காலஞ்சென்ற மாணிக்க நாயக்கர்

பெருந்தமிழறிஞரும், ரிட்டயரான சூப்பிரின்டென்டிங் இஞ்சினீயரும் சிவபுரி ஜமீன்தாரருமான திரு. பா. வே. மாணிக்க நாயக்கர் அவர்கள் காலஞ் சென்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைகிறோம். இவர் தமிழ்மொழியில் சிறந்த ஆராய்ச்சியுள்ளவராகவும், பார்ப்பனரல்லாதார் இயக்கத்தில் ஊக்க முடையவராகவும் இருந்தார். இவர் உயிரோடு இருந்திருந்தால் தமிழ் மொழிக்கு நன்மையும், பார்ப்பனரல்லாதாருக்கு நன்மையும் உண்டாயிருக்கக் கூடும். இந்த நன்மைகளை நமது மக்கள் அடைவதற்கில்லாமல் திடீரென்று மாரடைப்பு வியாதியால் இறந்தது பெரும் நஷ்டமேயாகும். இவரை இழந்து வருத்தமடையும் அவர் மனைவி மார்களுக்கும், பெண்களுக்கும், சகோதரர் முதலிய உறவினர்களுக்கும் நமது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

குடி அரசு – துணைத் தலையங்கம் – 03.01.1932

You may also like...

Leave a Reply