பேரணியில் முழக்கங்கள்
பேரணியில் கழகத் தோழர்கள் எழுப்பி வந்த முழக்கங்கள் மக்களைக் கவர்ந்தது.
ஒழியட்டும் ஒழியட்டும்!
மக்களைப் பிரிக்கும் பார்ப்பனியம்
ஒழியட்டும் ஒழியட்டும்
சுயமரியாதை வாழ்க்கையே
சுகமான வாழ்க்கை
பில்லி,சூனியம்,ஜோசியம் எல்லாம்
சாமியர்கள் வயிறு வளர்க்க உதவுது
காசை எல்லாம் செலவு செய்து
தமிழர் வாழ்வு சீரழியுது!
நடந்ததைச் சொல்லும் ஜோதிடத்தால்
நடக்கப் போவதை சொல்ல முடியுமா?
அறிவுடனே நாம் இருந்தால்
ஜோதிடப் புரட்டு நடக்குமா?
ஜாதி மறுப்பு திருமணம் செய்வீர்
காதலோடு மகிழ்வாய் வாழ்வீர்
ஜாதியத்தைக் காப்பாற்ற பெண்களைத்தான் நம்புறான்! பெண்கள் உரிமை பேசினால்
நான் ஆம்பள என்கிறான்.
தடுத்திடுவோம் தடுத்திடுவோம்
ஜாதி ஆணவக்கொலையைத் தடுத்திடுவோம்
காதல் செய்வீர் காதல் செய்வீர்
இளைஞர்களே காதல் செய்வீர்
ஜாதி ஒழிக்க காதல் செய்வீர்
சட்டமியற்று சட்டமியற்று
ஜாதி ஆணவப் படுகொலைக்கு
எதிராக சட்டமியற்று
வேண்டாம் வேண்டாம்
ஜாதிக்குள்ளே திருமணம்
வேண்டவே வேண்டாம்
வாழ்வில் மூடநம்பிக்கை
வேண்டாம் வேண்டாம்
சனாதனம் என்பது பார்ப்பனியமே
பார்ப்பனியம் என்பது ஜாதியமே
ஜாதி அமைப்பை தகர்த்திடுவோம்
சமத்துவ சமூகம் படைத்திடுவோம்
பாழாகுது பாழாகுது
ஜோதிடம் – ஜாதகத்தால்
தமிழன் வாழ்க்கை பாழாகுது
நாள் கிழமை பார்க்கிறது
நல்ல நேரம் பார்க்கிறது
பரிகார பூஜையால
பார்ப்பான் பாக்கெட் நிறையுது
ஏமாறாதே ஏமாறாதே
ஜாதகம் பார்ப்பவன் கிட்ட
ஏமாறாதே ஏமாறாதே
வாஸ்து சாஸ்திரம், வான சாஸ்திரம்
விஞ்ஞானம் என்று சொல்லுறான்
தமிழன் காசைத் திங்கிறான்
சொர்க்கம் நரகம் எங்கே இருக்கு?
செயற்கை கோளில் காட்டச் சொல்லு.
ஜாதிச் சுவரை இடித்து விட்டு
வெளியில் வா, வெளியில் வா
பெண் இனமே வெளியில் வா
பண்பாடு கலாச்சாரம், பழக்க வழக்கம் என்று சொல்லி பெண்ணை அடிமை படுத்துறான், பெண்ணை இழிவும் படுத்துறான்
கல்லானாலும் கணவன் என்பதும்
புல்லானாலும் புருஷன் என்பதும்
முட்டாள்தனமே முட்டாள்தனமே
பெரியார் முழக்கம் இதழ் 20082026
