சாதி கொடுமைகளுக்கு எதிரான மாநாடு 12122015 மதுரை

12 டிசம்பர் 2015 அன்று காலை 9.30 மணி அளவில் சாதி கொடுமைகளுக்கு எதிரான மாநாடு நடைபெற்றது. எவிடென்ஸ் அமைப்பு ஏற்பாடு செய்து இருக்கும் இந்த மாநாடு மதுரை – கே.புதூரில் அமைந்து உள்ள டி நோபிலி அரங்கில் நடைபெற்றது

மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக கழக தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

சாதி வேறுபாடுகள் கூடாதென சட்டம் வலியுறுத்தினாலும் அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு வரமுடியாதவர்களாக பெரும்பகுதி மக்கள் இருக்கின்றனர் என்றார்

சாதி, மத ஆதிக்கம் அரசியலிலும், ஆட்சியிலும் நுழைவது நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்றதல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.

எவிடன்ஸ் அமைப்பு சார்பில் மதுரை கோ.புதூர் டிநோபிலி அருள் பணி மைய அரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற சாதியக் கொடுமைகளுக்கு எதிரான மாநாட்டில் அவர் பேசியதாவது:

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் தீண்டாமை கூடாது என்கிறது. அதன் பிறகு வந்த குடியுரிமைச் சட்டம், வன்கொடுமை சட்டம் ஆகியன தீண்டாமைக்கு எதிராக இருக்கின்றன. அதேபோல, தீண்டாமைக்கு எதிரான போராட்டங்கள், சாதிக் கொடுமைகள் நிகழ்ந்து வருகின்றன.

ஐரோப்பிய நாடுகளில் அரசியலிலும், ஆட்சியிலும் மத ஆதிக்கம் தலைதூக்கி இருந்தபோது, அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிகவும் பின்தங்கி இருந்தது. அரசியலில் மத ஆதிக்கம் தடுக்கப்பட்ட பிறகே, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார வளர்ச்சி அடைந்தன. அந்த நாடுகளைக் காட்டிலும் தொன்மையான வரலாற்றைக் கொண்ட இந்தியாவில், அரசியலிலும், ஆட்சியிலும் சாதி-மதம் தலையிடுவது வேதனைக்குரியது. இதுபற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியமாக உள்ளது.

சாதி வெறியின் காரணமாக கெளரவக் கொலை என்ற பெயரால், சாதி ஆணவக் கொலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதைத் தடுக்க கடுமையான சட்டம் கொண்டுவர தமிழக அரசு தயக்கம் காட்டுகிறது. சாதியக் கொடுமைகளைத் தடுக்க பல்வேறு தளங்களிலும் ஒருங்கிணைந்த முயற்சி தேவையாக இருக்கிறது என்றார்.

12316614_773042262825501_6558239874328416418_n 12348168_773041749492219_4378475404324652119_n 12376134_773041899492204_3710519940895937771_n IMG_9929 IMG_9950 IMG_9955 IMG_9957 IMG_9964

You may also like...