியும், என் மனைவியைப் பற்றியும் சுவர்களில் கண்டபடியெல்லாம் எழுதியிருந்தது. மற்றும் சிலரைப் பற்றியெல்லாம் எழுதி இருந்தது. நண்பர்களே என்னைப் பொறுத்தவரை நான் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அதுவும் என் மனப்பூர்த்தியாய்ச் சொல்லுகிறேன். என்னவென்றால், என்னை ஒருவர் மகாத்மா என்றோ, தெய்வத் தன்மைப் பொருந்தியவர் என்றோ, சித்தர் என்றோ, புத்தர் என்றோ, ஞானி என்றோ கூப்பிடுவதைவிட, கருதுவதைவிட என்னை அயோக்கியன் என்றும் திருடன் என்றும், முட்டாள் என்றும் சுயநலக்காரன் என்றும், பணம் சம்பாதிப்பவன் என்றும் மற்றும் இழிவான வேலை செய்கின்றவன் என்றும் சொல்லுவதில் எனக்கு லாபம் இருக்கின்றது என்று கருதுகிறேன். ஏனெனில், எனது வேலையானது இராமசாமி என்று ஒரு மகாத்மாவோ, மற்றும் தெய்வத் தன்மை பொருந்திய ஒரு ஒப்பற்ற மனிதர் இருந்தார் என்று மூட ஜனங்கள் சொல்லிக் கொள்ளவோ, எனது படத்தைப் பூஜையில் வைத்துப்...

தமிழர்களுக்கான விழா பொங்கல் மட்டுமே பெரியார்

தமிழர்களுக்கான விழா பொங்கல் மட்டுமே பெரியார்

17.1.1968 அன்று கரூரில் பொங்கல் விழா சிறப்புக் கூட்டத்தில் பெரியார் ஆற்றிய உரையிலிருந்து ஒரு பகுதி. இந்த பொங்கல் விழா என்பது அறுப்புப் பண்டிகைன்னும் சொல்லுவார்கள். அதேபோல நாமும் அறுத்துப் பண்டங்களைக் குடும்பத்துடன் உபயோகப்படுத்துகிற நாள். மற்றும் நம்மாலான வசதிகளை விவசாயத்துக்காக நமக்கு உதவியாய் இருந்து தொண்டாற்றின ஆளுகளுக்கு – அவர்களுக்கு நாம ஏதாவது திருப்தி பண்ணுகிறதுக்கு – சாப்பாடு போடுகிறதோ, அவர்களுக்கு துணிமணி எடுத்துக் கொடுக்கிறதோ அல்லது ஏதாவது காசு கொடுத்து அவர்களைச் சந்தோஷப்படுத்துகிறதோ – இதெல்லாம், நாம் விவசாயத்தைத் தேர்ந்தெடுத்தோம். நேற்று (16.1.968இல்) இந்த நேரத்துக்கு, நான் சேலத்திலே பெரிய மிராஸ்தார் இரத்தினசாமி பிள்ளை என்கிறவர், அவர் தோட்டத்திலே இந்த பண்டிகை வைச்சார். என்னைத்தான் தலைமையாய் அவர் விரும்பினார், போயிருந்தேன். பொங்கல் தடபுடலாக ஒரு அய்ம்பது, அறுபது மாடுகளை வைச்சி நம்ம எதிரிலேயே நடத்தினாரு. இம்மாதிரி இருநூறு பேருக்குச் சீலை வேட்டி தந்தார். ஒரு புலவர் அம்மையார் காமாட்சி...

‘பாவமன்னிப்பு’ விற்பனைக்குத் தயார்

‘பாவமன்னிப்பு’ விற்பனைக்குத் தயார்

ஆயிரக்கணக்கான வருடங்களுக்குமுன் – நாம் எவ்வளவோ உயர்ந்த நாகரிகமும் முற்போக்கும் பெற்றிருந்த காலத்தில், ஆங்கிலேயர்கள் மிக மோசமான வாழ்க்கை நடத்தி வந்தார்கள். அக்காலத்தில் நம்மைவிட மிக மோசமாக மத சம்பந்தமான பழக்க வழக்கங்களை அனுஷ்டித்து வந்தார்கள். அக்காலத்தில் அவர்கள் நிலை, இன்றைய நமது  கேவல நிலையைவிட மிக மோசமாகவும், மானக் கேடாகவுமே இருந்து வந்திருக்கிறது. உதாரணமாக, அக்காலத்தில் அவர்கள் தங்கள் பாவங்களுக்கு மன்னிப்புப் பெற ஒரு சுலபமான முறையைக் கடைப்பிடித்து நம்பச் செய்து வந்தார்கள். இன்று நமது நாட்டில் புரோகிதர்களால் நாம் ஏமாற்றப்படுவது போலவே  அங்குள்ள பாதிரிமார்களால் அவர்கள் ஏமாற்றப்பட்டு வந்தார்கள். அதாவது, ‘பாவமன்னிப்புச் சீட்டு’ வாங்குவது என்பதாகும். ஒருவன் எத்தகைய தீச்செயலையும் செய்துவிட்டுப் பாதிரியாரிடம் சென்று, “அய்யா! நான் இன்ன பாவம் செய்தேன். அதற்கு ‘மன்னிப்பு டிக்கெட்’ வேண்டும்” என்று கேட்டதும், உடனே பாதிரியார், அந்தந்தப் பாவத்தின் நிலைக்குத் தக்கபடி கிரயம் போட்டுப் பணம் வாங்கிக் கொண்டு டிக்கெட் கொடுத்து...

‘துக்ளக்’ சோவின் இனப்பற்று; படம் பிடிக்கிறார், பாவலரேறு பெருஞ்சித்திரனார்

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 1973ஆம் ஆண்டு ‘தென்மொழி’ ஏட்டில் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி: ‘இராசாசி நினைவாலயத்துக்கு’ இவர்கள் தரும் விளம்பரம், காந்திக்குக் கூடத் தந்ததில்லை. ‘தமிழகத்தில் இராசாசி காலடிப்பட்ட இடங்களை யெல்லாம் புண்ணியதலமாகக் கருத வேண்டும்’ என்று ‘சுதந்திர’க்கட்சி சா. கணேசன் வெளிப்படுத்திய கருத்தை இவர்கள் மிகப் பெருமையுடன் வெளி யிட்டுக் கொண்டனர். (சா. கணேசன் மூளையில் இவ்வளவு அடிமைத்தனம் புகுந்திருக்கக் கூடாது) துக்ளக்கில் ‘சோ’ இவர்கள் இனத் தலைவர் இராசாசியைப் பற்றி இப்படி எழுதி யிருந்தார்: “இராசாசியைப் பாராட்டுவதற்கோ அல்லது அவரிடம் குற்றம் காண் பதற்கோ அவருக்கு நிகரானவர்கள் யாரும் இந்நாட்டில் இல்லாமல் போய் விட்டார்கள்… மனம், சிந்தனை, வாக்கு, செயல் எல்லாவற்றிலும் பரிபூரணத் தூய்மையுடன் விளங்கிய ஒரு அசாதாரணமான மனிதரை மிகச் சாதாரணமாக மதித்துவிட்ட மடத் தனத்தின் விளைவுகளிலிருந்து இந்த நாடு என்று விடுபடுமோ தெரியாது… இராசாசி தெய்வ நம்பிக்கை மிகுந்தவர். அந்த ஒரு கரணியத்திற்காகவாவது அவர் வாழ்ந்த...

வேத மரபை எதிர்த்துப் போராடிய வைகுண்ட சாமிகள்

வேத மரபை எதிர்த்துப் போராடிய வைகுண்ட சாமிகள்

வேத மரபை எதிர்த்த முன்னோடிகளில் ஒருவர் வைகுண்ட சாமிகள். கன்யாகுமரிக்கு அருகே பூவண்டன் தோப்பு எனும் கிராமத்தில் ஓர் ஏழை நாடார் குடும்பத்தில் 1809ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்கு பெற்றோர் சூட்டிய பெயர் ‘முடி சூடும் பெருமாள்’. ஆனால் அந்த காலத்தில் மன்னர்கள் அல்லது பார்ப்பன உயர்ஜாதியினர் வைத்துக் கொள்ளும் பெயர்களை ‘தாழ்ந்த’ ஜாதியினராக கருதப்பட்டவர்கள் வைத்துக் கொள்ளக் கூடாது. எனவே இப்பெயர் வைத்தமைக்காக பார்ப்பனர், உயர்ஜாதியினர் அரசு அதிகாரிகளிடம் புகார் செய்தனர். அவர்களும் பெயரை மாற்ற உத்தரவிட்டனர். வேறு வழியின்றி பெற்றோர்கள், பெயரை ‘முத்துக்குட்டி’ என்று மாற்றினர். 1833இலிருந்து பொது வாழ்வில் இறங்கினார். தொடக்கத்தில் விஷ்ணு பக்தராக இருந்த இவர், தனது பெயரை ‘வைகுண்டர்’ என மாற்றிக் கொண்டார். குமரிப் பகுதி அப்போது திருவாங்கூர் சமஸ்தானத்தின் நிர்வாகத்தில் இருந்தது. ஜாதி வெறியோடு ஆட்சி நடத்திய அரசர்கள், ஒடுக்கப்பட்ட ஜாதியினரை அடிமைகளாக நடத்தினர். அநியாயமாக வரி போட்டனர். மன்னனை எதிர்த்து துணிவோடு...

3000 தோழர்கள் சிறையில் வாடிய மகத்தான வரலாறு 1957 நவம்பர் 26 ஜாதி ஒழிப்பு நாள்!

1957 நவம்பர் 26இல் பெரியார் இயக்கம் ஜாதி ஒழிப்புக்காக சட்டத்தை எரித்த நாள். 3000 தோழர்கள் 6 மாதம் முதல் 3 ஆண்டு வரை சிறைத் தண்டனை பெற்றனர். அந்த நாள் நினைவாக சில வரலாற்றுக் குறிப்புகள். இன்றைக்கும் போர் வீரர்களின் நினைவுக் கல்வெட்டுகளில் அவர்களுடைய பெயர்கள் தெரியாத காரணத்தால் ‘பெயர் தெரியாமல் மரித்துப் போன போர் வீரர்கள்’ என்று எழுதப்படுவது வழக்கம். அதேபோல் பெரியார் நடத்திய ஜாதி ஒழிப்புக்கான அரசியல் சட்ட எரிப்புப் போரில் பங்கேற்று மாதக் கணக்கில் சிறைக் கொடுமைகளை அனுபவித்த பெயர் தெரியாத தோழர்கள் பலர் உண்டு. சட்ட எரிப்புப் போரில் பங்கேற்ற பெரியாரின் கருஞ்சட்டைத் தொண்டர்களின் உறுதிமிக்க தியாக வரலாற்றிலிருந்து சில செய்திகள்: சிறையிலிருந்த தோழர் திருவாரூர் முத்துகிருட்டிணனின் மனைவிதான் அவரது கடையையும் குழந்தைகளையும் கவனித்துக் கொண்டார். காலராவினால் திடீரென முத்து கிருட்டிணன் மனைவி இறந்து விட்டார். மனைவிக்கு இறுதி மரியாதை செலுத்த முத்துகிருட்டிணன் பரோல்கூட...

பெரியார் முன்கூட்டியே கைதானார்!

1957 நவம்பர் 26 – சட்ட எரிப்புக்கு முதல் நாள் பெரியார் திருச்சியில் முன்கூட்டியே கைது செய்யப்பட்டு விட்டார். இது குறித்து ‘விடுதலை’ ஏடு வெளியிட்ட செய்தி: ஜாதி ஒழிப்புக்கு, பெரியார் கொடுத்த 15 நாள் கெடு 18.11.57 அன்று முடிவடைந்தது. எந்தப் பயனும் இல்லாததால் நவம்பர் 26இல் சட்டம் கொளுத்தும் போராட்டம் உறுதி செய்யப்பட்டு விட்டது. 26.11.57 அன்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் அச்சடிக்கப்பட்ட தாள் கட்டினை எரிக்க நாடு முழுவதும் தோழர்கள் பெயர்கள் பட்டியல் தந்து போராட்டத்திற்கு ஆவலாக அணியாயிருந்தனர். பெரியார் அவர்கள், 25.11.57 இல் சீரங்கம் பொதுக் கூட்டத்தை முடித்துக் கொண்டு விரைவுத் தொடர் வண்டி (எக்ஸ்பிரஸ்) மூலம், சென்னைக்கு வந்து நவம்பர் 26இல் சென்னையில் எழும்பூர் பெரியார் திடல் (டிராம் ஷெட்) கூட்டத்தில் பேசி இறுதி யில், அரசியல் சட்டத்தைத் தீயிட்டுக் கொளுத்தத் திட்டமிட் டிருந்தார்கள். இந்நிலையில், 25.11.57 மாலை பெரியார் அவர்கள், அவரது புத்தூர்...

தீபாவளி : பெரியார் எழுப்பும் வினாக்கள்

தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள் தனமுமான காரியம் என்று 50 ஆண்டு களாக எழுதியும் பேசியும் வருகின்றேன். இதன் பயனாய் அநேக தமிழ் மக்கள் இப்பண்டிகையைக் கொண்டாடாமல் நிறுத்தி விட்டார்கள் என்றாலும், இன்னமும் பல தமிழ் மக்கள் தங்கள் இழிநிலையை மானவமானத்தை உணராமல் கொண்டாடி வரு கிறார்கள். இக்கொண்டாட்டமானது தமிழ் மக்களுடைய, இழிவையும் முட்டாள்தனத்தையும் காட்டுவது மாத்திரமல்ல, தமிழர்கள் (திராவிடர்கள்) ஆரிய இனத்தானுக்கு அடிமை. அவனது தலைமைக்கு அடிமை, மீட்சிபெற விருப்பமில்லாத மானங்கெட்ட ஈனப்பிறவி என்பதைக்காட்டிக் கொள்ளப் போட்டி போடுகிறார்கள் என்பதையே காட்டுகிறது. “மானமும் பகுத்தறிவும் உடையவனே மனிதன்; அஃதிலார் மனித உருவமுள்ள மிருகமே ஆவர்” என்ற அறிவுரைப்படி மானமில்லா மக்களே இப்போது தீபாவளி கொண்டாடு கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டி இருக்கிறது. வெளிநாட்டிலிருந்து பிழைப்புக்கு வழி தேடிக்கொண்டு நம் நாட்டிற்குள் புகுந்த ஆரியர் அக்காலத்தில் அவர்கள் இருந்த காட்டுமிராண்டித்தன்மைக்கு ஏற்ப மடமையினால் கொண்ட கருத்துக்களை மதுக்குடி வெறியில் உளறி...

அறிவுத் திறனை முடக்கும் மனப்பாடக் கல்வி

அறிவுத் திறனை முடக்கும் மனப்பாடக் கல்வி

அறிவுசார்ந்த கல்வியை மறுத்து, தொழில் சார்ந்த பயிற்சி யாளராக மட்டும் இளைஞர்களை மாற்றுவதே மோடி அரசின் கல்விக் கொள்கை! இத்தகைய கல்வி முறையைக் கண்டித்து, 1954ஆம் ஆண்டிலேயே பெரியார் எழுதிய கட்டுரை இது. நம் நாட்டு மாணவர்கள் கல்விப் படிப்பினால் எந்தவிதமான பகுத்தறிவையும் எதையும் ஆராய்ந்து அறியும்படியான தன்மையையும் அடைய முடிவதில்லை; அவர்கள் படிக்கின்ற படிப்பினால் பிற்கால வாழ்க்கையைத் தரித்திரமின்றி நடத்த வேண்டும். அதற்காக, ஏதாவது உத்தியோகத் துறையிலோ, வேறு பணம் சம்பாதிக்கின்ற வழியிலோ பயன்பட வேண்டும் என்பதற்காகவே படிக்கிறார்கள். பெற்றோர்களும் தங்களுடைய குழந்தைக்கு அறிவு வளர வேண்டும் என்ற காரணத்திற்காகப் பள்ளிக்கு அனுப்புவதில்லை; படித்துப் பட்டம் பெற்று வந்ததும் ஜீவனத்துக்கு வேண்டிய முறையில் எங்காவது உத்யோகம் கிடைக்குமா என்ற நோக்கத்தோடேயே பெற்றோர்கள் முயற்சிக்கிறார்கள். இவர்களும் இதற்குத்தான் முயற்சிக் கிறார்கள் என்றால், மாணவர்களும் அந்த நோக்கத்தைத் தான் எதிர்பார்த்துத் தம்முடைய பள்ளிப் படிப்பைக் கற்றுப் பட்டம் பெற வேண்டும் என்ற ஒரே...

பெரியார் – இராமன் பட எரிப்புப் போராட்டம் நடத்தியது ஏன்?

பெரியார் – இராமன் பட எரிப்புப் போராட்டம் நடத்தியது ஏன்?

1956இல் புத்தருடைய 2500 ஆவது ஆண்டு விழா சென்னை இராஜாஜி மண்டபத்தில் அரசினர் சார்பாக நடைபெற்றது. அந்த விழாவில்,  பெரியாரும் கலந்து கொண்டார். விழா நிகழ்ச்சியை சென்னை வானொலி நிலையம் பதிவு செய்து இரவு 10 மணிக்கு ஒலிபரப்புவதாக உறுதி அளித் திருந்தது. ஆனால், அதன்படி அது செய்யவில்லை! நாளேடுகளும் பெரியார் கலந்து கொண்டதால் புத்தர் விழாவை வெளியிடாமல் இருட்டடிப்புச்செய்தன. “ஒரு வார காலத்துக்குள் பதிவு செய்தவற்றை வானொலி நிலையம் ஒலிபரப்ப வேண்டும். அல்லது, அதற்கான காரணத்தைச் சொல்ல வேண்டும். இல்லா விட்டால், இராமன் படம் கொளுத்தப்பட்ட செய்தி மக்கள் அறியும்படி செய்யப்படும்” – என்று பெரியார் அறிவித்தார். 20.7.56 அன்று திருச்சிராப் பள்ளியில் கூடிய திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழுக் கூட்டத்தில், “1.8.56 அன்று தமிழ்நாடு எங்கிலும் இராமன் பட எரிப்புப் போராட்டம் நடத்தப்படும்” என்று தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. “கடவுள் தன்மை, ஒழுக்கம், நாணயம், சாதாரண அறிவு...

”தீபாவளி : பெரியார் எழுப்பும் வினாக்கள்”

தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம் என்று 50-ஆண்டுகளாக எழுதியும், பேசியும் வருகின்றேன். இதன் பயனாய் அநேக தமிழ் மக்கள் இப்பண்டிகையைக் கொண்டாடாமல் நிறுத்தி விட்டார்கள் என்றாலும், இன்னமும் பல தமிழ் மக்கள் தங்கள் இழிநிலையை மான அவமானத்தை உணராமல் கொண்டாடி வருகிறார்கள். இக்கொண்டாட்டமானது தமிழ் மக்களுடைய இழிவையும், முட்டாள்தனத்தையும் காட்டுவது மாத்திரமல்ல, தமிழர்கள் (திராவிடர்கள்) ஆரிய இனத்தானுக்கு அடிமை, அவனது தலைமைக்கு அடிமை, மீட்சி பெற விருப்பமில்லாத மானங்கெட்ட ஈனப்பிறவி என்பதைக்காட்டிக் கொள்ளப் போட்டி போடுகிறார்கள் என்பதையே காட்டுகிறது. “மானமும் பகுத்தறிவும் உடையவனே மனிதன்; அஃதிலார் மனித உருவமுள்ள மிருகமே ஆவர்” என்ற அறிவுரைப்படி மானமில்லா மக்களே இப்போது தீபாவளி கொண்டாடுகிறார்கள் என்றுதான் சொல்லவேண்டி இருக்கிறது. வெளிநாட்டிலிருந்து பிழைப்புக்கு வழி தேடிக்கொண்டு நம் நாட்டிற்குள் புகுந்த ஆரியர் அக்காலத்தில் அவர்கள் இருந்த காட்டுமிராண்டித் தன்மைக்கு ஏற்ப மடமையினால் கொண்ட கருத்துக்களை மதுக்குடி வெறியில் உளறி வைத்தத் தன்மைக்கு...

சரஸ்வதி பூஜை-ஆயுத பூசை ஆபாசங்கள்!

சரஸ்வதி பூசை என்பது ஒரு அர்த்தமற்ற பூசை. கல்வியை யும் தொழிலையும் ஒரு பெண் தெய்வமாக்கி, அதற்குச் சரஸ்வதி என்று பெயர் கொடுத்து அதைப் பூசை செய்தால் கல்வி வரும், வித்தை வரும் என்று சொல்லி, நம்மைப் பார்ப்பனர்கள் ஏமாற்றி, கல்வி கற்கச் சொந்த முயற்சி செய்து கொள்ளாமல், சாமியையே நம்பிக்கொண்டு இருக்கும்படி செய்துவிட்டு, நாம் அந்தச் சாமி பூசையின் பேரால் கொடுக்கும் பணத்தைக்கொண்டே, அவர்கள் படித்துப் பெரிய படிப்பாளியாகிக்கொண்டு, நம்மைப் படிப்பு வரமுடியாத “மக்குகள்” என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள். முதலாவது, சரஸ்வதி எனும் சாமியின் சொந்த யோக்கியதையைக் கவனித்தால், அது பார்ப்பனர்களின் புராணக் கதைகளின்படியே மிக்க ஆபாசமானதாகும். அதாவது, சரஸ்வதி என்கிற ஒரு பெண் பிரம்மனுடைய சரீரத்திலிருந்து உண்டாக்கப்பட்ட பிறகு, அவள் அழகைக் கண்டு, அந்தப் பிரம்மனாலேயே மோகிக்கப்பட்டு அவளைப் புணர அழைக்கையில், அவள் பிரம்மனை தகப்பன் என்று கருதி, அதற்கு உடன்படாமல் பெண் மான் உருவம் எடுத்து ஓடவும்,...

தடை மீறி 54 முறை கைதான புரட்சி நடிகர்

செப்.17, பெரியார் பிறந்த நாளில் தான் ‘நடிகவேள்’ இராதா முடிவெய்தினார். அவர் நினைவாக ‘மணா’ தொகுத்த ‘எம்.ஆர்.ராதா காலத்தின் கலைஞன்’ நூலிலிருந்து -சில பகுதிகள்: நடிகவேள் எம்.ஆர்.இராதா, 1942க்குப் பிறகு மறுபடியும் நாடக மேடைக்கே திரும்பினார். பொன்னுச்சாமி பிள்ளை கம்பெனியில் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார். இழந்த காதல் நாடகத்தில் அவருடைய சவுக்கடிக் காட்சிக்குத் தனிப் பெயர் கிடைத்தது. சிவாஜி பெண் வேடத்தில் நடித்த இந்த நாடகம், வெள்ளித்திரை (திரைப்படம்) தரத் தவறிய புகழைத் தந்தது. அண்ணா உள்படப் பலர் பாராட்டினார்கள். பெரியாரும், சம்பத்தும் வந்து மனப்பூர்வமாக வாழ்த்தினார்கள். பெரியாருடன் தொடர்பு கூடியது. ‘திராவிட மறுமலர்ச்சி நாடக சபா’ என்கிற பெயருடன் இயங்க ஆரம்பித்தார் இராதா. “சுயமரியாதைக் கருத்துகளை நான் ஆராய ஆரம்பித்த சில ஆண்டுகளிலேயே முழுவதும் அதன் வசமாகிவிட்டேன்” என்று இராதாவே உணர்வுடன் சொல்லு மளவுக்கு திராவிட இயக்கக் கருத்துக்கள் அவருடைய நாடகங்களில் வெளிப்பட்டன. விமலா அல்லது விதவையின் கண்ணீர் துவங்கி, இலட்சுமி காந்தன்,...

‘கருப்பும்-காவியும்’ இணைந்த வரலாறு

பெரியாருக்கும்-குன்றக்குடி அடிகளாருக்கும் இடையே உருவான ‘கொள்கை நட்பு’ குறித்து ‘தி இந்து’ ஆங்கில நாளேடு (செப்.16, 2016) ஆய்வாளர் ஏ.ஆர். வெங்கடாசலபதியின் கட்டுரை ஒன்றை வெளியிட் டிருக்கிறது. அக்கட்டுரையின் சுருக்கம்: “1945ஆம் ஆண்டு, 20 வயதே நிரம்பிய குன்றக்குடி அடிகள், தருமபுரம் சைவமடத்தில் சேர்ந்து, சைவ சித்தாந்தம், சங்க இலக்கியங்கள் மற்றும் சமஸ்கிருதத்தில் ஆழ்ந்த புலமைப் பெற்றார். அப்போது குன்றக்குடி, திருவண்ணாமலை சைவ மடத்துக்கு இளைய சாமியார் ஒருவரை தேடிக்கொண்டிருந்தபோது, குன்றக்குடி அடிகளாருக்கு அழைப்பு விடுத்தது. தருமபுரம் மடம் அடிகளாரை அனுப்பி வைக்க மறுத்தாலும், பிறகு ஒரு வழியாக சம்மதித்தது. இளைய மடாதிபதியாக குன்றக்குடி மடத்தில் சேர்ந்த ஆதீனம், அடுத்த 3 ஆண்டுகளில் குன்றக்குடி மடாதிபதி ஆகி விட்டார். சைவத்தில் வெள்ளாளர் ஜாதியினர் மட்டுமே சைவ மடங்களில் சன்னிதானமாக முடியும். இவரும் அதே ஜாதிப் பிரிவைச் சார்ந்தவர்தான். ஆனால், சீர்திருத்த எண்ணங்களைக் கொண்டிருந்தார். மடத்துக்கு அருகே உள்ள தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புகளுக்குச் சென்றார். ‘வழிபாட்டு மொழியாக...

“மன நிறைவோடு சாகத் தயார்!”

“மன நிறைவோடு சாகத் தயார்!”

தமிழக அரசின் துணைச் செயலாளராக இருந்து ஓய்வு பெற்ற மா. கோபாலன், தனது 14ஆம் வயதிலேயே பெரியாரால் ஈர்க்கப்பட்டவர். கழகப் பணிகளில் பங்கேற்றவர். ‘ஆடும் பருவத்திலேயே எனை ஆட்கொண்ட பெரியார்’ எனும் தலைப்பில் அவர் எழுதிய நூலில் பல களப் பதிவுகளை செய்துள்ளார். அந்நூலிலிருந்து சில பகுதிகள் சென்னை பெத்துநாயக்கன் பேட்டையில் சிவஞானம் பிள்ளை பூங்கா ஒன்று உள்ளது. அங்குப் பெரியார் ஒரு நாள் பேசினார். அது திராவிடர் கழகத்தினரால் நடத்தப்பெற்ற பொதுக் கூட்டம். கூட்டத்தை நடத்தியவர்களுள் மு.பொ. வீரன் என்பவரும், டபுள்யூ.பி. வேலாயுதம் என்பவரும் முக்கியமானவர்கள். அவர்கள் இருவரும் மேடைக்கு முன்னர் நின்றிருந்தார்கள். பெரியார் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு செங்கல் துண்டு, எங்கிருந்தோ வந்து மேடையில் பெரியார் கால்கள் அருகில் விழுந்தது. யாரோ ஒருவன் மறைந்திருந்து அதனை வீசி எறிந்தான். நல்ல வேளை அது பெரியார் மீது படவில்லை. அந்தக் கல் வந்து விழுந்த நேரம்; இடம் ஆகியவற்றை ஒரு தாளில் எழுதச்...

விநாயக சதுர்த்தியை சைவர்கள் கொண்டாடக் கூடாது: மறைமலை அடிகள்

விநாயகனை வழிபடுவது சைவர்களுக்கு அவமானம்; அது பார்ப்பான் கட்டிய கற்பனைக் கதை என்கிறார், மறைமலை அடிகளார். அன்பர்களே! இக்கதை எவ்வளவு அருவறுக்கற்பாலவான மாறுபாடுகள் நிறைந்ததாய் இருக்கின்றது. எல்லாம் வல்ல இறைவியான உமைப்பிராட்டியார் வினை வயத்தால் பிறக்கும் நம்போல் ஊனுடம்பு உடையரல்லர். அவர்தம் திருமேனி சொல் லொணா அருள் ஒளி வீசித் துலங்குவதென்று ‘தேனோபநிடதம்’ நன்கெடுத்து மொழியா நிற்க, அவ்வறிவு நூலுக்கும் கடவுளிலக் கணத்துக்கும் முற்றும் மாறாக அம்மையார் திருமேனியில் அழுக்கு நிரம்பி இருந்ததென்றும் அவ் வழுக்கினைத் திரட்டி எடுத்து பிள்ளையாரைச் சமைத்தனள் என்றும் கூறும் அழுக்குப்புராணம் சிவமகா புராணமெனப் பெயர் பெறுதற்குத் தகுதி யுடையதாமோ? ஆராய்ந்து கூறுமின்கள்! ஊனுடம்பு படைத்த மக்களும் அழகும் நாகரிகமும் தூய்மையும் வாய்ந்தார் சிலரின் உடம்புகள் அழுக்கில்லாதனவாய் மினு மினுவென்று மிளிரா நிற்கத் தூய அருட் பேரொளி வடிவாய் விளங்கும் அம்மையின் திருமேனி அழுக்குடையதாயிருக்குமோ சொன்மின்கள்! மேலும், “தம் மனைவியாரைத் தேடிக்கொண்டு வந்த சிவபிரான் தமக்குப்பிள்ளையென்று அறியாமல் அதன் தலையை...

அந்த காலத்தில் பார்ப்பனர்களை திருமணத்துக்கு அழைப்பதில்லை

பார்ப்பானை வைத்துத் திருமணம் செய்வதெல்லாம் ஒரு நூற்றாண்டுக்குள்தான் பரவிற்று என்றுதான் சொல்ல வேண்டும். எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது – 60, 65 ஆண்டுகளுக்கு முன் எங்கள் வீட்டுத் திருமணத்திற்கு வந்து 500 பேர்களுக்கு மேலாக மொய் (அன்பளிப்பு) எழுதினார்கள். அவர்களுக்குத் திருப்பி மொய் எழுதுவதற்கு என்னைத்தான் என் வீட்டிலே அனுப்புவார்கள். அதனால் பல திருமணங்களைப் பார்த்து இருக்கிறேன். அப்பொழுதெல்லாம் இப்படி எல்லோரும் பார்ப்பானைத் திருமணத்திற்கு அழைப்பதில்லை. அப்படி திருமண வீட்டிற்குப் பார்ப்பான் வந்தால் பிச்சை வாங்குவதற்காகத்தான் அங்கு வருவான். அதுவும் உள்ளேகூட அழைப்பதில்லை. வெளியே ஒரு திண்ணையில் வந்து உட்கார்ந்துவிட்டுப் போகும்போது ஆளுக்கு ஒரு அணா, இரண்டனா, பெரிய மனிதர்களாக இருந்தால் ஆளுக்கு 8 அணா, 1 ரூபாய் பிச்சையாய்க் கொடுப்பார்கள். அதை வாங்கிக் கொண்டு சென்று விடுவான். கலியாணம் செய்து வைக்கப் பரியாரி (நாவிதன்) தான் வருவான். அவன்தான் மணமக்களை ஆசி கூறி வாழ்த்திச் செல்வான். அப்பொழுதெல்லாம் மணப்பெண்ணுக்கு யார்...

சூத்திரனுக்கு சட்டப்படி திருமண உரிமையே மறுக்கப்பட்டது

சூத்திரனுக்கு சட்டப்படி திருமண உரிமையே மறுக்கப்பட்டது

மேட்டூர் கழகத் தோழர் செ. மார்ட்டின்-விஜயலட்சுமி மகள் வி.மா.அன்புக்கரசி, பி.ஈ., கொளத்தூர் கு. மணி-மணிமேகலை ஆகியோரின் மகன் ம.திலிப்குமார், எம்.பி.ஏ. ஆகியோரின் ஜாதி-மத மறுப்பு மணவிழா 21.8.2016 அன்று கொளத்தூர் எஸ்.எஸ். திருமண மண்டபத்தில் சிறப்புடன் நடந்தது. இதில் மணவிழா அழைப்பிதழ் மிகவும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. 1958இல் பெரியார் பேச்சு தொகுப்பாக ‘வாழ்க்கைத் துணை நலம்’ என்ற தலைப்பில் வெளி வந்த நூலோடு இணைத்து, அழைப்பிதழ் தயாரிக்கப்பட் டிருந்தது. தந்தை பெரியாரின் சிறப்பான கருத்துகள் இடம் பெற்றிருந்த இந்த நூலில், ‘சூத்திரனுக்கு திருமண உரிமையே கிடையாது’ என்று பிரிட்டிஷ் இந்தியாவில் நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பை பெரியார் எடுத்துக் காட்டியிருக்கிறார். உரையின் அந்தப் பகுதி: ‘இந்து லா’வில் பிராமணன், சூத்திரன் என்ற பிளவுகள் உண்டே தவிர – நாயுடு, செட்டியார், படையாட்சி, பிள்ளை என்ற தனி வகைகள் இல்லை. ஆகையால் பார்ப்பனரைத் தவிர்த்து நாம் எல்லோரும் ஒரே சாதிதான். திராவிடர் என்று...

சாகடிக்கப்பட்ட 370ஆவது பிரிவு

370ஆவது பிரிவை சிதைத்து சின்னாபின்னப்படுத்தும் வேலை திட்டமிட்டே நிறைவேற்றப்பட்டது. காஷ்மீர்  இணைப்பு ஆவணத்தின்படி தற்காப்பு,  அயலுறவு மற்றும் தகவல் தொடர்பு குறித்த  அம்சங்களில்தான் காஷ்மீருக்குப் பொருந்தும் வகையில் இந்தியப் பாராளுமன்றத்திற்கு சட்டம் இயற்றும் அதிகாரம் வழங்கப்பட்டது. அதற்கு மேல் மாநில அரசாங்கத்தின் (அதாவது மாநில சட்டமன்றத்தில்) ஒப்புதலுடன் பிற அம்சங்கள் குறித்து சட்டமியற்றுவதற்கு ஜனாதிபதி உத்தரவிடலாம் என்றும் அப்பிரிவில் கூறப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவராக இருந்த  இராஜேந்திர பிரசாத், பிரதமர் நேருவுக்கு 1949 மே 18-ந் தேதியன்று குறிப்பு ஒன்றை  அனுப்பியிருந்தார். “காஷ்மீர் அரசியல் அமைப்புச் சட்டம் முழுமையாக வடிவமைக்கப்பட்ட பிறகு இந்தப் பிரிவைப் பயன் படுத்தி மத்திய அரசு மற்றும் – காஷ்மீர் மாநில அரசு உறவுகளைப் பற்றி முதலும் கடைசியுமாக முடிவு செய்யலாம். ஆனால்,  370ஆவது பிரிவு வழங்கியுள்ள அசாதாரணமான அதிகாரங்களை மீண்டும்  மீண்டும் பயன்படுத்துவதற்கு குடியரசுத் தலைவருக்கும் அதிகாரம் இல்லை” என்று அவர் குறிப்பிட்டிருந்தார். (ஆதாம்: ஏ.ஜி. நூரணி, தி ஸ்டேட் ஸ்மன் 16.6.1992). ஆனால்...

மருத்துவ கல்வியில் பறிபோகும் தமிழக மாணவர்களின் எதிர்காலம் – அலசல்

சில வருடங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் இருந்து சென்னைக்கு மருத்துவ சிகிச்சைக்காக வந்த ஒரு சிறுமியை பற்றி கேள்வி பட்டிருக்கிறோம்.. அதற்கு பிறக்கும் அது போன்ற செய்திகள் வந்திப்பதாகவே நினைவு.. அவர்கள் ஏன் சிகிச்சைக்காக தமிழகத்திற்கு வர வேண்டும்?.. இந்தியாவின் ஹைடெக் நகரங்களான மும்பை டெல்லி பெங்களூர் போன்றவற்றை எல்லாம் விட்டு விட்டு.. என்பதில்தான் மருத்துவத்தில் தமிழகம் எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கிறது என்பது புரியும்.. மருத்துவத்திலும், மருத்துவக் கல்வியிலும் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக உள்ளது தமிழகம்தான். பிற மாநிலங்களில் இருந்தும் , வெளிநாடுகளிலிருந்தும் தமிழகத்துக்கு சிகிச்சைக்காக பலர் வருகின்றனர். ஆசியாவிலேயே சிறந்த மருத்துவமனைகள் பட்டியலில் தமிழகமும் இருக்கிறது. திராவிடத்தால் வாழ்ந்தவர்களுக்கு கொஞ்சம் களுக்குன்னு இருக்கும் பேரவால்ல, விஷயம் அதுவல்ல மேல சொன்ன பெருமைகள் நம்மை விட்டு போக போகின்றன.. நீட் மருத்துவ நுழைவு தேர்வு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி இருக்கிறார்கள்.. இந்தியா முழுவதிற்கும் மருத்துவத்திற்கு ஒரே நுழைவு தேர்வு கொண்டு வர போகிறார்கள்.. நியாயந்தானேன்னு நம்மாளு வக்கணையா பேசுவான். உள்ளே இருக்கும் சாதிகளை புரிஞ்சுக்காம.. தமிழகத்தில் தான் அரசு மருத்துவ...

திப்பு சுல்தான் படத்தில் நடிக்காததால் ரஜினிக்கு கிடைத்த விருது!

திப்பு சுல்தான் படத்தில் நடிக்காததால் ரஜினிக்கு கிடைத்த விருது!

கோபி கழக மாநாட்டில் அப்துல் சமது ஆற்றிய உரை கோபியில் பிப்.28 அன்று திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாட்டில் மனித நேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் சமது ஆற்றிய உரை: (சென்ற இதழ் தொடர்ச்சி) இன்றைக்கு ‘பாரதமாதா கி ஜே’ எனும் கோசம் போடும் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன காவிக் கும்பலை பார்த்துக் கேட்கின்றேன், இந்த பாரதமாதா அடிமை சங்கிலியால் கட்டப்பட்டு கிடந்தபோது அதை உடைப்பதற்கு நாட்டு விடுதலைக்குப் பாடுபட்ட போரிட்டவர்களில் எத்தனை பேர் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன காவிக்கும்பல்கள்?  ஒருவர் கூட இல்லையே! விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெறாத ஆர்.எஸ்.எஸ் கும்பல், பார்ப்பனக் கும்பல் இன்றைக்கு இந்தியாவின் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்து இருக்கிறது என்றால் அதற்குக் காரணமான பார்ப்பனீயம் ஒடுக்கப்பட்டிருக்கிறதா அல்லது நசுக்கப்பட்டிருக்கிறதா? எனக் கேட்கிறோம்.  இந்த கும்பலுக்குதான் இன்றைக்கு தேசபக்தி பீறிட்டு கொண்டு வருகிறது. விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொள்ளாதது மட்டுமல்ல காட்டிக்கொடுத்தது...

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (15)

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (15)

நீதிக்கட்சித் தலைவரை பதவி விலக மிரட்டினார் ராஜாஜி! வாலாசா வல்லவன் ‘குணா’வின் வாரிசாக கிளம்பி யுள்ள ஒருவர் அண்மையில் வெளி யிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு. 1938 இல் இந்தி எதிர்ப்பின் போது இராஜாஜி நீதிக் கட்சியின் தலைவர் பொப்பிலி அரசரை அக்கட்சியின் தலைவர் பதவியை விட்டு விலகுமாறு மிரட்டினார். பொப்பிலி அரசர் பயப்பட வில்லை. இராஜாஜியும் சும்மா இருக்க வில்லை. ஜமின்தாரி ஒழிப்பு மசோதாவை கொண்டு உங்கள் ஜமின் சொத்துகளை அரசுடைமை ஆக்கி விடுவேன் என்று மிரட்டியதால், மற்ற ஜமீன்தார்கள் பொப்பிலி அரசருக்கு நெருக்கடி கொடுத்து நீதிக்கட்சி தலைவர் பதவியி லிருந்து விலகி விடுமாறு வற்புறுத்தினர். பொப்பிலி அரசர் விலகி விட்டால் நீதிக் கட்சியை ஒழித்து விடலாம் என இராஜாஜி கனவு கண்டார். பொப்பலி அரசர் நீதிக் கட்சி தலைவர் பதவியிலிருந்து விலகி விட்டார். இந்த நிலையில்தான். கி.ஆ.பெ. விசுவநாதமும் ஏ.டி. பன்னீர் செல்வமும் பெல்லாரி சிறையில் இருந்த பெரியாரை...

பிற மொழி மயக்கம் – தோழர் பூங்குழலி தஞ்சை 17072016

தஞ்சையில் நடைபெற்ற தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா மற்றும் உலகத் தமிழர் பேரமைப்பின் 9-ஆம் மாநாட்டில் 17-07-2016 அன்று நிகழ்ந்த “பிற மொழி மயக்கம்” எனும் தலைப்பிலான அமர்வில் பூங்குழலி ஆற்றிய உரையின் எழுத்து வடிவம் மொழி என்பது தனித்து இயங்க வல்லது அல்ல. ஒரு மொழியை உயிர்ப்புடன் வைத்திருக்க அதை பேசும் ஒரு மக்கள் கூட்டம் வேண்டும். அவ்வாறு ஒரு மொழியை பேசும் மக்கள் கூட்டத்திற்கு அம்மொழி இனத்தவர் என்று பெயர். அப்படியான இனம் இல்லாத மொழி இறந்த மொழியாக கருதப்படுகிறது. கிரேக்கம், சமற்கிருதம் போன்ற உலகின் பல பண்டைய மொழிகள் இவ்வாறு இறந்த மொழியாகவே உள்ளன. ஆக ஒரு மொழி வாழ ஓர் இனம் தேவை. அதே போன்று மொழியை அழித்து விட்டு இனம் என்ற அடையாளத்தை தக்க வைக்க முடியாது. தங்கள் மொழியை இழந்தவர்கள் ஓர் இனமாக அறியப்படுவதில்லை. எனவே மொழியும் இனமும் ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை...

வரலாற்றுச் “சிரிப்பு” மிக்க வாக்குறுதி… பாமரன்

காஷ்மீரிகளின் தனித்துவம்….. படிக்க ஒருவேளை உங்களில் சிலருக்கு சலிப்பு வரலாம்…. என்னடா இப்பத்தான் இவன் 1947 க்கே வந்திருக்கான்….. எப்ப இவன் 2010 க்கு வர்றது? நாம எப்ப காஷ்மீரப் பத்தி தெரிஞ்சுக்கறது? என்று எரிச்சல் கூட வரலாம். ஒரு விடுதலைப் போராட்ட வரலாற்றை ஓரிரு வாரங்களுக்கு வாசிக்கவே நமக்குள் இத்தனை சலிப்பு என்றால் நானூறு…. ஐநூறு ஆண்டுகளாய் விடுதலைக்காக ஏங்கித் தவிக்கும் ஒரு இனத்துக்கு…. தொடர்ச்சியான அடக்குமுறைக்கும்…. அடிமைத்தனத்திற்கும் பலியாகிக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்துக்கு எத்தனை சலிப்பும், எத்தனை எரிச்சலும், எத்தனை ஏமாற்றமும் இருக்கும்? ஆனால் அதிசயத்தக்க வகையில் அப்படி எதுவும் இல்லாமல் இன்னமும் அயராது போராடிக் கொண்டிருப்பதுதான் காஷ்மீர மக்களின் தனித்துவம். இனி தொடர்வோம்….. ”காஷ்மீரில் நிகழ்கின்ற சம்பவங்களை மத மோதல்களாகவே சித்தரிக்கின்ற வைதீக இசுலாமியர்களும் உண்டு. வைதீக இந்துக்களும் உண்டு. ஆனால் உண்மை இந்த இரண்டுக்கும் அப்பாற்பட்டே நிற்கிறது. அந்த உண்மைக்கு இன்னும் கொஞ்சம் அருகில் செல்ல...

காஷ்மீரிகளின் தனித்துவம்….. பாமரன்

காஷ்மீர் – ஒரு முன்கதை சுருக்கம் சென்ற வாரம் ”ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் இவர்களிடம் இருந்து வருகிறது. நான் பார்த்தவரையில் இவர்கள் ஒரே மக்களாகவே இருந்து வருகிறார்கள். காஷ்மீரி இந்துவுக்கும், காஷ்மீரி முசுலீமுக்கும் இடையே எந்த வேறுபாட்டையும் என்னால் காண முடியவில்லை. ஜம்மு, காஷ்மீர் ஆகியவற்றின் எதிர்காலத்தை காஷ்மீரிகளின் விருப்பமே தீர்மானிக்க வேண்டும் என என் அறிவு கட்டளையிடுகிறது.” – மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. இன்று காஷ்மீரில் நடந்து கொண்டிருக்கும் போராட்டத்தினை இந்து முசுலீம் இடையிலான போராட்டம் என்றோ…… அல்லது இந்தியா பாகிஸ்தான் இடையிலான யுத்தம் என்றோ எண்ணிக் கொண்டிருந்தால்….. நாம் எங்கோ தவறான திசையை நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம். காஷ்மீரில் நடந்து கொண்டிருக்கும் யுத்தத்தை ஓரளவுக்காவது நாம் புரிந்து கொள்ள வேண்டுமானால் அதற்கு முன்னதாக காஷ்மீரி மக்களின்  தனித்துவமான பண்பாட்டைப் பற்றிப் புரிந்து கொண்டால்தான் அது சாத்தியப்படும். பெரும்பான்மையான மக்கள் இசுலாமியர்கள் என்றாலும் பெளத்தர்கள்….. சீக்கியர்கள்…....