Tagged: நீட்

தந்தை பெரியாரின் 139 வது பிறந்தநாள் விழா & நீட் தேர்வு குறித்த கருத்தரங்கம் 19092017 இராசிபுரம்

இராசிபுரம் திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் தந்தைபெரியாரின் 139 வது பிறந்தநாள் விழா & நீட் தேர்வு குறித்த கருத்தரங்கம் செப்டம்பர்19 ந் தேதி செவ்வாய் மாலை 6 மணிக்கு  இராசிபுரம் லயன்ஸ்கிளப் மீட்டிங்ஹாலில் நடைபெற்றது. தலைமை :  தோழர் இரா.பிடல் சேகுவேரா, நகரஅமைப்பாளர், இராசிபுரம் முன்னிலை:தோழர்.மு.சாமிநாதன் மாவட்டதலைவர், தி.வி.க வரவேற்புரை : தோழர்.மு.சரவணன் மாவட்டசெயலாளர், தி.வி.க வாழ்த்துரை:வி.பாலு, தலைவர், நகரவளர்ச்சிமன்றம், இராசிபுரம். நா.ஜோதிபாசு நகரசெயலாளர் மதிமுக எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.பி.எம் கருத்துரையாளர்கள் : பேராசிரியர்.முனைவர் :இராம.சுப்பிரமணியன் பேராசிரியர் முனைவர்.சேதுமணி மணியன் ,மதுரை சிறப்பு அழைப்பாளர்: டாக்டர்.கே.பி.இராமலிங்கம் ,தலைவர், இயற்கை நீர்வளபாதுகாப்பு இயக்கம் ,திமுக ,விவசாய அணி மாநிலசெயலாளர். சிறப்புரை: தோழர் கொளத்தூர்மணி தலைவர் ,திவிக. நன்றியுரை : தோழர் அ.முத்துபாண்டி மாவட்டபொருளாளர், திவிக இராசிபுரம் பெரியார் பிறந்தநாளையொட்டி  புதுப்பாளையம் அரசுப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி  கட்டுரைப்போட்டி ” நடத்தப்பட்டு  மாணவமாணவிகள்  மற்றும் மாணவ மாணவிகள் 29 பேருக்கு பாராட்டுசான்றிதழ்கள்,...

மாணவி அனிதாவிற்கு நீதி வேண்டி பேராவூரணி வேதாந்தம் திடலில் உண்ணாவிரதம் 10092016

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் 150 மருத்துவ மாணவர்களுக்கான சேர்க்கையில் 15 மாணவர்கள் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் – மருத்துவர் ஜெயராமன் தகவல். “நீட் தேர்வுக்குப்பின் அரசு மருத்துவக்கல்லூரிகளில் ஏழை மாணவர்கள் சேர்ந்து படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு நடத்தும் மருத்துவக்கல்லூரிகளில் 85 விழுக்காடு மாணவர்களுக்கான சேர்க்கையை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களைக் கொண்டே நிறைவு செய்ய வேண்டும் என்ற சட்டம் உள்ளது. ஆனால் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் உள்ள 150 மாணவர்களுக்கான இடங்களில் 15 பேர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள். எல்லா மாநிலங்களிலிலும் நீட்டை ஏற்றுக் கொண்டுவிட்டார்கள் என்று இங்கு பொய் பரப்புரை செய்யப்படுகிறது. சந்திரபாபு நாயுடு முதல்வராக உள்ள ஆந்ரா மாநிலத்தில் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேலூர் சி.எம்.சி மருத்துவக்கல்லூரி நீட் தேர்வை புறந்தள்ளிவிட்டது. தமிழ்நாட்டில் மாவட்டந்தோறும் மருத்துவக்கல்லூரி என்ற அடிப்படையில் 24 மருத்துவக்கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றது. தமிழக ஏழை எளிய மாணவர்கள் சேர்ந்து படிக்க...

மதுரையில் நீட்டுக்கு எதிராக போராடிய தோழர்கள் கைது !

மதுரையில் நீட்டுக்கு எதிராக போராடிய தோழர்கள் கைது !

மதுரையில் நீட்டுக்கு எதிராக போராடிய தோழர்கள் கைது ! 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது தமிழக அரசு ! நள்ளிரவில் சிறையில் அடைப்பு ! தமிழக காவல்துறையின் அராஜகம் ! நேற்று 07.09.2017 அன்று காலை மதுரை தமுக்கம் மைதானத்தில் நீட் தேர்விற்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், மாணவி அனிதா மரணத்திற்கு நீதி கேட்டும் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட பல்வேறு முற்போக்கு அமைப்புகள் கலந்து கொண்டன.போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் கூட்டியக்கத் தோழர்கள் மீது காவல்துறை வன்முறையை ஏவி கடுமையாக தாக்கியுள்ளது.இத்தாக்குதலில் திராவிடர் விடுதலைக் கழக மாவட்டச்செயலாளர் தோழர் மணியமுதன் மா.பா. அவர்களுக்கு காலில் பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது.காவல்துறையின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் மாணவர்கள்,இயக்கத்தோழர்கள் பலருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.போராட்டத்தில் ஈடுபட்ட தோழர்கள் 75 பேரை தமிழக காவல்துறை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது...

மாணவி அனிதாவிற்கு கழகத் தலைவர் இறுதி மரியாதை.

மாணவி அனிதாவிற்கு கழகத் தலைவர் இறுதி மரியாதை. கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் இன்று 02.09. 2017 மத்திய பா.ஜ.க.வின் நீட் தேர்வினால் மருத்துவ கல்வி வாய்ப்பை இழந்து தற்கொலை செய்து கொண்ட மாணவி அரியலூர் அனிதாவின் இல்லத்திற்கு சென்று உடலுக்கு மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தினார். அவ்வமயம் கழகத் தோழர்கள்,நிர்வாகிகள் உடனிருந்தனர்.

கல்வி உரிமை மாநிலப் பட்டியலுக்கு மாற வேண்டும். பெரியார் பெற்றுத் தந்த உரிமைகளை நாம் இழந்துவிடக் கூடாது நீதிபதி அரி பரந்தாமன் மருத்துவர்களிடையே முழக்கம்!

கல்வி உரிமை மாநிலப் பட்டியலுக்கு மாற வேண்டும். பெரியார் பெற்றுத் தந்த உரிமைகளை நாம் இழந்துவிடக் கூடாது நீதிபதி அரி பரந்தாமன் மருத்துவர்களிடையே முழக்கம்!

தமிழ்நாட்டில் அரசுத் துறையில் ஆரம்ப சுகாதார மய்யங்களில் மருத்துவர்களாக பணிபுரிந்து வருவோருக்கு பணியில் இருக்கும்போதே உயர் பட்டப்படிப்புக்கு 25 சதவீத இடங்களை ஒதுக்கும் கோட்டா முறையை அகில இந்திய மருத்துவ கவுன்சிலின் பரிந்துரையின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியிருக்கிறது.; இந்த கோட்டா முறை நீக்கப்பட்டால் கிராமங்களில் பணிபுரிய மருத்துவர்கள் வரும் வாய்ப்புகள் குறைந்து விடுவதோடு, அரசு மருத்துவக் கல்லூரிகளில் உயர் பட்டப்படிப்பு படித்த மருத்துவர்களின் சேவையும் கடும் பாதிப்புக்குள்ளாகிவிடும். எனவே மருத்துவ சேவையின் சமூக நீதியை குழிதோண்டி புதைக்கும் இந்த ஆபத்தை நீக்கிட அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தி, தமிழகம் முழுதும் அரசு மருத்துவர்கள் போராடி வருகிறார்கள். சென்னை மருத்துவக் கல்வி இயக்குனர் வளாகத்தில் 8 நாட்களாக நடைபெற்று வரும் போராட்டத்தில் ஏப்.26 அன்று கழக சார்பில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பங்கேற்று மருத்துவர் களிடையே பேசினார். அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது: மருத்துவ சேவையில் இந்தியாவுக்கே...