கத்தோலிக்கர்களுக்கோர் விண்ணப்பம்
நமது பகுத்தறிவு இயக்கத்தை தாக்கி எழுதும் முறையில் திருச்சி “கிங்ஸ் ரோலி” என்ற ஆங்கில மாதச் சஞ்சிகையையும், சர்வவியாபி என்ற ஒரு தமிழ் வாரப் பத்திரிகையும் நம்மை திட்டி எழுதியிருந்தவைகளை நமக்கோர் நற்சாட்சிப் பத்திரமாக எண்ணி நமது கொள்கைகளை ஆதரிக்கும் அமெரிக்கா, ஐரோப்பாவிலுள்ள பகுத்தறிவு இயக்க ஸ்தாபனங்களுக்கு அதன் பிரதிகள் சிலவற்றை வாங்கி அனுப்பினோம். அவர்கள் நமது தொண்டைக் கண்டு மகிழ்ந்து அதற்கு வெகுமதியாக
- ஞசநைளவ வாந றுடிஅநn யனே வாந ஊடிகேநளளiடியேட
- ணுரநளவiடிn கடிச ஊயவாடிடiஉள
- சுடிஅயn ஊயவாடிடiஉளைஅ ஹயேடலணநன
- குகைவல லநயசள in வாந உhரசஉh டிக சுடிஅந
- ஊடிகேநளளiடிn டிக ய சூரn
முதலிய புத்தகங்களை அனுப்பியுள்ளார்கள். அவைகளின் மொழி பெயர்ப்பு இனி குடி அரசில் வெளியாகிக் கொண்டு வரும். கத்தோலிக்கர் களுக்கும் மற்ற வைதீக கிறிஸ்துவர்களுக்கும் நாமாக ஏதாவது சொல்வதா யிருந்தால் தான் அவர்கள் கோபித்துக் கொள்ள இடமேற்படலாம். ஆத லாலேயே இனி கத்தோலிக்கு பாதிரிகளும், பிஷப்புகளும் மற்றும் கிறிஸ்துவ அறிஞர்களும் சொன்னவற்றையே முதலில் சமர்ப்பிக்கிறோம். இதற்கும்கூட கோபிப்பார் களோ என்னமோ தெரியவில்லை. நம்மைக் கண்டிப்பவர்கள் நாம் எழுதிய வைகளை எடுத்து ஓதியோ, எழுதியோ அவற்றிற்கு சமாதானத்துடன் கண்டித் தால் மிகவும் நன்றி உள்ளவர்களாய் இருப்போம் என்பதை அன்பு டன் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
குடி அரசு – கட்டுரை – 08.01.1933