Tagged: மதுரை

குழந்தைகள் பழகு, மகிழ்வு முகாம்

குழந்தைகள் பழகு, மகிழ்வு முகாம்

தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்தும் ”குழந்தைகள் பழகு,மகிழ்வு முகாம்”. நாள் : மே மாதத்தில், 20.05.2016 முதல் 24.05.2016 முடிய, 5 நாட்கள் இடம் : மதுரை கட்டணம் : 1000 ரூபாய் மட்டும். குறிப்பு : 10 வயது முதல் 15 வயது உள்ள குழந்தைகள் இருபாலரும் பங்கேற்கலாம். ”முன் பதிவு அவசியம்” பதிவு செய்ய அழைக்கவும் : 9842448175,9688856151.

மதுரை அகதி முகாமில் ரவிச்சந்திரன் குடும்பத்தினரிடம் கழகத் தலைவர் ஆறுதல்

மதுரை திருமங்கலம் அருகில் உச்சம்பட்டியிலுள்ள இலங்கை அகதிகள் முகாமில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த 06032016 ஞாயிற்றுக் கிழமையன்று அங்கு சோதனையிடவந்த வருவாய் அதிகாரி ரவிச்சந்திரன் மற்றும் அவரது மகன் மட்டும் இல்லாதது தெரியவந்தது. இதுகுறித்து விளக்கம் கேட்டபோது, ரவிச்சந்திரன் அங்கு வந்துள்ளார். தனது மகனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாக அப்போது அவர் தெரிவித்தார். ஆனால், அதனை ஏற்காத அதிகாரி, வருகை பதிவேட்டில் குறிப்பிட முடியாது என்று தெரிவித்துள்ளார். அத்துடன் ரவிச்சந்திரனை தகாத வார்த்தைகளால் திட்டியதால் மனமுடைந்த ரவிச்சந்திரன், அங்கிருந்த உயர் மின்னழுத்த கம்பத்தில் ஏறி, தற்கொலைக்கு முயன்றார். அப்போது மின்சாரம் தாக்கியதில் கீழே விழுந்து ரவிச்சந்திரன் உயிரிழந்தார் இறந்த ரவீந்திரனின் குடும்பத்திற்கு போதுமான நிவாரணம் அளிக்க வேண்டுமென்றும் அந்த வருவாய் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அந்த முகாமில் உள்ள அகதிகள் கோரி போராட்டம் நடத்தினர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி அங்கு சென்று அவர்களை சந்தித்து ஆறுதல் சொன்னார்....

பிப்ரவரி 27, 28இல் மதுரை, கோபியில் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடுகள்

பிப்ரவரி 27, 28இல் மதுரை, கோபியில் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடுகள்

மதுரையில் பிப்.27 அன்றும், கோபியில் பிப்.28 அன்றும் திராவிடர் விடுதலைக் கழகம், பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடுகளை நடத்துகிறது. ஏற்கெனவே ஈரோடு, சென்னை, சேலம், சங்கராபுரத்தில் கழகம் மாநாட்டை நடத்தி முடித்துள்ளது. 27ஆம் தேதி மதுரை ஓபுளா படித்துறையில் மாலை 5 மணிக்கு மாநாடு தொடங்குகிறது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, எஸ்.டி.பி.அய். கட்சித் தலைவர் தெஹலான் பாகவி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தமிழ்ப் புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவன், ஆதித் தமிழர் பேரவை இரா. செல்வம் ஆகியோர் உரையாற்றுகிறார்கள். மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் உயர்நீதிமன்றம் வழியாக மாநாட்டுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. கோபியில் பிப்.28 மாலை 4 மணியளவில் பெரியார் திடலில் மாநாடு, டி.கே.ஆர். குழுவினரின் இசை நிகழ்ச்சியோடு தொடங்குகிறது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், மனிதநேய மக்கள் கட்சி செயலாளர் அப்துல் சமது, செந்தலை ந. கவுதமன் ஆகியோர்...

நீண்டகால முஸ்லீம் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

மனித நேய மக்கள் கட்சி சார்பில் நேற்று 07.02.2016 அன்று மாலை மதுரையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக தலைவர் பங்கேற்று கண்டன உரையாற்றினார். பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசே அரசியலமைச்சட்டம் 161 அய் பயன்படுத்து ! 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் அபுதாஹீர் உள்ளிட்ட முஸ்லீம் சிறைவாசிகளை விடுதலை செய் ! பேரறிவாளன் உள்ளிட்ட வாழ்நாள் சிறைவாசிகளை விடுதலை செய் ! என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மனித நேய மக்கள் கட்சியின் மூத்த தலைவர் எஸ்.ஹைதர் அலி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி, மக்கள் கண்காணிப்பகம் தோழர் ஹென்றி டிபேன், தோழர் எவிடன்ஸ் கதிர், தமிழ் தேச மக்கள் கட்சியைச் சார்ந்த வழக்கறிஞர் தோழர் புகழேந்தி, சி.பி.அய்( எம்.எல்) மக்கள் விடுதலை தலைவர் தோழர் அருண்சோரி ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர் மம

கல்வி நிறுவனங்களும் ஜாதிப் பாகுபாடும்’ கருத்தரங்கம் மதுரையில் 03022016

3-2-2016 அன்று மாலை 5-00 மணிக்கு, மதுரை, தமிழ்நாடு இறையியல் கல்லூரியின் துரைராஜ் பீட்டர் அரங்கத்தில், எவிடன்ஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பில், ‘கல்வி நிறுவனங்களும் ஜாதிப் பாகுபாடும்’ என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை வகித்தார். தோழர் முத்து அனைவரையும் வரவேற்றார். கருத்தரங்கின் நோக்கங்களை விளக்கி எவிடன்ஸ் நிறுவன செயல் இயக்குநர் கதிர் தொடக்கவுரையாற்றினார். அவரைத் தொடர்ந்து எழுத்தாளர் கவின் மலர், சமூக ஆர்வலர் ஜோசுவா ஐசக், பேராசிரியர் செம்மலர் ஆகியோரின் உரையைத் தொடர்ந்து மதுரை மக்கள் கண்காணிப்பகத்தின் செயல் இயக்குநர் வழக்கறிஞர் ஹென்றி டிபேன் சிறப்புரை ஆற்றினார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர் சாமுவேல்ராஜ் நிறைவுரை ஆற்றினார். கருத்தரங்கில் ரோகித் வெமுலாவின் மரணம் குறித்தும், மத்திய பா.ஜ.க ஆட்சியின் தலித், சிறுபான்மையோர் விரோத போக்கு குறித்தும், ஏற்கனவே உயர் கல்வி நிறுவனங்களில் நிகழ்ந்த மரணங்களைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட விசாரணைக் குழுக்களின் பரிந்துரைகளைச்...

கல்வி நிறுவனங்களும் ஜாதியப் பாகுபாடும் – மதுரையில் கருத்தரங்கம்

”கல்வி நிறுவனங்களும்,ஜாதியப் பாகுபாடும்” கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் கருத்தரங்கம் ! எவிடன்ஸ் அமைப்பின் சார்பில், நாள் : 03.02.2016. மாலை 4.30 மணி. இடம் : துரைராஜ் பீட்டர் ஹால், தமிழ்நாடு இறையியல் கல்லூரி,அரசரடி,மதுரை. தோழர்கள் எவிடன்ஸ் கதிர், ஹென்றி டிபேன், கவின் மலர், செம்மலர் ஆகியோர் உரையாற்றுகிறார்கள் ! சமத்துவம் மலர இணைந்து செயல்படுவோம். அன்புடன் அழைக்கிறோம்.

சாதி கொடுமைகளுக்கு எதிரான மாநாடு 12122015 மதுரை

12 டிசம்பர் 2015 அன்று காலை 9.30 மணி அளவில் சாதி கொடுமைகளுக்கு எதிரான மாநாடு நடைபெற்றது. எவிடென்ஸ் அமைப்பு ஏற்பாடு செய்து இருக்கும் இந்த மாநாடு மதுரை – கே.புதூரில் அமைந்து உள்ள டி நோபிலி அரங்கில் நடைபெற்றது மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக கழக தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சாதி வேறுபாடுகள் கூடாதென சட்டம் வலியுறுத்தினாலும் அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு வரமுடியாதவர்களாக பெரும்பகுதி மக்கள் இருக்கின்றனர் என்றார் சாதி, மத ஆதிக்கம் அரசியலிலும், ஆட்சியிலும் நுழைவது நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்றதல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார். எவிடன்ஸ் அமைப்பு சார்பில் மதுரை கோ.புதூர் டிநோபிலி அருள் பணி மைய அரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற சாதியக் கொடுமைகளுக்கு எதிரான மாநாட்டில் அவர் பேசியதாவது: இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் தீண்டாமை கூடாது என்கிறது. அதன் பிறகு வந்த குடியுரிமைச்...

மதுரையில் சாதியக் கொடுமைகளுக்கு எதிரான மாநாடு

சாதியக் கொடுமைகளுக்கு எதிரான மாநாடு இடம் : டி நோபிலி அருள் பணி மையம், மெயின் அரங்கம்,கே.புதூர்,மதுரை – 7. மாநாடு – காலை 10.00 முதல் 1.00 மணி வரை. தலைமை : தோழர் இரா.நல்லக்கண்ணு இந்திய கம்னியூஸ்ட் கட்சி துவக்க உரை : தோழர் ஜி.ராமகிருஷ்ணன் மாநில செயலாளர், மார்க்ஸிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சி, சிறப்புரை : தோழர் கொளத்தூர் மணி, தலைவர் திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் தோழமை அமைப்புகளின் தலைவர்கள் நிகழ்ச்சி ஏற்பாடு : எவிடன்ஸ்.