Tagged: காஞ்சி மக்கள் மன்றம்

மாட்டிறைச்சி தடைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் காஞ்சிபுரம் 21062017

மாட்டுக்கறியை தடைக்கு தடை விதிக்கும் மதவாத மோடி அரசைக் கண்டித்து…. பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவில் ஒன்றை பண்பாட்டை திணிக்க முயற்சிக்கும் மோடி அரசே.! மாட்டுக்கறி மீதான தடை நீக்கப்படவில்லை எனில் திராவிட நாடு மலர்ந்தே தீரும்.! என்ற கண்டன முழக்கத்தோடு காஞ்சி மக்கள் மன்றம் சார்பாக காஞ்சிபுரம், தாலுக்கா அலுவலகம் எதிரில்…திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர்.இரா.உமாபதி (சென்னை மாவட்ட செயலாளர்) மற்றும் இயக்க தோழர்களும் இணைந்து இன்று (21.06.2017) காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோழர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு காஞ்சிபுரம் யாதவ சாஷில பரிபரன சபை மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

காஞ்சி மக்கள் மன்றத்தில் செங்கொடி நினைவு நாள்

காஞ்சி மக்கள் மன்றத்தில் செங்கொடி நினைவு நாள்

மூன்று தமிழர்களின் தூக்குத் தண்டனையை இரத்து செய்யக் கோரி தீக்குளித்து உயிர் நீத்த தோழர் செங்கொடியின் முதலாம் ஆண்டு நினை வேந்தல் நிகழ்ச்சி 28.8.2012 செவ்வாய் கிழமை அன்று காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தில் நடைபெற்றது. அன்று காலை 8 மணிக்கு திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மக்கள் மன்ற கொடியினை ஏற்றி வைத்தார். காலை 10 மணிக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வை.கோ. வந்திருந்து நினைவுச் சுடரையேற்றி நினைவேந்தல் உரையாற்றினார். தொடர்ந்து பல்வேறு இயக்கங்களின் தலைவர்கள், பொறுப்பாளர்கள் அஞ்சலி செலுத்திச் சென்றனர். மாலை 6 மணிக்கு நினைவேந்தல் பொதுக் கூட்டம் பறை ஆட்ட நிகழ்ச்சியுடன் தொடங்கியது. காஞ்சி மக்கள் மன்றப் பொறுப்பாளர் மகேஷ் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து சிறுவர்களின் நடனம், கவிதை, இடையிடையே உரை என்று நடைபெற்றது. ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா உரையாற்றி முடிந்ததும் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. எனவே கூட்டம் தடைபட்டது. திராவிடர்...

காஞ்சி மக்கள் மன்றத்தில் மாவீரர் நாள்

காஞ்சி மக்கள் மன்றத்தில் மாவீரர் நாள்

காஞ்சி மக்கள் மன்றத்தின் பொது வாழ்வக வளாகத்தில் நவம்பர் 26 அன்று மேதகு பிரபாகரன் பிறந்த நாளும் அன்று மாலையிலிருந்து நவம்பர் 27 வரை மாவீரர் நாளும் புரட்சிகர பாடல்கள் கருத்துரைகளுடன் நடைபெற்றன. நவம்பர் 26ஆம் தேதி காலை செங்கொடி நினைவகத்துக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. காலை 8 மணிக்கு புலிக்கொடியை பேராசிரியர் சரசுவதி ஏற்றினார். மாலையில் கலை நிகழ்ச்சி மற்றும் கருத்துரை நிகழ்வுகள் இடம் பெற்றன. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தமிழர் வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், இயக்குனர் களஞ்சியம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு உள்ளிட்ட பலரும் வீரவணக்க உரையாற்றினர்.  

தோழர் செங்கொடி நினைவு நாள் !

மரண தண்டனைக்கு எதிராக 3 தமிழர் உயிர்காக்க தன்னுயிரை ஈந்த தோழர் செங்கொடியின் 5 ஆம் ஆண்டு நினைவு நாள் 28.08.2016 அன்று காஞ்சிமக்கள் மன்றத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கழக தலைவர்,கழக பொதுச்செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். தோழர்கள் வேல்முருகன்,இயக்குனர்கள் மு.களஞ்சியம்,ஜோக்கர் பட இயக்குனர் ராஜு முருகன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு உரையாற்றினர்.

பெரியார் விழா : காஞ்சி மாநகர் குலுங்கியது

செப்.17 அன்று காஞ்சியில் பெரியார் பிறந்த நாள் ஒருங்கிணைப்புக் குழு, பெரியார் பிறந்த நாள் விழா பேரணியையும், பொதுக் கூட்டத்தையும் எழுச்சியுடன் நடத்தியது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். காஞ்சி மாநகரையே கலக்கிய பேரணி-பொதுக் கூட்டக் காட்சிகள்.