Category: கருவூல கட்டுரைகள்

பொங்கல் ஒன்றே தமிழர் விழா

பொங்கல் ஒன்றே தமிழர் விழா

நான் 35 வருடங்களுக்கு முன் இந்தப் பொங்கல்தான் அறிவுக்கு ஒத்தது, தமிழர்களுக்கான பண்டிகை; தமிழர்கள் இதைத்தான் தங்களின் விழாவாகக் கொண்டாட வேண்டும். இதைத்தவிர்த்துப் பெரும்பாலான மக்களால் கொண்டாடப்பட்டுவரும் மதப் பண்டிகைகள் எல்லாம் முட்டாள்தனமான காட்டுமிராண்டித் தன்மையோடு மூட நம்பிக்கை நிறைந்தவைகளே ஆகும்; இது ஒன்றுதான் மூட நம்பிக்கை; முட்டாள் தனமற்ற அறிவிற்குப் பொருத்தமான விழாவாகும் என்று சொல்லி வருகின்றேன்.                                                    – ‘விடுதலை’ 28.01.1968 பொங்கல் பண்டிகை என்பது நாள், நட்சத்திரம், மதக்கதை ஆதாரம் முதலியவை எதுவுமே இல்லாமல் தை மாதம் ஒன்றாம் தேதி என்பதாக, தை மாதத்தையும் முதல் தேதியையுமே ஆதாரமாகக் கொண்டதாகும். – ‘விடுதலை’ 13.01.1970 பெரியார் முழக்கம் 14012021 இதழ்

இலட்சியமற்ற வாழ்க்கை

இலட்சியமற்ற வாழ்க்கை

“பிறப்பும் இறப்பும் இயற்கையே; மனிதன் ஏன் பிறக்கிறான் என்று யாராவது கூற முடியுமா? பிறந்து எதற்காக வாழ்கிறான்; எதற்காக இறந்து போகிறான் என்று யார் கூற முடியும்? இதைக் கேட்டால் அது கடவுள் செயல்; கடவுள் பிறப்பிக்கிறார்; கடவுள் காப்பாற்றுகிறார்; சாகடிக்கிறார் என்று தான் கூற முடியுமே தவிர வேறு சரியான காரணம் கூற முடியுமா? அவன் எந்தக் குறிப்பிட்ட இலட்சியத்தின் மீது தனக்குப் பிள்ளை வேண்டுமென்று பிள்ளையைப் பெறுகிறான் என்றால், எதற்காகப் பிள்ளை வேண்டும் என்பதைக் கூற முடியுமா? அவனைக் கேட்டால் கூடத் தெரியாது. குழந்தையை அடைந்ததும் அதை ஏன் காப்பாற்ற வேண்டும்; அதற்கு ஏன் கல்வி புகட்ட வேண்டும் என்ற இலட்சியத்தைக் கூற முடியாது. ஏதோ தம் பிள்ளை படிக்க வேண்டும் என்பார்களே தவிர, எதற்காகக் கல்வி கற்க வேண்டும் என்றே தெரியாது… இவ்விதமே எல்லாம் ஒரு இலட்சியத்தை அடிப்படையாகக் கொண்டிராமல் இருக்கின்றன. வாழ்க்கை என்ற ஏணிப்படியில் கால்...

பார்ப்பன தேசிய பத்திரிகைகளால் இருட்டடிக்கப்பட்டார் வ.உ.சி.

பார்ப்பன தேசிய பத்திரிகைகளால் இருட்டடிக்கப்பட்டார் வ.உ.சி.

வரலாற்றுச் சான்றுகளுடன் கொளத்தூர் மணி உரை (3) 05.09.2020 அன்று தமிழக மக்கள் முன்னணி ஒருங்கிணைத்த வ.உ.சி. பிறந்த நாள் இணைய வழி கருத்தரங்கத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை. இரண்டாம் பகுதி படிக்க 1929 இல் செங்கல்பட்டு முதலாவது மாகாண சுயமரியாதை மாநாட்டில் பெரியார் ஒரு தீர்மானம் கொண்டு வருகிறார்,  வணங்கபடுவதற்கும், வணங்கு பவனுக்கும் இடையில் இடைத்தரகர்களோ, வட மொழியோ தேவையில்லை  என்று ஒரு தீர்மானம் கொண்டு வருகிறார். அதை ஏற்றுக் கொண்டுதான் வ.உ.சியும்  இலஞ்சம் வாங்காத நீதிபதியிடம் தரகர் வேண்டாமே  என்று பேசுகிறார். அதனால் தான் சைவர்கள் வ.உ.சி யையும் ஒதுக்கினார்கள். சைவர்கள் இவற்றையெல்லாம் பார்த்துவிட்டு சும்மா இருப்பார்களா அவர்களும் கிளர்ந்தெழுந்து வ.உ.சி யை எதிர்க்கிறார்கள். அதில், முத்தையாப் பிள்ளை என்ற ஒருவர், “பிடிவாதத்தால் கப்பல் விடப் போய் அதனால் கிடைக்கும் தண்டனையினால் பாடம் கற்காதவர், சர்வ வல்லமை மிக்க பிரிட்டிஷாரின் கட்டளையையே மதிக்காதவர், அதேபோலத்தான்...

வ.உ.சி.யின் சுதேசி கப்பல் கம்பெனிக்கு – பெரியார் பங்குத் தொகை வழங்கி, நிதியும் திரட்டித் தந்தார்

வ.உ.சி.யின் சுதேசி கப்பல் கம்பெனிக்கு – பெரியார் பங்குத் தொகை வழங்கி, நிதியும் திரட்டித் தந்தார்

வரலாற்றுச் சான்றுகளுடன் கொளத்தூர் மணி உரை (2) 05.09.2020 அன்று தமிழக மக்கள் முன்னணி ஒருங்கிணைத்த வ.உ.சி. பிறந்த நாள் இணைய வழி கருத்தரங்கத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை. முதல் பகுதி படிக்க தமிழக வரலாற்றில் பார்ப்பனரல்லாதார் இயக்கம் வீரியம் கொண்டதற்கு சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் ஒரு காரணம். அந்த சேரன்மாதேவி குருகுலத்திற்கு 31 ஏக்கர் நிலத்தைத் தன் சொந்த பணத்தில் வாங்கிக் கொடுத்தவர் கானாடு காத்தான் வை.சு. சண்முகம். ஆனால் குருகுலத்தில் பார்ப்பனரல்லாதார் குழந்தைகளை பாகுபடுத்தி நடத்துகிறார்கள் என்ற செய்தி தெரிந்தவுடன் கடுமையான எதிர்ப்புகள் கிளம்புகிறது. வரதராஜுலு நாயுடுவும், பெரியாரும் கடுமையாக எதிர்க்கிறார்கள். வைக்கம் போராட்டமும் சேரன்மாதேவிப் போராட்டமும் ஏறக்குறைய ஒரே காலகட்டத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அதற்கான கலந்துரை யாடல்களெல்லாம் கானாடுகாத்தான் சண்முகம் இல்லத்தில் தான் தொடந்து நடைபெற்றது.  சுயமரியாதை இயக்கத்தில் இயங்கியவரும்கூட. 1935இல் அவரது மகள் பார்வதி, அவரது திருமண மேடையிலேயே, பெரியாரிடம் நான்...

வரலாற்றுச் சான்றுகளுடன் கொளத்தூர் மணி உரை பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளுக்கு துணை நின்றவர் – வ.உ.சிதம்பரனார்

வரலாற்றுச் சான்றுகளுடன் கொளத்தூர் மணி உரை பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளுக்கு துணை நின்றவர் – வ.உ.சிதம்பரனார்

05.09.2020 அன்று தமிழக மக்கள் முன்னணி ஒருங்கிணைத்த வ.உ.சி. பிறந்த நாள் இணைய வழி கருத்தரங்கத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை. முதல் பகுதி நாம் தமிழ்ச் சமூகத்திற்கு நினைவூட்ட வேண்டிய ஒரு பெரும் தலைவரைப் பற்றி அவருடைய பன்முகச் செயல்பாடுகளைப் பற்றி எடுத்துரைப்பதற்கான ஒரு வாய்ப்பாக நான் இதைப் பார்க்கிறேன். அவர் தொடக்க காலத்தில் விடுதலை வீரராக, குறிப்பாக திலகரோடு சேர்ந்து பணியாற்றிய தீவிரவாத பிரிவைச் சார்ந்தவராக வாழ்க்கையைத் தொடங்கி சிறைபட்டதை, விடுதலைக்குப் பின்னர் நடந்த மாற்றங்களை பலரும் பல கோணங்களில் பகிர்ந்து கொண்டுள்ளனர். நான் ஒரு பெரியார் இயக்கத் தோழன் என்ற முறையில் பெரியார் இயக்கத்தோடும், சுயமரியாதை இயக்கத்தோடும் அவர் கொண்டிருந்த தொடர்புகளைப் பற்றி சில செய்திகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். இந்தியாவில் நடைபெற்ற முதல் தொழிற்சங்க போராட்டமானாலும், அரசியல் ரீதியாக நடந்த முதல் வேலை நிறுத்தப் போராட்ட மானாலும் அதில் குறிப்பிடத்தக்க...

2007இல் தஞ்சை ஜாதி ஒழிப்பு மாநாட்டில் ஆசிட் தியாகராசன் நிகழ்த்திய உரை

2007இல் தஞ்சை ஜாதி ஒழிப்பு மாநாட்டில் ஆசிட் தியாகராசன் நிகழ்த்திய உரை

2007 மே 19 அன்று பெரியார் திராவிடர் கழகம் சார்பில் தஞ்சாவூரில் நடைபெற்ற ஜாதி ஒழிப்பு மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற ஆசிட் தியாகராசன் ஆற்றிய உரை. “நான் அதிகம் பேச முன்வரவில்லை. உண்மையைச் சொன்னால் – எனது 78 வயதில் நான் ஏறியுள்ள முதல் மேடை இது தான். புரட்சிகர இயக்கங்களுக்கு தனித் தனிப் படைகள் தேவை. நீங்கள் பிரச்சாரப் பீரங்கிகள்; பிரச்சாரப் படை. நான் தீவிரவாதத்தில் தான் இருப்பேன் (கைதட்டல்) . பெரியார் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் போராட்டங்களில் நான் கலந்து கொள்வது இல்லை. நான் கருப்புச் சட்டையும் போடமாட்டேன்.என்னுடைய நடவடிக்கைகளால் கழகம் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்று கருதுபவன். என்னுடைய போராட்டங்களை நான் தனிப்பட்ட முறையில் எனக்கு நானே பொறுப் பாக்கிக் கொண்டுதான் நடத்துவேன். சுருக்கமாகச் சொல்கிறேன். பெரியாரின் பிள்ளையார் உடைப்புப் போராட்டத்துக்கு என்ன காரணம் என்பது எனக்குத் தெரியும். ஆனால் விபூதி வீர முத்து என்பவன், பெரியார் படத்தை...

பார்ப்பனர் வாதங்களுக்கு மறுப்பு தமிழ் குடமுழுக்குக்கு ஆகமங்கள் தடையா?

பார்ப்பனர் வாதங்களுக்கு மறுப்பு தமிழ் குடமுழுக்குக்கு ஆகமங்கள் தடையா?

தஞ்சை பெரிய கோயிலின் குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டும் என்ற தமிழர்களின் கோரிக்கையை பார்ப்பன புரோகிதர்கள் எதிர்க்கிறார்கள். சமஸ்கிருத மந்திரங்கள் மட்டுமே சக்தி வாய்ந்தவை. தமிழுக்கு அந்த சக்தி இல்லை என்று தொலைக்காட்சி விவாதங் களில் வாதிடுகிறார்கள். காலங்காலமாக சமஸ்கிருதத்தில் தான் ‘கும்பாபிஷேகம்’ நடக்கிறது என்றும் வாதாடுகிறார்கள். திருவள்ளுவருக்கு காவி உடை போர்த்தி பெரியாரைத் தமிழ் விரோதி என்றும், தாங்களே தமிழ்ப் பற்றாளர்கள் என்றும் நீட்டி முழங்கி வந்த பா.ஜ.க.வினர், தமிழில் குடமுழுக்கு நடத்துவது குறித்து மவுனம் சாதிக்கிறார்கள். தங்களது சமஸ்கிருதப் பார்ப்பனப் பற்றை வெளிக் காட்டாமல் மூடி மறைத்துக் கொள்கிறார்கள். இந்த நிலையில் தமிழ் வழிபாடுகள் தான் நீண்டகால மரபாக இருந்திருக்கிறது என்றும், சிவன், சக்தி, திருமால் வழிபாடுகள் வேதத்திலேயே இல்லாத போது எப்படி சமஸ்கிருத வழிபாடு இருந் திருக்கும் என்றும் தமிழ் ஆய்வாளர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பார்ப்பனர்களிடமிருந்து பதில் இல்லை. தமிழ் வழிபாடு குறித்து பல ஆய்வு நூல்களை...

அரசியல் கைதிகளைக் கிரிமினல் கைதிகளாக நடத்தியது, அன்றைய ஆட்சி அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தைப் பெரியார் நடத்தியது ஏன்? (2) கொளத்தூர் மணி

அரசியல் கைதிகளைக் கிரிமினல் கைதிகளாக நடத்தியது, அன்றைய ஆட்சி அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தைப் பெரியார் நடத்தியது ஏன்? (2) கொளத்தூர் மணி

அரசியல் சட்ட எரிப்பு நாளில் காணொளியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்த்திய உரை. சென்ற இதழ் தொடர்ச்சி தஞ்சை மாநாட்டில் பெரியார் ஜாதி ஒழிப்பைப் பற்றி மிக ஆவேசமாகப் பேசுகிறார். தன்னுடைய தொண்டர்களிடம் ஒரு கேள்வியை முன்வைக்கிறார். ஜாதியை ஒழிப்பதற்கு ஆயிரம் பாப்பனரைக் கொன்றால்தான் முடியும் என்றால் கொல்லத் தயாராக இருக்கிறீர்களா? என்று கேள்வியெழுப்புகிறார். மக்கள் ஆரவாரித்து உடன்பாடான பதிலைக் கொடுக்கிறார்கள். அந்த மாநாட்டில் தான் ஜாதியைப் பாதுகாக்கிற இந்தச் சட்டப் பிரிவுகளை நீக்கவில்லை யென்றால் வருகிற நவம்பர் 26 நாளன்று அரசியல் சட்டத்தில் ஜாதியை பாதுகாக்கும் பிரிவுகளை எரிப்போம் என்று அறிவிக்கிறார். ஏன் நவம்பர்26ஐ அவர் தேர்ந்தெடுத்தார் என்றால், அரசியல் சட்ட வரைவு  எழுதப்பட்டு அதை நவம்பர் 25 அன்று நாடாளுமன்றத்தில்  நம்முடைய பெரும் மதிப்பிற்குரிய அம்பேத்கர் அவர்களால் முன் வைக்கப்பட்டு அதற்கான ஒப்புதலை கொடுக்குமாறு நாடாளுமன்றத்தைக்  கோருகிறார்; 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் நாள் தான் அந்த...

அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை பெரியார் நடத்தியது ஏன்? கொளத்தூர் மணி

அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை பெரியார் நடத்தியது ஏன்? கொளத்தூர் மணி

அரசியல் சட்ட எரிப்பு நாளில் காணொளியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்த்திய உரை. தமிழ்நாட்டின் பல்வேறு வளர்ச்சிக்கு சமூக மேம்பாட்டிற்கு காரணமாக இருந்த தந்தை பெரியார் எடுத்த போராட்டங்களில் அரசியல் சட்ட எரிப்பு போராட்டம் என்பது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஏறத்தாழ நாம் அறிய உலகில் எந்த நாட்டிலும் , அந்த நாட்டின் போராட்டங்களில் அரசியல் சட்டம் எரித்ததாக இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை. அப்படி ஒரு போராட்டத்தை பெரியார் முன்னெடுத்தார். அதற்கு என்ன காரணம் என்பதையும் அதைநோக்கி பெரியார் நகர்வதற்கான சூழலையும் சற்று நாம் பார்த்து விடுவது பொருத்தமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். இந்தியாவில் பெரியார் பொது வாழ்க்கைக்கு வந்த பொழுது ஈரோடு அளவில் இருந்த பெரியார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு வந்து அதன் தலைவராக பணியாற்றிய ஆறாண்டு காலத்தில், இந்திய விடுதலைப் போராட்டத்தில் போராடு பவர்களைப் பற்றி ஒரு கருத்து உருவாகிறது. இந்திய விடுதலை போராட்டம் என்பதே...

நமது நெறி திருக்குறள்; நமது மதம் – மனித தர்மம் திருக்குறள்: பெரியார் கருத்து என்ன?

நமது நெறி திருக்குறள்; நமது மதம் – மனித தர்மம் திருக்குறள்: பெரியார் கருத்து என்ன?

பெரியார் திருக்குறளையே கடுமையாகக் கண்டித்தார் என்று பா.ஜ.க. – சங். பரிவாரங்கள் பேசி வருவதற்கு மறுப்பாக பெரியாரின் திருக்குறள் பற்றிய கருத்துகளின் ஒரு தொகுப்பு. ஆரியரல்லாத இந்நாட்டு மக்கள் அனைவர்க்கும் சிறப்பாக இந்த நாட்டுப் பழங்குடி மக்களான திராவிடர்கள் அனைவர்க்கும் வள்ளுவர் அருளிய ‘திருக்குறள்’ ஒரு பெரிய செல்வமேயாகும். நமது பெருமைக்கும் நெறிக்கும் நாகரிகத்திற்கும், வாழ்க்கை முறைக்கும் எடுத்துக்காட்டாக அதில் பல விவரங்களை நாம் காணலாம். திருக்குறளின் பேரால் திராவிட மக்களின் பெருமையை, திராவிடரல்லாத மக்களுக்கு உணரச் செய்ய முடிகிறது. நமது சரித்திரத்திற்கும் நாகரிகத்திற்கும் பல இலக்கியங்களிலிருந்தும் பல காவியங்களி லிருந்தும் ஆதாரங்கள் எடுத்துக்காட்ட முடியு மாயினும் அவை பெரும்பாலும் பண்டிதர் களுக்குத் தான் புரியும். அவர்களுக்குத்தான் பயன்படும். ஆனால், திருக்குறள் ஒன்றுதான் பாமர மக்களும் புரிந்துகொள்ளும் வகையில், எப்படிப்பட்ட அறிவாளியும் ஏற்கும் தன்மைக் குரிய தக்க ஆதாரமாய் அமைந்திருக்கிறது. திருக்குறள் ‘தெய்வீகத் தன்மை பொருந்திய’ ஒருவரால் எழுதப்பட்டது என்பதாகவோ அல்லது...

வழிபாடுகளில் மக்கள் தீவிரம் காட்டவில்லை சங்ககால தமிழர் வாழ்வை உறுதிப்படுத்துகிறது கீழடி ஆய்வு

வழிபாடுகளில் மக்கள் தீவிரம் காட்டவில்லை சங்ககால தமிழர் வாழ்வை உறுதிப்படுத்துகிறது கீழடி ஆய்வு

கீழடியிலும் சிந்துவெளியிலும் விளையாட்டுப் பொருள்கள் அதிகம் கிடைத்துள்ளன கீழடி அகழாய்வு முடிவுகள் குறித்த விவாதங்கள் தீவிரமடைந்திருக்கின்றன. இந்த நிலையில், சென்னை ரோஜா முத்தையா நூலகத்தில் உள்ள சிந்துவெளி மையத்தின் கௌரவ ஆலோசகரும் சிந்துவெளி தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு வருபவருமான ஆர். பாலகிருஷ்ணனிடம் கீழடி ஆய்வு முடிவுகளின் முக்கியத்துவம் குறித்து  பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன் பேசினார். அவரது பேட்டியிலிருந்து: கீழடி முடிவுகள் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. தற்போது தமிழக அரசு வெளியிட் டிருக்கும் முடிவுகள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? இப்படி பரபரப்பாக விவாதிக்கப்படுவதற்குக் காரணமே, சமீப காலமாக இம்மாதிரி அகழாய்வு முடிவுகள் எதுவும் வெளிவரவில்லை என்பதுதான். ஆதிச்ச நல்லூரில் 1904ல் அலெக்ஸாண்டர் ரீ ஆய்வு மேற்கொண்டதற்குப் பிறகு, மீண்டும் 2004இல்தான் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதனால், அதனுடைய விரிவான விளக்கங்கள் யாருக்கும் தெரிய வில்லை. ஆனால், கீழடி துவக்கத்திலிருந்தே பொதுமக்களின் கவனத்தை ஈர்த்திருப்பதால், இப்போது வெளியாகியிருக்கும் முடிவுகள் எல்லோரது கவனத்தையும் கவர்ந்திருக்கிறது....

இராமானுஜர் சீர்திருத்தம் – நாமத்தை பூணூலை காப்பாற்றியதே தவிர சமத்துவத்தை உண்டாக்கியதா? பெரியார்

நிதானமும், சாந்தமும், பொறுமையும், கட்டுப்பாடும் கொண்டு வெறுப்பில்லாமலும், துவேஷமில்லாமலும் நல்ல வார்த்தையும், கூட்டுறவிலும், நயமாகவும், கெஞ்சியும் நமது நாட்டில் எத்தனை காலமாக (சீர்திருத்தம்) செய்து வந்திருக்கிறது? இதுவரை செய்து வந்த சீர்திருத்தங்கள் என்ன ஆயிற்று? இன்னும் எத்தனை நாளைக்குப் பரீட்சைப் பார்ப்பது என்கிற விஷயங்களை யோசித்தால் மேற்கண்ட வார்த்தைகள் சீர்திருத்தத்திற்கு விரோதிகளா யுள்ளவர்களிடம் மரியாதை பெறுவதற்காகவும், தங்களது சொந்த புகழுக்காகவும், பெருமைக் காகவும் பேசப்பட்ட வார்த்தைகள் அல்லது பலவீனத்தின் தோற்றம் என்று ஏற்படுமே ஒழிய வேறொன்றுமே இருக்காது. சிலர் இம் மாதிரியான நமது அபிப்பிராயத்திற்கு விரோத மாய் சில பெரியோர்களான விவேகானந்தர், காந்தி முதலியோர்களுடைய வார்த்தைகளை எடுத்துக் காட்டுவார்கள். இம்மாதிரியான அப்பெரியோர்களுடைய வார்த்தைக்கு நான் முற்றும் முரண்பட்டவன் என்பதை நான் கண்ணியமாய் ஒப்புக் கொள்ளுகிறேன். காரணம், அவ்வார்த்தைகள் சொன்ன பெரியோர்களை சுவாமியாகவும், மகாத்மாவாகவும் மக்கள் கொண்டாடினார்கள்; கொண் டாடுகிறார்கள்; படம் வைத்து பூசிக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இவ்வார்த்தைகளால் சீர்திருத்தம் வேண்டிய...

தீபாவளி: பகுத்தறிவுக்கு எதிரானது

தீபாவளி: பகுத்தறிவுக்கு எதிரானது

பண்டித, பாமர, பணக்கார ஏழைச் சகோதரர்களே! எவ்வளவு பண்டிகை கொண்டாடினீர்கள்! எவ்வளவு யாத்திரை செய்தீர்கள்? இவற்றிற்காக எவ்வளவு பணச் செலவும் நேரச் செலவும் செய்தீர்கள்? எவ்வளவு திரேகப் பிரயாசைப்பட்டீர்கள் என்பதை யோசித்துப் பார்த்தால், நீங்கள் புராணப் புரட்டை உணர்ந்து – புராண ஆபாசத்தை அறிந்தவர்களாவீர்களா? வீணாய்க் கோபிப்பதில் என்ன பிரயோசனம்? இந்த விஷயங்களை வெளியில் எடுத்து விளக்கிச் சொல்லுகின்றவர்கள் மீது ஆத்திரம் காட்டி அவர்களது கண்ணையும், மூக்கையும், தாடியையும், தலைமயிரையும் பற்றிப் பேசுவதால் என்ன பயன்? ‘நீ ஏன் மலத்தில் மூழ்கி இருக்கின்றாய்?’ என்றால், அதற்கு, நீ தமிழ் இலக்கணம் தெரியாதவன்’ என்று பதில் சொல்லிவிட்டால் மலத்தின் துர்நாற்றம் மறைந்து போகுமா? இதைப் பார்ப்பனரல்லாத மக்கள் 1000-த்துக்கு 999 பேர்களுக்கு மேலாகவே கொண்டாடப் போகின்றீர்கள். பெரிதும் எப்படிக் கொண்டாடப் போகின்றீர்கள் என்றால், பொதுவாக எல்லோரும் – அதாவது துணி தேவை இருக்கின்றவர்களும், தேவை இல்லாதவர்களும் பண்டிகையை உத்தேசித்துத் துணி வாங்குவது என்பது...

பெரியார் பிறந்த நாள் சிந்தனை “காமராசருக்கு எதிர்ப்பில்லாத நிலையை நாம்தான் உருவாக்கினோம்”

நான் இப்புவியில் 85 ஆண்டுகள் வாழ்ந்து 86-வது ஆண்டில் புகுகிறேன். இந்த நாட்டில் மக்கள் வாழும் சராசரி வயது 10 ஆண்டுகளுக்கு முன் 32 வயதாக இருந்து, இன்று 48 வயதாக மாறியுள்ள இக்காலத்தில் ஒரு மனிதன் 85 ஆண்டு வாழ்ந்து, அதுவும் ஓய்வு என்பதை அறியாத தொண்டும், சுகம் என்பதை அறியாத வாழ்வும், கிடைத்ததைத் தின்று கொண்டு, வாய்த்த இடத்தில் தூங்கிக் கொண்டு திரிந்த நான் 85 ஆண்டு வாழ்ந்து விட்டேன் என்றால் என் ஆயுளைப்பற்றி நான் பாராட்டிக் கொள்ள வேண்டாமா ? என்ன செய்து சாதித்துவிட்டாய்?  என்று நீங்கள் கேட்கலாம். அதற்குப் பதில் நீங்களே (வாசகர்கள்) தான் தேடிப்பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டும். ஓய்வு ஒழிச்சல் இன்றி, சோம்பல் கழிப்பிணித் தனமின்றி உழைத்தேன். திருட்டு, புரட்டு, மோசடி இன்றி வெள்ளையாய் நடந்து கொண்டேன். என் நடத்தையில் பல தவறுகள், தகாத காரியங்கள் ஏற்பட்டு இருக்கலாம். என்னையே நீதிபதியாகக் கொண்டு...

அமித்ஷாவின் வெறிப் பேச்சு

அமித்ஷாவின் வெறிப் பேச்சு

1929லேயே இந்தியை எதிர்த்தார் பெரியார் ‘இந்தியாவின் அடையாளம் இந்தி’ என்ற அமித்ஷா கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் தென்னகம் முழுவதும் எழுந்துள்ளது. இந்தித் திணிப்பை எதிர்த்தும் அதைத் திணிப்பதன் நோக்கத்தை விளக்கியும் 1929ஆம் ஆண்டிலேயே  90 ஆண்டுகளுக்கு முன்பே பெரியார் எழுதிய கட்டுரை. சமீபத்தில் சென்னை மாகாணத்திற்கு சென்னைப் பார்ப்பனர்கள் வடநாட்டுத் தலைவர்கள் என்பவர்களை ஹிந்திப் பிரசாரம் என்னும் பேரால் பார்ப்பனப் பிரசாரம் செய்ய அழைத்துவரப் போகின்றதாகத் தெரிய வருகின்றது. இந்த வழியில் பார்ப்பனப் பிரசாரம் செய்வதோடு மாத்திரமல்லாமல் பார்ப்பனரல்லாத மூடர்களிடமிருந்து சுமார் ஒரு லக்ஷம் ரூபாயாவது கொள்ளை அடிக்கக் கருதியிருக்கின்றார்கள் என்பதாகத் தெரிய வருகின்றது. கதரின் பேரால் அடித்த கொள்ளையாகிய ஐந்து லக்ஷம் ரூபாய் இன்னும் ஜீரணம் ஆகாமல் அப்படியே கல்லுப் போல் பார்ப்பார்கள் வயிற்றில் கிடக்க, சென்ற வருட காங்கிரசின் பேரால் கொள்ளை அடித்த சுமார் 20, 30 ஆயிரம் ரூபாயும் அப்படியே கிடக்க இப்போது இன்னும் ஒரு லக்ஷம்...

சமண-புத்த மதங்களை அழித்தது யார்? சைவத்தின் மதமாற்ற வன்முறைக்கான வரலாற்றுச் சான்றுகள்

கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் மதமாற்றங்கள் செய்து வருகின்றன என்று உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநான் ஒரு தீர்ப்பில் கூற கடும் எதிர்ப்பு வந்தவுடன் அப்பகுதியை திரும்பப் பெற்றுக் கெண்டார். உண்மையில் தமிழ்நாட்டில் சமண-பவுத்த மடங்களை அழித்து சைவமாக்கியதோடு அதற்காக வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டதும், சைவர்கள்தான் என்பது வரலாறு.  அதற்கான வரலாற்றுச் சான்றுகளை முன் வைக்கிறது இக்கட்டுரை. கி.பி. அய்ந்து ஆறு ஏழாம் நூற்றாண்டு களில் தமிழ் நாட்டில் சமண சமயமும் பவுத்த மதமும் பெரிதும் செழித்து வளர்ந்திருந்தது. சைவ வைணவ மதங்கள் முடங்கிக் கிடந்தன. மக்களில் பெரும்பாலோர் சமணராகவும் பௌத்தராகவும் இருந்தனர். நாட்டை ஆண்ட மன்னர்களும் சமண பவுத்த மதங்களைத் தழுவியிருந்தனர். கி.பி. ஏழாம் நூற்றாண்டில் சைவ அடியார்களான நாயன்மார்களும், வைணவ அடியார்களான ஆழ்வார்களும் ‘பக்தி’ இயக்கத்தை ஆயுதமாகக் கொண்டு சமண பவுத்த மதங்களை அழித்திட முற்பட்டனர். ‘சமண சமயம் பலவிதத்தில் தாக்கப்பட்டது. கொடுமைப்படுத்துதல், கழுவேற்றுதல், கொலை செய்தல், கலகம் விளைவித்தல்,...

1944இல் சேலம் திராவிடர் கழகப் பெயர் மாற்ற மாநாடு சந்தித்த எதிர்ப்புகள்

1944இல் சேலம் திராவிடர் கழகப் பெயர் மாற்ற மாநாடு சந்தித்த எதிர்ப்புகள்

1944ஆம் ஆண்டு ஆகஸ்டு 27ஆம் தேதி சேலத்தில் கூடிய தென்னிந்திய நல உரிமைச் சங்க மாநாட்டில் தான் அமைப்பின் பெயர் திராவிடர் கழகமாக மாற்றப்பட்டது. பெரியார் எழுதி அண்hணவால் படிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க அத்தீர்மானம், ‘அண்ணாத் துரை தீர்மானம்’ என்று வரலாற்றில் அமைக்கப்படுகிறது. பெயர்மாற்றம் மட்டுமல்லாது இயக்கம் பண்பு மாற்றமும் பெற்றது. அதுவரை தேர்தலில் போட்டியிட்டு வந்த தென்னிந்திய நல உரிமைச் சங்கம் அதற்குப் பிறகு தேர்தலில் போட்டியிடாத சமுதாயப் புரட்சி இயக்கமாக மாறியது. 75 ஆண்டுகாலம் நிறைவு பெற்றுள்ளது. பெரியாரின் திராவிடர் கழகம் 1944ஆம் ஆண்டில் பெயர் மாற்றம் கொண்டு வரப்பட்ட மாநாட்டில் என்ன நடந்தது என்ற வரலாற்றுத்தகவலை ‘விடுதலை’ நாளேடு 2.9.1944இல் பதிவு செய்துள்ளது.   16ஆவது தென்னிந்திய நல உரிமைச் சங்க மாநாடு சேலத்தில் நடத்த 1940ஆம் வருஷத்திலேயே திருவாருரில் அழைக்கப்பட்டது. அதன்பிறகு 43ஆம் வருஷம் சேலத்தில் நிர்வாக சபை கூட்டம் போட்ட காலத்தில் சேலம்...

காஷ்மீரின் ‘370’ ஆவது பிரிவு உருவான வரலாறு

காஷ்மீரின் ‘370’ ஆவது பிரிவு உருவான வரலாறு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு தனி அரசியல் சட்டத்தை உருவாக்கிக் கொள்வதற்கு வழங்கப்பட்டுள்ள 370 ஆவது பிரிவை மோடி ஆட்சி நீக்கி விட்டது. பார்ப்பன பண்டிட்டுகளுக்காக தனிமாநிலம் உருவாக்கி, காஷ்மீரை  இரண்டாகப் பிரித்து விட்டது. இந்தப் பின்னணியில் ‘370’ உருவான வரலாற்றை விளக்குகிறது இக்கட்டுரை. இந்தியாவில்தான் காஷ்மீர் இருக்கிறது. ஆனால், அது எப்படி இந்தியாவுக்குள் வந்தது என்பதை இன்றைய பெரும்பான்மையானவர்கள் அறியமாட்டார்கள். இந்தியா சுதந்திரம் பெற்றபோது 526 சமஸ்தானங்கள் இருந்தன. இவற்றில் பெரும் பாலானவை இந்தியாவுடன் இணைந்து விட்டன.  இணைய மறுத்த அய்தராபாத் சமஸ்தானத்தை இராணுவ பலத்தால் இணைத்தார் அன்றைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல். காஷ்மீர் சமஸ்தானத்தை இந்து மன்னரான ஹரிசிங் ஆட்சி செய்து வந்தார். அங்கே உள்ள மக்களில் பெரும்பான்மையானவர்கள் இஸ்லா மியர்கள். இதனால் காஷ்மீர், இந்தியாவுடன் இணைவதா, பாகிஸ்தானுடன் இணைவதா என்ற குழப்ப நிலைநீடித்தது. பாகிஸ்தானுடன் இணைந்தால் தனி சமஸ்தானத் தகுதியுடன் நீடிக்கலாம் என்றும், இந்தியாவுடன் இணைந்தால் ஏற்கெனவே...

பெரியார் தமிழுக்கு எதிரானவரா? பாவலரேறு பெருஞ்சித்திரனார்

பெரியார் தமிழ்மொழி எதிர்ப்பாளர் என்றும் தமிழைக் காட்டுமிராண்டி மொழியாகக் கூறியவர் என்றும் சமஸ்கிருதத்தை உயர்த்திப் பிடிக்கும் பார்ப்பனர்களும், சில தமிழ்த் தேசியத் தலைவர்களும் ஒரே குரலில் பேசி வருகிறார்கள். மிகச் சிறந்த தமிழறிஞர் பாவலேறு பெருஞ்சித்திரனார் இந்த அவதூறுகளை மறுத்து ஆற்றிய உரை இது. தந்தைப் பெரியார் ஒரு முழுப் பகுத்தறிவாளர். குமுகாயச் சீர்சிருத்தக்காரர். பழமை உணர்வு களையும் கொள்கைகளையும் அறிவியல் கண்ணோட்டத்தோடு ஆராய்ந்து, அவற்றைத் தவறு சரியென்று தேர்ந்து, நன்மை தீமைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் மக்கள் அறிவியலாளர். புதுமை விரும்பி. எனவே, தமிழ் மொழியையும் அவர் அறிவியல் கண்ணோட்டத்துடன் தான் அணுகினார். அது ஒரு பழைமையான மொழி என்பதற்காகவோ, சிறந்த இலக்கண இலக்கியச் செழுமை வாய்ந்தது என்பதற்காகவோ, அவர் அதைப் பாராட்டவில்லை. அதில் உள்ள பாட்டு இலக்கியங்களையும், கதை இலக்கியங்களையும், வேறு சில கூறு களையும் மக்கள் மனநலன் அறிவுநலன் இவற்றுக்குப் பயன் தரும் வகையில் ஆராய்ந்தார். அவற்றிலுள்ள...

மருத்துவமனை சிகிச்சையிலிருந்து கூட்டம் பேசச் சென்ற பெரியார் புலவர் கோ.இமயவரம்பன்

ஒப்புக் கொண்ட கூட்டத்துக்குச் சென்றாக வேண்டும் என்ற கடமை உணர்வும் சமுதாயக் கவலையும் கொண்ட தலைவராகப் பெரியார் வாழ்ந்தார்.   பெரியார் அவர்கள் சென்னையில் ஒரு தடவை கடுமையான வயிற்றுப் போக்கினால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டார்கள். அந்த காலத்தில்  பெரியார் அவர்களுக்கு வழக்கமாக சிகிச்சை அளித்து வந்தவரான பிரபல நிபுணர் டாக்டர் குருசாமி முதலியார் அவர்கள் அழைக்கப்பட்டார். டாக்டர் குருசாமி முதலியார் அவர்கள் பெரியார்பால் பெரும் மதிப்பும் மரியாதையும் கொண்டவர். மேலும் பார்ப்பனர் அல்லாத மக்கள் நலனில் மிக்க அக்கறை கொண்டவரும் ஆவார். பார்ப்பனர் அல்லாத மக்களுக்கு வழிகாட்டவல்ல ஒரே தலைவர் பெரியார் அவர்களே ஆவார் என நம்பி தமது இறுதி மூச்சு அடங்கும் வரை வாழ்ந்த மாமனிதர் அவர் ஆவார். பெரியார் அவர்களும் சென்னைக்கு வந்தால் டாக்டர் அவர்களைச் சந்தித்து தமது உடல்நிலைக்கு சிகிச்சையும் மருந்தும் பெறுவ தோடு அவர்களோடு அளவளாவுவதையே தமது வாடிக்கையாகக் கொண்டவர் ஆவார். இந்த முறை டாக்டர்...

இராஜராஜசோழனின் கதை என்ன? (3) களப்பிரர் காலம் இருண்ட காலமா?

இராஜராஜசோழனின் கதை என்ன? (3) களப்பிரர் காலம் இருண்ட காலமா?

இயக்குநர் இரஞ்சித், இராஜராஜசோழன் குறித்துப் பேசியதற்காகப் பார்ப்பன இராஜாக்களும், ‘அவாளின் எடுபிடி’களான, ‘சூத்திர’ இந்து முன்னணிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து, இரஞ்சித்தை கைது செய்ய வேண்டும் என்று ஓலமிடுகின்றன.  நீதிமன்றங் களும் இராஜராஜசோழனைப் பற்றிப் பேசுவதா என்று கவலைப்படுகின்றன. இராஜராஜ சோழனின் வரலாறுதான் என்ன? சென்ற இதழ் தொடர்ச்சி இராஜராஜனின் ‘பொற்கால ஆட்சி’யை அனுபவித்தவர்கள் யார்? தீட்சிதப் பார்ப்பனர்கள் தனக்கு பட்டம் சூட்ட மறுத்ததால் பீகார் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பார்ப்பனர்களை சோழநாட்டிற்கு அழைத்து வந்து இராஜராஜன் அவர்களைக் குடியேற்றினான். தமிழக மன்னர்களின் வரலாற்றில் முதன்முதலாக இராஜகுரு என்றொரு பதவியை உருவாக்கி, ஈசான சிவப் பண்டிதர் எனும் காஷ்மீரப் பார்ப்பனரை அப்பதவியில் நியமித்தான்.  பின்னர் பார்ப்பனர்களே இப்பதவிக்கு வருவது மரபாக்கப்பட்டது.  இராணுவப் படையெடுப்பு போன்றவற்றை தான் கவனித்துக் கொண்டு, குடிமக்கள் நிர்வாகத்தை இராஜகுருவின் ஆலோசனைக்கு விட்டிருந்தான். பிரம்மதேயம் என்ற பெயரில் பார்ப்பனர்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டன.  அகரங்கள், அக்கிரகாரங்கள், சதுர்வேதிமங்கலங்கள் எனப்படும் தனிக்...

வைக்கம் போர்: கொச்சைப்படுத்தும் பார்ப்பனர்கள்

வைக்கம் போர்: கொச்சைப்படுத்தும் பார்ப்பனர்கள்

பெரியார் வைக்கம் போராட்டத்தில் இறுதி கட்டத்தில்தான் பங்கேற்றார் என்றும், வைக்கம் போராட்டத்தின் முழு பெருமையும் பெரியார் மீது ஏற்றிக் காட்டப்படுகிறது என்றும் பெரியாருக்கு எதிராகப் பேசுவதற்காகவே கிளம்பியுள்ள ஒரு கூட்டம் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகிறது. ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர் குருமூர்த்தி நடத்தி வரும் ‘துக்ளக்’ ஏடும் (26.10.2016) அதையே இப்போதும் எழுதி, அதில் ஒரு அற்ப மகிழ்ச்சி அடைகிறது. மாதவன் என்ற அப்போதைய ‘தீண்டப்படாத’ சமூகமான ஈழவ சமூகத்தைச் சார்ந்த வழக்கறிஞர், வைக்கம் கோயில் வீதிகளைக் கடந்து நீதிமன்றம் சென்றபோது தடுக்கப்பட்டார். கேரள காங்கிரஸ் தலைவர்கள் கோயிலைச் சுற்றிய வீதிகளில் நடமாடும் உரிமைகளை மறுக்கும் தீண்டாமையை எதிர்த்துப் போராட்டம் நடத்துவது என கேரள காங்கிரஸ் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாள் 16.2.1924. கேசவமேனன், ஜார்ஜ் ஜோசப் போன்ற 19 தலைவர்கள் போராட்டத்தைத் தொடங்கிய நாள் 30.3.1924. 6 மாதம் தண்டனை தரப்பட்டு  அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தும்...

இராஜராஜசோழனின் கதை என்ன? (1) அடிமைகளின் இரத்தத்தில் எழுப்பப்பட்டதே தஞ்சை கோயில்

இராஜராஜசோழனின் கதை என்ன? (1) அடிமைகளின் இரத்தத்தில் எழுப்பப்பட்டதே தஞ்சை கோயில்

இயக்குநர் இரஞ்சித், இராஜராஜசோழன் குறித்துப் பேசியதற்காகப் பார்ப்பன இராஜாக்களும், ‘அவாளின் எடுபிடி’களான, ‘சூத்திர’ இந்து முன்னணிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து, இரஞ்சித்தை கைது செய்ய வேண்டும் என்று ஓலமிடுகின்றன.  நீதிமன்றங் களும் இராஜராஜசோழனைப் பற்றிப் பேசுவதா என்று கவலைப்படுகின்றன. இராஜராஜ சோழனின் வரலாறுதான் என்ன? பொற்காலம் என்று கொண்டாடும் தமிழினவாதிகள் தமது தமிழ்ப் பெருமிதத்தினுள்ளே வெள்ளாளப் பார்ப்பனக் கூட்டு ஆதிக்கத்தையும் தீண்டாச்சேரியையும் கூச்சமின்றி மறைத்துக் கொள்கிறார்கள். உலகின் மிக உயரமான கோபுரங்களைக் கொண்ட, பழமையான பெருங்கோவில்களில் தஞ்சைப் பெரியகோவிலும் ஒன்று. இன்றிருப்பதைப் போன்ற துரிதக் கட்டுமானப் பொறி நுட்பங்கள் ஏதும் வளர்ந்திராத, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கட்டிடப் பொறியியலில் மாபெரும் சாதனையாகக்  கட்டப்பட்டதுதான் இந்தக் கோவில்.   மழை பெய்தால் நீர்க்கசிவு ஏற்படாதிருக்கப் பதிக்கப்பட் டிருக்கும் நுண்குழாய்கள், ஒரே கல்லினால் ஆன மிகப் பெரும் நந்தி எனப் பல்வேறு பிரம்மாண்டமான பொறியியல் சாதனைகளை எல்லாம் 1000 ஆண்டுகளுக்கு முன்னரே சாதித்துக் காட்டிய  மாமன்னன்...

காந்தியை கொலை செய்ய 9 முறை பார்ப்பனர்கள் முயற்சி (3) கோட்சே ஒரு ‘இந்து’ தீவிரவாதியே!

காந்தியை கொலை செய்ய 9 முறை பார்ப்பனர்கள் முயற்சி (3) கோட்சே ஒரு ‘இந்து’ தீவிரவாதியே!

“இதுவரை கொலை முயற்சியிலிருந்து எனது உயிர் 7 முறை காப்பாற்றப்பட்டிருக்கிறது. நான் அவ்வளவு  சீக்கிரம் இறந்து விட மாட்டேன். நூற்று இருபத்தைந்து ஆண்டுகள் வரை நான் உயிர் வாழ்வேன்” என்றார் காந்தி. கோட்சே என்ற தனிமனிதனின் வெறிச் செயல் தான் காந்தி கொலை என்றும்,  அதை பா.ஜ.க.வோ சங்பரிவாரங்களோ ஏற்கவில்லை என்றும் பா.ஜ.க.வினர் வாதாடுகிறார்கள். கோட்சே பயங்கரவாதிதான்; ஆனால் இந்து பயங்கரவாதி என்று கூறுவது இந்து மதத்துக்கு விரோதம் என்றும் கூறுகிறார்கள். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்காசன் வெளியிட்ட கருத்துக்கு எதிராக எழுந்த எதிர்வினைகள் இவை. கோட்சே தனி மனிதரா? ஆர்.எஸ்.எஸ். ‘இந்து’ தர்மம் – இந்துத்துவம் என்ற வலைப் பின்னலிலிருந்து கோட்சேயை தனித்துப் பிரித்தெடுக்க முடியுமா? காந்தி கொலையில் பல வரலாறுகள் திரிக்கப் பட்டு உண்மைகளை மறைத்து, சங்பரிவாரங் களும் இந்துத்துவா சக்திகளும் திட்டமிட்டு பரப்புரை செய்து வருகின்றன. அது குறித்த வரலாற்று உண்மைகளை ஓரளவு இந்தக் கட்டுரையில்...

குற்றவாளிகளைக் காப்பாற்ற ஆர்.எஸ்.எஸ். பல்வேறு முயற்சிகளை எடுத்தது (2) கோட்சே ஒரு ‘இந்து’ தீவிரவாதியே!

குற்றவாளிகளைக் காப்பாற்ற ஆர்.எஸ்.எஸ். பல்வேறு முயற்சிகளை எடுத்தது (2) கோட்சே ஒரு ‘இந்து’ தீவிரவாதியே!

1949 நவம்பர் 15ஆம் தேதி தூக்கிலிட நாள் குறிக்கப்பட்டது. அம்பாலா பொதுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இருவரையும் தூக்கிலிடப்படும் நாளன்று அதிகாலையில் இதே வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கோபால் கோட்சே, மதன்லால், கார்கரே மூவரும் நேரில் சந்திக்க வந்தனர். அனைவரும் ஒன்றாக சேர்ந்து ‘பகவத் கீதை’யைப் படித்தார்கள். கோட்சே என்ற தனிமனிதனின் வெறிச் செயல் தான் காந்தி கொலை என்றும்,  அதை பா.ஜ.க.வோ சங்பரிவாரங்களோ ஏற்கவில்லை என்றும் பா.ஜ.க.வினர் வாதாடுகிறார்கள். கோட்சே பயங்கரவாதிதான்; ஆனால் இந்து பயங்கரவாதி என்று கூறுவது இந்து மதத்துக்கு விரோதம் என்றும் கூறுகிறார்கள். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்காசன் வெளியிட்ட கருத்துக்கு எதிராக எழுந்த எதிர்வினைகள் இவை. கோட்சே தனி மனிதரா? ஆர்.எஸ்.எஸ். ‘இந்து’ தர்மம் – இந்துத்துவம் என்ற வலைப் பின்னலி லிருந்து கோட்சேயை தனித்துப் பிரித்தெடுக்க முடியுமா? காந்தி கொலையில் பல வரலாறுகள் திரிக்கப் பட்டு உண்மைகளை மறைத்து, சங்பரிவாரங் களும் இந்துத்துவா...

அடுக்கடுக்கான வரலாற்றுச் சான்றுகள் கோட்சே ‘இந்து’ பயங்கரவாதிதான்!

அடுக்கடுக்கான வரலாற்றுச் சான்றுகள் கோட்சே ‘இந்து’ பயங்கரவாதிதான்!

 “காந்தியாரை  இன்று மாலை 5.20 மணிக்கு ஒரு இந்து சுட்டுக் கொன்றான்” என்று, சுட்டவன் இந்து என்பதை வலியுறுத்தி வானொலியில் செய்தி அறிவிக்கப்பட்டது. கோட்சே என்ற தனிமனிதனின் வெறிச் செயல் தான் காந்தி கொலை என்றும்,  அதை பா.ஜ.க.வோ சங்பரிவாரங்களோ ஏற்கவில்லை என்றும் பா.ஜ.க.வினர் வாதாடுகிறார்கள். கோட்சே பயங்கரவாதிதான்; ஆனால் இந்து பயங்கரவாதி என்று கூறுவது இந்து மதத்துக்கு விரோதம் என்றும் கூறுகிறார்கள். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்காசன் வெளியிட்ட கருத்துக்கு எதிராக எழுந்த எதிர்வினைகள் இவை. கோட்சே தனி மனிதரா? ஆர்.எஸ்.எஸ். ‘இந்து’ தர்மம் – இந்துத்துவம் என்ற வலைப் பின்னலி லிருந்து கோட்சேயை தனித்துப் பிரித்தெடுக்க முடியுமா? காந்தி கொலையில் பல வரலாறுகள் திரிக்கப்பட்டு உண்மைகளை மறைத்து, சங்பரிவாரங்களும் இந்துத்துவா சக்திகளும் திட்டமிட்டு பரப்புரை செய்து வருகின்றன. அது குறித்த வரலாற்று உண்மைகளை ஓரளவு இந்தக் கட்டுரையில் விளக்குகிறது. 1948 ஜனவரி 30, பார்ப்பன கொலைவெறிக்கு காந்தியார் பலியான...

தமிழ் இலக்கியம் குறித்த பெரியார் பார்வை தவறா? (2) பாவலர் தமிழேந்தி

தமிழ் இலக்கியம் குறித்த பெரியார் பார்வை தவறா? (2) பாவலர் தமிழேந்தி

“நா. கதிரைவேற்பிள்ளை என்கிற ஒரு தமிழ் வாயாடிப் புலவர் என்னிடம் வந்தபோது, ஒரு நிகழ்ச்சியில் புலவர்களுக்குப் பகுத்தறிவுக் கிடையாது என்பது என் கருத்து. அதை உங்களிடம் கண்டேன் என்று சொன்னதற்கு, உன்னிடம் வந்ததே தவறு என்று சொல்லி, என்னிடம் வாங்கிக் குடித்தப் பாலை விரலைவிட்டு வாந்தி எடுத்துவிட்டார்.”                                – பெரியார் பாவலர் தமிழேந்தி தொகுத்த ‘திராவிடம், பெரியாரியம் இன்றும் தேவையே’ நூலில் ‘பெரியாரும் தமிழ் இலக்கியமும்’ என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ அவர் நினைவாகப் பதிவு செய்கிறது. (சென்ற இதழ் தொடர்ச்சி) மதுரையை எரிக்கக் கண்ணகிக்குப் பயன்பட்ட தீக்கடவுள்கூடப் பார்ப்பனக் கோலத்தில் (பால்புரை வெள் எயிற்றுப் பார்ப்பான் கோலத்து) தோன்றித்தான் புகார் நகரத்தை எரித்ததாக இளங்கோவடிகள் இசைக்கின்றார். இவ்வாறு, விரிவாக இலக்கியங்களில் இருந்து மேற்கோள்கள் காட்டி எழுதுவதற்கான காரணம் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று காய்ந்த பெரியாரின் நோக்கத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்குத்தான். தமிழை...

தமிழ் இலக்கியம் குறித்த பெரியார் பார்வை தவறா? பாவலர் தமிழேந்தி

தமிழ் இலக்கியம் குறித்த பெரியார் பார்வை தவறா? பாவலர் தமிழேந்தி

பாவலர் தமிழேந்தி தொகுத்த ‘திராவிடம், பெரியாரியம் இன்றும் தேவையே’ நூலில் பெரியாரும் தமிழும்’ என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ அவர் நினைவாகப் பதிவு செய்கிறது. பெரியாரின் முன்னோர்கள் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள், கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். ஆனால் பின்னாளில் அவர்கள் தமிழ்நாட்டிற்குக் குடிபெயர்ந்து பல ஆண்டுகளாய் இங்கு வாழ்ந்து தம் தாய்மொழியாகத் தமிழ் மொழியை ஏற்றுக் கொண்டவர்கள். இது பற்றிப் பெரியாரே பின்வருமாறு கூறுவார்: “என்னுடைய தாய்மொழி கன்னடமாக இருந்த போதிலும் அதை நான் தினசரி பேச்சு வழக்கில் கொண்டிருக்கவில்லை. எல்லாவற்றிற்கும் தமிழ் மொழியைத்தான் பயன்படுத்தி வருகின்றேன். எனக்குக் கன்னடத்தைவிடத் தெலுங்கில் கொஞ்சம் பயிற்சி உண்டு. எப்படி என்றால், வியாபார முறையிலும் நண்பர்களின் பழக்கத்தாலுமேயாகும். இருந்தாலும் தமிழ்மொழியால்தான் என்னுடைய கருத்துகள் அனைத்தையும் நான் நினைக்கிற மாதிரி வெளிப்படுத்த முடியும்.” (விடுதலை 21.5.1959) “மேலும், எனக்கு மொழிப் பற்று, இனப்பற்று, கடவுள் பற்று, நாட்டுப் பற்று, மதப் பற்று...

புரட்சிக் கவிஞரைப் பெரியாருக்கு எதிராக நிறுத்தும் புரட்டு வாதங்கள்

புரட்சிக் கவிஞரைப் பெரியாருக்கு எதிராக நிறுத்தும் புரட்டு வாதங்கள்

பதியப்பட்ட வரலாற்று நிகழ்வுகளைத் தங்கள் வாய்ப்புக்கேற்ப மாற்றிப் பேசும் கெடுவாய்ப்பும் தமிழ்நாட்டில் நிகழ்ந்துகொண்டுள்ளது. அதற்கு அண்மைக்கால எடுத்துக்காட்டு புரட்சிக்கவிஞர் பாரதிதாசனை தந்தை பெரியாருக்கு எதிராக நிறுத்தும் தவறானப் போக்காகும். பாவேந்தர் பெரியார் மேல் கொண்டிருந்த தாளாப் பற்றைத் தமிழகம் அறியாததல்ல. “மக்கள் நெஞ்சின் மலிவுப் பதிப்பு வஞ்சர்க்கோ கொடிய நெருப்பு மிக்க பண்பின் குடியிருப்பு விடுதலைப் பெரும் படையின் தொகுப்பு தமிழர் தவம்கொடுத்த நன்கொடை தன்மானம் பாயும் தலை மேடை நமக்குத் தாண்டி அந்த வாட்படை நமைஅவரின் போருக்கு ஒப்படை” பெரியார் குறித்துப் பாவேந்தர் தீட்டியுள்ள இந்தப் பாட்டோவியம் எக்காலத்திற்கும் பொருந்துவதாகும். 1908ஆம் ஆண்டு நடந்த புலவர் தேர்வில் மாநி லத்திலேயே முதல் மாணாக்கராய்த் தேர்ச்சி பெற்றவர் அன்றைய கனக சுப்புரத்தினம். மயிலம் ஸ்ரீஷண்முகன் வண்ணப்பாட்டும், மயிலம் சுப்பிரமணியர் துதியமு தும் பாடிக்கொண்டிருந்த கனக சுப்புரத்தினம், அதே ஆண் டில் புதுவை வேணு நாய்க்கர் வீட்டுத் திருமண நிகழ்வு ஒன்றில் முதன்முதலாய்ப்...

மதத்திற்காக மனிதனா? மனிதனுக்காக மதமா? பெரியார்

மதத்திற்காக மனிதனா? மனிதனுக்காக மதமா? பெரியார்

இலங்கையில் கிறித்தவர்களைக் குறி வைத்து நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 200க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகிவிட்டன. இந்தியாவில் ‘இராம இராஜ்யம்’ அமைக்கத் துடிக்கும் சக்திகள், சிந்தனையாளர்களைக் கொலை செய்து வருகின்றன. இந்தப் பின்னணியில் மதம் குறித்து 78 ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் நிகழ்த்திய உரை இது. அக்கிரசானர்  அவர்களே! சகோதரிகளே! சகோதரர்களே! பொதுவாக சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பவைகள் எல்லாம் நல்ல அர்த்தத்தில் எடுத்துக் கொண்டாலும் அவை மனித சமூகத்தின் வாழ்க்கை நலத்திற்கே ஏற்படுத்தப்பட்டவையாகும். மனித வாழ்க்கைக் கேற்ற திட்டங்களே தான் சமயம் அல்லது மார்க்கம் என்று சொல்லப் படுவதுமாகும். ஒரு வாசக சாலையிலேயோ, உல்லாசக் கூட்ட சாலையிலேயோ, ஒரு சங்கத்திலேயோ சேர்ந்திருக்க வேண்டிய அங்கத்தினர்கள் அச்சங்கத்தின் நிர்வாகத்தின் அவசியத்திற்காக என்று தங்களுக்குள் விதிகளை நிர்ணயித்துக் கொள்வதுபோலவே ஒரு பிராந்தியத்தில் வாழும் ஜனங்கள் தாங்கள் சேர்ந்திருப்பதற்காகவும், தங்கள் வாழ்க்கை தடையின்றி முறையாய் மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் நடைபெறுவதற்காகவும் ஏற்படுத்திக் கொண்ட அல்லது யாராவது...

‘ஓட்டுக்கு நோட்டு’ பெரியார் சொன்ன கதை செ.கார்கி

இந்திய சட்டசபை தேர்தல் ஆரம்பமாகி விட்டது. இது வேலையில்லா வாலிபர்களின் கஷ்டத்தை ஒருவாறு குறைக்க அனுகூலமாயிருக்கிறது என்று சொல்லலாம். அது போலவே கொள்கையோ, விஷயமோ இல்லாத பத்திரிக்கைகாரர்களுக்கும் ஒரு அளவு கஷ்டம் நீங்கிற்று என்றும் சொல்லலாம்.                                          – பெரியார் மக்களால் வாக்களிக்கப்பட்டு ஜனநாயக முறையில் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் முறை என்பது  ஜனநாயகத்தின் மிக உயர்ந்த வடிவமாகப் பார்க்கப்படுகின்றது. ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் சாதி, மதம், பணம், மது போன்றவையே பிரதானமாகத் தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்திகளாக விளங்கி வருகின்றன. அதனால் சாதி, மதம், முதலாளித் துவம் போன்றவற்றை ஒழிக்க நினைப்பவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தத் தேர்தல் அரசியலை வெறுக்கக் கூடியவர் களாகவும் அதன் மீது பெரும் அதிருப்தி கொண்டவர்களாகவுமே இருக் கின்றார்கள். பெரியாருக்கும் இந்தத் தேர்தல் அரசியலின் மீது பெரிதாக ஈடுபாடு  எல்லாம் இருந்தது கிடையாது. அதன் மீதான தன்னுடைய கடும் விமர்சனங்களை தன் வாழ்வின் இறுதிவரை...

வரலாற்று வெளிச்சத்தில் கீழ்வெண்மணி (1) பசு. கவுதமன்

வரலாற்று வெளிச்சத்தில் கீழ்வெண்மணி (1) பசு. கவுதமன்

1968 டிசம்பர் 25ஆம் நாள் ஒன்றிணைந்த தஞ்சை மாவட்டத்தில் நாகப்பட்டினம் அருகே உள்ள கீழ்வெண்மணி கிராமத்தில்  44 தலித் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். கொடூரமான குருதி படிந்த  வரலாற்றின் மறைக்கப்பட்ட பக்கங்களை வெளிக் கொண்டு வருகிறது, இத் தொடர். ஒரு முன்னுரையாக: 1989-90களுக்குப் பின்னால் ஏற்பட்ட ‘தலித் அறிவுஜீவி’களின் வளர்ச்சிப் பார்வை அல்லது ஆய்வு நோக்கு – எது எப்படியோ தந்தை பெரியாரையும், திராவிடர் இயக்கத்தையும் தாழ்த்தப்பட்ட, ஆதி திராவிட, பட்டியலின மக்களுக்கு எதிரானவர்களாகக் கட்டமைப்பதில் மிகக்கவனம் எடுத்துக் கொண்டு செயல்பட்டன என்று சொன்னால் அது மிகையில்லை. என்னுடைய எழுத்துக்கள் எதுவும் ஆய்வுக்கும், விமர்சனத்திற்கும் அப்பாற்பட்டவை அல்ல. பெரியாரும், திராவிடர் இயக்கமும் அதற்கு உட்பட்டது தான். ஆனால், விமர்சனம் என்ற பெயரில் அவதூறு களையும், காழ்ப்புணர்ச்சிகளையும், அழிச்சாட்டியமான விதண்டாவாதங்களையும் கட்டவிழ்த்து விடுவது எந்த வகையில் அறிவு நாணயம் என்று விளங்கவில்லை. காரல் மார்க்ஸ் தன்னை, தன்னுடைய சித்தாந்தத்தை ‘சர்வரோக நிவாரணி’ என்று...

திருமண மந்திரங்கள் :  மு.க. ஸ்டாலின் மீது பாய்வோர் பதில் கூறுவார்களா?

திருமண மந்திரங்கள் : மு.க. ஸ்டாலின் மீது பாய்வோர் பதில் கூறுவார்களா?

பிராமணப் புரோகிதர் தலைமையில் நடக்கும் சமஸ்கிருத வைதிக திருமண முறையை ஸ்டாலின் விமர்சித்து விட்டார் என பொங்குபவர்கள், தங்கள் வீட்டு திருமணங்களில் இந்த மந்திரங் களின் உண்மை பொருளை அறிந்து கொள்ள, சமஸ்கிருதத்துக்கு பதிலாக தமிழிலேயே சொல்ல வலியுறுத்துவார்களா? இதோ அவாளே வேதம் ஓதி, அவாளே விளக்கமும் தருகிறாளே! தமிழில் இந்த விளக்கங்களை அளித்தவர் அக்னிஹோத்ரம் இராமானுஜ தாத்தாச்சாரியார் என்ற வேத சமஸ்கிருத அறிஞர்.. “சோமஹ  ப்ரதமோவி  வித   கந்தர்வ  விவிதே   உத்ரஹ த்ருதியோ  அக்னிஷ்டே  பதிஷ்   துரியஷ்தே  மனுஷ்ய   ஜாஹ” இந்த மந்திரம் மணமகளை நோக்கி சொல்லப்படுகிறது. நீ முதலில் சோமனுக்கு உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய். இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம். அதாவது மணமகள் ஏற்கனவே மூன்று பேருக்கு மனைவியாக இருந்தவளாம். இப்பொழுது நான்காவதாக ஒருவனுக்கு மனைவியாகப் போகிறார்களாம். ஸப்தர்ருஷ்ய: ப்ரதமாம் க்ருதிகாநா...

கறுஞ்சட்டை அணிய வேண்டும் ஏன்? பெரியார்

மதுரை கறுஞ்சட்டைப் படை மாநாட்டுப் பந்தல் எரிக்கப்பட்டதைத் தொடர்ந்து கறுஞ்சட்டைப் படைக்கு தமிழக அரசு தடை போட்டது. அது குறித்து பெரியார் விடுத்த அறிக்கை: திராவிடர் கழகக் கொள்கைகளை விளக்கு முன்னால், கறுஞ்சட்டை ஸ்தாபனத் தின் மீது விதிக்கப்பட்டு இருக்கிறது என்னும் தடையுத்தரவு குறித்து சில கூற விரும்புகிறேன். நமது மாகாண சர்க்கார், கறுஞ்சட்டை ஸ்தாபனம் சட்டவிரோதமான ஸ்தாபனம் என்று பிரகடனப்படுத்தி இருக்கிறார்கள். அம்மாதிரி ஸ்தாபனமொன்றும் திராவிடர் கழகத்தின் சார்பாகவோ தனிப்பட்ட தன்மையிலோ இல்லை. ஆனால், ஒரு காலத்தில் பொதுக் கூட்டங்களின் போதும், மாநாடுகளின் போதும் தொண்டர்களாயிருந்து பணியாற்ற ஒரு கறுஞ்சட்டைக் கூட்டத்தை ஏற்படுத்துவது நலமென்று கருதி, ஒரு ஏற்பாடு செய்ய வேண்டு மென்று நினைத்து அறிக்கை விட்டோம். அதையொட்டி அக்கூட்டத்தில் இருந்து தொண்டாற்ற விரும்பும் தோழர்களைச் சில கேள்விகள் கேட்டோம். உங்களால் கழகத்துக்கு முழு நேரத்தை தொண்டாற்ற முடியுமா? அல்லது தேவைப்பட்ட நேரத்தில்தான் தொண் டாற்ற முடியுமா? என்று கேட்டோம்....

வரலாற்றுப் பக்கங்களிலிருந்து… மதுரை கருஞ்சட்டைப் படை மாநாட்டை எரித்த ‘பார்ப்பன தேசியங்கள்’ கருஞ்சட்டையை அடையாளமாக்க வேண்டும் என்ற கருத்து எங்கே முளைவிட்டது?

1945ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி திருச்சி புத்தூர் மைதானத்தில் 17ஆவது தென்னிந்திய நல உரிமைச் சங்க (நீதிக் கட்சி) மாநாடு பெரியார் தலைமையில் நடைபெற்றது. திராவிடர் கழகம் தொடங்கப்பட்டிருந்தாலும் இது நீதிக்கட்சியின் 17ஆவது மாநாடாக நடைபெற்றது. நீதிக் கட்சியின் ‘தராசுக் கொடியே’ மாநாட்டிலும் ஏற்றப்பட்டது. ‘தராசுக் கொடி’ சமநீதி தத்துவத்தைக் கொண் டிருந்தாலும் புரட்சிக்கான அடையாளமாக இல்லை என்ற கருத்து முன் வைக்கப்பட்டு, அதற்குப் பிறகு கொடி உருவாக்க ஒரு குழு அமைக்கப்பட்டு, திராவிடர் கழகக் கொடி உருவாக்கப்பட்டது. அடுத்த நாள் செப். 20ஆம் தேதி சுயமரியாதை இயக்கத்தின் 4ஆவது மாநில மாநாடு நடைபெற்றது. அண்ணா மாநாட்டு வரவேற்புக் குழுவின் தலைவர். அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி சிறப்புரையாற்றினார். எம்.ஆர். ராதாவின் நாடகம் நடந்தது. மாநாட்டையொட்டி திருச்சியில் நடந்த ஊர்வலத்தை திட்டமிட்ட பாதையில் செல்ல காவல்துறை அனுமதி மறுத்து, வேறு வழியில் போகுமாறு கூறியது. தோழர்கள் கொதித்தெழுந்தனர். பெரியார், தோழர்களிடம், ‘அரசு...

பெரியார் கவலைப்பட்டது ஏன்?

எனக்கு 40ஆவது வயதில் நாக்கில் புற்று வந்தது. நண்பர் டாக்டர் திரு. முத்துசாமி அவர்கள் என்னிடம் உண்மையினைச் சொல்லாமல் ஏதோ மருந்தினை தடவி துடைத்தே வந்தார். அவரின் ஆலோசனைப்படி சென்னை சென்று டாக்டர் சுந்தரவதனத்திடம் சென்றேன். அவர் பார்த்துவிட்டு, ‘அடச் சனியனே, உங்களுக்கா இது வரவேண்டும்?’ என்றார். ‘என்ன அய்யா நோய்?’ என்றேன். நான் பயந்து கொள்ளுவேன் என்று கருதி, ‘ஒன்றுமில்லை’ என்று கூறி வேறு ஒரு டாக்டருக்குக் கடிதம் கொடுத்தார். அவர் பார்த்துவிட்டு, ‘எத்தனை நாளாய் இப்படி இருக்கின்றது?’ என்று கேட்டார். ‘அது ஒரு மாதத்துக்கு மேலாகவே இருக்கிறது’ என்றேன். ‘என்ன அய்யா இப்படி விஷயம் தெரிந்தவர்கள் எல்லாம் இப்படிப் பேசாமலே இருக்கலாமா?’ என்று கோபித்துக் கொண்டார். ‘மன்னிக்கணும். என்ன நோய் என்கிறீர்கள்?’ என்றேன். அவர் அதற்குள்ளாக தம்மை சரிப்படுத்திக் கொண்டு, ‘ஒன்றும் இல்லை, புற்றுநோய், என்றாலும் சரியாகிவிடும்’ என்று கூறி சிகிச்சை செய்தார். பிறகு சரியாகி விட்டது. நான்...

திருமண மந்திரங்கள் :  மு.க. ஸ்டாலின் மீது பாய்வோர் பதில் கூறுவார்களா?

திருமண மந்திரங்கள் : மு.க. ஸ்டாலின் மீது பாய்வோர் பதில் கூறுவார்களா?

பிராமணப் புரோகிதர் தலைமையில் நடக்கும் சமஸ்கிருத வைதிக திருமண முறையை ஸ்டாலின் விமர்சித்து விட்டார் என பொங்குபவர்கள், தங்கள் வீட்டு திருமணங்களில் இந்த மந்திரங் களின் உண்மை பொருளை அறிந்து கொள்ள, சமஸ்கிருதத்துக்கு பதிலாக தமிழிலேயே சொல்ல வலியுறுத்துவார்களா? இதோ அவாளே வேதம் ஓதி, அவாளே விளக்கமும் தருகிறாளே! தமிழில் இந்த விளக்கங்களை அளித்தவர் அக்னிஹோத்ரம் இராமானுஜ தாத்தாச்சாரியார் என்ற வேத சமஸ்கிருத அறிஞர்.. “சோமஹ  ப்ரதமோவி  வித   கந்தர்வ  விவிதே   உத்ரஹ த்ருதியோ  அக்னிஷ்டே  பதிஷ்   துரியஷ்தே  மனுஷ்ய   ஜாஹ” இந்த மந்திரம் மணமகளை நோக்கி சொல்லப்படுகிறது. நீ முதலில் சோமனுக்கு உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய். இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம். அதாவது மணமகள் ஏற்கனவே மூன்று பேருக்கு மனைவியாக இருந்தவளாம். இப்பொழுது நான்காவதாக ஒருவனுக்கு மனைவியாகப் போகிறார்களாம். ஸப்தர்ருஷ்ய: ப்ரதமாம் க்ருதிகாநா...

தமிழர்களுக்கான விழா பொங்கல் மட்டுமே பெரியார்

தமிழர்களுக்கான விழா பொங்கல் மட்டுமே பெரியார்

17.1.1968 அன்று கரூரில் பொங்கல் விழா சிறப்புக் கூட்டத்தில் பெரியார் ஆற்றிய உரையிலிருந்து ஒரு பகுதி. இந்த பொங்கல் விழா என்பது அறுப்புப் பண்டிகைன்னும் சொல்லுவார்கள். அதேபோல நாமும் அறுத்துப் பண்டங்களைக் குடும்பத்துடன் உபயோகப்படுத்துகிற நாள். மற்றும் நம்மாலான வசதிகளை விவசாயத்துக்காக நமக்கு உதவியாய் இருந்து தொண்டாற்றின ஆளுகளுக்கு – அவர்களுக்கு நாம ஏதாவது திருப்தி பண்ணுகிறதுக்கு – சாப்பாடு போடுகிறதோ, அவர்களுக்கு துணிமணி எடுத்துக் கொடுக்கிறதோ அல்லது ஏதாவது காசு கொடுத்து அவர்களைச் சந்தோஷப்படுத்துகிறதோ – இதெல்லாம், நாம் விவசாயத்தைத் தேர்ந்தெடுத்தோம். நேற்று (16.1.968இல்) இந்த நேரத்துக்கு, நான் சேலத்திலே பெரிய மிராஸ்தார் இரத்தினசாமி பிள்ளை என்கிறவர், அவர் தோட்டத்திலே இந்த பண்டிகை வைச்சார். என்னைத்தான் தலைமையாய் அவர் விரும்பினார், போயிருந்தேன். பொங்கல் தடபுடலாக ஒரு அய்ம்பது, அறுபது மாடுகளை வைச்சி நம்ம எதிரிலேயே நடத்தினாரு. இம்மாதிரி இருநூறு பேருக்குச் சீலை வேட்டி தந்தார். ஒரு புலவர் அம்மையார் காமாட்சி...

நேர்மைக்கு ஓர் இலக்கணம் பெரியாரின் நேர்மையே அவரது கொள்கைக்கு வலிமையான ஆயுதமாக இருந்திருக்கிறது.

நேர்மைக்கு ஓர் இலக்கணம் பெரியாரின் நேர்மையே அவரது கொள்கைக்கு வலிமையான ஆயுதமாக இருந்திருக்கிறது.

பெரியார் என்கிற மனிதர் சாதாரணமான மக்களுக்கு கடவுள் மறுப்பாளராகவும் பாசிசவாதிகளுக்கு எதிரியாகவும், ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை மக்களுக்கு போற்றத்தக்க தலைவராகவும் விளங்குகிறார் என்று சொன்னால் அவருடைய பொது வாழ்வில் அவர் பின்பற்றிய நேர்மை முக்கிய பங்காற்றுகிறது. அவருடைய வாழ்வு நீண்டது. அவர் நடத்திய போராட்டங்களின் எண்ணிக்கையும் நீண்டது. அதன் மூலம் மக்கள் பெற்ற நன்மைகளின் பட்டியலும் நீண்டது. அவரது வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தது அவருடைய மனித நேயமும் பொது வாழ்க்கையில் அவர் கடைபிடித்த நேர்மையுமே ஆகும். தந்தை பெரியார் தன்னுடைய வாழ்க்கையில் எப்போதும் யாரிடமும் நல்ல பெயர் எடுக்கவேண்டும் என்றோ அல்லது தன்னைக் குறித்து மற்றவர்கள் பெருமையாகப் பேசவேண்டும் என்றோ விரும்பியவரல்ல. ஒருமுறை வ.உ.சி.யும் பெரியாரும் ஒரே மேடையில் பேச நேர்ந்தபோது வ.உ.சி பெரியாரை தன் தலைவர் என்று பேசினார். இறுதியாக பேசிய பெரியார், வ.உ.சி பேசும்போது என்னை அவருடைய தலைவர் என்று குறிப்பிட்டார். மன்னிக்க வேண்டும் அவருக்கு தலைவராக இருக்கக் கூடிய...

பார்ப்பான் ஜாதிப் புத்தியை மாற்றிக் கொள்ள மாட்டான்

பார்ப்பான் ஜாதிப் புத்தியை மாற்றிக் கொள்ள மாட்டான்

பார்ப்பான் ஜாதிப் புத்தியை மாற்றிக் கொள்ள மாட்டான் என்று பார்ப்பன நீதிபதியின் முன்பாகவே முழக்கமிட்ட போராளி! 21 மாதங்கள் சிறை சென்ற ஜாதி ஒழிப்புப் போராளியின் நினைவலைகள் 25ஆவது அகவையில் அரசியல் சட்டத்தின் ஜாதியைப் பாதுகாக்கும் பிரிவுகளை எரித்து 21 மாதங்கள் சிறைத் தண்டனை பெற்ற பெரியார் தொண்டர் இடையாற்றுமங்கலம் முத்து செழியன். பெரும் பண்ணையார் குடும்பத்தில் பிறந்தவர். இப்போதும் சொந்த கிராமத்தில் கொள்கை உறுதியோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரது வயது 86. சிறையிலிருந்த காலத்திலேயே திருச்சி தேசியக் கல்லூரியில் பட்டப்படிப்புக்கான தேர்வுகளை காவல்துறை பாதுகாப்புடன் எழுதியவர். வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்தின் மெய்சிலிர்க்கும் நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார். தஞ்சாவூரில் 1957 நவம்பர் 3இல் நடந்த சாதி ஒழிப்பு ஸ்பெஷல் மாநாட்டில் மிகப் பெரிய ஊர்வலம் நடந்தது. அதில் எம்.ஆர். ராதா அவர்கள் வெள்ளைக் குதிரையில் வந்தார். அவருக்கு ஜோடியாக திருச்சி வீ.அ. பழனி இன்னொரு குதிரையில் வந்தார். இலட்சக்க ணக்கான மக்கள்...

பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் (2) அரசியல் சட்ட எரிப்புக் கிளர்ச்சி

பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் (2) அரசியல் சட்ட எரிப்புக் கிளர்ச்சி

22.9.2018 அன்று பெரம்பூரில் வடசென்னை மாவட்டக் கழகம் நடத்திய கருத்தரங்கில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ‘பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையி லிருந்து. பகுதி 1 ஒரு நாட்டின் அரசியல் சட்டப் பிரிவுகளையே 10,000 பேர் தீயிட்டுக் கொளுத்திய போராட்ட வரலாறு – பெரியார் இயக்கத்துக்கு மட்டுமே உண்டு. 1957 நவம்பர் 26இல் அரசியல் சட்டத்தில் ஜாதி இழிவு ஒழிப்புக்குத் தடையாக உள்ள உட்பிரிவுகளான 13(2), 25(1), 26(1), 26(2), 368 பிரிவுகளை தீயிட்டு எரிக்கும் போராட்டத்தை தஞ்சையில் திராவிடர் கழக சிறப்பு மாநாட்டை 3.11.1957 அன்று கூட்டி பெரியார் அறிவித்தார். சரியாக 24 நாட்கள் இடைவெளியில் சட்ட எரிப்புப் போராட்டத்தை பெரியார் அறிவித்தார். பெரியார் தஞ்சை  மாநாட்டுச் சிறப்பை தனது உரையில் இவ்வாறு குறிப்பிட்டார். “எனது 40 ஆண்டுகால வாழ்க்கையில் எத்தனையோ மாநாடுகள் நடந்திருக்கின்றன. தலைமை வகித்திருக்கிறேன்; சுயமரியாதை இயக்க கால முதல்...

பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் (1) பிரிட்டிஷ் ஆட்சி தொடர்ந்த இராஜதுவேஷ வழக்கு

பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் (1) பிரிட்டிஷ் ஆட்சி தொடர்ந்த இராஜதுவேஷ வழக்கு

22.9.2018 அன்று பெரம்பூரில் வடசென்னை மாவட்டக் கழகம் நடத்திய கருத்தரங்கில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிகழ்த்திய உரையிலிருந்து. “பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள்” என்ற தலைப்பு எனக்கு தரப்பட்டிருக்கிறது. பெரியார் இயக்க வரலாற்றிலிருந்து ஒரு சில நிகழ்வுகளை மட்டும் தேர்வு செய்து பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். 1932ஆம் ஆண்டு ‘குடிஅரசு’ பத்திரிகையில் “இன்றைய ஆட்சி முறை ஏன் ஒழிய வேண்டும்” என்று பெரியார் எழுதிய கட்டுரைக்காக அவர் மீது ‘இராஜ துவேஷ’ வழக்கை அன்றைய பிரிட்டிஷ் ஆட்சி போட்டது. கட்டுரை அப்படி ஒன்றும் கடுமையானதும் அல்ல. “ஏழை எளிய மக்களுக்கு கல்வி வேலை வாய்ப்புகளை வழங்காமல், பணக்காரர்களுக்கு, பரம்பரை மேல் ஜாதிக்காரர்களுக்கு மட்டும் அரசு மக்களின் வரிப்பணத்தை விரயமாக்குகிறது” என்பதே கட்டுரையின் உள்ளடக்கம் (குடிஅரசு, 29.10.1933). பெரியார் மட்டும் கைது செய்யப்படவில்லை. பத்திரிகையின் பதிப்பாளர் – அச்சிடுபவராக இருந்த பெரியாரின் தங்கை கண்ணம்மாவும் கைது செய்யப்பட்டார். கோவை...

‘இந்துமதம்’ நமது முன்னோர்கள் மீது திணிக்கப்பட்டது; விரும்பி ஏற்றது அல்ல!

‘இந்துமதம்’ நமது முன்னோர்கள் மீது திணிக்கப்பட்டது; விரும்பி ஏற்றது அல்ல!

வேத மதம் என்று அழைக்கப்பட்ட பண்டைய ஆரிய மதத்திற்கு மூன்று தனிப்பட்ட குணாம்சங்கள் இருந்தன. மாட்டிறைச்சி உண்பது, குடிப்பது மற்றும் கேளிக்கை களியாட்டங்களில் ஈடுபடுவது, இவை  அன்றைய வேத மதத்தின் கூறுகளாகவே இருந்தன. இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இவற்றைப் பின்பற்றினார்கள். இப்போதும்கூட சில பார்ப்பனர்கள் அந்த நாட்களுக்குத் திரும்பிப் போய் விடமாட்டோமா என்ற ஏக்கத்தோடு கனவு காண்கிறார்கள். அந்தப் பண்டைய மதத்தோடு மட்டுமே ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்ற கட்டாயமிருந்திருந்தால் எதற்காக இந்திய மக்கள் அன்று இந்து மதத்தை உதறித் தள்ளிவிட்டு, புத்த மதத்தை ஏற்றுக் கொண்டார்கள்? எதற்காக அவர்கள் வேத மதத்தை உதறித்தள்ளிவிட்டு, சமண மதத்தை ஏற்றுக் கொண்டார்கள்? நம்முடைய முன்னோர்கள் அந்த மதத்திற்குள்ளேயே இருந்தார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அவர்கள் தாங்களாகவே விருப்பப்பட்டு அந்த மதத்திற்குள் இருந்தார்கள் என்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். நால்வர்ண அமைப்பு என்பது இந்த நாட்டில் பன்னெடுங்காலமாக நிலவிய ஓர்...

தேவ-அசுரப் போராட்டமே தீபாவளி பண்டிகை – பெரியார் –

தேவ-அசுரப் போராட்டமே தீபாவளி பண்டிகை – பெரியார் –

தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம் என்று 50 ஆண்டுகளாக எழுதியும் பேசியும்  வருகின்றேன்.  இதன் பயனாய் அநேக தமிழ் மக்கள் இப்பண்டிகையைக் கொண்டாடாமல் நிறுத்தி விட்டார்கள் என்றாலும்,  இன்னமும் பல தமிழ் மக்கள் தங்கள்  இழிநிலையை  மான அவமானத்தை உணராமல் கொண்டாடி வரு கிறார்கள். இக்கொண்டாட்டமானது தமிழ்  மக்களுடைய, இழிவையும் முட்டாள்தனத்தையும் காட்டுவது மாத்திரமல்ல, தமிழர்கள் (திராவிடர்கள்) ஆரிய இனத்தானுக்கு அடிமை, அவனது தலைமைக்கு அடிமை,  மீட்சிபெற விருப்பமில்லாத மானங் கெட்ட ஈனப்பிறவி என்பதைக்காட்டிக் கொள்ளப் போட்டி போடுகிறார்கள் என்பதையே காட்டுகிறது. “மானமும் பகுத்தறிவும் உடையவனே மனிதன்; அஃதிலார் மனித உருவமுள்ள மிருகமே ஆவர்”  என்ற  அறிவுரைப்படி மானமில்லா மக்களே இப்போது தீபாவளி கொண்டாடு கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டி இருக்கிறது. வெளிநாட்டிலிருந்து பிழைப்புக்கு வழி தேடிக்கொண்டு நம் நாட்டிற்குள் புகுந்த ஆரியர் அக்காலத்தில் அவர்கள் இருந்த காட்டுமிராண்டித் தன்மைக்கு  ஏற்ப மடமையினால் கொண்ட கருத்துக்களை மதுக்குடி வெறியில்...

ஒரு பெரியார் தொண்டரின் வாய்மொழி வரலாறு மா.கோபாலன்

ஒரு பெரியார் தொண்டரின் வாய்மொழி வரலாறு மா.கோபாலன்

1940-50களில் சென்னையில் பெரியார் இயக்கச் செயல்பாடுகள் எப்படி இருந்தன? 14 வயதில் பெரியாரிடம் அறிமுகமாகி பெரியார் இயக்கத்தில் இணைத்துக் கொண்டு 23ஆவது வயதில் பெரியார் ஆணையை ஏற்று தமிழக அரசுப் பணியில் சேர்ந்தவர் மா.கோபாலன். திருத்தணி வட்டம் சிறுமணவூரைச் சேர்ந்தவர். அரசு துணைச் செயலாளராகவும், கடைசியில் புதிய பல்கலைக் கழகங்களுக்குத் தனி அலுவலராகவும் பணியாற்றி, ஓய்வுக்குப் பிறகு சைவப் பற்றாளராக மாறியவர். குடந்தை அருகே திருப்பனந்தாள் சைவ மடத்தில் மடத்தின் சைவ மடாதிபதியிடம் நெருக்கமாகி, சைவச் சொற்பொழிவுகளை நடத்தத் தொடங்கினார். பெரியாரியலிலிருந்து சைவப் பற்றாளராக மாறிய நிலையிலும், பணி ஓய்வுக்குப் பிறகு வாழ்வின் இறுதி காலத்தில் தனது மரணத்துக்கு முன் ‘ஆடும் பருவத்தில் என்னை ஆட்கொண்ட பெரியார்’ என்று பெரியார் இயக்கத்திடம் தனக்கிருந்த ஈடுபாட்டை நெகிழ்ச்சியோடு பதிவு செய்துள்ளார். வாய்மொழி வரலாறாக வெளி வந்துள்ள இந்த நூலில், அக்காலத்தில் சென்னையில் திராவிடர் கழகத்தின் செயல்பாடுகளையும் களப்பணியாற்றிய பெரியார் தொண்டர்கள், அவர்கள் நடத்திய...

அடிமைகளை மீட்டெடுக்கப் போராடிய ஸ்பார்டகஸ்

அடிமைகளை மீட்டெடுக்கப் போராடிய ஸ்பார்டகஸ்

மனிதர்களை மனிதர்களே அடிமை களாக வைத்திருக்கும் பழக்கம் ஒரு காலத்தில் உலகம் முழுவதும் பரவிக்கிடந்தது. ரோம் நகரில் இந்தக் கலாசாரம் கொஞ்சம் தீவிரமாக இருந்தது. பொன், பொருளை வைத்திருப்பதைப் போல அதிக அடிமைகளை வைத்திருப்பதையும் கவுரவமாகக் கருதியவர்கள் அங்கு நிரம்ப இருந்தனர். மாடமாளிகைகளை கட்டுவதற்காக வும், தோட்டம் வயல்களைப் பராமரிப்ப தற்காகவும் சொல்லும் வேலையை சொன்னபடி செய்யவும் தங்களைப் புகழ்ந்து கவிபாடவும் அந்த அடிமைகளை செல்வச்செழிப்பு மிகுந்த பலரும் பயன்படுத்தினர். மேலும் சிலர் தங்களை எதிர்க்க நினைப்பவர்களிடம் வாதங்கள் செய் வதற்கும், போரிடுவதற்கும்கூட, தாங்கள் விலை கொடுத்து வாங்கியவர்களைப் பயன்படுத்திக் கொண்டனர். அப்படி விலைக்கு வாங்கப்பட்ட வர்களில் ஒருவன் தான் ஸ்பார்டகஸ். தற்போது பல்கேரியாவாக உருவகம் கொண்டிருக்கும் அப்போதைய கிரேஸ் நாட்டில் பிறந்தவன் ஸ்பார்டகஸ். ரோம் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட, அடிமையாக விற்பனை செய்யப்பட்டான். திடகாத்திரமான வலிமை மிகுந்த அவனது உடலைக் கண்டு ரோம் நகர செல்வந்தர்கள் அதிசயித்தனர். அவனை மற்றவர்களைப் போல...

பெல்காமில் பெரியார்-காந்தி-ராஜாஜி உரையாடல்

பெல்காமில் பெரியார்-காந்தி-ராஜாஜி உரையாடல்

“பார்ப்பனரல்லாதாருக்கு 90 சதவீத இடஒதுக்கீட்டை ஆதரித்தார் காந்தி.” காங்கிரசில் கதர்போர்டு தலைவராக பெரியார் இருந்த காலத்தில் அது தொடர்பான பதவிகள் பார்ப்பனர்களுக்கே வழங்கப்படுவதை எதிர்த்து அனைத்து சமூகத்தினருக்கும் பகிர்ந் தளிக்க முயற்சித்தார். போர்டு செயலாளராக இருந்த சி.ஆர். சந்தானம் ஒரு பார்ப்பனர். கதர் போர்டு முழுவதையும் பார்ப்பனர்களையேக் கொண்டு குவித்தார். இதற்கு ராஜாஜி எனும் இராஜகோபாலாச்சாரியும் உடந்தை. கருநாடக மாநிலத்திலுள்ள பெல்காமில் காங்கிரஸ் மாநாட்டின்போது இது குறித்து காந்தியாரிடம் புகார் போனது. 1924ஆம் ஆண்டு டிசம்பர் 24, 27 தேதிகளில் இந்திய தேசிய காங்கிரசின் 39ஆவது மாநாடு பெல்காமில் நடந்தது. மாநாட்டின் தலைவர் காந்தி. காந்தி தலைமை தாங்கிய ஒரே காங்கிரஸ் மாநாடும் இதுதான். பெரியாரும் இந்த மாநாட்டுக்குச் சென்றிருந்தார். பெரியாருக்கும் சந்தானத்துக்கும் பார்ப்பனர் ஆதிக்கப் பிரச்சினையில் உருவான மோதலில், சந்தானம் பதவியிலிருந்து விலக முன் வந்தார். அப்போது பெல்காமில் நடந்த சந்திப்பு இது. இது குறித்து ‘குடிஅரசு’ ஏட்டில் (6.9.1927)...

தமிழ் இலக்கியங்களில் மூட நம்பிக்கைகள் (2) – சு. அறிவுக்கரசு

தமிழ் இலக்கியங்களில் மூட நம்பிக்கைகள் (2) – சு. அறிவுக்கரசு

அறிவியல் வளராத காலத்தில் உருவான தமிழ் இலக்கியங்களில் மூடநம்பிக்கைகள் இருந்தது என்பதை ஒப்புக் கொள்ளாமல் அதைப் பெருமைப்படுத்துவது என்ன நியாயம் என்ற கேள்வியை எழுப்புவதோடு உ.வே.சாமிநாதய்யரின் உரைகளில் திணிக்கப்பட்ட பார்ப்பனியத்தையும் சுட்டிக்காட்டுகிறது இந்தக் கட்டுரை. வானில் தோன்றும் நட்சத்திரங்கள், கிரகங்கள் போன்றவை மனிதகுல வாழ்வில் விளைவுகளை ஏற்படுத்துகின்றன எனும் நம்பிக்கை தமிழரிடையே நிறையவே உண்டு. தீய நிமித்தங்களுக்கும் வானில் ஏற்படும் நிலைகள் தாம் காரணிகள் என்று தமிழர் அஞ்சினர். இதனைக் கணித்துக் கூறும் ஆண்கள் கணியன் என்றழைக்கப்பட்டனர். அக்கலை அய்ந்திரம் எனப்பட்டது. அதுவே பஞ்சாங்கம் என இன்று அழைக்கப்படுகிறது. மேலை நாடுகளில் அது ALMANAC எனப்படுகிறது. ஆனால், மேலை நாடுகளுக்கும் இந்திய நாட்டுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் மேலை நாட்டுப் பஞ்சாங்கம் ஒன்றே ஒன்று. இந்திய நாட்டில் பஞ்சாங்கங்கள் மொத்தம் எட்டு. தமிழ்நாட்டில் பஞ்சாங்கம் இரண்டு. சுத்த வாக்கியப் பஞ்சாங்கம், எண் கணிதப் பஞ்சாங்கம் என இரண்டு உள்ளன. அதிலும் தனித்து...

ஜாதி சங்க மாநாடுகளில்  ஜாதியை எதிர்த்த பெரியார் (2)

ஜாதி சங்க மாநாடுகளில் ஜாதியை எதிர்த்த பெரியார் (2)

பெரியாரியலுக்கு வலிமை சேர்க்கும் அண்மைக்கால வரவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றிருப்பது, பெரியாரிய ஆய்வாளர் வீ.எம்.எஸ். சுபகுணராஜன் தொகுத்து வெளியிட்டுள்ள ‘நமக்கு ஏன் இந்த இழிநிலை’ நூலாகும். ஜாதி மாநாடுகளிலும் ஜாதி ஒழிப்பு மாநாடுகளிலும் பெரியார் நிகழ்த்திய உரைகளைத் தொகுத்து சுமார் 400 பக்கங்களோடு இந்த நூல் வெளி வந்திருக்கிறது. இந்த நூலுக்கு தொகுப்பாசிரியர் 60 பக்கங்களுக்கு அய்ந்து அத்தியாயங்களைக் கொண்ட ஆழமான முன்னுரை எழுதியிருக்கிறார். இதில் ஜாதி சங்க மாநாடுகளில் பெரியார் எனும் தலைப்பில் எழுதியுள்ள பகுதியை இங்கு வெளியிடுகிறோம். ஜாதி சங்கங்களில் ஜாதியைக் கடுமையாக விமர்சித்துப் பேசக்கூடிய நேர்மையும் துணிவும் கொண்ட தலைவராக பெரியார் இருந்திருக்கிறார் என்பதை இதைப் படிக்கும்போது உணர முடியும். இப்போதும் ஜாதி ஒழிப்புக்கான கருத்தாயுதங்களாக இவை திகழ்கின்றன. ஆதி திராவிடர் மகாநாடுகள், நாடார் சங்க மகாநாடுகளுக்குப் பிறகு பெரியார் அதிகமாகப் பங்கேற்றது செங்குந்தர் மகாநாடுகளில்தான். இந்தத் தொகுப்பில் உள்ள உரைகளில் காலத்தால் முந்தியது அவிநாசியில்...

144 ஆண்டுகளுக்கு முன்பு புஷ்கரம் நடந்தது என்பது உண்மையா?

144 ஆண்டுகளுக்கு முன்பு புஷ்கரம் நடந்தது என்பது உண்மையா?

144 ஆண்டுக்குப் பின்னால் தாமிரபரணி புஷ்கரம் நடப்பதாகச் செய்திகளில் சொல்கிறார்கள். ஆனால் அப்படி ஒரு நிகழ்வே அப்போது நடந்ததாக விபரம் இல்லை என்கிறது நீதிமன்றத்தில் அரசு தரப்பு. வற்றாத தாமிரபரணி நதி இதுவரை இரண்டு முறை பொதிகை முதல் புன்னக்காயல் வரை வற்றியிருக்கிறது. அது முற்றிலுமாக வற்றிய வருடம் 144 ஆண்டுகளுக்கு முன்பு தான். இந்தியாவையே புரட்டிப்போட்டப் பஞ்சம் ஏற்பட்ட 1876 தான். 1872 ல் தாமிரபரணி முற்றிலுமாக வற்றி மீண்டும் அது இயல்புக்கு வந்தது 1892 ல் தான். அதன் பிறகு மீண்டும் 1885 மற்றும் 1889இல் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. 1872 பஞ்சத்தை ஒட்டித் தான் தென் மாவட்டத்தினர் பஞ்சம் பிழைக்க மாட்டுவண்டிகள் கட்டிக்கொண்டு மும்பை போய்ச் சேர்ந்தனர். அவர்கள் போய் தங்கிய இடம் தான் இன்றைய தாராவி. 1872 முதல் 1890 வரை பஞ்சத்தால் லட்சக்கணக்கான மக்கள் நாடு முழுமையும் கொத்துக்கொத்தாக செத்து மடிந்தனர்.  144 வருடங்களுக்கு...