தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்திய ”குழந்தைகள் பழகு மகிழ்வு முகாம் – 2016 ”
திண்டுக்கல்,ஐ.சி.எம். ஹவுசில் 20.05.2016 முதல் 24.05.2016 முடிய 5 நாட்கள் நடைபெற்ற குழந்தைகள் பழகு மகிழ்வு முகாம் 42 குழந்தைகள் பங்கேற்புடன் சிறப்புடன் நடைபெற்றது.
பல்வேறு தலைப்புகளில் கருத்துக்கள் பகிரப்பட்ட இப்பழகு முகாமில் ”விமர்சன சிந்தனை மற்றும் பாலின சமத்துவம்” குறித்து தோழர் பூங்குழலி கருத்துரைத்தார்.
கதை சொல்லல் மற்றும் கதை உருவாக்கல் ஆகியவற்றை தோழர்கள் கோவை வெங்கட்,திருப்பூர் சதீஸ்குமார் ஆகியோர் நிகழ்த்தினர்.
”நாடகம் மற்றும் திறன் வளத்தல் ”குறித்த கருத்துக்களை தோழர் சந்திரமோகன் அவர்களும்,”இளம் பருவத்தினருக்கான சவால்கள்” வகுப்பினை தோழர் நீலாவதி அவர்களும், ”வாசிப்பும்,விமர்சனமும்” வகுப்பினை தோழர் சிவகாமி அவர்களும் வழி நடத்தினர்.
சமூக சிற்பிகள் அறிமுகத்தினை தமிழ்செல்வன் அவர்களும், மீளாய்வுகளை மணிமாறன் அவர்களும் நெறிப்படுத்தினர்.ஓவிய வகுப்புகளுக்கு சிகரன்,பாடல் வகுப்புகளுக்கு யாழினி ஆகியோரும் பொறுப்பேற்று நடத்தினர்.
சித்தன்னவாசல் புதுக்கோட்டை அருங்காட்சியகம் ஆகிய இடங்களுக்கு குழந்தைகள் சுற்றுலா அழைத்துச்செல்லப்பட்டனர். அறிவிற்கும் மன வளர்ச்சிக்குமான செய்திகளும்,கொண்டாட்டமும் நிறைந்த இம்முகாம் இனிதே நிறைவடைந்தது.
இறுதி நாளன்று தோழர் கொளத்தூர் மணி அவர்களால் சான்றிதழ், புகைப்படம்,புத்தகம்,கோப்பு ஆகியவை குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. புகைப்படங்கள் மற்றும் ஒளிப்பதிவு செய்யும் பணியை தோழர் தனகோபால் அவர்கள் மேற்கொண்டார்.திருப்பூர் தென்றல் அவர்கள் விளையாட்டு வகுப்புகளை நெறிப்படுத்தினார். ஒரு நாள் மதிய உணவு வழக்கறிஞர் திண்டுக்கல் ஆனந்தன் அவர்களால் வழங்கப்பட்டது.
முகாமின் வரவு செலவு அறிக்கை கலந்து கொண்ட குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.