வினாக்கள்… விடைகள்…
சில நேரங்களில் நாம் தவறு செய்கிறோம்; சில நேரங்களில் நீதிமன்றங்களும் தவறு செய்கின்றன. தண்டிக்கப்பட்ட அரசியல்வாதிகள் பதவி பறிபோகும் என்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றத்தின் தவறை, இப்போது நாம் சரி செய்கிறோம். – சட்ட அமைச்சர் கபில்சிபல் இப்போது நீங்கள் செய்த தவறை ராகுல் காந்தி சரி செய்துள்ளார். ராகுல் செய்த தவறுக்காக சோனியா, மன்மோகனை சரி செய்து வருகிறார். அட போங்கப்பா, நீங்களும் உங்க தத்துவமும்! முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு என்ற பெயரில் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்த வரும் பொது மக்களை தடுக்கக் கூடாது என காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு. – செய்தி காந்தி என்பவரும் ஒரு முக்கிய பிரமுகர் தான் என்பதை காவல்துறைக்கு புரியும்படி நன்றாக எடுத்துச் சொல்லி யிருந்தால் இந்தத் தவறு நடந்திருக்காது. பரவாயில்லை, விடுங்கள். ஒரு மாத காலத்துக்குள் இந்தியாவிலிருந்து சுமார் 1350 தகவல்களை அமெரிக்கா திருடியுள்ளது. – செய்தி இந்தத் தகவலையும் தகவல் உரிமை...
