இராமனுக்கு கோயில் கட்டியது எதற்காக? (2) – பேராசிரியர் ஜெயராமன்
(18.01.2024 இதழில் வெளியான கட்டுரையின் தொடர்ச்சி) தென்னிந்தியாவில் கிபி மூன்றாம் நூற்றாண்டு வரைக்கும் சங்ககாலம் என்று பெயர். அந்த காலத்தில் ஜாதி என்பதே அறவே கிடையாது. ஒருவன் ஒரு பெண்ணைப் பார்த்து அவள் மீது ஆசை கொண்டால் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம். களவு வாழ்க்கை, கற்பு வாழ்க்கை போன்ற வாழ்க்கைமுறைகளில் இவர்கள் வாழ்ந்தார்கள். அந்த காலகட்டத்தில் பல்லவர்கள் வருகிறார்கள். பின்னர் தமிழ்நாட்டை கைப்பற்றுகிறார்கள். அவர்கள் பரத்வாஜ கோத்திரம் எனும் பார்ப்பன சமூகத்தை சேர்ந்தவர்கள். இது அவர்களுடைய கல்வெட்டு செப்பேடுகளில் உள்ளது. அவர்கள் தமிழ்நாட்டில் நுழையும் போதே வர்ண தர்மத்தை கொண்டுவருகிறார்கள். பின்னர் சிறுகச்சிறுக பார்ப்பனர்கள் தமிழ்நாட்டிற்குள் நுழைந்தனர். இந்த பல்லவர்கள் காலத்தில் தான் குகை கோயிகள், கற்கோயில்கள் வடிவமைக்கப்பட்டன. பல்லவர் காலத்திற்கு பிறகு கிபி ஒன்பதாம் நூற்றாண்டில் இங்கு சோழர்கள் ஆட்சி தொடங்கியது. அப்பொழுது தான் இங்கு மிகப்பெரிய அளவில் கோயில்கள் கட்டப்பட்டன. வெறும் கற் கோயில்கள் உருவாக்கப்பட்ட போதே...
