ஸ்பெயினும் இந்தியாவும்
ராஜவை விரட்டி அடித்த பிறகும் ஸ்பெயின் தேசத்தில் முதலாளி களுடைய ஆட்சியே ‘குடி அரசு’ ஆட்சி என்னும் போர்வையைப் போற்றிக் கொண்டு அதாவது இந்தியாவில் எப்படி சுயராஜியம்-தேசீயம் என்னும் போர் வையை போத்திக் கொண்டு முதலாளிகளுடைய ஆட்சிக்கு காங்கிரசின் மூலம் சிறிது காலமாய் அஸ்திவாரம் போடப்பட்டு வருகின்றதோ அதுபோல் நடந்து வந்தது. இன்றும் அப்படியே நடந்து வருகிறது என்றாலும் இப்போது அங்கு இந்த முதலாளிக் குடி அரசு ஆட்சியையும் அழிக்க ஒரு கூட்டம் துணிந்து வெளியில் கிளம்பி வந்து, தேசீயத்தையும் ஒழித்து, போலிக் குடி அரசையும் ஒழிக்கப் புரட்சி செய்து பொது உடமை ஆட்சி ஆக்க முயற்சித்து ஒரு அளவுக்கு வெற்றியும் பெற்று வருகின்றதாக தெரியவருகிறது. ஸ்பெயினைச் சேர்ந்த கட்டலோனியா மாகாணத்தில் கிண்டிகலிஸ்ட் (அனார்க் கிஸ்ட்) அதாவது சர்க்கார் ஆட்சி என்பதே இல்லாமல் எல்லாம் தன்னரசு நாடாகவே இருக்க வேண்டும் என்கின்ற ஒரு வித கொள்கை மீது ஒரு பெரிய இயக்கம்...