Tagged: மகளிர் சந்திப்பு

மகளிர் சந்திப்பு ஈரோடு 31122016

  தமிழ்நாடு அறிவியல் மன்றம் சார்பில் ஈரோட்டில் 31.12.2016இல் நடந்த பெண்கள் சந்திப்பிற்கு திருப்பூர் சரசுவதி தலைமை தாங்கினார். தி.வி.க. மாநில அமைப்புச் செயலாளர் ரத்தினசாமி முன்னிலை வகித்தார். சுதா வரவேற் புரை ஆற்றினார். ‘ஊடகங்களில் பெண்கள்’ என்ற தலைப்பில் இசை மதி, ‘மனுதர்மமும் பெண்களும்’ என்ற தலைப்பில் மணிமொழி, ‘ஆடைக் கட்டுப்பாடு’ என்ற தலைப்பில் தனலட்சுமி, ‘குடும்பத்தில் முதல் பெரியாரியல் வாதியாக இருக்கும் பெண் சந்திக்கும் சிக்கல்கள்’ என்ற தலைப்பில் கோமதி, ‘பெரியாரியல் குடும்பங்களில் குழந்தைகள்’ என்ற தலைப்பில் கனல் மதி ஆகியோர் பேசினர்.  பின்னர் “பெரியாரின் அடிப்படைக் கொள்கைகள் மற்றும் பெண்ணுரிமைக் கோட்பாட்டில் பெரியாரின் தனித்தன்மை” என்ற தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றினார். தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவக்குமார் நன்றி கூறினார். ஈரோடு தோழர்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் சிறப்பாக செய்திருந்தனர். மதிய உணவிற்குப் பின்னர் பெரியாரின் இல்லம் சென்று பார்வையிட்டனர். பெரியாரின் கொள்கைகளில் ஈடுபாடு...

திருப்பூரில் அறிவியல் மன்றம் நடத்திய மகளிர் சந்திப்பு

தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்திய மகளிர் சந்திப்பு திருப்பூரில் 23.10.2016 அன்று நடைபெற்றது. இதில் திருப்பூர் கோவை பகுதி தோழர்கள் 30 பேர் கலந்து கொண்டனர். காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடந்த இந் நிகழ்வு பெரும் உற்சாகத் துடனும் பயனுள்ளதாகவும் நடைபெற்றது. முதல் நிகழ்வாக கலந்து கொண் டோர் தங்களைப் பற்றியும் தங்களுக்கு பொது வாழ்விலுள்ள பங்கு பற்றியும் அறிமுகப்படுத்திக் கொண்டனர். பிறகு அந்தக் காலப் பெண்கள் வாழ்வு தான் சிறந்தது என்று ஒரு குழுவும் அதனை மறுத்து இந்தக் காலப் பெண்கள் வாழ்வு தான் சிறந்தது என்று ஒரு குழுவும் விவாதித்தனர். இதில் பெண்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்கள் முன்னேற்றங்கள் குறித்து பல்வேறு கருத்துகள் முன் வைக்கப்பட்டு விவாதித்தனர். பிற்பகல் பெரியார் ஒர் அறிமுகம் என்ற தலைப்பில் சிவகாமி பேசினார். பிறகு பொட்டு வைத்தல், தாலி ஓர் அடிமைச் சின்னம், அணிகலன்...

திருப்பூரில் “பெண்கள் சந்திப்பு நிகழ்ச்சி” 23102016

திருப்பூரில் “பெண்கள் சந்திப்பு நிகழ்ச்சி” நாள் : 23.10.16 ஞாயிற்றுக்கிழமை இடம் : தோழர் சிவகாமி ஆசிரியர் இல்லம், பெரியார் காலனி, (T.T.P மில் பின்புறம்)திருப்பூர். நேரம் : காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை தொடர்புக்கு : தோழர் சிவகாமி ஆசிரியர், அமைப்பாளர், தமிழ்நாடு அறிவியல் மன்றம். 9842448175. வாய்ப்பு உள்ள பெண்கள் இச்சந்திப்பு நிகழ்வில்கலந்து கொண்டு சிறப்பிக்கும் படி கேட்டுக் கொள்கிறோம். தோழர்கள் இச்செய்தியை பரவலாக்கி தங்கள் இல்ல பெண்களையும் இந்த நிகழ்வில் பங்கேற்க செய்ய கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்தும் மகளிர் சந்திப்பு ! கோபி

“மகளிர் சந்திப்பு.” தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்தும் மகளிர் சந்திப்பு ! நாள் : 16.10.2016. ஞாயிறு நேரம் : காலை 10.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை. இடம்: L.கள்ளிப்பட்டி, கோபிசெட்டிபாளையம். தமிழ்நாடு அறிவியல் மன்றம் சார்பில் மகளிர் சந்திப்பு நிகழ்சி 16.10.2016. ஞாயிறு காலை 10.00 மணி முதல் மாலைவரை கோபிசெட்டிபாளையம்,L.கள்ளிப்பட்டியில் உள்ள தோழர் மணி மொழி அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது. 17 பெண்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.பல்வேறு தலைப்புகளில் உரையாடல்கள் இடம்பெற்றன.பொது இடங்களில் பெண்களுக்கான இயல்பான உரிமைகள் மறுக்கப்படுவது குறித்தும் பொது இடங்களில் பெண்களின் உரிமைகளை நிலை நிறுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. கலந்து கொண்ட தோழர்கள் மிகுந்த மகிழ்ச்சியை தெரிவித்தனர். தொடர்புக்கு: தோழர் மணிமொழி, 9786922952. ந்தி

தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்தும் மகளிர் சந்திப்பு !

தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்தும் மகளிர் சந்திப்பு ! நாள் : 09.10.2016. ஞாயிறு நேரம் : காலை 10.00 மணி முதல் பிற்பகல் 3.OO மணி வரை. இடம்: சீதாராம்பாளையம்,தெப்பாறை, திருச்செங்கோடு தமிழ்நாடு அறிவியல் மன்றம் சார்பில் ”மகளிர் சந்திப்பு” 9.10.2016. ஞாயிறு அன்று திருச்செங்கோடு சீதாராம்பாளையம் செப்பாறையில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தோழர் தனலட்சுமி அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது. காலை 10.30 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்வில் அப்பகுதி பெண்கள் 6 பேர் உள்ளிட்ட 11 பேர் கலந்து கொண்டனர்.இச்சந்திப்பில் கலந்துகொண்ட மகளிர் தங்கள் வாழ்வில் பெரியாரியலின் தாக்கங்கள் குறித்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். பெரியாரியல் அறிமுகமான பிறகுதான் வாழ்க்கை குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டதாக கூறினர்.பெரியாரியல் வாழ்க்கை நெறியில் கணவருடன் சிக்கல்களை ஆலோசித்து முடிவெடுப்பதாகவும் முரண்பாடுகளை எளிதில் களைய முடிகிறது எனவும் மகிழ்ச்சியுடன் கூறினர். மாநில அமைப்பாளர் தோழர் சிவகாமி அவர்கள் தாய்வழிசமூக...

மேட்டூரில் கழக மகளிர் சந்திப்பு

01012016 அன்று, மேட்டூர் தாய்த்தமிழ்ப் பள்ளீயில், தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி அவர்களின் நெறிப்படுத்தலில், மேட்டூர் பகுதி கழக மகளிர்களின் சந்திப்பு நடந்தது. மேலும் செய்திகள் விரைவில் office 2010 key Windows 7 Genuine Product Keys windows 10 key sale windows 10 education Windows 10 Activation Product Keys office 2016 key windows 10 key office 2013 key windows 7 key Product key for window 7 ultimate 64 bit windows 10 home-key windows 10 update windows 7 installation office 2016 iso windows 10 install windows 7 service windows 7 iso Microsoft Office 2013 windows 7 SP1 iso  Windows 7 Ultimate Product Key 32bit and 64bit Genuine  |  Adobe...