Tagged: ஆவணப் படம்

ஈரோடு பெரியார் சிலை முன் நடந்த ஆவணப்பட வெளியீடு … Sending to Clouds

‘பை பாஸ்’ ஆவணப்பட வெளியீடு ! கழகத் தலைவர் அவர்கள் ஈரோடு பெரியார் சிலை முன் ஆவண படத்தை வெளியிட்டார். ராஜீவ் காந்தி கொலை வழக்கின் விசாரணையில்,தடய அறிவியல் ஆய்வுகளில் உள்ள குளறுபடிகளை ஆவணப்படுத்தி கோவையைச் சேர்ந்த மருத்துவர் ரமேஷ் மற்றும் கல்பாக்கம் மருத்துவர் புகழேந்தி ஆகியோர் ஆவணப்படமாக ”பை பாஸ்” எனும் தலைப்பில் இயக்கி இருக்கிறார்கள். ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட 25 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று 21.05.2016 காலை ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா அருகில் உள்ள பெரியார் சிலை முன் இந்த ஆவணப்பட வெளியீடு நடைபெற்றது.. வரவேற்புரையாற்றிய தோழர் பொன் சந்திரன், ”ராஜீவ் வழக்கிலும், ஈழப் பிரச்சினைகளிலும், புலிகள் தொடர்பான வழக்குகளிலும் கைதானவர்களும், காவல்துறை நெருக்கடிகளில் பாதிக்கப்பட்டவர்களும். தொடக்க காலத்திலிருந்து புலிகளை ஆதரித்தவர்களும், உதவியவர்களும் பெரிதும் பெரியார் தொண்டர்களே என்பதால் பெரியார் பிறந்த மண்ணில், பெரியார் சிலைக்கு முன்னால் பெரியார் இயக்கத்தவர் வெளியிடுவதே பெரிதும்...

ஊழல் மின்சாரம் ஆவணப்பட வெளியீடு சென்னை 02042016

”ஊழல் மின்சாரம்” – ஆவணப்படம் வெளியீடு. நாள் : 02.04.2016 மாலை 5 மணி. இடம் : இக்சா அரங்கம் (கன்னிமாரா நூலகம் எதிரில்), எழும்பூர் சென்னை. கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றுகிறார். தலைமை : சா.காந்தி, தமிழ்நாடு மிந்துறை பொறியாளர்கள் அமைப்பு. ஆவணப்படத்தை வெளியிடுபவர் : தோழர்.ஆர் நல்லக்கண்ணு, (இந்திய பொதுவுடமைக் கட்சி) மேலும் தோழமை அமைப்புகளைச்சார்ந்த தலைவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கிறார்கள்.

மேட்டூரில் முப்பெரும் நிகழ்வுகள்

மேட்டூரில் முப்பெரும் நிகழ்வுகள்

மேட்டூரில் 25.2.2014 அன்று மாலை முப்பெரும் விழாக்கள் சிறப்புடன் நடந்தன. ‘அகமணமுறையை அகற்றுவோம்; ஆரோக்கிய சமூகத்தை வளர்ப்போம்’ என்ற முழக்கத்தை முன் வைத்து கழகம் நடத்திய பரப்புரைப் பயணத்தின் நிறைவு; ‘புரட்சிப் பெரியார் முழக்கம்-2014’ஆம் ஆண்டு மலர் வெளியீடு; ஒரே ஜாதிக்குள் நிகழும் இணையர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் சந்திக்கும் உடல், மனநலக் கோளாறுகளை அறிவியல் ரீதியாக மருத்துவர்கள் முன் வைத்த கருத்துகளைத் திரட்டி உருவாக்கப்பட்ட ஆவணப் படம் திரையீடு என்ற முப்பெரும் நிகழ்வுகள் நடைபெற்றன. மாலை 5.30 மணியளவில் மேட்டூர் டி.கே.ஆர். குழுவினரின் ஜாதி எதிர்ப்புப் பாடல் களுடன் நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து மேட்டூர் பெரியார் பிஞ்சுகள் நடத்திய கலை நிகழ்ச்சிகள், பரப்புரை பயணத்தில் அகமண முறைக்கு எதிரான கருத்துகளை விளக்கிடும் திராவிடர் கலைக் குழுவினர் நடத்திய நாடகம் ஆகிய நிகழ்வுகள் அனைவரையும் கவர்ந்தன. கருந்திணை சார்பில் தயாரிக்கப்பட்ட அறிவியல் விளக்கங்களைக் கொண்ட ஆவணப் படம் திரையிடப்பட்டது. 40 நிமிடங்கள் ஓடிய...

ஈரோட்டில் ஆவணப் படம் வெளியீட்டு விழா : “இந்த நிலம் இராணுவத்துக்குச் சொந்தமானது”

ஈரோட்டில் ஆவணப் படம் வெளியீட்டு விழா : “இந்த நிலம் இராணுவத்துக்குச் சொந்தமானது”

“இந்த நிலம் இராணுவத்துக்குச் சொந்தமானது” என்ற தமிழ்ப் படுத்தப்பட்ட ஆவணப்படத்தின் வெளியீட்டுவிழா, ஈரோடு சூரம்பட்டி 4 ரோட்டில் உள்ள ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலக மாடியில் உள்ள கூட்ட அரங்கில் 11.5.2014 ஞாயிறு மாலை 6 மணிக்கு நடைபெற்றது. ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேச மூர்த்தி ஆவணப்படத்தை வெளியிட, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர்மணி பெற்றுக் கொண்டு சிறப்புரையாற்றினார். கி.வேபொன்னை யன் தலைமை வகித்தார். இலங்கைக்குச் சென்று ஆவணப் படத்தை எடுத்த 23 வயதே ஆன இளம் ஊடகவியலாளர் மகா. தமிழ்ப் பிரபாகரனுக்கு தோழர் கண.குறிஞ்சி சிறப்பு செய்தார், மகா. தமிழ்ப் பிரபாகரன் ஏற்புரை வழங்கினார்.