Tagged: கலைஞர்

ஆச்சாரியார் அரசுக்கு குவிந்த புகார் மனுக்கள் கலைஞரின் பராசக்தி உருவாக்கிய புயல்! எம்.எஸ்.எஸ்.பாண்டியன் (தமிழில் வீ.எம்.எஸ்.சுபகுணராஜன்)

(கலைஞர் -சட்ட மன்றத்தில் 60 ஆண்டுகள் பணியாற்றியுள்ள சாதனை 94ம் அகவையில் அடி எடுத்து வைக்கும் அவரது நீண்ட பொதுவாழ்வு குறித்து தமிழினம் பாராட்டி மகிழும் நிலையில் கலைஞரின் திரைக்கதை வடிவத்தில் உருவாகிய 1952ல் வெளிவந்த ‘பராசக்தி’ திரைப்படம் சந்தித்த எதிர்ப்புகளை ஆழமாக பதிவு செய்யும் கட்டுரை இது. இளைய தலைமுறைகளுக்கு திராவிடர் இயக்கங்கள் சந்தித்த எதிர் நீச்சல் களையும் அக்காலத்தில் நிலவிய சமூக சூழலையும் உணர்த்துகிறது இந்த ஆய்வு கட்டுரை; கட்டுரையின் முதல்பகுதி.) 1952ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், அன்றைய ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின் பிரதமர் சி.ராஜகோபாலாச்சாரிக்குத் ‘தமிழன்” என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட ஒருவரிடமிருந்து நாளிடப்படாத கடிதம் ஒன்று வந்தது. கவனமாகத் தேர்வு செய்யப்பட்ட ‘தமிழன்” என்னும் புனை பெயரில், கடிதம் எழுதியவர் தன் நிஜ உலக அடையாளத்தை மறைத்துத் தமிழினத்தின் பிரதிநிதியாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். அக்கடிதம் அக்டோபர் 17, 1952 தீபாவளி தினத்தன்று தி.மு.க கொள்கைகளின்...

கழகத் தலைவர், பொதுச் செயலாளர் கலைஞர் இல்லம் சென்று நலம் விசாரித்தனர்

தமிழினத்தின் மூத்த தலைவர் கலைஞர் உடல் நலம் விசாரிக்க கழகத் தலைவர் பொதுச் செயலாளர் ஜன. 2ஆம் தேதி, பகல் 11 மணியளவில் கலைஞரின் இல்லமான கோபாலபுரம் சென்றனர். தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் வரவேற்றார். முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, இராசா, எ.வ. வேலு, மருத்துவர் எழிலன் ஆகியோர் உடனிருந்தனர். கழகத்தின் வெளியீடுகள் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் முன்னாள் அமைச்சர்களுக்கும் வழங்கப்பட்டன. தலைமைக் கழகச் செயலாளர் தபசி. குமரன், சென்னை மாவட்ட செயலாளர் இரா. உமாபதி, தலைவர் வேழவேந்தன், செயலவை உறுப்பினர் அன்பு தனசேகரன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் உடன் சென்றிருந்தனர். பெரியார் முழக்கம் 05012017 இதழ்

கலைஞர் குறித்து வைகோவின் பேட்டியை  திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது

கலைஞர் குறித்து வைகோவின் பேட்டியை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது

மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ‘வைகோ’ சென்னையில் அளித்த பேட்டியில் தி.மு.க. தலைவர் கலைஞர் பற்றி, அவர் பிறந்த ‘ஜாதி’யை மறைமுகமாக சுட்டிக்காட்டி வெளியிட்ட கருத்தை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது. அவர் வெளியிட்ட கருத்துகள் மிகவும் அதிர்ச்சியளித்தன. ‘வாழ்நாளில் செய்த பெரிய குற்றம், மன்னிப்புக் கோருகிறேன்’ என்று வைகோ உடனடியாக வருத்தம் தெரிவித்ததை ஒரு நல்ல முன் மாதிரியாகக் கருதி வரவேற்றாலும், அடிமனதில் ஆழமாக ஊறிருக்கும் உணர்வுகள்தான் ஆவேசம் கொள்ளும்போது, இயல்பாகவே வெளிவரும் என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும். மனித குலத்தின் மிகப் பழமையான தொழில் என்று ‘பாலியல் தொழில்’ செய்வோரை சுட்டி, வைகோ இழிவாகப் பேசியதற்காக கலைஞரிடம் மன்னிப்புக் கேட்டதைப்போல், பெண்களிடமும் அவர் மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டும் என்பதே நமது கருத்து. 1929ஆம் ஆண்டு செங்கல்பட்டில் முதல் சுயமரியாதை மாநாட்டை நடத்திய பெரியார், மாநாட்டுக்கு மக்களை அழைத்தபோது, “தனிப்பட்ட ஸ்திரீகளும் தங்களை விதவைகள் என்றோ, வேசிகள் என்றோ நினைத்துக்...

திமுக தலைவர் கலைஞர் உடல்நலத்தை கழகத் தலைவர் விசாரிப்பு சென்னை 02012017

கலைஞரின் உடல் நலம் விசாரிப்பதற்காக அவர் இல்லம் சென்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் மற்றும் கழகத் தோழர்கள் இன்று சென்றார்கள். அப்போது திமுக பொருளாளர் வரவேற்றார். அவருடன் முன்னாள் அமைச்சர் ஆ.இராசா, பொன்முடி இருந்தார்கள்.      

கலைஞர் குறித்து வைகோவின் பேட்டியை திவிக வன்மையாகக் கண்டிக்கிறது.

மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ‘வைகோ’ சென்னையில் அளித்த பேட்டியில் தி.மு.க. தலைவர் கலைஞர் பற்றி, அவர் பிறந்த ‘ஜாதி’யை மறைமுகமாக சுட்டிக்காட்டி வெளியிட்ட கருத்தை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது. அவர் வெளியிட்ட கருத்துகள் மிகவும் அதிர்ச்சியளித்தன. ‘வாழ்நாளில் செய்த பெரிய குற்றம், மன்னிப்புக் கோருகிறேன்’ என்று வைகோ உடனடியாக வருத்தம் தெரிவித்ததை ஒரு நல்ல முன் மாதிரியாகக் கருதி வரவேற்றாலும், அடிமனதில் ஆழமாக ஊறிருக்கும் உணர்வுகள்தான் ஆவேசம் கொள்ளும்போது, இயல்பாகவே வெளிவரும் என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும். மனித குலத்தின் மிகப் பழமையான தொழில் என்று ‘பாலியல் தொழில்’ செய்வோரை சுட்டி, வைகோ இழிவாகப் பேசியதற்காக கலைஞரிடம் மன்னிப்புக் கேட்டதைப்போல், பெண்களிடமும் அவர் மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டும் என்பதே நமது கருத்து. 1929ஆம் ஆண்டு செங்கல்பட்டில் முதல் சுயமரியாதை மாநாட்டை நடத்திய பெரியார், மாநாட்டுக்கு மக்களை அழைத்தபோது, “தனிப்பட்ட ஸ்திரீகளும் தங்களை விதவைகள் என்றோ, வேசிகள் என்றோ நினைத்துக்...

வினாக்கள்… விடைகள்…!

வினாக்கள்… விடைகள்…!

நான்கு மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரசை எழுப்புவதற்கான அலாரமா? காங்கிரசை அப்படி எழுப்பிவிடத்தான் முடியுமா?   – அமர்த்தியாசென் இதற்கு நீங்களே விடை கூறிவிட்டால், மற்றொரு நோபல் பரிசை தட்டிக்கொண்டு போய் விடலாம், சார். பிணையில் விடுதலையான லாலுபிரசாத், சாமி தரிசனத்துக்குப் போனபோது,  ஒரு போலீஸ் அதிகாரி, லாலு கால்களைக் கழுவினார். ஜார்கண்ட் அரசு விசாரணைக்கு உத்தரவு.   – செய்தி அதெல்லாம் சுத்தமாகத்தான் கழுவி இருப்பார். நம்புங்கள். இதற்கெல்லாம் விசாரணையா? நம்மால் என்ன செய்ய முடியுமோ அதைத்தான் தேர்தல் பிரச்சாரத்தின் போது கூற வேண்டும்.  – மன்மோகன்சிங் “பொருளாதார நெருக்கடி தற்காலிகமானது தான்; விரைவில் சரியாகி விடும்” என்ற நம்மால் செய்ய முடிந்த கொள்கையை அப்படியே சரியாகச் சொல்லணும்! ஆமாம். இறை நம்பிக்கைதான் முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும்!  – ஜெயலலிதா பேச்சு அதனால என்னங்க பயன்? இறை நம்பிக்கை எதிர்க்கட்சிகளையே இல்லாமல் ஒழிக்குமா? அதைச் சொல்லுங்க. மகாராஷ்டிரா காங்கிரஸ் ஆட்சி வீட்டுவசதி வாரிய ஊழல் விசாரணை...

வினாக்கள்… விடைகள்…!

வினாக்கள்… விடைகள்…!

அமைச்சர்கள் – தலைவர்களின் குடும்ப வாரிசு களுக்கு தேர்தலில் போட்டியிட, காங்கிரஸ் அனுமதிக்காது.       – ராகுல் அறிவிப்பு நல்ல முடிவு! அம்மா சோனியா, சகோதரி பிரியங்காவிடம் கலந்து ஆலோசித்தீர்களா, ராகுல்? மோடி எனக்கு சிறந்த நண்பர்.    – கலைஞர் ஆமாம்! திருவாரூரில் ‘முரசொலி’யை கையெழுத்துப் பிரதியாக வெளியிட்டபோது கலைஞரின் பேனாவில், மை நிரப்பிக் கொடுத்து எழுது எழுது என்று உற்சாக மூட்டிய நண்பர் ! ‘கருணை மனு’ குறித்து குடியரசுத் தலைவர் எடுக்கும் முடிவில் எந்த மறுபரிசீலனைக்கும் இடமில்லை.    – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு இப்படி மொட்டையா சொன்னா எப்படி? அதாவது சோனியா விருப்பப்படி உள்துறை அமைச்சர் முடிவெடுத்து, அதை குடியரசுத் தலைவர் வழியாக வெளியிடும் அறிவிப்பில் உச்சநீதிமன்றமேயானாலும் தலையிடும் உரிமையே கிடையாது என்று விளக்கமாகச் சொல்லுங்க! அப்பத்தானே புரியும்! இராணுவ வீரர்கள் ஒவ்வொருவரும் பா.ஜ.க.வை ஆதரிக்க வேண்டும்; பா.ஜ.க.வில் இணைந்த முன்னாள் தளபதி வி.கே.சிங் அழைப்பு.              – செய்தி...

வினாக்கள்… விடைகள்…!

வினாக்கள்… விடைகள்…!

ஈ.வெ.கி.எஸ். இளங்கோவன் அணியிலிருந்த மொடக்குறிச்சி முன்னாள் சட்டமன்ற உறுப் பினர் ஆர்.எம். பழனிச்சாமி, அமைச்சர் சிதம்பரம் அணியில் சேர்ந்தார்.  – தினமலர் செய்தி இனி எதிர்காலத்தில் இளங்கோவன் அணி யுடன் கூட்டணியோ, தொகுதிப் பங்கீடோ கிடையாது என்று பேட்டி அளித்தாரா? தன்னை ஒரு டீக்கடைக்காரர் என்று கூறிக் கொள்ளும் மோடிக்கு, ஹெலிகாப்டரில் பயணம் செய்ய எங்கிருந்து பணம் வந்தது?  – கெஜ்ரிவால் கேள்வி இது என்ன கேள்வி? ‘சாமான்யன்’ மோடிக்கு, ‘சாமான்யர்’ அம்பானி உதவிடக் கூடாதா? மனிதாபிமானம் இல்லாமல் பேசக் கூடாது. திருவனந்தபுரம் விரைவு ரயிலில் பயணம் செய்த முதியவரின் கையை எலி கடித்ததால் ரயில் ஈரோட்டில் 30 நிமிடம் தாமதமாகப் புறப்பட்டது.    – செய்தி எல்லா இரயில்களிலும் எலிகளுக்காக நான்கு ஏ.சி. கோச்சுகளை தனியாக ஒதுக்கியிருந்தா, இந்தப் பிரச்சினை வந்திருக்காதுல்ல. ஒருபோதும் சுயமரியாதையை விட்டுக் கொடுக்க முடியாது.    – தா. பாண்டியன் ஆமாம்! விட்டுக் கொடுக்கவே கூடாது. அது சரி; நீங்கள்...

வினாக்கள்… விடைகள்…!

வினாக்கள்… விடைகள்…!

மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர், தான் போட்டியிடும் கர்நாடக-கோலார் தொகுதியில் வாக்குப் பதிவு எந்திரத்தை வாஸ்து சாஸ்திரப்படி திருப்பி வைத்து வாக்களித்தார்.   – செய்தி தண்டவாளத்தில் ஓடும் ரயில் என்ஜினையும் வாஸ்துப்படி திருப்பி விடாதீங்கய்யா…. மத்தியில் ஆட்சிக்கு வந்தால் காங்கிரஸ் அமைச்சரவையில் தி.மு.க.வை சேர்க்க மாட்டோம்.  – ஈ.வெ.கி.எஸ். இளங்கோவன் தேர்தலை சந்திக்காமலேயே அமைச்சரவை அமைக்க புதுசா ஏதோ வழி கண்டுபிடிச்சிருக்கார் போலிருக்கு. சாதாரண மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய கார்த்தி சிதம்பரத்துக்கு வாக்களியுங்கள்.  – ப. சிதம்பரம் ‘கார்ப்பரேட்’ கம்பெனி தேவைகளை நான் பூர்த்தி செய்துவிட்டேன்; இனி எனது மகன், சாதாரண மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வந்திருக்கிறார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களை திருடிவிட்டது பா.ஜ.க.  – மத்திய அமைச்சர் ஆனந்த் வர்மா புரியுது; எங்களுக்கு ஒரே கொள்கைதான்னு சொல்ல வர்றீங்க. அதை ஏன் இவ்வளவு ஆத்திரத்தோடு சொல்றீங்க? இந்தத் தேர்தலில் வாக்களிக்காதவர்களை அடுத்த தேர்தலில்...

தலையங்கம்: ‘ஏழு தமிழர் விடுதலை’யை அரசியலாக்குவதா?

தலையங்கம்: ‘ஏழு தமிழர் விடுதலை’யை அரசியலாக்குவதா?

உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி மாண்புமிகு சதாசிவம் கோவையில் 18-04-2014 அன்று நடைபெற்ற நீதிபதிகளின் மாநாட்டின் முடிவில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரின் விடுதலை குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் “வழக்கின் தீர்ப்பினை ஒரு வாரத்திற்குள் (தான் ஓய்வு பெறும் நாளுக்கு முன்னதாக) வழங்கப்படும், அதுவரைப் பொறுத்திருங்கள்” எனக் கூறியுள்ளார். அவரது பதவிக்காலம், அவரது பிறந்த நாள் அடிப்படையில் 26-04-2014 – உடன் நிறைவடைகிறது. அந்த அடிப்படையில் 25-04-2014க்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்றும், அதுவரை பொறுத்திருங்கள் என்றும் கூறியுள்ளார். அவர் பேட்டியில் கூறியிருக்காவிட்டாலும், எந்த ஒரு நீதிபதியும் தான் விசாரித்த வழக்குகளின் தீர்ப்பை, தான் ஓய்வு பெறுவதற்கு முன்னதாக வழங்குவது என்பது மரபான ஒன்றுதான். ஆனால் ஏதோ 24-04-2014 அன்று தமிழ்நாட்டில், நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு நடைபெறுவதைக் கணக்கில் கொண்டே, பேட்டி கொடுக்கப்பட்டதைப் போல, தலைமை நீதிபதியின் இயல்பான பேட்டியை விமரிசனம் செய்து தி.மு.க. தலைவர் கலைஞர்...