Tagged: இந்து

இந்து ‘தாலிபான்கள்’

இந்து ‘தாலிபான்கள்’

‘தாலிபான்’ பயங்கரவாதம் இஸ் லாமியர் களிடையே இருப்பதுபோல் இந்து ஜாதி வெறியர் களிடமும் இருக்கிறது. அரியானாவில் ‘ஜாட்’ சமூகத் தினர் நடத்தும் ஜாதிப் பஞ்சாயத்துகள் ‘தாலி பான்கள்’ போலவே செயல்பட்டுக் கொண்டிருக் கின்றன. காதலித்து திருமணம் செய்தாலோ ஒரே கோத்திரத்தில் காதலித்தாலோ பெற்ற மகளையே கொலை  செய்துவிட வேண்டும் என்று உத்தரவு போடுகிறது இந்த ‘ஜாட்’கள் நடத்தும் ஜாதி பஞ்சாயத்து. 10 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் உடலை முழுமையாக மறைக்கும் ஆடை களையே அணிய வேண்டும்; சக மாணவர்களிடம் பேசக் கூடாது; அலைபேசி வைத்துக் கொள்ளக் கூடாது; ஒரே வாகனத்தில் பயணம் செய்யக் கூடாது என்றெல்லாம் கட்டளைகளைப் பிறப்பித்துள்ளனர். நகரத்துக்கு படிக்கச் செல்லும் இளம் பெண்கள் அங்கே நவீன உடைகளை அணியாமல் இருக்கிறார்களா? ஆண் நண்பர்களுடன் பழகாமல் இருக்கிறார்களா என்பதைக் கண்காணிக்க உளவுப் பிரிவையும் அமைத்துள்ளார்களாம். தங்களுக்கு தாங்களே சட்டங்களையும் தண்டனைகளையும் உருவாக்கிக் கொண்டு திரியும் இந்த ஜாதி வெறியர்களிடம் சட்டம்...

மதங்களுக்கு சவால் விடும் அறிவியல்

மதங்களுக்கு சவால் விடும் அறிவியல்

கடவுள், மதங்கள் காலத்துக்கு பொருந்தி வராதவை என்று பேராசிரியர் வசந்த் நடராசன் ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கத்தைப் ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்தில் ஏற்கனவே வெளியிட்டிருக்கிறோம். பார்ப்பனர்கள் பழமைவாதிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தது அக்கட்டுரை. அதே ‘இந்து’ ஏட்டில் பல மறுப்புக் கட்டுரைகள் வெளி வந்தன. அதில், பேராசிரியர் நடராசனின் கடவுள், மத மறுப்பு கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்து, ஜிரேந்திர சர்மா என்ற ஆய்வாளர், ஒரு கட்டுரை எழுதியுள்ளார். மதம் குறித்து அடிப்படையான கேள்விகளை எழுப்புகிறது அவரது கட்டுரை. கட்டுரை சுருக்கம் இதுதான்: “மதத்துக்கும் அறிவியலுக்குமான முரண்பாடுகள் வெடித்து வருகின்றன. இதில் மதம் தொடர்பாக முன்வைக்கப்பட்டு வந்த கருத்துகள் தாக்குப் பிடிக்க முடியாமல் தடுமாறுகின்றன. நவீன வாழ்க்கையின் தத்துவங்கள் இரண்டு. ஒன்று சமத்துவம்; மற்றொன்று சுதந்திரம். இரண்டுமே மதத்துக்கு எதிரானவைதான் சமூக மாற்றத்தை மதப் பழமைவாதிகளால் ஏற்க முடியவில்லை. 19 ஆம் நூற்றாண்டில் கிறிஸ் தவ மதம் மாற்றங்களை எதிர்த்தது....

மரண தண்டனை எதிர்ப்பு இயக்கம் வலுக்கிறது

மரண தண்டனை எதிர்ப்பு இயக்கம் வலுக்கிறது

மரண தண்டனை கூடாது என்று முதன்முதலில் இத்தாலியில் 1764இல் செசரே பெக்காரியா என்ற சட்ட வல்லுநர், “குற்றங்களும் தண்டனைகளும்” என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் வலியுறுத் தினார். அக்கட்டுரையில், “காட்டுமிராண்டி நிலையிலிருந்து நாகரிகச் சமூமாக மாறுவதற்கான வழிமுறைகளில் மரணதண்டனை ஒழிப்பு என்பது முதன்மையானதாகும். ஒருவருடைய உயிரைப் பறிக்க எப்படி எவருக்கும் உரிமையில்லையோ, அதே போல, உயிரைப் பறிக்கும் உரிமை அரசுக்கும் இல்லை” என்று மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். ஆயினும் மரணதண்டனை தேவையா? இல்லையா? என்ற விவாதம் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கிறது. மரண தண்டனை அதிகமாக நிறைவேற்றப்படும் அமெரிக்காவில்தான், பள்ளிச் சிறுவர்கள் கூட துப்பாக்கியால், உடன் படிக்கும் மாணவர்களைச் சுடுவதும், கொலைகளும் மிகுதியாக நடக்கின்றன. இந்தியாவில் பிரித் தானிய ஆட்சியில் 1860இல் உருவாக்கப் பட்ட குற்றவியல் தண்டனைச் சட்டத்தில் சில குறிப்பிட்ட குற்றங் களுக்கு மரண தண்டனை என்பது ஏற்படுத்தப் பட்டது. உலகில் போர்ச்சுக்கல் நாடுதான் 1976இல் முதன்முதலாகச் சட்டப்படி மரண தண்டனையை...

‘இந்து’ மதப் போர்வைக்குள் பதுங்கிக் கிடக்கும் பார்ப்பன பயங்கரவாதம் முகமூடியைக் கிழித்தது ஈரோடு மாநாடு 

‘இந்து’, ‘இந்துத்துவம்’ என்ற கூச்சல் களுக்குப் பின்னால் பதுங்கிக் கிடப்பது பார்ப்பனர்களும் பார்ப்பனியமும்தான் என்ற உண்மையை வரலாற்றிலிருந்தும் பா.ஜ.க. பரிவாரங்களின் ஆட்சி அதிகார செயல்பாடு களிலிருந்தும் ஏராளமான தகவல்களை முன் வைத்தது, ஈரோட்டில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய ‘இந்து’ பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு. மாநாட்டில் உரையாற்றிய பலரும் உண்மையான எதிரிகளை அடையாளப் படுத்தும் சரியான மாநாடு என்று பாராட்டினர். வெற்று ஆரவாரங்கள் – தனி நபர் துதிகள் இல்லாமல் தொடக்கம் முதல் இறுதி வரை அறிவார்ந்த கருத்துகளையும் சிந்தனைகளையும் முன் வைத்ததும், மாநாட்டுப் பார்வையாளர்கள் இறுதிவரை செவிமெடுத்ததும் இந்த நாட்டின் சிறப்பாகும். மாநாட்டு நிகழ்ச்சிகள் பற்றிய ஓர் தொகுப்பு: ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டு மண்ணில் “இந்து பார்ப்பன-பயங்காரவாத எதிர்ப்பு மாநாடு” நவம்பர் 8 ஞாயிறு பகல் 11 மணியளவில் ஈரோடு பவானி ரோடு கே.கே.எஸ்.கே. திருமண மண்டபத்தில் பார்ப்பன...

இந்து பார்ப்பன,பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் ”இந்து பார்ப்பன,பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு” நாள் : 08.11.2015 ஞாயிற்றுக்கிழமை. கருத்தரங்கம் : நேரம் : காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை. இடம் : K.K.S.K.மஹால்,பவானி ரோடு,ஈரோடு. பொது மாநாடு : நேரம் : மாலை 6 முதல் 10 மணி வரை. இடம் : திருநகர் காலனி,ஈரோடு. தோழர் கொளத்தூர் மணி,தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம் தோழர் விடுதலை ராஜேந்திரன்,பொதுச்செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம். தோழர் அப்துல்சமது,மனித நேய மக்கள் கட்சி, தோழர் ஆளூர் ஷாநவாஸ்,விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தோழர் இரா.அதியமான்,நிறுவனர் தலைவர்,ஆதித்தமிழர் பேரவை, தோழர் புனிதப் பாண்டியன்,ஆசிரியர் தலித் முரசு, தோழர் வே.மதிமாறன்,முற்போக்கு எழுத்தாளர், தோழர் சுந்தரவள்ளி,முற்போக்கு எழுத்தாளர். மாநாட்டின் தொடக்கத்தில் மேட்டூர் டி.கே.ஆர்.இசைக்குழுவின் இசை நிகழ்சியும்,வீதிநாடகமும் நடைபெறும். தொடர்புக்கு : ரத்தினசாமி மாநில அமைப்புச் செயலாளர்,திராவிடர் விடுதலைக் கழகம்.9842712444 – 9944408677