ஈ. வெ. ராமசாமியின் ஈஜிப்ட் கடிதம்
“நாங்கள் பார்த்த கப்பல்” சூயஸ் துறைமுகத்தில் ஒரு பெரிய கப்பலை 29 – 12 – 31 தேதியில் நாங்கள் பார்த்தோம். அதன் பெயர் “எம்பரஸ் ஆப் பிரிட்டன்” (நுஅயீசநளள டிக க்ஷசவையin) நேற்றைக்கு முந்திய தினம் கனடியன் பசிபிக் ரெயில்வே கம்பெனி யாரால், அக்கப்பலின் மேல் தளத்தில் ஒரு விருந்து கொடுக்கப் பட்டது. அது சமயம் மேன்மை தங்கிய பிரதம மந்திரி அவர்களும் மேன்மை தங்கிய ஹை கமிசனர் அவர்களும் பிரதம விருந்தினராயிருந்தனர். மேற்படி கப்பலைப் பற்றிய சில ருசிகரமான விவரங்கள் கீழ்வருமாறு. உலக அதிசயக் கப்பல் உலகத்திலே அதிசயமானாதும், பெரியதும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கே பெருமை தரக் கூடியதுமான, கனடியன் பசிபிக் போக்குவரவுக் கப்பலான “எம்பரஸ் ஆப் பிரிட்டன்”என்ற இந்தக் கப்பலைத் தவிர வேறு ஒன்றையும் கூற முடியாது. பிரிட்டிஷார் கடல் வியாபாரத்தில் மிகவும் கியாதி வாய்ந்தவர் கள் என்ற பரம்பரை புகழை இந்த அதி உந்நத கப்பல் ...