Tagged: கோவை கலவரம்

தோழர் பாரூக் கோவையில் வரவேற்பு

75 நாள் சிறை வாசம் 23 சசிகுமார் கொலையினால் ஏற்படுத்தப்பட்ட கலவரத்தில் கடைக்கு சென்ற திவிக தோழர் பெயர் பாரூக் என்ற ஒற்றை காரணத்திற்காக நள்ளிரவில் கைது செய்ப்பட்டு சேலம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார் அடுத்த சிலதினங்களில் தோழர் மீது குண்டாஸ் பாய்ந்தது கடந்த மாதம் 8 ம் தேதி கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் சென்னையில் அறிவுரை குழுமத்தில் வாதாடினார் தோழருக்காக மட்டும் அல்லாமல் கோவையில் நடந்த கலவரத்தை அப்பட்டமாக்கினார் உடைந்தது குண்டாஸ் அனைவர் மீதும் தோழர் கலையரசன் வழக்குறைஞரால் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு இன்று பினையில் விடுதலை பெற்றார் தலைவருடன் தலைமைகழக அமைப்பாளர் இரத்தினசாமி தோழர்கள் பன்னீர்செல்வம், சேலம் மாவட்ட தோழர்கள், ஈரோடு தோழர்கள் அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவகாமி, கவிஞர்கனல்மதி, திருப்பூர் முகில்ராசு, சங்கீதா உள்ளிட்ட தோழர்கள் அனைத்து விதத்திலும் உதவிகரமாக இருந்த தோழர் நங்கவள்ளி கிருஷ்னன் ,திருசங்கோடு வைரவேல் உள்ளிட்ட தோழர்கள் அனைவருக்கும் வழக்கறிஞர்...

கழகத் தோழர் பாரூக் அவர்களின் சார்பாக கழகத் தலைவர் அறிவுரை கழகத்தில் வாதம் சென்னை 09112016

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் மரண ஊர்வலத்தில் இந்து முன்னணியினர் நடத்திய கலவரத்தின் போது, காவல்துறை சில இந்து முன்னணியினரை கைது செய்ததோடு, இந்து முன்னணியினரை சமாதானப்படுத்தும் நோக்கில் சில இஸ்லாமியரை கைது செய்தது . அதில் கோவையை சேர்ந்த பெயரில் மட்டுமே இஸ்லாமிய அடையாளம் உடைய இறை மறுப்பாளரான திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் “பாரூக் ” கையும் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தது. இந்து அமைப்புகள் தந்த அழுத்தத்தால் அவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பதிந்தது காவல்துறை. அவருக்கு வழங்கப்படும் சட்ட வாய்ப்பான அறிவுரை கழகத்தின் ( Advisory board) முன்பு ஆஜர் படுத்த , இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். ” பாரூக் ” சார்பாக அவர் பக்க நியாயங்களை அறிவுரை கழகத்தில் உள்ள முன்னாள் நீதிபதிகள் முன்பு எடுத்துரைக்க கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி “பாரூக்...

இந்து முன்னணி வன்முறை கும்பலை தடை செய்! திருப்பூரில் 2500 தோழர்கள் கைது!

தமிழகம் குஜராத்தாக மாறும் என அச்சுறுத்தும் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியத்தை கைது செய் என வலியுறுத்தி திருப்பூரில் காவல்துறையின் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற 2500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 30.09.16 வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட 32 அமைப்புகள் ஒருங்கிணைந்து பங்கேற்றன. மதபயங்கரவாதத்திற்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைத்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகத் தோழர்களுடன் கலந்து கொண்டு கைதானார். பல்வேறு ஊர்களில் இருந்து வந்து கழகத் தோழர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்தனர். கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கானோர் 3 திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டனர். அப்போது பேசிய பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் தமிழகத்தில் சமூக அமைதிக்கும், கடைகளுக்கு அச்சுறுத்தலாககலவரத்தை ஏற்படுத்தும் இந்து முன்னணியை தடை செய்யவும், அதன் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியத்தை கைது  செய்யவும் வலியுறுத்திப் பேசினர்.கோவையில்...

கோவை கலவரம் செய்த இந்து முன்னணியை தடை செய் – திருப்பூரில் ஆர்ப்பாட்டம் கழகத் தலைவர் உரை

கழக தலைவர் உரை! (காணொளியை காண சொடுக்கவும்) மதவாதத்திற்கெதிரான மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைத்த ஆர்ப்பாட்டம் 30.09.2016 அன்று மாலை திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் நடைபெற்றது. கலவரத்தில் ஈடுபட்டு பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இந்து முன்னணியை தடை செய்! தமிழகம் குஜராத் தாக மாறும் என அச்சுறுத்திய இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியை கைது செய் என வலியுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற 2500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு 3 திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டனர். அதில் ஒரு பகுதியினர் காவல் வைக்கப்பட்ட திருப்பூர் காதர் சலீமா திருமண மண்டபத்தில் கூடியிருந்த பல்வேறு அமைப்பு தோழர்கள் மத்தியில் கழக தலைவர் ஆற்றிய உரை.  

மாபெரும் எழுச்சியுடன் நடைபெற்ற திருப்பூர் ஆர்ப்பாட்டம்!

மாபெரும் எழுச்சியுடன் நடைபெற்ற திருப்பூர் ஆர்ப்பாட்டம்! 2500க்கும் மேற்பட்டோர் கைது ! இந்து முன்னணியை தடைசெய் ! தமிழகம் குஜராத்தாக மாறும் என அச்சுறுத்தும் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியத்தை கைது செய் என வலியுருத்தி திருப்பூரில் காவல்துறையின் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற 2500க்கும் மேற்பட்டோர் கைது ! 30.09.16 வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட 32 அமைப்புகள் ஒருங்கிணைந்து பங்கேற்றன. மதபயங்கரவாதத்திற்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைத்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கழக தோழர்களுடன் கலந்து கொண்டு கைதாகினார். பல்வேறு ஊர்களில் இருந்து வந்து கழக தோழர்கள் இந்த போராட்டத்தில் பங்கெடுத்தனர். கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கானோர் 3 திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டனர். அப்போது பேசிய பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் தமிழகத்தில் சமூக அமைதிக்கும்,...

கோவை மதவெறிக் கலவரத்துக்கு பச்சைக் கொடி காட்டிய காவல்துறை

கோவையில் இந்து முன்னணியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்த டி.சசிக்குமார் (35) என்பவர் 22.09.2016 அன்று இரவு அடையாளம் தெரியாத சிலரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தை யொட்டி கோவை மாவட்டம் முழுவதும் காலை முதல் இரவு வரை கடைகள் அடைக்க வைக்கப்பட்டது. இந்து முன்னணியினர் இருசக்கர வாகனங்களில் சென்று அதிகாலை முதலே கடைகளை அடைக்கச் சொல்லி மிரட்டிச் சென்றனர். காலை 9 மணி வரை பெரும்பகுதி அரசு, தனியார் பேருந்துகள் இயங்கின. பிறகு காலை 9 மணிக்கு மேல் பேருந்துகள் இயங்கவில்லை. கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டது, பள்ளிகள் கல்லூரிகள் மதியத்திற்குமேல் விடுமுறை அளிக்கப்பட்டது. வன்முறையாளர்கள் நகரம் முழுவதும் கலவரத்திலும், தாக்குதலிலும், சொத்துக்களை அழிப்பதிலும், வாகனங்களை கொளுத்துவதிலும், சூறையாடுவதிலும் ஈடுபட்டனர். மாவட்ட காவல்துறையினர் இந்த நிகழ்வுகளில் எல்லாம் உரிய முறையில் தடுக்கவோ, கலைக்கவோ நடவடிக்கை எடுக்காததோடு, சார்பு தன்மையோடும் நடந்து கொண்டனர். அதிகாலை முதல் கலவரச் சூழல் உருவாகும் என்று தெரிந்தும் நடவடிக்கை போதுமானதல்ல, பள்ளி...