Tagged: தமிழ்நாடு மாணவர் கழகம்
தமிழ்நாடு மாணவர் கழகம் நடத்திய பேச்சுப் போட்டி
சென்னை மாவட்ட தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பாக பேச்சுப் போட்டி, இராயப்பேட்டை வி.எம். தெருவிலுள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் கல்லூரி மாணவர்களுக்கிடையே நடந்தது. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் 24.7.2016 காலை 10 மணிக்கு போட்டிகளை தொடங்கி வைத்து உரையாற்றினார். பெரியாரும் அம்பேத்கரும் ஏன் இன்று தேவை? சமத்துவ மானுடம் அடைவதற்கு அடிப்படை தடையாக இருப்பது ஜாதியா? (அ) மதமா? இன்றைய கல்வி முறையில் உண்மையான நோக்கம் மானுட மேன்மையா? (அ) பொருளியல் மதிப்புகளா? பாலின ஒடுக்குமுறைக்கு காரணமாக அமைவது தனி மனித ஒழுக்கச் சிதைவா? (அ) கலாச்சார கட்டமைப்பா? – என்ற தலைப்புகளில் பேச்சுப் போட்டி நடைபெற்றது. நடுவர்களாக பேராசிரியர் அ. பெரியார், முனைவர் விநாயகம், வழக்கறிஞர் திருமூர்த்தி ஆகியோர் இருந்தனர். சென்னை மாவட்ட தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர் க. ஜெயபிரகாசு, செந்தில் (குனுடு), உமாபதி (சென்னை மாவட்ட செயலாளர்), விழுப்புரம் அய்யனார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். 30 கல்லூரி மாணவியர் போட்டியில்...
பரிசளிப்பு விழா – கல்லூரி மாணவர்களுக்கு பெரியார் பிறந்தநாள் போட்டி
தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்தநாள் கட்டுரை போட்டி, பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா 06082016 அன்று அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை பயணத்தின் துவக்க விழாவின் போது கழகத் தலைவர் கொளத்தூர் மணி வாழ்த்தி வணங்கினார் நம்புங்கள் அறிவியலை, நம்பாதிங்க சாமியார்களை என்ற முழக்கத்தோடு நடைபெற உள்ள பரப்புரை பயணத்தின் துவக்க விழா சென்னை திவிக சார்பில் 08082016 மாலை 6 மணிக்கு லாயிட்ஸ் சாலையில் நடைபெற்றது அவ்விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்
எய்ம்ஸ் மருத்துவ மாணவர் சரவணன் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
23-7-2016 அன்று மாலை 4-30 மணியளவில், திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக, தமிழ்நாடு மாணவர் கழகத்தின் ஒருங்கிணைப்பில், புது தில்லி அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (AIIMS) மருத்துவ முதுநிலை (பொது மருத்துவம்) படிப்பில் இந்திய அளவில் நுழைவுத் தேர்வில் 77ஆம் இடம் பெற்று, அனுமதியான பத்தே நாட்களில் மர்மமான முறையில் இறந்துபோன திருப்பூரைச் சேர்ந்த மருத்துவர் சரவணனின் கொலையைக் கண்டித்தும், வழக்கின் விசாரணையை மத்தியப் புலனாய்வு விசாரணைக்கு மாற்ற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு மாணவர் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் குண கோகுல் தலைமையேற்றார். ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பின் மூர்த்தி, வி.சி.க.வின் மாநிலத் துணைச் செயலாளர் துரை வளவன், ஆதிதமிழர்ப் பேரவையின் வழக்கறிஞர் அணிச் செயலாளர் கனகசபை, தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட சரவணின் தந்தை கணேசன் சரவணனின்...
தந்தை பெரியார் பிறந்தநாள் விழா கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டி
தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பாக வரும் 24/07/2016 அன்று பேச்சு போட்டி
ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் 07072016
ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம்!! மத்திய அரசு மருத்துவப் படிப்புக்கு பொதுநுழைவுத் தேர்வு கொண்டுவர தொடர்ந்து முயற்ச்சிப்பதை எதிர்த்து ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் . நாள் : 07/07/2016 (வியாழன்) நேரம் : காலை 10.00மணி இடம் :கிண்டி (ஆளுநர் மாளிகை) #தமிழ்நாடு_மாணவர்_கழகம் தொடர்புக்கு :9688310621,9092748645. இடஒதுக்கீட்டுக்கு எதிரானதும், கிராமப்புற உழைக்கும், ஏழை எளிய மக்களின் பிள்ளைகள் மருத்துவம் படிப்பதை முற்றிலும் தடுக்க நினைக்கும் மத்திய அரசின் மருத்துவ பொது நுழைவுத்தேர்வு (தகுதித் தேர்வு) என்பது மிகவும் ஆபத்தான ஒன்று. நம் வருங்காள தலைமுறையை காக்க மனிதநேயத்தோடு ஒன்று கூடுவோம். தமிழ்நாட்டில் பொது நுழைவுத் தேர்வை கொண்டுவர நினைக்கும் மத்திய அரசின் முடிவை தகர்த்தெறிவோம் .
தமிழ்நாடு மாணவர் கழக பொறுப்பாளர்கள் கூட்டம் !
29/5/2016 அன்று காலை 10 மணிக்கு திருப்பூரில் வீரபாண்டி பிரிவு பெரியார் படிப்பகத்தில் தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட திவிக செயலாளர் முகில்ராசு வரவேற்புரையாற்றினார். இக்கூட்டத்தில்,இடஒதுக்கீடு, தனியார்துறையில் இடஒதுக்கீடு, பொதுநுழைவுத் தேர்வு, அரசாணை 92, தனியார் பள்ளிகளில் 25%மாணவர் சேர்க்கை, தனியார் கல்விக்கொள்ளை, தாய்மொழிக்கல்வி, கட்டாய கல்வி உரிமைச்சட்டம் ஆகியவை குறித்தும் இன்னும் பிற கல்விஉதவித்தொகை வழங்கும் அரசாணை குறித்தும் தமிழ்நாடு மாணவர் கழக மாநில அமைப்பாளர் பாரி.சிவக்குமார் தொடக்கஉரையாற்றினார். இதனை தொடர்ந்து மாணவர்களின் கேள்விகளுக்கு திவிக பரப்புரை செயலாளர் தோழர் பால்.பிரபாகரன் விளக்கம் அளித்தார். காலை நிகழ்வு மதியம் 1.30 மணிவரை நடைபெற்றது. மதிய உணவு மாட்டுக்கறி பிரியாணி வழங்கப்பட்டது. மீண்டும் மதியம் 2 மணிக்கு தோடங்கிய கூட்டம் 6.30 வரை தொடர்ந்தது .மதிய அமர்வில் திவிக தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு தோழர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். மேலும் புதிதாக...
தமிழ்நாடு மாணவர் கழகத்தின் ‘மாநில கலந்துரையாடல் கூட்டம்’
தமிழ்நாடு மாணவர் கழகத்தின் ‘மாநில கலந்துரையாடல் கூட்டம்’. நாள் : 29/5/2016,ஞாயிறு. நேரம் :காலை 10 மணி. இடம் : பெரியார் படிப்பகம், வீரபாண்டி பிரிவு, திருப்பூர் . ▪தமிழ்வழி கல்வியின் முக்கியத்துவம், ▪மருத்துவப்படிப்புக்கான நுழைவுத் தேர்வு, ▪பள்ளிகளில் சமஸ்கிருத திணிப்பு, ▪மாநில பள்ளிக் கல்வித்துறை இயக்குனரகத்தின் இடஒதுக்கீட்டுக்கெதிரான உத்தரவு, ▪சமச்சீர் கல்வியின் முக்கியத்துவம் மற்றும் ▪தமிழ்நாடு மாணவர் கழகத்தை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் விவாதிக்கப்படுகின்றன. இக்கூட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்குகிறார் . ஆகவே தமிழ்நாடு மாணவர் கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் தவறாமல் கலந்துகொள்ளவும். தொடர்புக்கு : பாரி.சிவக்குமார், மாநில அமைப்பாளர் 9688310621. முகில், அமைப்பாளர், திருப்பூர் மாவட்டம் 9566835387. முகில் ராசு,திருப்பூர் மாவட்ட செயலாளர் (திவிக) 9842248174