புத்துணர்வூட்டிய சென்னை பயிலரங்கம்!

மறைந்த கழக செயல்வீரர் பத்ரி நாராயணனின் 22வது நினைவு நாளான ஏப்ரல்-30 காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, திருவல்லிக்கேணி பகுதிச் செயலாளர் சே. ராஜேஷ் தலைமையில், பகுதி அமைப்பாளர் த.நா. சூர்யா முன்னிலையில், பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டது. பகுதித் தலைவர் சு. கோபிநாத் வரவேற்புரையாற்றினார். சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி – சத்யா – லதா, பொன்ராஜ் குழுவினரின் பாடல்கள் சிந்திக்க வைத்தன.
“அமைப்பாக திரள வேண்டியதின் அவசியம் என்ன?” எனும் தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். ஒரே நாளில், ஒரே நேரத்தில் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டத்தை ஒருங்கிணைப்பதன் காரணத்தை விளக்கினார்.
“சமகால சிக்கல்களில் பெரியாரிய பார்வை” குறித்து கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சிறப்புரையாற்றினார். கம்யூனிச இயக்கங்களும் பெரியார் இயக்கமும் ஒன்றிவரும் புள்ளிகளையும் – வேறுபடும் புள்ளியையும் எடுத்துரைத்தார். நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்திரகுமார் தேரடி, “பெரியாரியலும் அரசமைப்புச் சட்டமும்” என்ற தலைப்பில் வகுப்பெடுத்தார்.
அரசமைப்புச் சட்டத்தில் ஜாதியை பாதுகாக்கும் பிரிவுகளை அம்பேத்கர் வழியில் பெரியார் தொண்டர்கள் எரித்ததை நினைவுகூர்ந்தார். பயிலரங்கில் பங்கேற்ற 60க்கும் மேற்பட்ட தோழர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கழகக் களப்பணியாளர் வீராவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது!
பெரியார் முழக்கம் இதழ் 07052026

You may also like...