7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி எழுச்சிப் பேரணி !

பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய முன் வந்த தமிழக அரசின் முடிவை நிறைவேற்றக் கோரி ஜூன் 11ஆம் தேதி
பிற்பகல் 2 மணியளவில் சென்னையில் கோரிக்கை பேரணி எழுச்சியுடன் நடந்தது.

7 தமிழர் விடுதலைக்கான கூட்டியக்கம் சார்பில் இராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் தொடங்கிய பேரணி, பிற்பகல் 3.30 மணியளவில் எழும்பூர், லேங்ஸ் தோட்டம் அருகே முடிவடைந்தது.

பேரணி யில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி , பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்களும், தமிழகம் முழுதுமிருந்தும்
ஏராளமான கழகத் தோழர்களும், புதுவை கழகத் தோழர்களும் பங்கேற்றனர்.

வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல் முருகன், அற்புதம் அம்மாள், த.பெ.தி.க. பொதுச் செயலாளர் கோவை இராம கிருட்டிணன், பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாஸ், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்தியா, வி.சி.க. செய்தித் தொடர்பாளர் வன்னியரசு உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும், நடிகர்களும், இயக்குனர்களும் பங்கேற்றனர்.

பேரணியின் முடிவில் கோட்டையில் முதல்வர் தனிப்பிரிவு செயலாளரிடம் அற்புதம் அம்மாள் தலைமையில்கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

– புரட்சிப் பெரியார் முழக்கம் – 16.06.2016.

13445308_1763504830600076_6934361236484447094_n 13466134_1763505193933373_4220019514974044730_n 13466134_1763505270600032_1109486432940531684_n 13466214_1763505113933381_3680272243692674627_n 13494750_1763504713933421_1281768797446607403_n 13494960_1763504470600112_2502987551390046978_n 13501757_1763504520600107_4139235651433375988_n 13508852_1763505053933387_2649006552799057568_n 13532994_1763504343933458_9142424559911069496_n வி

You may also like...