கழக செயல்வீரர் செ.பத்ரிநாராயணன், 13ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, ஏப்.30 ஆம் தேதி சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் ஒரு நாள் குழந்தைகள் பழகு முகாமுக்கு ஏற்பாடு செய் திருந்தது. இராயப் பேட்டை இலாயிட்ஸ் சாலையில் உள்ள விஜய் திருமண மண்டபத்தில் நடந்த இந்த முகாமில் 40 குழந்தைகள் பங்கேற்றனர். தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் வீ. சிவகாமி சமூக கல்வி நிறுவனத்தைச் சார்ந்த ஜெ. சியாம்சுந்தர், மோனிக்கா ஆகியோர் குழந்தைகளுக்கு கூடிப் பழகுதல், விளையாட்டு, ஓவியம், அறிவியல் குறித்த பயிற்சிகளை வழங்கினர். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், வழக்கறிஞர் துரை, அருண், ஜெ. சியாம் சுந்தர் ஆகியோர் பயிற்சி பெற்ற குழந்தைகளுக்கு சான்றிதழ்களை வழங்கினர். காலை 11 மணியளவில் தொடங்கிய பயிற்சி, மாலை 6 மணி வரை நீடித்தது. பெரியார் முழக்கம் 11052017 இதழ்
“கழக செயல் வீரர்” தோழர் செ.பத்ரி நாராயணன் அவர்களின் 13ஆம் ஆண்டு நினைவு நாள்…. ” ஒரு நாள் குழந்தைகள் பழகு முகாம்” வருகிற ஏப்ரல் 30 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெறவிருக்கிறது…. இடம் : விஜய் திருமண மண்டபம், லாயிட்ஸ் சாலை, இராயப்பேட்டை, சென்னை -600014 பயிற்சியாளர்கள் : ஆசிரியர்.வீ.சிவகாமி, தமிழ்நாடு அறிவியல் மன்றம். தோழர்.ஜெ.சியாம் சுந்தர், சமூக கல்வி நிறுவனம். சிறப்பு அழைப்பாளர் : தோழர்.விடுதலை இராசேந்திரன் பொதுச் செயலாளர், திவிக வருங்கால இளைய சமுதாய தோழர்கள், தோழிகள் அனைவரும் பங்கேற்று பயன்பெற வாரீர்….. குறிப்பு : * காலை 8 மணியளவில் தோழர்.செ.பத்ரி நாராயணன் அவர்களின் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்த இயக்கம் சார்ந்த தோழர்கள் அனைவரும் வரவும்….. திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363
குழந்தைகளுக்காக 5 நாள் அறிவியல் முகாம் கலை நிகழ்வுகளோடு அறிவுத் திறன் பெற்ற குழந்தைகள் கண்ணீருடன் பிரியா விடை தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின் நான்காம் ஆண்டு குழந்தைகள் பழகு மகிழ்வு முகாம் 20.05.2016 முதல் 24.05.2016 முடிய திண்டுக்கல் காட்டுமடத்தில் உள்ள ஐ.சி.எம். ஹவுசில் நடை பெற்றது. திருப்பூர், கோவை,மேட்டூர், தஞ்சாவூர், நாகை,மதுரை, போன்ற மாவட்டங்களிலிருந்து 42 குழந்தைகள்கலந்து கொண்டனர்.19.05.2016 மாலையே பெரும்பாலான குழந்தைகள் முகாம் நடக்கும் இடத்திற்கு வந்துவிட்டனர். 20.5.2016 : முதல்நாள் காலை குழந்தைகளின் பெயர் முகவரி பதிவு செய்யப்பட்டது. மதுரை யாழினி நிகழ்வுகளை தொடங்கி வைத்தார். பயிலரங்க அறிமுகம் நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின் நோக்கம், செயல்பாடுகள், தனித் தன்மைகளை விளக்கி ஆசிரியர் சிவகாமி பயிலரங்கை அறிமுகம் செய்தார். பின்னர் குழந்தைகள் ஒருவர் மற்றொருவரைப் பற்றி அறிமுகம் செய்து கொள்ளும் விதமாக சுய அறிமுகம் வகுப்பு விளையாட்டு முறையில் நடத்தப்பட்டது. இவ்வகுப்பினை சந்திரமோகன் மற்றும் நீலாவதி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். பிற்பகல்...
பிரியாவிடை ! கண்ணீர் மல்க பிரிந்து செல்லும் குழந்தைகள் ! ”குழந்தைகள் பழகு மகிழ்வு முகாம் – 2016” தமிழ்நாடு அறிவியல் மன்றம் 20.05.2016 முதல் 24.05.2016 முடிய 5 நாட்கள் திண்டுக்கல்,ஐ.சி.எம். ஹவுசில் நடத்திய ”குழந்தைகள் பழகு மகிழ்வு முகாம் – 2016” ல் பங்கேற்ற குழந்தைகள் முகாம் நிறைவுற்று தத்தமது இல்லம் திரும்பும் போது கண்ணீர் மல்க சக நண்பர்களுக்கு பிரியாவிடை கொடுத்த நெகிழ்ச்சியான நிகழ்வு. 42 குழந்தைகள் பங்கேற்புடன் இம்முகாம் மிகவும் உற்சாகமாகவும், மகிழ்சியுடனும் நடைபெற்றது.
திண்டுக்கல்,ஐ.சி.எம். ஹவுசில் 20.05.2016 முதல் 24.05.2016 முடிய 5 நாட்கள் நடைபெற்ற குழந்தைகள் பழகு மகிழ்வு முகாம் 42 குழந்தைகள் பங்கேற்புடன் சிறப்புடன் நடைபெற்றது. பல்வேறு தலைப்புகளில் கருத்துக்கள் பகிரப்பட்ட இப்பழகு முகாமில் ”விமர்சன சிந்தனை மற்றும் பாலின சமத்துவம்” குறித்து தோழர் பூங்குழலி கருத்துரைத்தார். கதை சொல்லல் மற்றும் கதை உருவாக்கல் ஆகியவற்றை தோழர்கள் கோவை வெங்கட்,திருப்பூர் சதீஸ்குமார் ஆகியோர் நிகழ்த்தினர். ”நாடகம் மற்றும் திறன் வளத்தல் ”குறித்த கருத்துக்களை தோழர் சந்திரமோகன் அவர்களும்,”இளம் பருவத்தினருக்கான சவால்கள்” வகுப்பினை தோழர் நீலாவதி அவர்களும், ”வாசிப்பும்,விமர்சனமும்” வகுப்பினை தோழர் சிவகாமி அவர்களும் வழி நடத்தினர். சமூக சிற்பிகள் அறிமுகத்தினை தமிழ்செல்வன் அவர்களும், மீளாய்வுகளை மணிமாறன் அவர்களும் நெறிப்படுத்தினர்.ஓவிய வகுப்புகளுக்கு சிகரன்,பாடல் வகுப்புகளுக்கு யாழினி ஆகியோரும் பொறுப்பேற்று நடத்தினர். சித்தன்னவாசல் புதுக்கோட்டை அருங்காட்சியகம் ஆகிய இடங்களுக்கு குழந்தைகள் சுற்றுலா அழைத்துச்செல்லப்பட்டனர். அறிவிற்கும் மன வளர்ச்சிக்குமான செய்திகளும்,கொண்டாட்டமும் நிறைந்த இம்முகாம் இனிதே நிறைவடைந்தது. இறுதி...
திராவிடர் விடுதலைக்கழக தலைமைக் குழு 7.1.2016 அன்று காலை 11 மணியளவில் சென்னை கழக தலைமையகத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் கூடியது. ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ உறுப்பினர் சேர்க்கை, கழகம் நடத்திய பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடுகள் குறித்த மீளாய்வு, 27 சதவீத பிற்படுத்தப் பட்டோர் இடஒதுக்கீடு முழுமையாக நிரப்பப்படாத நிலை, அர்ச்சகர் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பேரறிவாளன் உள்ளிட்ட நீண்டகால சிறைவாசிகள் விடுதலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன. இறுதியாக கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1. 24.1.2016 அன்று திருச்சியில் கழக செயலவைக் கூட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டது. 2. ஏப்ரல் மாதம் அறிவியல் மன்றம் சார்பில் மதுரையில் 5 நாள் குழந்தைகள் பழகு-மகிழ்வு முகாம் நடத்தவும், கழகக் குடும்பப் பெண்களோடு சந்தித்து கருத்துகளை பகிர்ந்து கொள்ளும் மகளிர் சந்திப்பு களையும், மாவட்டந்தோறும் குழந்தை களுக்கு ஒரு நாள் பயிற்சிகளையும்...
குழந்தைகள் பழகு மகிழ்வு முகாம்: பங்கேற்பாளர்களுக்கு வேண்டுகோள் தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின் சார்பாக கோடை விடுமுறைக் காலத்தில் கொடைக்கானலில் குழந்தைகள் பழகு மகிழ்வு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மே மாதம் 15 முதல் 19 வரை 5 நாள்கள் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 8 வயது முதல் 16 வயது வரை உள்ள குழந்தைகள் பங்கேற்கலாம். 5 நாள்களுக்கு உணவு தங்குமிடம், சுற்றுலா உள்பட ரூ.1000 மட்டும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பங்கேற்க விரும்புவோர் ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். முகாமிற்கு குழந்தைகளை அனுப்பும் பெற்றோர்கள் கவனத்திற்கு: பயிற்சி நடைபெறும் இடம் : கொடைக்கானல் வரவேண்டிய இடம் : திண்டுக்கல் பேருந்து நிலையம் வரவேண்டிய நேரம் : 14.05.2014 புதன் கிழமை 4 மணிக்குள் திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு வந்துவிட வேண்டும். அங்கிருந்து கொடைக்கானலுக்கு குழந்தைகளை மட்டும் தனிப் பேருந்தில் நாங்களே அழைத்துச்...