Tagged: எழுவர் விடுதலை

7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி எழுச்சிப் பேரணி !

பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய முன் வந்த தமிழக அரசின் முடிவை நிறைவேற்றக் கோரி ஜூன் 11ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில் சென்னையில் கோரிக்கை பேரணி எழுச்சியுடன் நடந்தது. 7 தமிழர் விடுதலைக்கான கூட்டியக்கம் சார்பில் இராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் தொடங்கிய பேரணி, பிற்பகல் 3.30 மணியளவில் எழும்பூர், லேங்ஸ் தோட்டம் அருகே முடிவடைந்தது. பேரணி யில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி , பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்களும், தமிழகம் முழுதுமிருந்தும் ஏராளமான கழகத் தோழர்களும், புதுவை கழகத் தோழர்களும் பங்கேற்றனர். வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல் முருகன், அற்புதம் அம்மாள், த.பெ.தி.க. பொதுச் செயலாளர் கோவை இராம கிருட்டிணன், பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாஸ், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்தியா, வி.சி.க. செய்தித் தொடர்பாளர் வன்னியரசு உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும்,...

ஏழு தமிழர் விடுதலை கோரி வாகன பேரணி – ஜூன் 11 வேலூர்

கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை : ”ஏழு தமிழர் விடுதலை கோரி ஜூன் 11 ஆம் தேதி காலை 8 மணிக்கு வேலூர் சிறைச்சாலை முன்பு துவங்கி சென்னை கோட்டை வரை நடைபெற உள்ள வாகன பேரணியில் திராவிடர் விடுதலைக் கழகமும் தன்னை இணைத்துக் கொள்கிறது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு 25 ஆண்டுகளாக சிறையில் வாடும் 7 தமிழர்களை விடுவிக்க கோரி இப்பேரணி நடைபெறுகிறது. 25 ஆண்டுகளாக தன் மகனுக்காக மட்டுமல்லாமல் அனைத்து சிறைவாசிகளுக்காகவும் நீண்டதொரு மனித உரிமைப் போராட்டத்தை நடத்திவரும் அற்புதம் அம்மாள் அவர்கள் தலைமையில் 7 தமிழர் விடுதலை கூட்டியக்கம் ஒருங்கிணைக்கும் இந்த பேரணியை 7 பெண்கள் துவங்கி வைக்கின்றனர். சரியாக 25 ஆண்டுகளுக்கு முன் இதே ஜூன் 11 ஆம் தேதி ராஜீவ் காந்தி கொலை வழக்கு சம்பந்ததமாக காவல்துறை விசாரணைக்கு...

தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு கோரிக்கை 31032016 சென்னை

தமிழக அரசியல் கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள் யாவும் ஒருமனதாக ஏற்று வலியுறுத்தவும், அரசியல் கட்சிகள் தமது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளாக இடம்பெறச் செய்யவும் பின்வரும் கோரிக்கைகளைத்  தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பில் முன்மொழிகிறோம். கோரிக்கைகள்: 1)                  இராசீவ் காந்தி கொலை வழக்கில் இருபத்தைந்து ஆண்டு காலமாகச் சிறையில் வாடி வரும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயஸ், செயக்குமார், இரவிச்சந்திரன் ஆகிய எழுவரையும் தமிழக அரசே அரசமைப்புச் சட்ட உறுப்பு 161இன் படி தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி உடனே விடுதலை செய்ய வேண்டும். கிட்டத்தட்ட இருபதாண்டு காலத்துக்கு மேல் ஆயுள் சிறைத் தண்டனை அனுபவித்தும் கூட இசுலாமியர்கள் என்பதற்காகவே எவ்விதத் தண்டனைக் குறைப்பும் தண்டனைக் கழிவும் வழங்கப் பெறாமல் தமிழகச் சிறைகளில் விடுதலை வாய்ப்பே இல்லாமல் அடைபட்டுக் கிடக்கும் இசுலாமிய சிறைக்கைதிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும். குற்ற நடைமுறைச்சட்டத்தின்...

சென்னை பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு 31032016

தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பாக திவிக தலைவர் கொளத்தூர் மணி, தபெதிக பொது செயலாளர் கோவை இராமகிருஷ்ணன், தவாக நிறுவனர் வேல்முருகன், விசிக செய்தி தொடர்பாளர் வன்னியரசு, பேராசிரியர் சரசுவதி, திருமுருகன் காந்தி, பாக்கர், சுப.உதயகுமார், மணியரசன், செந்தில், புகழேந்தி, சந்தானம், தோழர் தியாகு மற்றும் ஒத்த கருத்துடைய தோழர்கள் இன்று 31032016 மதியம் 12.30 மணியளவில் சென்னை பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. இதில் 1.முகாமிலிருக்கும் ஈழத் தமிழருக்கு பாதுகாப்பு. 2.ஏழுவர் விடுதலை. 3.ஜாதி ஆணவ கொலைகளுக்கு தனி சட்டம் இயற்றுதல். இவற்றை உள்ளடக்கி நடை பெற்றது. செய்தி குகநந்தன் லிங்கம்