மரண தண்டனை எதிர்ப்பு இயக்கம் வலுக்கிறது

மரண தண்டனை கூடாது என்று முதன்முதலில் இத்தாலியில் 1764இல் செசரே பெக்காரியா என்ற சட்ட வல்லுநர், “குற்றங்களும் தண்டனைகளும்” என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் வலியுறுத் தினார். அக்கட்டுரையில், “காட்டுமிராண்டி நிலையிலிருந்து நாகரிகச் சமூமாக மாறுவதற்கான வழிமுறைகளில் மரணதண்டனை ஒழிப்பு என்பது முதன்மையானதாகும். ஒருவருடைய உயிரைப் பறிக்க எப்படி எவருக்கும் உரிமையில்லையோ, அதே போல, உயிரைப் பறிக்கும் உரிமை அரசுக்கும் இல்லை” என்று மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆயினும் மரணதண்டனை தேவையா? இல்லையா? என்ற விவாதம் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கிறது. மரண தண்டனை அதிகமாக நிறைவேற்றப்படும் அமெரிக்காவில்தான், பள்ளிச் சிறுவர்கள் கூட துப்பாக்கியால், உடன் படிக்கும் மாணவர்களைச் சுடுவதும், கொலைகளும் மிகுதியாக நடக்கின்றன. இந்தியாவில் பிரித் தானிய ஆட்சியில் 1860இல் உருவாக்கப் பட்ட குற்றவியல் தண்டனைச் சட்டத்தில் சில குறிப்பிட்ட குற்றங் களுக்கு மரண தண்டனை என்பது ஏற்படுத்தப் பட்டது.

உலகில் போர்ச்சுக்கல் நாடுதான் 1976இல் முதன்முதலாகச் சட்டப்படி மரண தண்டனையை ஒழித்தது. அதன்பின் மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகள் மரணதண்டனை ஒழிப்பில் முன்னோடியாக விளங்கின. ஆனால், கியூபாவில் மரண தண்டனைச் சட்டம் நீடிக்கிறது. ஆயினும் 2003 ஆம் ஆண்டுக்குப் பின் கியூபாவில் எவரும் தூக்கிலிடப்படவில்லை. அய்ரோப்பாவில் பெலார° நாடு தவிர, மற்ற நாடுகளில் மரணதண்டனை இல்லை. ஆப்பிரிக்க நாடுகளில்கூட சிலவற்றில் ஏட்டளவில் இச்சட்டம் நீடித்தாலும், பல ஆண்டுகளாக மரண தண்டனை நிறைவேற்றப்பட வில்லை. ஆனால் அகிம்சையை உலகிற்கே அளித்த புத்தர் முதல் காந்தியார் வரையில் பல சான்றோர்கள் வாழ்ந்த இந்தியாவில் மட்டும் மரணதண்டனைச் சட்டம் நீடிப்பது அவலமல்லவா?

உலக அளவில் கடந்த இருபது ஆண்டுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது. அய்க்கிய நாடுகள் மன்றத்தில் 193 நாடுகள் உள்ளன. 2007 ஆம் ஆண்டு மரணதண்டனைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை 104 நாடுகள் ஆதரித்தன.

54 நாடுகள் எதிர்த்தன. 29 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. 2012இல் இத் தீர்மானத்தை 111 நாடுகள் ஆதரித்தன. 41 நாடுகள் எதிர்த்தன.

34 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

டில்லியில் ஓடும் பேருந்தில் மாணவியை கொடூரமாக பாலுறவு வன்முறைக்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்டதையொட்டி பெண்கள் மீதான வன்முறை குறித்து ஆராய நீதிபதி வர்மா குழுவை மத்திய அரசு நியமித்தது. மரண தண் டனையை வர்மாகுழு பரிந்துரைக்கவில்லை.

நடுவண் அரசு, பாலியல் வல்லுறவுக் குற்றத்துக்கு மரண தண்டனை வேண்டாம் என்கிற வர்மாவின் கருத்தை ஏற்கவில்லை. பாலியல் வன்முறைக் குற்றத்துக்கு மரண தண்டனை என்ற சட்டத்தை நாடாளு மன்றத்தில் பா.ச.க. உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றியது.

சிறப்பு ஆயுதப் படையினருக்கும் இச் சட்டம் பொருந்த வேண்டும் என்கிற வர்மா குழுவின் பரிந்துரையையும் நடுவண் அரசு புறக்கணித்து விட்டது. ஆயுதப்படையினரின் சிறப்பு அதிகாரச் சட்டம் என்பது 1958 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. ஜம்மு-காஷ்மீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் இது நடப்பில் உள்ளது. இந்த அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி மக்களை ஆயுதப் படையினர் கொல்கின்றனர்; பெண்களை பாலுறவு வன்முறைக்கு உள்ளாக்குகின்றனர். 1979 முதல் மணிப்பூரில் ஆயுதப் படையினரால் கொல்லப்பட்ட 1,528 பேரின் பட்டியல் 2012 செப்டம்பரில் உச்சநீதிமன்றத்தில் தரப்பட்டது.

அதன் அடிப்படையில் நீதிபதி சந்தோஷ் எக்டே தலைமையில் மூவர் கொண்ட குழுவை உச்சநீதி மன்றம் அமைத்தது. இக் குழு அளித்த அறிக்கை, ஆயுதப் படையினர் தமக்குள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி எண்ணற்ற மனித உரிமை மீறல்களையும், பாலியல் கொடுமைகளையும், படுகொலைகளையும் செய்துள்ளனர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

2004 ஆம் ஆண்டு மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள ஆயுதப்படை முகாமில் தங்கஜம் மனோரமா தேவி என்ற இளம் பெண் கொடிய முறையில் துன்புறுத்தப் பட்டு, வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். இதைக் கண்டித்து ஆயுதப் படை தலைமை அலுவலகத்தின் முன், மணிப்பூர் மகளிர் சிலர் ஆடையின்றி, ‘எங்களை பாலுறவு கொள்ளுங்கள்’ என்ற பதாகையுடன் ஆர்ப்பாட்டம் செய்தனர். இச்செய்தி அதிர்ச்சி அலைகளை எழுப்பியது. இக்கொடிய ஆயுதப் படையின் சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று இளம் பெண் இரோன் ஷர்மிளா 2000 நவம்பர் 4 முதல் உண்ணா விரதம் இருந்த வருகிறார். கட்டாயப் படுத்தப்பட்டு மூக்கின் வழியாக அவருக்கு உணவு செலுத்தப்படுகிறது. தில்லி மருத்துவ மாணவி நிர்பயாவுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு ஒப்பாரி வைக்கும் அரசியல் கட்சிகள், ஆயுதப் படையின் சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்குவதற்கு ஏன் முன் வரவில்லை? நிர்பயா போலவே வேறு எண்ணற்ற பெண்கள் காவல்துறையினராலும், இராணுவத்தினராலும் சொல்லொணா பாலியல் அளவில் கொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றனரே!

நிர்பயா மீது பாலியல் வன்கொடுமை நிகழ்த்திய ஆறு பேரில் அகவையில் மூத்த இராம்சிங் (34) சிறையிலேயே தூக்குப் போட்டுக் கொண்டான். முகேஷ் சிங் (26), அக்ஷய தாக்கூர் (28), குப்தா (19), வினய் சர்மா (20) ஆகிய நால்வருக்கும் தில்லி விசாரணை நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித் துள்ளது. மற்றொரு குற்றவாளி முன்னாவுக்கு 17 அகவை என்பதால் சிறுவன் என்ற பிரிவின் கீழ் மூன்று ஆண்டு சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது. இந்த ஆறு பேரும் இராஜ°தான், உ.பி., பீகார் மாநிலங்களி லிருந்து பிழைப்புத் தேடி தில்லிக்கு வந்த ஏழை, எளிய குடும்பத்தைச் சார்ந்தவர்கள். பொதுவாக நீதி வழங்கப்படுவதில் – தண்டனை விதிக்கப்படுவதில் வர்க்கச் சார்பும், சாதியப் பின்னணியும் காரணிகளாக உள்ளன. சிறைகளில் இருப்போரில் 90 விழுக் காட்டினர் கீழ்த்தட்டுச் சாதிகளைச் சார்ந்த ஏழை எளிய மக்களாகவே இருக்கின்றனர். அமெரிக்கா விலும் இதே நிலைதான். கறுப்பின மக்களே மிகப் பெருமளவில் சிறைகளில் இருக்கின்றனர்.

அரிதிலும் அரிதான வழக்கில் மரண தண்டனை விதிக்கலாம் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பில் கொடூரமான முறையில் கொலை செய்தது மட்டும் அரிதினும் அரிதான வழக்காக கருதிவிட முடியாது. குற்றம் செய்தவரின் சமூகப் பின்னணியையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியது.

உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு கூறிய இந்த கருத்துக்கு எதிராக, மற்றொரு 2 நீதிபதிகளடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. குற்றத்தை மட்டும் பார்த்து மரணதண்டனை வழங்கலாம் என்று கூறியது அத் தீர்ப்பு. இந்தத் தவறான தீர்ப்பின் அடிப்படையில் தொடர்ந்து பலருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த முரண்பாட்டை ஓய்வு பெற்ற நீதிபதிகள், குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டினர்.

டெல்லியில் இளைஞர் காங்கிர° தலைவர் ஒருவர், தனது மனைவியை கொலை செய்த வழக்கில், டெல்லி நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. மேல்முறையீட்டில் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, தூக்குத் தண்டனையை 10 ஆண்டு சிறைத் தண்டனையாக குறைத்தது. குற்றவாளி திருந்தி வாழக் கூடியவர் அல்ல என்பதற்கான சான்றுகளை அரசு தரப்பு முன்வைக்கவில்லை என்பதால் தண்டனையை உச்சநீதிமன்றம் குறைத்தது. இதேபோல் தூக்குத் தண்டனை விதிக்கும்போது ஒவ்வொரு வழக்கிலும் குற்றவாளியின் சமூகப் பின்னணியைப் பார்க்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அனைத்து நீதிமன்றங்களுக்கும் அண்மையில் அறிவுறுத்தி கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

(அக்.23 ‘இந்து’ நாளேட்டில் மோனிக்கா வின்செட் எழுதிய கட்டுரையின் தழுவல்)

பெரியார் முழக்கம் 21112013 இதழ்

You may also like...