Author: admin

பெண்கள்  வீட்டுக்குள் 

பெண்கள்  வீட்டுக்குள் 

  இருக்கவேண்டுமாம்! பாய்  பரமாநந்தரின்  பிற்போக்கு அமிர்தசரசில்  பாய்பரமானந்தர்  தலைமையில்  நடைபெற்ற  ஒரு  பொதுக்  கூட்டத்தில்  இந்து  மகாசபை  மகாநாட்டிற்குத்  தலைமைவகித்த,  பொங்கி  உத்தமர்  பேசும்போது  “”அரசியல்  அடிமைத்தனத்தைப்போல  சமூக  அடிமைத் தனத்தையும்  நான்  எதிர்க்கிறேன்.  முக்கியமாகப்  பெண்களுக்கும்,  தாழ்த்தப் பட்டோருக்கும் சுதந்தரம் இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார். இந்து  மகாசபையின்  நிரந்தரத்  தலைவரான  பாய்பரமானந்தர்  இக்கொள்கையை  மறுத்து  “”இந்துப்  பெண்களை  காலிகள்  துராக்கிரகம்  செய்து  அவமானப்படுத்துகின்றனர்.  இந்து  சகோதரர்கள்  தங்கள்  சகோதரி களின்  மானத்தையும்  சரீரத்தையும்  காப்பாற்றும்படி  போதிய  பலம்  பெறுகிறவரையில்  அவர்கள்  வீட்டுக்குள்ளேயே  இருந்து கல்வியில்லாம லிருப்பது  நலம்”  என்று  கூறியிருக்கிறார். பரமாநந்தருடைய  இத்தகைய  பிற்போக்கான  அபிப்பிராயத்தினால்  இன்னும்  எத்தனை  யுகம்  சென்றாலும்  இந்து  சமூகம்  முன்னேற்றம்  அடைய  முடியுமா?  என்று  கேட்கின்றோம்.  இந்தக்  கொள்கையைப்  பின்பற்றுகிற  எந்தச்  சமூகமாவது  அபிவிருத்தியடையுமா? இந்து சமூகத்தில் ஒரு பாதியாக இருக்கின்ற பெண் சமூகம்,  எப்பொழுதும்  ஆண்மக்களால்  காப்பாற்றப்பட  வேண்டிய  நிலையிலேயே ...

உண்மையைக் கக்கி விட்டார்

உண்மையைக் கக்கி விட்டார்

  சட்டசபைக்குக் காங்கிரஸ்காரர்கள் செல்வதற்கு காரணஸ்தராயும் சட்டசபைக்குப் போவதற்கும் பார்லிமெண்டு போர்டு ஏற்படுத்துவதற்கும் காரணஸ்தராயும் இருந்தது சில பேர்வழிகள் உண்டென்றாலும் அதில் தென்னாட்டைப் பொருத்தவரையில் அதிகப் பங்கெடுத்துக் கொண்டு அதற்கு வேண்டிய எல்லாவித முயற்சிகளும் செய்தது நம் தோழர் சத்தியமூர்த்தி அவர்களாவார். இது எதற்கு உண்மையில் தேசியத்திற்காகவா? தேசாபிமானத்திற்காகவா? இல்லை. தங்கள் சமூகத்தார் எல்லாவித உயர்ந்த பலவித உத்தியோகமும் தாங்கள் பெரிய பெரிய கௌரவ பதவியும் அடைய மனதில் கொண்டுள்ள ஆசையை நிறைவேற்றிக் கொள்ளவேதான் காங்கிரஸ் பேரினால் சட்டசபைக்குப் போகவும் பார்லிமெண்டு போர்டு ஏற்படுத்தவும் இவ்வளவு அதிகமாக முயற்சி செய்ததாகும். இவர் சட்டமறுப்புக் காலத்தில் பதுங்கி இருந்து கடைசியாக லேசான சட்டமறுப்பு செய்துவிட்டு ஜெயிலுக்குச் சென்றவராச்சே! இப்பொழுது மாத்திரம் இவ்வளவு தடபுடலாக சட்டசபையில் காங்கிரஸ்காரர்கள் மணலைக் கயிராகத் திரித்தோம்! வானத்தை வில்லாக வளைத்தோம் என்று போகிற இடத்திலெல்லாம் பேசுகிறாரே என்று கேட்டு விடாதீர்கள். சோழியன் குடுமி சும்மா ஆடுமா? தங்கள் சமூகத்தார்,...

கல்வி இலாக்காவில் பார்ப்பன ஆதிக்கம்

கல்வி இலாக்காவில் பார்ப்பன ஆதிக்கம்

விருதுநகர் மகாநாட்டில் தோழர்கள் சி.டி. நாயகம் அவர்களும், ஈ.வெ.ரா. அவர்களும் சர்க்கார் உதவி பெறும் பள்ளிக் கூடங்களில் உபாத்தியாயர் நியமனம் செய்யப்படும் விஷயங்களில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறையைக் கையாளும்படி சர்க்கார் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும், அந்தப்படி நியமனம் செய்யாத பள்ளிகூடங்களுக்குச் சர்க்கார் உதவித் தொகை கொடுக்கக் கூடாது என்றும் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார்கள். அதை கல்வி மந்திரி அவர்கள் வேண்டுகோளின் பேரிலும் மகாநாட்டுத் தலைவர் தோழர் ராமசாமி முதலியார் அவர்கள் வேண்டுகோளின் பேரிலும் வாப்பீஸ் பெற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் இன்று பார்ப்பனர்கள் ஆதிக்கம் உள்ள பள்ளிக் கூடங்களில் அநேகமாக பியூன், வாசல்கூட்டி தவிர மற்றெல்லோரும் பார்ப்பனர் களாகவே நியமிக்கப்பட்டிருப்பதும், பார்ப்பனரல்லாதார் ஆதிக்கமுள்ள பள்ளிக் கூடங்களிலும் 100க்கு 75, 95 பார்ப்பனர்களாக நியமிக்கப் பட்டிருப்பதும் யாரும் மறுக்க முடியாது. சென்னையில் பார்ப்பன பிரமுகர்களான தோழர்கள் சர். சிவசாமி அய்யர், சர். சி.பி. ராமசாமி அய்யர், சர். அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர்,...

* முடிவைப் பற்றி சொல்ல வேண்டுமா?

* முடிவைப் பற்றி சொல்ல வேண்டுமா?

தமிழ்நாட்டு  காங்கிரஸ்  தலைவர்  பதவியிலிருந்து  விலகும்  தோழர்  இராஜகோபாலாச்சாரியார்  ஸ்தானத்திற்கு  தோழர்கள்  எஸ். சத்தியமூர்த்தி,  வேதாரண்யம்  வேதரத்தினம், ருக்குமணி  ஸக்ஷிமிபதி  முதலியவர்கள்  அபேட்சகர்களாய்  நிற்பார்களெனத்  தெரிகிறது. “தமிழ்நாடு’ குடி அரசு 12.05.1935 பக்கம் 18.

இனி என்ன குறை?

இனி என்ன குறை?

  ஆச்சாரியார் ஓய்வானது தோழர் சத்தியமூர்த்தியை தமிழ்நாட்டுக் காங்கிரஸ் தலைவராக ஆக்கிவிட்டது. ஆச்சாரியாருக்கு மற்றவர்களிடமிருந்து சந்தேகமும் காங்கிரஸ் பார்ப்பனர் கையிலேயே இருக்க வேண்டும் என்கின்ற எண்ணமும் சத்தியமூர்த்தியையே பிடித்துத் தலைவராகச் செய்து விட்டது. ஆச்சாரியார் எப்பொழுதும் எதிலிருந்து விலகினாலும் அந்த ஸ்தானத்தில் பார்ப்பனரைத் தான் வைத்து விட்டு விலகுவது வழக்கம். அந்த வழக்கப்படி சத்தியமூர்த்தி தலைவரானார் என்று சென்ற வாரத்தில் “”முடிவைப் பற்றிச் சொல்ல வேண்டுமா” என்று ஒரு குறிப்பு* எழுதி இருந்தோம். அதுபோலவே எல்லாரும் எதிர்பார்த்தபடியே ஆகிவிட்டது. சத்தியமூர்த்திக்கு திட்டம் போட்டுக் கொண்டு சூக்ஷி செய்யத் தெரியாது. மக்களை ஏமாற்றவும் சக்தி போதாது. ஆகவே ஒரு அளவுக்கு காங்கிரசின் தொல்லை ஒழிந்ததென்று நினைக்கலாம். நிற்க காங்கிரஸ் என்பதை இந்திய மக்களின் பிரதிநிதித்துவ சபை என்று சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட பிரதிநிதித்துவ சபைக்கு 2லீ கோடி மக்களுக்கு, தமிழ்நாட்டுக்குத் தோழர் சத்தியமூர்த்தி பிரதிநிதித்துவ தலைவராகிவிட்டார் என்றால் அவர் புத்தியையும் குணத்தையும் தியாகத்தையும் உத்தேசித்துப்...

ஆச்சாரியார் ஓய்வு

ஆச்சாரியார் ஓய்வு

  தோழர் சி. ராஜகோபாலாச்சாரியார் அரசியல் வாழ்விலிருந்து தற்காலிகமாகவோ அல்லது வேறு எப்படியோ விலகிக் கொண்டதாக சடங்குகள் நடைபெற்று அவர் ஸ்தானத்துக்குத் தோழர் சத்தியமூர்த்தி அய்யர் நியமிக்கப்பட்டு விட்டார். ராஜகோபாலாச்சாரியார் விஷயத்தில் நமக்குள்ள மரியாதையும் பக்தியும் குறையவில்லை. குறையுமென்று நம்பவுமில்லை. அவர் தன் சுயநலமில்லாதவர்; தனக்கும் தன் குடும்பத்திற்கும் என்று ஏதும் செய்து கொள்ளவில்லை. தமிழ்நாட்டில் காங்கிரசின் பேரால் தியாகம் செய்த பார்ப்பனர்களில் இவரே முதன்மையானவர். இரண்டாவதானவராக யாரைச் சொல்லுவது என்பது நமக்குத் தெரியவில்லை. அவர் இதுவரை வக்கீலாய் இருந்திருந்தால் தோழர்கள் அல்லாடியையும் எஸ். சீனிவாசயங்காரையும் சுண்டு விரலில் கட்டி ஆட்டி இருப்பார். பணமும் ஏராளமாய்ச் சம்பாதித்திருப்பார். ஹைகோர்ட் ஜட்ஜி பதவி அடைவது அவருக்கு கேவலம் என்றுகூட சொல்லத்தக்க நிலைக்கு வந்திருப்பார். இவ்வளவு சக்தியும் புத்தியும் தியாகமும் எல்லாம் சேர்ந்து பார்ப்பனர் வாழ்வுக்கு மனித சமூக உண்மை விடுதலையையும் சுயமரியாதையையும் அடமானம் வைக்கப் பயன்பட்டதுடன் மநுதர்ம சாஸ்திரத்துக்கு வக்காலத்துப் பேசும்படியும் ஆய்விட்டது...

அரசாங்க (கேபிநட்) மெம்பர்கள் கவனிப்பார்களா?

அரசாங்க (கேபிநட்) மெம்பர்கள் கவனிப்பார்களா?

  சென்னை அரசாங்கத்தில் உத்தியோகஸ்தர்களை அமைக்கும் பொறுப்பும் அதிகாரமும் சென்னை அரசாங்க கவர்னர் பிரபுவைச் சேர்ந்தது என்று சொல்லப்படுமானாலும் அவை பெரிதும் கவர்னர் பிரபுவின் ஆலோசனைச் சபை அங்கத்தினர்களான போலீஸ், லா, ரிவினியூ ஆகிய இலாக்கா தலைவர்களுக்கே நேரிட்ட பொறுப்பும், மேல் பார்வையும், அதிகாரமும் இருந்து வருகின்றன. மந்திரிமார்களோ உத்தியோக நியமன விஷயங்களில் யாதொரு அதிகாரமும் இல்லாமலே இருந்து வருகிறார்கள். மந்திரிமார்கள் கையில் உள்ள உத்தியோகங்களோ மிகச் சிலவேயாகும். அதுவும் ஸ்தல ஸ்தாபன இலாக்கா சம்மந்தப்பட்ட வரையில்தான் அவர்களது அதிகாரம் செல்லலாம். எனினும் இந்த இலாக்காவிற்கும் செக்ரட்டரிகள் என்னும் ஐரோப்பியர்களும், பார்ப்பனர்களும் குறுக்கிட்டு, அவற்றை மந்திரிகள் இஷ்ட்டப்படி நடை பெறாமல் செய்யவும் இடம் வைக்கப்பட்டிருக்கின்றபடியால் அந்த அதிகாரமும் பலனற்றது என்றே சொல்ல வேண்டும். மற்றபடி போலீஸ்லாரிவின்யூ இலாக்காக்களுக்கு முன்னைய மந்திரிசபையின் பயனாய் ஒரு அளவுக்கு பல வகுப்புகளையும் கவனித்து நியமனம் செய்யும்படியான வகுப்புவாரி முறை புகுத்தப்பட்டிருந்தும் மேற்படி இலாக்காத் தலைவர்களின் லட்சியக்...

ஏன் ஜூப்பிலியை?

ஏன் ஜூப்பிலியை?

  காங்கிரஸ்காரர்கள் ஜூப்பிலியை ஏன் பகிஷ்கரிக்கவில்லை என்றா கேட்கிறீர்கள். அவர்கள் தான் சட்டசபைக்குச் சென்று அரசரிடமும் அரசரின் பின் வார்சுகளிடமும் பக்தியாய் விசுவாசமாய் இருப்பதாக சத்தியம் செய்து கொடுத்துவிட்டு வந்தவர்களாயிற்றே. அப்படியிருக்க அவர்கள் பொது ஜனங்களிடம் சத்தியம், நாணையம், யோக்கியம் தவரி நடந்து அவர்களை எப்படி மோசம் செய்தாலும் சர்க்காரிடத்தில் மாத்திரம் எப்போதும் சத்தியம் தவர மாட்டார்கள். ஏன் என்றா கேட்கிறீர்கள்? சர்க்காரிடம் சும்மா தவரினாலோ அவர்களுக்கு நன்றாய் புத்தி கற்பிக்க தெரியும். அப்படிப்பட்ட சர்க்காரார் சத்தியம் தவரினாலும் இவர்களை சும்மாவா விட்டு விடுவார்கள்.  திம்மு திம்மென்று திம்மி இன்னொரு தடவை நிமிர்த்தி விட்டுவிட மாட்டார்களா? சூடுகண்ட பூனைகள் ஆயிற்றே காங்கிரஸ்காரர்கள். இனியுமா அவர்களுக்குப் புத்தி வந்திருக்காதென்று நினைக்கிறீர்கள். எந்த தேசியப் பத்திரிகையாவது மூச்சு விட்டதா? எந்த தேசியத் தலைவராவது கீச்சு மூச்சுக் காட்டினார்களா? தலைவர் முதலா வாலர் வரையில் குந்தினாயே குரங்கே என்று ஆகிவிடவில்லையா? குடி அரசு  செய்தி விமர்சனம் ...

நாஸ்திகம் எது?

நாஸ்திகம் எது?

  உலக நடவடிக்கைகள் சகலத்தையும் நடத்திக்கொண்டும், வணக்கத்திற்கும், பிரார்த்தனைகளுக்கும் பிரதி பயன் அளித்துக் கொண்டும் இருக்கும்படியான ஒரு கடவுளை நம்பவில்லை யென்று சொல்லுவது நாஸ்திகமானால் அந்த நாஸ்திகப் பட்டத்தை ஏற்றுக் கொள்ள எந்தப் பகுத்தறிவு வாதியும் வெட்கப்பட மாட்டான். குடி அரசு  பெட்டிச் செய்தி  12.05.1935

கடவுள்

கடவுள்

  சித்திரபுத்திரன் கேள்வி@ கடவுள் நன்மையே உருவாய்க் கொண்டவர் என்பதற்கு உதாரணம் சொல்லு. பதில்@ நல்ல காற்று, நல்ல தண்ணீர், வாசனை உள்ள புஷ்பம், ருசியுள்ள ஆகாரம், சத்துள்ள பழ வகை, மழை, நதி, நந்தவனம், பால், பசு, நல்ல பெண்கள், சந்திரன், சூரியன் முதலிய அனேக அருமையான வஸ்துக்களை உற்பத்தி செய்து நமக்குக் கொடுத்திருக்கிறார். ஆதலால் கடவுள் நன்மையே உருவாகக் கொண்டவர். கேள்வி@ கடவுள் கெடுதியையே உருவாய்க் கொண்டவர் என்பதற்கு உதாரணம் சொல்லு. பதில்@ கெட்ட காற்று, விஷப் புகை, நோய்க் கிருமிகள் உள்ள தண்ணீர், துர்வாடையுள்ள மலம், கசப்பான ஆகாரம், உபயோகமற்றதும் நோயை உண்டாக்குவதுமான பழம், துஷ்டமிருகங்கள், விஷஜந்துக்கள், கொடிய வியாதி, கடும் வெய்யில், இடி, பூகம்பம், முரட்டு வெள்ளம், இருட்டு, நோய் உள்ள பெண்கள், தரித்திரம், முள்ளுள்ள புதர்க்காடுகள் முதலானவைகளை எல்லாம் கடவுள் உற்பத்தி செய்திருக்கிறார். ஆதலால் கடவுள் கெடுதியையே உருவாய்க் கொண்டவர். கேள்வி@ இந்தக் கெடுதிகளையெல்லாம்,...

நீடாமங்கலத்தில்  சுயமரியாதைத்  திருமணம்

நீடாமங்கலத்தில்  சுயமரியாதைத்  திருமணம்

  சுயமரியாதைத் திருமணம் என்பது  சீர்திருத்தத் திருமணமே ஒழிய மற்றபடி வேறு அல்ல என்பதாக பல மேற்கோள்களுடன் சிறிது நேரம் பேசினார். அதில் 40 வருஷத்துக்கு முன்னால் நடந்த தனது திருமணமும் இந்த மாதிரி தன் தகப்பனாருக்கு இஷ்டமில்லாமல் நடந்ததாகவும் தனது மனைவியை மணக்க திருமணத்தின் போது தந்தை தனக்கு இஷ்டமில்லை என்று சொன்னதாகவும், அதனால் தந்தையார் சாப்பாடு இடத்திலேயே இருந்தாரே ஒழிய மணக் கொட்டகைக்கு வரவில்லை என்றும், மற்றபடி செலவு விஷயத்தில் அவர் ஏதும் குறுக்கிடவில்லை என்றும், ஐரோப்பியர் வந்தபோது மாத்திரம் வரவேற்க வந்ததைத் தவிர மற்றபடி எந்த காரியத்தையும் கவனிக்கவில்லை என்றும், பிறகு தன் மனைவி விஷயத்தில் தன் தகப்பனார் மிக பட்சமாக இருந்தார் என்றும் ஒவ்வொன்றுக்கும் மனைவிக்காக சிபார்சுக்கு வந்து தன்னைக் கண்டித்தாரென்றும் சொல்லி அதுபோலவே இப்போது மணமகன் தந்தையாருக்கு ஏதோ சிறிது அதிருப்தி இருந்தாலும் அது சீக்கிரம் சரிப்பட்டுப் போகும் என்றும் சொன்னார். குறிப்பு:            05.05.1935 ...

தேவக்கோட்டையில்

தேவக்கோட்டையில்

  மே தினம் (ஈ.வெ. ராமசாமி அவர்கள்) மே தினம் என்பது பற்றியும் சீர்திருத்தத் திருமணம் என்பது பற்றியும் யாகம் என்பது பற்றியும் பேசினார். கூட்டத்தில் இரண்டொரு பார்ப்பன வக்கீல்கள் வந்து யாகத்தைப் பற்றி பேசக் கூடாது என்று ஆட்சேபித்தார்கள். அவர்களை ஜனங்கள் ஆதரிக்காமல் தடுத்துப் பேசினார்கள். தோழர் ஈ.வெ.ரா. ஜனங்களை அமைதிப்படுத்தி வக்கீலை நன்றாய்ப் பேசுவதற்கு இடம் கொடுத்து அவர் பேச்சைக் கேட்கச் செய்தார். தலைவர் அவரை மேடைக்கு வந்து பேசும்படி பல தடவை கூப்பிட்டும் அவர் வரவில்லை என்றாலும் அவர் பேச்சு முழுவதும் இடையூறு இல்லாமல் கேழ்க்கச் செய்தார். பிறகு ஒவ்வொன்றுக்கும் பதில் சொன்னார். அய்யருடைய வாதமெல்லாம் யாகம் ரிஷிகளால் சொல்லப்பட்ட தென்றும் யாகத்தில் செய்யப்படும் ஜீவ இம்சையும் கொலையும் இம்சையும் கொலையுமாகாதென்றும் யாகத்தில் கொல்லப்பட்ட ஜீவன் மோட்சத்தை அடைகிறதென்றும் அதைப்பற்றிப் பார்ப்பன ரல்லாதார் பேசுவதற்குப் பாத்தியமில்லை என்றும் குறிப்பாக ராமசாமி, சாஸ்திரம் படிக்காதவர் ஆனதால் அவர் இதைப்பற்றிப்...

மே தினம் என்றால் என்ன?

மே தினம் என்றால் என்ன?

  இந்தியாவுக்கு ஏற்ற மே தினம் தோழர்களே! மே தினம் என்பதைப் பற்றி இங்கு இதுவரை 5, 6 தோழர்கள் எடுத்துச் சொல்லி விட்டார்கள். நான் முடிவுரை என்கின்ற முறையில் ஏதாவது பேச வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள். மே தினம் என்பது இன்று உலகமெங்கும் ஒவ்வொரு தேசங்களிலும் கொண்டாடப்படுவதானாலும் ஒவ்வொரு தேசத்தில் ஒவ்வொரு விதமாகக் கொண்டாடப்படுகின்றது என்பதில் உண்மை இல்லாமல் இல்லை. ரஷ்யாவில் கொண்டாடப்படுவதுபோல் இங்கிலாந்தில் கொண்டாடப்பட மாட்டாது. ஸ்பெய்னில் கொண்டாடப்படுவது போல் பிரஞ்சில் கொண்டாடப்பட மாட்டாது. அதுபோலவே தான் மேல் நாடுகளில் ஐரோப்பா முதலிய இடங்களில் கொண்டாடப்படுவது போல் இந்தியாவில் கொண்டாடத்தக்க நிலைமை இல்லை. ஏனெனில் ஒவ்வொரு தேசத்தின் நிலைமை வெவ்வேறான தன்மையில் இருந்து வருகின்றது. எல்லா தேசமும் ஒரே விதமான பக்குவத்தை அடைந்துவிடவில்லை. ஆரம்ப தசையில் இருக்கிற தேசமும் முடிவை எட்டிப் பார்க்கும் தேசமும் ஒரே மாதிரி கொண்டாட வேண்டும் என்று கருதுவதும் புத்திசாலித்தனமாகாது. இன்று ரஷ்யாவில் மே தினத்தைக்...

கோவில் பிரவேசம்

கோவில் பிரவேசம்

  பொதுவுடமைத் தத்துவமாம் கோவில் பிரவேசத்தைப் பற்றி ஒரு கெட்டிக்கார பேர் போன வக்கீல் ஒருவர் நம்மிடம் பேசும் போது “”கோவில் பிரவேசம் கேட்பது பொதுவுடமைத் தத்துவமேயாகும்” என்றார். எப்படி என்று கேட்டதற்கு அவர் பதிலளித்ததாவது@ ஒருவனுக்கு அல்லது ஒரு கூட்டத்தாருக்கு மாத்திரம் ஆதாரப் பூர்வமாகவும், அனுபவ பூர்வமாகவும், பழக்க வழக்கமாகவும், இருந்து வரும் ஒரு சொத்து அல்லது ஒரு கட்டிடம் ஒரு குறிப்பிட்ட இடம் முதலியவை களில் மற்றொருவனோ அல்லது மற்றொரு கூட்டத்தார் என்பவர்களோ உரிமை வேண்டும் என்பதும் பொதுவுடமைக் கொள்கையேயாகும். ஆதலால் ஒரு கோவிலுக்குள் அனுபவபாத்தியமில்லாத ஒருவன் போக வேண்டுமென்பது அதாவது ஒரு கூட்டத்தார் மாத்திரம் போகலா மென்றோ ஒரு கூட்டத்தார் மாத்திரம் தான் உபயோகித்துக் கொள்ளலாம் என்றோ உள்ள நிபந்தனையில் சட்டப்படிக்கு உள்ள காலாவதிக்கு மேற்பட்ட காலமாய் பழக்கத்திலும் அனுபோகத்திலும் இருந்து வந்த இடங்களில் (கோவில், சத்திரம் முதலிய இடங்களில்) அக்கூட்டத்தாருக்கு வேறுபட்டவர்களும் வேறுபட்டவர்களாய்க் கருதப்பட்டவர்களும் அனுபவ...

சொர்க்கம்

சொர்க்கம்

  சித்திரபுத்திரன் கேள்வி@ சொர்க்கலோகத்தில் கடவுள் இருக்கிறார் என்பதை ஒப்புக் கொள்ளுகின்றாயா? இல்லையா இரண்டில் ஒன்று சொல்லு. பதில்@ இவ்வளவு அவசரப்பட்டால் நம்மால் பதில் சொல்ல முடியாது. பந்தியில் உட்காரவே அனுமதி இல்லை என்றால் ஓட்டை இலை என்று சொல்லுவதில் பயன் என்ன? சொர்க்கலோகம் என்பது எந்தப் பூகோளத்தில் இருக்கிறது? கீழே ஆயிரக்கணக்கான மைல்களுக்கும் மேலே பதினாயிரக்கணக்கான லட்சக்கணக்கான மைல்களுக்கும் வானசாஸ்திரிகள் விவரம் கண்டுபிடித்து விட்டார்கள். எங்கும் சொர்க்கலோகம் இருப்பதாகக் கண்டு பிடிக்கப்படவில்லை. ஆகவே சொர்க்கலோகமே சந்தேகத்தில் இருக்கும்போது சொர்க்கலோகத்தில் கடவுள் இருக்கிறாரா என்றால் என்ன பதில் சொல்லுவது? கே.@ அப்படியானால் மேல்லோகம், வைகுந்தம், கைலாயம், பரமண்டலம் முதலிய எதுவுமே இல்லை என்கின்றாயா? பதில்@ நான் இவைகளையெல்லாம் தேடித் தேடிப் பார்த்து இல்லை என்று சொல்ல வரவில்லை. பூகோள சாஸ்திரம், வான சாஸ்திரம், விஞ்ஞான சாஸ்திரம் ஆகிய எதற்கும் இந்த லோகங்களில் எதுவுமே தென்படவில்லையே என்றுதான் மயங்குகிறேன். கே.@ அப்படியானால் அண்ட,...

இன்னமுமா காங்கரஸ்

இன்னமுமா காங்கரஸ்

  தமிழ்நாட்டில் காங்கரஸ் புரட்டுக்கும் பார்ப்பன சூழ்ச்சிக்கும் சாவுமணி அடித்தாய்விட்டது. சமீபத்தில் நடந்த தேர்தலில் இருந்து காங்கரஸ் என்பது பார்ப்பனர்களும், தகுதியற்றவர்களும் பதவிவேட்டை ஆடும் ஒரு பித்தலாட்ட ஸ்தாபனம் என்பது வெட்ட வெளிச்சமாய்விட்டது. மஞ்சள் பெட்டி என்றால் மக்கள் மயங்கி மெளடீகர்களாகும் மதிமோசமும் ஒழிந்துவிட்டது. இனி பார்ப்பனர்கள் பலாத்காரத்தாலும் மூர்க்கத்தனத்தாலும் பொது மக்களின் வரிப்பணத்தை வாரி வாரி காலிகளுக்கும் கூலிகளுக்கும் இறைத்து ஆள் சேர்த்துக் கொண்டு செய்யும் அட்டூழியத்தை ஆதரவாகக் கொண்டுமேதான் காங்கரஸ் இந்த நாட்டில் வாழவேண்டிய வெளிப்படையான நிலைமையில் இருந்து வருகிறது. இந்த நிலை கூட இனி எத்தனை நாளைக்கு இருக்கக் கூடும்? பொது ஜனங்கள் இந்த ஆட்களின் யோக்கியதைகளை நேரில் கண்டு மிக மிக சமீபத்திற்கு வந்து விட்டபடியால் அதுவும் வெளுத்துப் போகப் போகிறது என்பதில் ஐயமில்லை. ~subhead நாணயமற்ற காரியங்கள் ~shend இவ்வளவு தைரியமாய் நாம் எடுத்துக்காட்டுவதற்கு பிரத்தியட்ச ஆதாரம் சமீபத்தில் நடந்த முனிசிபல் கவுண்சிலர், சேர்மன்...

மே விழாவும் ஜூபிலி விழாவும்

மே விழாவும் ஜூபிலி விழாவும்

    மே மாதம் முதல் தேதியில் மே தினக் கொண்டாட்டமும், மே மாதம் 6ந் தேதி மன்னர் ஜூப்பிலியும் தமிழ்நாட்டில் ஏறக்குறைய ஒன்று போலவே எங்கும் கொண்டாடப்பட்டிருக்கும் விஷயம் தினசரிப் பத்திரிகைகளில் பரக்கக் காணலாம். மே தின விழாவானது உலகம் பாடுபட்டு உழைக்கும் மக்களின் ஆட்சியின் கீழ் வர வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டாடுவதாகும். ஜூப்பிலி விழா இன்று ஆட்சி புரியும் அரசரின் ஆட்சியைப் பாராட்டியும் அவரது ஆட்சிக்கு கால் நூற்றாண்டு ஆயுள் ஏற்பட்டதை பற்றி ஆனந்தமடைந்தும் இனியும் நீடூழி காலம் இவ்வாட்சி நீடிக்க வேண்டும் என்று ஆசைபட்டும் கொண்டாடியதாகும். இந்தியாவின் பிரதிநிதித்துவ சபை என்று சொல்லப்படும் இந்திய தேசீயக் காங்கிரசானது மேற்கண்ட இரண்டு தத்துவங்களுக்கும் விரோதமான மனப்பான்மையைக் கொண்டது. எப்படியெனில் முறையே (சூத்திரர்) தொழிலாளி, (பிராமணர்) முதலாளி அல்லது அடிமை எஜமான் என்கின்ற இரண்டு ஜாதிகள் பிறவியின் பேரிலேயே இருக்க வேண்டும் என்றும், அன்னிய ஆட்சி என்பதான பிரிட்டிஷ்...

அறிக்கை

அறிக்கை

  நமது பத்திரிகையில் ஒவ்வொரு ஊரிலுள்ள பார்ப்பன, பார்ப்பன ரல்லாத உத்தியோகஸ்தர்களின் எண்ணிக்கையைக் கேட்டிருந்தோம். அதன்படி கோபி, திருச்சங்கோடு, சூலூர் முதலிய இன்னும் பல ஊர்களிலிருந்து எண்ணிக்கை லிஸ்டு வந்து இருக்கிறது. இவ்வாரம் திருச்செங்கோட்டிலிருந்து வந்த செய்தியை மட்டும் பிரசுரித்திருக்கிறோம். அடுத்த வாரத்திலிருந்து தொடர்ச்சியாக மற்ற ஊர் செய்திகளைப் பிரசுரிக்கப்படும். பர். குடி அரசு  அறிக்கை  05.05.1935

தொண்டர்களே – சென்னை செல்க

தொண்டர்களே – சென்னை செல்க

  அக்கிரகார சரணாகதி மந்திரிகளின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய அவசியம் நெருங்கி விட்டது. தமிழ்நாட்டில் ஒரு சிறு அளவுக்கு இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி ஆரம்பித்த உடன் அதை ஒடுக்குவதற்கு அவசியமான அடக்குமுறைகளைக் கையாள முதல் மந்திரி தோழர் கனம் ஆச்சாரியார், காரியக் கமிட்டியார் அதிகாரம் பெற்று வந்து விட்டாராம். மற்றும் எப்படிப்பட்ட கிளர்ச்சியாய் இருந்தாலும் அதற்கு வகுப்புவாதம் என்கின்ற பெயரைக் கொடுத்து அடக்கி விட அனுமதி பெற்று வந்திருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் இதே சாக்கில் தன்னை ஆதரிக்காத பத்திரிக்கைகளையும் தங்களது உண்மையான நடத்தைகளையும் யோக்கியதைகளையும் உள் எண்ணங்களையும் வெளியிடும் பத்திரிகைகளையும் ஒழிப்பதற்கும் அனுமதி பெற்று வந்து விட்டார்களாம். ~subhead தலைவர்கள் யோக்கியதை ~shend இந்த “அனுமதி”களின் யோக்கியதை நாமறியாததல்ல காங்கரஸ் தலைவரின் யோக்கியதையையும், காரியக் கமிட்டியாரின் யோக்கியதையையும், காங்கரசின் சர்வாதிகாரியான காந்தியாரின் யோக்கியதையையும் பற்றி தனித்தனியாகவும், சேர்த்தும் பல தடவை எழுதியும் சொல்லியும் வந்திருக்கிறோம். கனம் ராஜகோபாலாச்சாரியாரின்...

மதம் போய் விடுவதால் கடவுள்  ஒழிந்துவிடாது

மதம் போய் விடுவதால் கடவுள் ஒழிந்துவிடாது

  ஓர் சமதர்மி சென்ற வாரத்திற்கு முந்திய வாரம் குடி அரசில் ஜாதிகள் ஒழிக்கப் படுவதினால் மதம் ஒழிந்து விடாது என்பதாக விளக்கி இருந்தேன். இவ்வாரம் இக்கட்டுரையில் மதம் போய்விடுவதால் கடவுள் ஒழிந்து விடாது என்பதைப் பற்றி எழுத ஆசைப்படுகிறேன். முதலில் மதம் என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். மதம் என்பதைப் பற்றி இருவிதமான அபிப்பிராயங்கள் மக்கள் உலகில் நிலவி வருகின்றன. ஒன்று: மதங்கள் என்பவைகள் பெரிதும் கடவுள்களாலும், கடவுளைக் கண்ட பெரியார்களாலும், கடவுள் குமாரர்களாலும், கடவுளால் அனுப்பப்பட்ட தூதர்களாலும், கடவுள் அவதாரங்களாலும், கடவுள் தன்மை கொண்ட ஆழ்வார்கள் நாயன்மார்களாலும் ஏற்பட்டவை என்றும், அம்மதங்களுக்கு ஆதாரமான வேதங்கள் என்று சொல்லப்பட்டவைகள் அக்கடவுள்களின் வாக்குகள் என்றும், கடவுள்களின் அபிப்பிராயங்கள் என்றும், கடவுள் அருள் பெற்றவர்களால், தீர்க்கதரிசிகளால் சொல்லப் பட்டவைகள் என்றும், கடவுள் கட்டளையின் மீது வெளியாக்கப்பட்டவை என்றும், அசரீரியாக ஆகாயத்தில் இருந்து சப்த மூலமாக வந்தவைகள் என்றும், அவை எக்காலத்துக்கும்...

வெற்றிமேல் வெற்றியின் யோக்கியதை மாகாணத் தலைவர்கள் அபிப்பிராயம்

வெற்றிமேல் வெற்றியின் யோக்கியதை மாகாணத் தலைவர்கள் அபிப்பிராயம்

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தீர்மானம் தென்னாட்டு பார்ப்பனரல்லாதார் மக்களை ஏமாற்றுவதற்காக தோழர் ராஜகோபாலாச்சாரியார்                 ஜப்பல்பூரில் 24ந் தேதி கூடிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு ஒரு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிக் கொள்ளப் பார்த்தார். அத் தீர்மானமாவது@ “”இந்திய சட்டசபையில் காங்கிரஸ் கட்சி மெம்பர்கள் பல கஷ்டங் களைச் சமாளித்து வெற்றிகரமாக செய்த வேலைகளைக் கண்டு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி திருப்தி அடைகிறது” என்பதாகும். இத் தீர்மானத்தைப் பற்றி பல மெம்பர்கள் பேசுகையில் தெரிவித்த அபிப்பிராயங்களாவன. சர்தார் சார்துல் சிங் “”சுயராஜ்ஜியம் பெருவதற்காக காங்கிரஸ் அசெம்பிளிக்குச் செல்லவில்லை” என்று பேசி இருக்கிறார். ஆனால் தேர்தலின்போது ஓட்டர்களுக்கு என்ன சொல்லி ஓட்டு வாங்கப்பட்டது என்பதை யோசித்தால் காங்கிரஸ் சட்டசபைக்குப் போனது வீண் என்பது புலப்பட்டுவிடும். “”சுயராஜ்ஜியம் வேண்டுமானால் சத்தியமூர்த்தி அய்யருக்கும், சாமி வெங்கிடாசலம் செட்டியாருக்கும் ஓட்டு போடுங்கள்” என்று கேட்டார்கள். இப்போது சுயராஜ்ஜியத்துக்கும் அசெம்பிளிக்கும் சம்பந்தமில்லை என்று ஆகிவிட்டது....

பிரிட்டிஷ் ஆட்சியா? பார்ப்பன ஆட்சியா?

பிரிட்டிஷ் ஆட்சியா? பார்ப்பன ஆட்சியா?

  இந்தியாவில் பிரிட்டிஷ் ஆக்ஷி ஏற்பட்டு 200 வருஷ காலத்தில் இந்தியர்களுக்கு ஏற்பட்ட நன்மை தீமைகள் என்பவை எவ்வளவோ இருந்தாலும் பிரிட்டிஷாரது ஆக்ஷியின் கொள்கைகள் பழய கால ஆரிய அரசர்கள் என்பவர்களின் ஆரிய மத சாஸ்திரங்கள் மனுநீதி தர்மங்கள் ஆகியவைகள் போல் அல்லாமல் “”இந்தியாவின் சகல பிரஜைகளையும், சமமாய்ப் பாவித்து நடத்துவது” என்கின்ற ஒரு கொள்கையை முக்கியமாய்க் கொண்டிருப்பதாகச் சொன்னது இந்திய மக்களுக்கு “”வரப்பிரசாதம்” போன்றது என்பதை நடுநிலைமைப் புத்தி கொண்ட எந்த மனிதனும் மறுக்க மாட்டான். ஆனால் அது காரியத்தில் கிரமமாய் நடந்து வந்திருக்கிறதா என்பதை எந்த நடுநிலைமைக்காரனும் ஒப்புக் கொள்ளத் தயங்கியே தீருவான். அப்படி அக் கொள்கை காரியத்தில் நடவாததற்குக் காரணம் பிரிட்டிஷாராய் இருந்தாலும் இருக்கலாம்; அல்லது மேல் ஜாதிக்காரர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொண்டு சகல பிரஜைகளையும் சமமாய் மதிப்பது தோஷமானது, பாவமானது என்கின்ற நீதியை பின்பற்றுகின்ற  பார்ப்பனர்களாக இருந்தாலும் இருக்கலாம். எப்படி இருந்தாலும் சகல பிரஜைகளையும்...

காங்கரசும் மைனாரட்டியும்

காங்கரசும் மைனாரட்டியும்

  அன்புள்ள தலைவரவர்களே! இந்து முஸ்லீம் தோழர்களே!! நான் நேற்று இங்கு நடைபெற்ற நபிகள் பெருமான் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு வருவதற்கு இருந்தேன். ஆனால் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வேலையினால் வரமுடியவில்லை. அந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதற்காகவே இன்று இங்கு வந்திருக்கிறேன். இந்த ஒரு வாரமாகவே பல இடங்களுக்குச் சென்று தொடர்ச்சியாகப் பிரசாரம் செய்து வந்திருக்கிறேன். அதனால் எனது உடல் நிலையும் சரியாக இல்லை. அப்படி யிருந்தும் இங்கு பேசவேண்டுமென்ற ஆசையால் வந்தேன். ~subhead துக்க சேதி ~shend அப்படி வந்த நான் ரயிலை விட்டு இறங்கி காரில் ஏறியதும் என்னை ரயிலுக்கு அழைக்க வந்த எனது நண்பர் தோழர் யாகூப் சாயபு அவர்கள் ஒரு வருத்தமான விஷயம் கூறினார். அது கேள்விப்பட்ட நேரத்திலிருந்து என் மனம் துடிக்கிறது. அதாவது தோழர் பரமேஸ்வரம் செட்டியார் காலம் சென்று விட்டதாகக் கூறினார். தோழர் பரமேஸ்வரம் செட்டியார் அவர்கள் எனது அருமை நண்பர். நமதியக்கத்திற்காக...

சந்தேகக் கேள்விகள்

சந்தேகக் கேள்விகள்

  சரியான விடைகள் சித்திரபுத்திரன் வினா:  கிறிஸ்தவனாகப் போவதில் என்ன கெடுதி? விடை:  ஒரு கெடுதியும் இல்லை; ஆனால் மதத்தின் பெயரால் குடிக்காதே. வினா:  மகம்மதியனாவதில் என்ன கெடுதி? விடை: ஒரு கெடுதியும் இல்லை; ஆனால் பெண்களுக்கு மூடி போடாதே. வினா:  உண்மையான கற்பு எது? விடை:  தனக்கு இஷ்டப்பட்டவனிடம் இணங்கியிருப்பதே உண்மையான கற்பு. வினா:  போலிக் கற்பு என்றால் என்ன? விடை: ஊராருக்கோ, சாமிக்கோ, நரகத்திற்கோ, அடிக்கோ, உதைக்கோ, பணத்திற்கோ பயந்து மனதிற்குப் பிடித்தமில்லாதவனுடன் தனக்கு இஷ்டமில்லாத போது இணங்கியிருப்பதே போலிக் கற்பு. வினா:  மதம் என்றால் என்ன? விடை: இயற்கையுடன் போராடுவதும் அதைக் கட்டுப்படுத்து வதுந்தான் மதம். வினா:  பண்டிகை நாட்களில் உத்தியோகஸ்தர்களுக்கும், தொழிலாளர் களுக்கும் ஏன் “”லீவ்” கொடுக்கப்படுகிறது? விடை:  பாடுபட்டுச் சம்பாதிக்கும் பணத்தில் மீதி வைக்காமல் பாழாக்கிவிடவேண்டும் என்பதற்காகத்தான். வினா:  பெண்களைப் படிக்கக்கூடாதென்று ஏன் கட்டுப்படுத்தினார்கள்? விடை: அவர்களுக்கு அறிவு இல்லை; சாமர்த்தியமில்லை  என்று சொல்லிச் ...

ஏண்டா படிக்கவில்லை?

ஏண்டா படிக்கவில்லை?

  ஆசிரியர்:  அடே! கண்ணப்பா! ஏண்டா பாடம் படித்துக்கொண்டு வரவில்லை? மாணவன்:  நீங்கள் நேற்று சொன்னபடிதான் சார் நான் செய்தேன். ஆசிரியர்:  என்னடா சொன்னேன்? மாணவன்:  நேற்று சொல்லிக்கொடுத்த பாட்டில் உள்ளபடி நடந்து கொண்டேன். ஆசிரியர்:  என்ன  பாட்டு? மாணவன்:   பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்  இவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன்  கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச் சங்கத்தமிழ் மூன்றும் தா! என்றுச் சொல்லிக் கொடுத்தீர்கள்.  அதன்படி ராத்திரி, பால், தேன், சர்க்கரைப்பாகு, முந்திரிப்பருப்பு எல்லாம் பிள்ளையாருக்கு வைத்துப்படைத்தேன். ஆகையால் பாடம் வராதது என்  குற்றம் அல்ல சார்! ஆசிரியர்:  அடா முட்டாள்  பயலே ! இது மாத்திரம் போதுமாடா? புஸ்தகத்தைப் பார்த்துப் படித்தால்தாண்டா பாடம் வரும். மாணவன்:  புஸ்தகத்தைப் படித்தால்தான் பாடம் வரும் என்றால், பிள்ளையாரை ஏன் சார் கும்பிட வேண்டும்? அவரை  வணங்கினால்  ஆகாத  காரியம்  எல்லாம்  ஆய்விடும்  என்று சொன்னீர்களே! அதெல்லாம் பொய்தானே!...

தமிழா  என்ன செய்யப்போகிறாய்  இந்தி வந்து விட்டது!

தமிழா  என்ன செய்யப்போகிறாய் இந்தி வந்து விட்டது!

  பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்த – தமிழனின் தன் மானத்தை அழித்து தமிழனை ஆரியருக்கு என்றென்றும் நிலையான அடிமையாக்க ஹிந்தி தமிழ் மக்களுக்கு கட்டாயப் படிப்பாக ஏற்படுத்தப்பட்டாய் விட்டது. யாரால்? ஆரியரால் எப்படி? தமிழ் மக்களின் ஒன்றுபட்ட கூக்குரலைச் சிறிதும் மதியாமல் தமிழா இனி என்ன செய்யப்போகிறாய்? தலை வணங்கி வரவேற்கப் போகிறாயா? எதிர்த்து நின்று விரட்டி அடிக்கப்போகிறாயா? இதில்தான் தமிழன் இருப்பதா இறப்பதா என்கின்ற முடிவு இருக்கிறது. தலை வணங்குவதானால் காங்கரசில் இரு. எதிர்த்து நிற்பதானால் உன் பெயரை எதிர்ப்புக் கமிட்டிக்குக் கொடு. குடி அரசு – அறிவிப்பு – 15.05.1938

ஈரோடு காங்கரஸ் நாற்றம்  பொதுஜனங்கள் வெறுப்பு  – நேரில் கண்டு சிரித்தவன்

ஈரோடு காங்கரஸ் நாற்றம் பொதுஜனங்கள் வெறுப்பு – நேரில் கண்டு சிரித்தவன்

  ஈரோடு, மே.10. ஈரோடு முனிசிபாலிட்டிக்கு மெஜாரிட்டியாக 16 காங்கரஸ் கெளன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இன்று மாலை 5 மணிக்கு காங்கரஸ் கமிட்டியின் சார்பாக ஒரு சேர்மனைத் தேர்ந்தெடுப்பதற்காக காங்கரஸ் எலக்ஷன் ஆபீசில் அட்ஹாக் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு தோழர்கள் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், கோவை அவினாசிலிங்கம் செட்டியார், குட்டப்பாளையம் கே.எஸ். பெரியசாமிக் கவுண்டர், கோவை சுப்ரி முதலியவர்கள் விஜயம் செய்திருந்தார்கள். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 16 கெளன்சிலர்களும் விஜயம் செய்திருந்தார்கள். கடந்த மூன்று நான்கு தினங்களாக “பொது ஜனங்கள்” பெயரால் தோழர் எம்.எ. ஈசுவரன் அவர்களையே சேர்மனாகத் தேர்ந்தெடுக்க வேண்டு மென்று பல துண்டு பிரசுரங்கள் வெளிவந்து கொண்டிருந்தன. சேர்மன் பதவிக்கு பலர் அபேட்சித்தார்கள். இதில் தோழர்கள் எம். எ. ஈசுவரன் பெயரும், ஆர்.கே. வெங்கிடசாமி பெயரும் முதன்மையாக அடிபட்டன. தோழர் ஈசுவரனை ஆதரித்து பல வாலிபர்கள் வெளியில் நின்றுகொண்டு கிளர்ச்சிசெய்து, வெங்கிடசாமிக்குக் கொடுக்கக்கூடாதென்று ஆரவாரம் செய்தார்கள். “வெங்கிடசாமிக்குக் கொடுக்க வேண்டும்,...

நெருக்கடி என்றுமில்லா நெருக்கடி

நெருக்கடி என்றுமில்லா நெருக்கடி

  நம்நாட்டுப் பார்ப்பனீயமானது “தோலைக் கடித்து, துருத்தியைக் கடித்து இப்போது மனிதனைக் கடிக்க வந்துவிட்டது” என்பது போல் உத்தியோக வேட்டை ஆடி, பிறகு நம் பிரமுகர்களையும் நமது ஸ்தாபனங்களையும் ஒழிக்க முயற்சியெடுத்து வெற்றி பெற்று பதவியும் ஆதிக்கமும் பெற்றவுடன் இனி என்றென்றும் தமிழ் மக்கள் சமூகமே தலையெடுக்க வொண்ணாதபடி செய்வதற்கு பல வஞ்சகமும் சூழ்ச்சியும் நிறைந்த முறைகளை திரை மறைவில் கையாடி வந்து இன்று வெளிப்படையாகவே வெளிவந்து ஹிந்தி என்ற கத்தியுடனும், வார்தா கல்வித்திட்டம் என்ற சூலாயுதத்துடனும் நின்றுகொண்டு தமிழர்களை வெட்டியும் குத்தியும் கொன்று புதைக்க முனைந்து விட்டது. ~subhead பார்ப்பனீயப் போராட்டம் ~shend தமிழ் மக்களில் எவருடைய ஆக்ஷேபணையையும் எப்படிப் பட்டவர்களுடைய கூக்குரலையும், யாருடைய அழுகையையும் லòயம் செய்யாமல் ஒரே அடியாய் “சம்ஹாரம் செய்து விட்டுத்தான் அமருவேன்” என்ற ஆணவத்துடன் அது (பார்ப்பனீயம்) தலைவிரித்தாடுகிறது. தமிழனுக்கு இன்று கதி இல்லை, நாதி இல்லை, நடுத் தெருவில் பெண்டு பிள்ளைகளுடன் இழுத்துப்...

அறிவின்  பயன்

அறிவின்  பயன்

  இப்படி மதிக்கப்படுவது சரியா தப்பா என்பது விவகாரத்திற்கு உரியதானாலும், இப்பகுத்தறிவை மனிதன் உடையவனாயிருப்பதின்  காரணமாய் மனித ஜீவனுக்கு ஏதாவது உண்மையான சந்தோஷமும், திருப்தியும் ஏற்பட்டிருக்கின்றதா என்று பார்ப்போமேயானால், இல்லை என்றுதான் சொல்லவேண்டியதிருக்கிறது. அதுவும் பகுத்தறிவு ஏற்பட்ட தாலேயே மனித சமூகத்துக்குச் சந்தோஷமும், திருப்தியும் ஏற்பட இடமில்லாமல் போய்விட்டது என்று கூட சொல்லவேண்டியது இருக்கிறது.  ஆனால் இதைச் சரியென்று யாராவது ஒப்புக்கொள்ளமுடியுமா என்று பார்த்தால் பகுத்தறிவின் காரணமாக மனிதனுக்கு சுகமும், திருப்தியும் இல்லையென்று சொல்லுவது நியாயமாகாது என்றாலும் பிரத்தியக்ஷத்தில் அப்படித்தான் காணப்படுகின்றது. ஆகவே இதற்கு ஏதாவது காரணம் இருந்தாகவேண்டும் அல்லவா? அந்தக் காரணம் என்னவென்றால் மனிதன் தன் பகுத்தறிவைச் சரியானபடி பயன்படுத்தாமலும், பகுத்தறிவுக்கு விரோதமான விஷயங்களை மனிதன் ஏற்றுக்கொள்வதாலும் மனித சமூகத்துக்குச் சந்தோஷமும், திருப்தியும் இல்லாமல் போய்விட்டது. மனிதன் உலக சுபாவத்தையே தப்பாய் நிர்ணயித்துக்கொண்டு, மனித ஜன்மமே சுகமனுபவிக்க ஏற்பட்டதென்றும், வாழ்க்கையே துக்கமென்றும், சம்சாரமானது “”சாகரம்” “”துக்கம்”  என்று கருதுவதன் மூலம்...

நமது பத்திரிகை

நமது பத்திரிகை

  குடி அரசுப் பதிப்பகத்தினின்று “”பகுத்தறிவு” என்ற பெயரால் ஒரு மாதப் பத்திரிகை வெளியிட வேண்டுமென்ற அபிப்பிராயம் 6, 7 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்து வந்தது.  காலஞ்சென்ற ஈ.வெ.ரா. நாகம்மாள் அவர்கள் 1928ம் ஆண்டிலேயே அரசாங்கத்தில் ரிஜிஸ்டர் செய்து “”பகுத்தறிவு”  மாதப்  பத்திரிகையைப்  பிரசுரஞ்  செய்ய அனுமதியும் பெற்றிருந்தார்கள் என்பதைக்  “”குடி அரசு”  வாசகர்கள் நன்கறிவர்.  ஆனால் பலப்பல காரணங் களால் அம்மையாரின் முயற்சி தடைப்பட்டுப் போய்விட்டது. தமிழ் மக்களிடையே அதிதீவிரமாக அறிவியல் கொள்கைகளைப் பரப்பவேண்டுமென்றும்,  அவ்வாறு பரப்புவதற்கு ஓர் தனிப் பத்திரிகை,  வேறு எவ்வித நோக்கமுமின்றி அறிவியற் கொள்கைகளைப் பரப்பும் நோக்கம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு ஓர் நல்ல ஸ்தாபனத்தினின்று பிரசுரிக்கப்பட்டு தொண்டாற்றி வரவேண்டும் என்ற அபிப்பிராயம் நமக்கு  மட்டுமல்ல  பல அறிஞர்களுக்குமிருந்து வந்தது. எனவே 1935ம் ஆண்டு மேமாதம் “பகுத்தறிவை’ நமது பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகத்தினின்று வெளியிட வேண்டு மென்று தீர்மானிக்கப் பெற்று அவ்வாறே இப்பொழுது வெளி வந்திருக்கின்றது....

பகிரங்கக் கடிதங்கள்

பகிரங்கக் கடிதங்கள்

    ~subhead தோழர் முத்துரங்கம் அவர்களுக்கு, ~shend தாங்கள் “ஆண்மை, ஆற்றல்” இல்லாதவர் என்றும், தாங்கள் தமிழ் மாகாணக் காங்கரஸ் கமிட்டித் தலைவராக இருக்கும் வரையில் காங்கரசில் ஊழல் இருக்கத்தான் செய்யும் என்றும் சொல்லப்படுகிறது. அத்துடன் தங்களுக்குச் சுயமதிப்பும், பொது நோக்கும் இல்லை யென்று ஏன் சொல்லக் கூடாது என்பதாக பலர் அபிப்பிராயப்படுகிறார்கள். பார்ப்பனத் தாசர் என்றால் எப்படி யிருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ள பலர் ஆசைப்படுகின்றார்கள். தயை செய்து அவர்களின் முன் தாங்கள் பிராப்தமானாலே போதும் என்று நினைக்கிறேன். குட்பை. ~subhead தோழர் சுப்பராயன் அவர்களுக்கு, ~shend தாங்கள் போகும் இடங்களில் ஹிந்தியை எதிர்ப்பவர்கள் பொதுவாக சுயமரியாதைக்காரர்கள் என்றும் சிறப்பாகத் தோழர் ஈ.வெ.ரா. என்றும் சொல்லிக்கொண்டு திரிகிறீர்கள். இந்த மாதிரி தாங்கள் மாலை நேரத்தில்தான் சொல்லியிருக்க வேண்டும். ஆகையால் இனிமேல் காலை நேரத்தில் நிதானமாகப் பிரசங்கம் செய்வீர்களோனால் ஹிந்தியை எதிர்ப்பவர்கள் தமிழர்களே என்று உணர்ந்து கொள்வீர்கள். குட்பை....

“”ஸ்ரீராம” நவமி

“”ஸ்ரீராம” நவமி

  ஸ்ரீராம நவமி உர்ச்சவத்தில் தமிழ்நாட்டு மக்கள் கலந்து கொள்வதைப் போன்ற சுயமரியாதை அற்ற தன்மை வேறு ஒன்று இருப்பதாக நமக்குத் தோன்றவில்லை. ஸ்ரீராம நவமி என்பது ராமன் பிறந்ததை கொண்டாடுவதாலும், ராமன் பிரவியைப் பற்றி நாம் இப்போது ஏதும் பேச வரவில்லை. ராமன் சம்பந்தப்பட்டதாகச் சொல்லப்படும் கதையின் யோக்கியதை என்ன? அவன் எப்படிப்பட்டவன்? அவனுக்கும் தமிழ் மக்களாகிய திராவிட மக்களுக்கும் இருந்து வந்த சம்பந்தம் என்ன? என்பவைகளைப் பற்றி தமிழ்மக்கள் சிந்திக்க வேண்டாமா என்று கேட்கின்றோம். இவ்வாரம் 22ந் தேதி தமிழ்நாடு பத்திரிகைகளில் காணப்படும் சேதிகளில் ஒன்று தோழர் ஜவார்லால் நேருவும் ராமாயணத்தைப் பற்றி எழுதிய ஒரு குறிப்பாகும். அதில் ராமன் ஆரியன் என்றும், ராமாயணத்தில் வானரர் என்று சொல்லப்படுபவர்கள் திராவிட மக்கள் என்றும் எழுதி இருக்கிறார். ராமன் திராவிடப் பெண்ணாகிய தாடகையை பெண் என்று கூட பாராமல் கொன்றவன். ராவணன் தங்கையாகிய ராஜ குடும்பத்தைச் சேர்ந்த சூர்ப்பநகையை மூக்கையும்,...

காரைக்குடியில் சு.ம. திருமணம்

காரைக்குடியில் சு.ம. திருமணம்

  பெண்கள்  நிலையம்  அவசியம் தோழர்களே! திருமணத்திற்கு பிறகு திருமணத்தை பாராட்டிப் பேசிய அநேகர் பல அரிய விஷயங்களை எடுத்துச் சொல்லி இருப்பதோடு அவற்றிலிருந்து பல புதிய விஷயங்களும் வெளியாகியிருக்கின்றன. இத் திருமண விஷயத்தில் தம்பதிகளுக்கு அநேக இடையூறுகளும் பல தொந்தரவுகளும் ஏற்பட்டிருப் பதாகத் தெரிகிறது. பெண் ஒரு மாத காலமாக தோழர் நீலாவதி அம்மாள் வீட்டில் இருந்திருக்கிறது என்பதும், பெண்ணைச் சேர்ந்தவர்கள் பெண்ணை திருப்பிக் கொண்டு போவதற்கு பலவிதமான தொந்தரவுகள் செய்து இருப்பதாகவும் பிறகு அங்கிருந்து பெண் வேறு இடத்திற்கு கொண்டு போகப்பட்டு ஒரு வாரம் வரையிலும் மறைத்து வைக்க வேண்டியிருந்தது என்பதும், தோழர் ராம சுப்பிரமணியம் பேசியதிலிருந்து தெரிய வந்தது. அதுபோலவே மணமகன் விஷயத்தில் மணமகனைச் சேர்ந்தவர்கள் திருமணம் நடக்கவொட்டாமல் செய்வதற்காக வேண்டிய முயற்சிகள் செய்யக் கருதி அதற்காக கோர்ட்டு நடவடிக்கைகள் நடத்தவும் தடையுத்தரவு வாங்கவும் முயற்சித்தார்கள் என்பதும் ஒன்றும் முடியாது போனதும், அதன் பிறகு மாப்பிள்ளையை சுமார்...

புதிய

புதிய

  “”தேசத் துரோகிகள்” நேற்று வரை காங்கிரசின் சர்வாதிகாரியாய் இருந்த தோழர் ராஜேந்திர பிரசாத்திடம் சார்ஜ் ஒப்புக் கொடுத்த தோழர் ஆனே அவர்கள் இன்று தேசத் துரோகக் கூட்டத்தில் சேர்க்கப்பட்டு விட்டார். அதாவது ஜயகருடன் சேர்ந்து விட்டாராம். அது மாத்திரமல்லாமல் ஆனே அவர்கள் வைசிராய் பிரபுவின் விருந்துக்குச் சென்று விட்டாராம். கடைசியாக ஒத்துழைக்கவும் போகிறாராம். இந்தக் காரணங்களால் அவர் தேசத் துரோகியாகி விட்டார். தேசத் துரோகிகளுக்கு சன்னதுகள் நமது காங்கிரஸ்காரர்களிடம் தான் இருக்கிறது போலும். காங்கிரஸ்காரர்கள் சட்டசபைக்குச் சென்று உத்தியோகம் ஏற்று சீர்திருத்தங்களை நடத்திக் கொடுப்பது என்பது ஒத்துழைப்பு அல்லவாம். சரணாகதி அல்லவாம். ஏனெனில் ஒத்துழைப்புக்கு அர்த்தம் சொல்லும் அகராதி காங்கிரஸ்காரர்களுடையது. அதிலும் சென்னைப் பார்ப்பனர்களுடையவும், அவர்களுடைய பத்திரிகைகளுடையவும் அவர்களது கூலிகளுடையதுமாய் இருப்பதால் அவர்கள் பார்த்து எதை வேண்டுமானாலும் ஒத்துழைப்பு என்று சொல்லி விடலாம்  எதை வேண்டுமானாலும் ஒத்துழையாமை என்றும் சொல்லி விடலாம். ஆகவே தேசத் துரோகிகளுக்கு முத்திரை இடும் அதிகாரம்...

மே தினக் கொண்டாட்டம்

மே தினக் கொண்டாட்டம்

  சர்வ தேசங்களிலுமுள்ள தொழிலாளர்கள், ஆண்களும், பெண்களும்  மே மாதம் 1ம் தேதியை “”தொழிலாளர் தின”மாகக் கொண்டாடி வருகிறார்கள். ரஷிய சமதர்மத் தொழிலாளர்கள், தாங்கள் வெற்றி பெற்றுவிட்டதின் சந்தோஷத்தையும், பூரிப்பையும் அதன் பலனையும் எடுத்துக் காட்டுகிற தோரணையில் மே தினத்தை ரஷியாவில் கொண்டாடுகிறார்கள். பிற தேசங்களில், தொழிலாளர்களின் குறைப்பாடுகளை பகிரங்கப் படுத்தி, பரிகாரம் வேண்டுகிற முறையிலும் தொழிலாளர்களின் சுபீக்ஷ வாழ்க்கை, சமதர்ம முறையாலும், தொழில் நாயக அரசாலும் (உணூஞ்ணிtச்ஞிணூச்ஞிதூ) அதாவது தொழிலாளர் குடிஅர (கணூணிடூஞுtச்ணூடிச்ண ஞீஞுட்ணிஞிணூச்ஞிதூ) சாலுமே சித்திக்கு மெனத் தீர்மானிக்கும் முறையிலும் மே தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவிலும், சில வருஷங்களாக மே தினம் இங்கொரு இடத்தில், அங்கொரு இடத்திலுமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்ற வருஷத்தில், இந்தியாவில் பல இடங்களில் கொண்டாடப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டிலோ, இவ்விழா மே மாதம் முதல் தேதி கொண்டாடப்பட்டது. பின் நமது பிரத்யேக வேண்டுகோளின்படி மே மாதம் 21ம் தேதி தமிழ் நாடெங்கணும் கொண்டாடப்பட்டது. சு.ம. வீரர்களே!...

ஹிந்தி வந்துவிட்டது இனி என்ன?  ஒருகை பார்க்க வேண்டியதுதான்

ஹிந்தி வந்துவிட்டது இனி என்ன? ஒருகை பார்க்க வேண்டியதுதான்

  தமிழ் நாட்டில் தமிழ் மக்களுக்கு ஹிந்தி பாஷையை கட்டாய பாடமாக கற்பிக்க வேண்டுமென்று பார்ப்பன மந்திரி தோழர் ராஜகோபாலாச்சாரியார் பிடிவாதமாக முடிவு செய்துவிட்டார். தமிழ் மக்கள் எவ்வளவோ தூரம் முயன்றும், எத்தனையோ கூட்டங்கள் மூலம் தங்களது அதிருப்தியையும், ஆத்திரத்தையும் காட்டியும் கனம் ஆச்சாரியார் சிறிதும் லட்சியம் செய்யவில்லை. உண்மையில் தமிழ் மக்களுக்கு ஹிந்தி நஞ்சு என்பதை எடுத்துக்காட்ட தமிழ் மக்கள் எடுத்துக்கொண்ட முயற்சி கொஞ்ச நஞ்சமல்ல. இன்று கனம் ஆச்சாரியார் மாத்திரமல்லாமல் கல்வி மந்திரியார் உள்பட மற்ற மந்திரிகளும் அவர்களது காரியதரிசிகளும் தமிழ் நாட்டில் பொதுக் கூட்டங்களில் தலை காட்ட முடியாத நிலை ஏற்பட்டிருப்பதற்குக் காரணம் இந்த ஹிந்தியை கட்டாயமாக நுழைக்க முயற்சித்ததுதான் என்பதை மனப்பூர்த்தியாக ஆச்சாரியார் உணர்ந்தும் அறைக்குள்ளாகவே இருந்து கொண்டாவது ஹிந்தியை புகுத்திவிட்டுத் தான் மறு காரியம் பார்ப்பது என்கின்ற விரதம் பூண்டு விட்டார். எனவே இனி கேட்டுக் கொள்ளுவதாலோ கெஞ்சிக் கொள்ளுவதாலோ சமாதானமான முறையில் வேறு...

சத்தியமூர்த்தியாருக்கு பிரைஸ்

சத்தியமூர்த்தியாருக்கு பிரைஸ்

  தோழர் எஸ். சத்தியமூர்த்தி அய்யர் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் இருந்து சென்னைக்குப் பிழைக்க வந்தவர். சரோஜினி அம்மையார் தலைமையில் நடந்த காஞ்சிபுரம் அரசியல் மகாநாட்டில் பெசண்டம்மையாரை வைததின் மூலம் முதல்முதலாக தலைகாட்டப்பட்டவர். அவரது வசவின் பெருமையை அறிந்து “இந்து’ “சுதேசமித்திரன்’ பத்திராபதிபர்களால் விலைக்கு வாங்கப்பட்டு அப்பத்திரிகைகளின் மூலம் தூக்கிவிடப்பட்டு பிரபலமடைந்தவர். அய்யர்  அய்யங்கார் சண்டையில் அய்யங்கார்களின் ஆயுதமாக இருந்து தோழர்கள் சி.பி. அய்யர், சீனிவாச சாஸ்திரி, பி.என். சர்மா, இந்தியன் ரிவ்யூ நடேசன் ஆகியவர்களை வைது ஐயங்கார்களால் பணமுடிப்பு முதலியவை பெற்று பெரிய அரசியல்வாதியாகி அப்புரம் ஒத்துழையாமையையும், நிர்மாணத் திட்டத்தையும் காரியத்தில் நடை பெருவதை ஒழிக்க இந்து, மித்திரன் பத்திராதிபர்கள், சத்தியமூர்த்தியை உபயோகித்துக் கொண்டதின் மூலம் அவர் எல்லா இந்திய அரசியல்வாதியாக விளம்பரம் பெற்று சுயராஜ்ஜியக் கட்சியால் அரசியல் தலைவர்கள் கூட்டத்தில் சேர்க்கப்பட்டு, இப்போது தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களில் முதல் வரிசையில் “”முதல்” ஆளாக தன்னை செய்து கொண்டு விளம்பரமும் பெற்று...

“பஞ்சகன்யாஸ்மரே…..”  – சித்திரபுத்திரன்

“பஞ்சகன்யாஸ்மரே…..” – சித்திரபுத்திரன்

  பார்ப்பன பாஷையில் ஒரு தோத்திர ஸ்லோக முண்டு. என்னவென்றால், “ஆகல்யா, துரோபதி, சீதா, தாரா, மண்டோதரி, ஸ்மிருதா, பஞ்சகன்யாஸ்மாரே நித்தயம் மஹாபாதக நாசனம்” இதன் கருத்து அகல்யை துரோபதை, சீதை, தாரை, மண்டோதரி ஆகிய ஐந்து கன்னிகைகளை தினம் நினைத்தால் மஹாபாதகமெல்லாம் நாசமாய் விடும் என்பதே. இதில் ஏற்பட்ட விவகாரத்திற்காகத்தான் “ஐந்துக்கு இரண்டு பழுதில்லை” என்கின்ற பழமொழி உண்டாக்கப்பட்டது. விவகாரத்தின் தன்மையாவது:- கோபமில்லாமல், பகுத்தறிவோடு கேட்க வேண்டும். ஏனென்றால், கோபம் வந்தால் பார்ப்பான் ஏமாற்றி விடுவான். கோபமில்லாவிட்டால் தான் அதிலிருக்கும் ரகசியம் விளங்கும். நான் கிளப்பப்போகும் விவாதம் இந்த ஸ்லோகத்தை எந்தப் பார்ப்பான் எழுதினானோ அந்தப் பார்ப்பான் எழுதி வைத்த சங்கதியைத்தான் சொல்லப்போகிறேன். ஆதலால் நான் என் உத்தேசப்படி சொல்லப்போவதாக நினைத்து ஏமாந்து போகாதீர்கள். இதில் கண்டிருப்பது வாஸ்தவமா, இல்லையா என்று ஒவ்வொரு பார்ப்பானையும் கேளுங்கள்; வாஸ்தவமல்ல வென்று சொன்னால் என்னைக் கேளுங்கள். முதலாவது அந்த ஸ்லோகத்தில் மேல்கண்ட ஐந்து...

100க்கு 50 கூட பார்ப்பனரல்லாதார் கூடாதா?

100க்கு 50 கூட பார்ப்பனரல்லாதார் கூடாதா?

  திருநெல்வேலி ஹிந்து காலேஜ்க்கு மதுரைத் தோழர் திரவியம் பிள்ளை அவர்கள் ஒரு லக்ஷ ரூபாய் தர்மமாகக் கொடுக்க முன் வந்து இருக்கிறார். இது அந்தக் காலேஜ் சாகுந் தருவாயில் இருப்பதைக் காப்பாற்ற இந்தச் சமயம் உயிர்ப் பிச்சை கொடுப்பதுபோல் ஆகும். இந்தப் பேருதவிக்கு தோழர் திரவியம் பிள்ளை அவர்கள் ஒரே ஒரு தயவைத்தான் நிர்வாகிகள் இடமிருந்து மாத்திரம் எதிர்பார்க்கிறார். அதாவது பள்ளி உபாத்தியாயர்களில் பகுதிப் பேர் பிரின்சுபால் உள்பட பார்ப்பனரல்லாதாராய் இருக்க வேண்டும் என்பதே. இதை தேசீயப் பத்திரிகை என்று வேஷம் போட்டுக் கொண்டு வாழும் பத்திரிகைகள் ஆ÷க்ஷபிக்கின்றன. ஆனால் இவை மனப்பூர்வமாக ஆட்சேபிப்பதாக நாம் நம்பவில்லை. பார்ப்பன ஆதிக்கத்துக்கு பயந்தே ஆட்சேபிக்கின்றன போலும். தோழர்கள் சிவசாமி அய்யர், வி. கிருஷ்ணசாமி அய்யர் முதலிய பல பார்ப்பனர்களால் நடத்தப்படும் பள்ளிக்கூடங்களில் எத்தனை பார்ப்பனரல்லாத உபாத்தியாயர்கள் இருக்கிறார்கள் என்பது இந்த பத்திரிகைக்காரர்களுக்கு தெரியாதா என்று கேட்கின்றோம். யாதொரு காரணமும் இல்லாமல் சிவசாமி...

பெண்கள் நிலையம்

பெண்கள் நிலையம்

  பெண்கள் நிலையம் என்பது பற்றி தோழர் இராகவன் அவர்கள் ஒரு அறிக்கை குடி அரசில் வெளியிட்டிருந்தார். அதைப் பற்றி பல தோழர்கள் நம்மை நேரிலும், கடித மூலமாகவும் கட்டுரைகள் மூலமாகவும் பல கேள்விகள் கேட்டு இருப்பதோடு தங்கள் தங்கள் அபிப்பிராயங்களையும், ஆதரவுகளையும் தெரிவித்து இருக்கிறார்கள். அதற்காக மிகுதியும் மகிழ்ச்சி அடைகின்றோம். சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய நோக்கங்களில் பெண்கள் விடுதலையும், பெண்கள் முன்னேற்றமும் ஒன்று என்பது இயக்கத்தை அறிந்த தோழர்கள் யாவரும் உணர்ந்ததேயாகும். இயக்கத்தின் நோக்கத்தைக் குறிப்பிடும் போதெல்லாம் இதை தெரிவித்தே வந்திருக்கிறோம். இந்திய நாட்டில் பெண்கள் சகல துறையிலும் தீண்டப்படாத மக்கள் அடைந்து வரும் கஷ்டத்தையும், இழிவையும், அடிமைத்தனத்தையும்விட அதிகமாகவே அனுபவித்து வருகிறார்கள். இக்கொடுமைகளாலும், குறைபாடுகளாலும் பெண்கள் சமூகத்துக்கு ஏற்படும் கெடுதியைவிட ஆண்கள் சமூகத்துக்கே அதிகக் கெடுதி ஏற்பட்டு வருகின்றது. பெண்களை அடிமையாக வைத்து இழிவாய் நடத்துவதின் பயனாய் ஆண்களுக்கு ஒரு அளவு நன்மை இருக்கின்றது என்று மேலெழுந்தவாரியாய் தெரிகின்றதே...

பெண்கள் விடுதலைக்கு  “ஆண்மை” அழியவேண்டும்

பெண்கள் விடுதலைக்கு “ஆண்மை” அழியவேண்டும்

  பெண்கள் விடுதலையின் பேரால் உலகத்தில் அனேக இடங்களில் அனேக சங்கங்களும், முயற்சிகளும் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டு வருவது யாவரும் அறிந்ததே. இம்முயற்சிகளில் ஆண்களும் மிகக் கவலையுள்ளவர்கள் போலக் காட்டிக்கொண்டு மிகப் பாசாங்கு செய்து வருகின்றார்கள். ஆண்கள் முயற்சியால் செய்யப்படும் எவ்வித விடுதலை இயக்கமும் எவ்வழியிலும் பெண்களுக்கு உண்மையான விடுதலையை அளிக்க முடியாது. தற்காலம் பெண்கள் விடுதலைக்காக பெண் மக்களால் முயற்சிக்கப்படும் இயக்கங்களும் யாதொரு பலனையும் கொடுக்காமல் போவதல்லாமல் மேலும் மேலும் அவை பெண்களின் அடிமைத்தனத்திற்கே கட்டுப்பாடுகளை பலப்படுத்திக் கொண்டேபோகும் என்பது நமது அபிப்பிராயம். எதுபோலென்றால் இந்தியப் பொது மக்கள் விடுதலைக்கு வெள்ளைக்காரரும், பார்ப்பனரும் பாடுபடுவதாக ஏற்பாடுகள் நடந்துவருதின் பலனாக எப்படி நாளுக்குநாள் இந்திய மக்களுக்கு அடிமைத்தனம், விடுதலை பெறமுடியாதபடி பலப்பட்டு என்றென்றைக்கும் கட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறதோ, அது போலவும், சமூக சீர்திருத்தம், சமத்துவம் என்பதாக வேஷம் போட்டுக்கொண்டு பார்ப்பனர்களும், புராணக்காரர்களும் சீர்திருத்தத்தில் பிரவேசித்து வருவதன் பலனாக எப்படி சமூகக்கொடுமைகளும், உயர்வு...

யார் மாறிவிட்டார்கள்?

யார் மாறிவிட்டார்கள்?

  யார் இழி மக்கள்? சுயராஜ்யம் சூட்சியேயாகும் சென்ற வாரம் குடியரசில் “”காங்கிரஸ் ஒரு வியாதி” என்பதாகப் பெயர் கொடுத்து ஒரு தலையங்கம் எழுதி காங்கிரசானது ஆரம்ப கால முதல் இது வரையிலும் சிறப்பாக காந்தி அயனத்திலும் மக்களை எப்படி ஏமாற்றமடையச் செய்து வந்திருக்கிறது என்பதையும் அதனால் இதுவரையில் யாதொரு நன்மையும் நாட்டுக்கோ, மனித சமூகத்துக்கோ ஏற்படவில்லை என்பதையும் அவ்வளவோடு அல்லாமல் கிரமமாகவும், இயற்கையாகவும் ஏற்பட வேண்டிய முற்போக்குகளுக்கெல்லாம்கூட முட்டுக்கட்டையாய் இருந்து வந்திருப்பதுடன் உலக நாகரீகத்தில் நாட்டை ஒரு கால் நூற்றாண்டுக்குப் பின் தள்ளி விட்டது என்பதும் விளங்க எழுதி இருந்தோம். மற்றும் அதே தலையங்கத்திலேயே காங்கிரஸ் பாமர மக்களை வஞ்சித்ததைப் பற்றியும், அது பணக்காரர்களுக்கும், படித்துவிட்டுப் பட்டம் பதவி பெற ஆசைப்படும் அரசியல் வேஷக்காரருக்கும், சோம்பேறியாய் இருந்து கொண்டே ஊரார் உழைப்பில் வயிறு வளர்த்து வாழ்க்கை நடத்த இருக்கும் பார்ப்பனர்களுக்கும் எவ்வளவு தூரம் கையாளாக இருந்து துணை புரிந்து வந்திருக்கின்றது...

பகிரங்கக் கடிதங்கள்

பகிரங்கக் கடிதங்கள்

  தோழர் அவர்களே! தங்களது ஆத்மசக்தி கடைசியாகத் தங்களைக் காலைவாரி விட்டுவிட்டதா? இல்லாவிட்டால் மனமுடைந்து இருளில் தடுமாறிக் கொண்டிருப்பதாகச் சொல்ல நேரிடுமா? அப்படியிருக்கும்போது மற்றவர்களையும் ஆத்மசக்தியை வளர்க்கச் சொல்லுகிறீர்களே. அவர்களையும் இருளில் திண்டாடவிடவா முடிவு செய்திருக்கிறீர்கள். இந்த யோசனை, “குருடன் குருடனுக்கு வழிகாட்டுவது” போலாகாதா? இந்தச் சந்தேகத்தைப் போக்குவதற்கு உடனே தங்களுடைய அந்தராத்மா (இன்னர் வாயிஸ்) என்ன சமாதானம் சொல்கிறதென்று கேட்டு அறிக்கை ஒன்று வெளியிடவும். அதற்குள் அவசரப்படுகிறவர்களுக்கு உங்கள் தடுமாற்றத்தைப் பற்றி நான் ஒரு வியாக்யானம் செய்து அவர்களை அடக்கிவைக்கிறேன். அதாவது முஸ்லிம் பொது மக்களை ஏமாற்ற இது ஒரு வழியென்று தோன்றுகிறது என்பதாகச் சொல்லிவைக்கிறேன். அந்த வியாக்கியானம் சரியா என்று தோழர் படேலை கேட்டுத் தெரிவிக்கவும். குட்பை. தோழர் மகாதேவ தேசாய் அவர்கள் இருக்கிற ஊர் தோழரே! தாங்கள் “ஹரிஜன்” பத்திரிகை நடத்துகிறீர்களே அதில் ஹரிஜன சமூகத்துக்காக ஒன்றையும் காணுமே. அந்தப் பேரை வைத்துக்கொண்டு ஊரை ஏமாற்றவா அல்லது...

   கடனுக்காக சிறையில்லை?

  கடனுக்காக சிறையில்லை?

  கடனுக்காக சிறைக்கனுப்பும் முறையை ரத்து செய்வதற்காக மைசூர் சட்டசபை மெம்பர் ஒருவர் ஒரு மசோதா கொண்டு வந்திருக்கிறார். திருவாங்கூர் சமஸ்தான கெஜட்டில் விவசாயிகள் பாதுகாப்புக்காக சர்க்கார் வெளியிட்டுள்ள விளம்பரம் ஒன்று பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. அதன் சாரமாவது@ இந்த அறிக்கையானது 3 மாத காலத்திற்கு அனுஷ்டானத்திலிருந்து வரும். இதன்படி பந்தக டிக்ரிகளையாவது, அல்லது விவசாயிகள் மீது ஏற்பட்டுள்ள வேறு டிக்ரிகளையாவது  3 மாத காலத்திற்கு நிறைவேற்றி வைக்கக் கூடாதென்று கவர்ன்மெண்டார் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், 6 வருஷங்களுக்கு முன் ஏற்பட்டுள்ள டிக்ரிகளை நிறைவேற்றி வைப்பதாவது, அல்லது விவசாயிகளின் ஜங்கம சொத்துக்களை ஜப்தி செய்வதையாவது இது பாதிக்காது. அதனுடன் காலாவதிக் கணக்கில் இந்தக் காலம் சேராதென்றும் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். விளைபொருள்களின் விலைவாசி மிகவும் குறைவாக இருக்கும் இந்தக் காலத்தில் விவசாயிகளுடைய நிலத்தை ஜப்தி செய்து ஏலத்திற்கு கொண்டு வருவதையோ, அல்லது அவர்களை வாரண்டில் பிடிப்பதையோ தடுக்க வேண்டுமென்பதே இந்த விளம்பரத்தின் நோக்கமாகக் காண்கிறது. குறிப்பு@ நமது...

காந்தி எச்சரிக்கை  – ஒரு காங்கரஸ் சி.ஐ.டி

காந்தி எச்சரிக்கை – ஒரு காங்கரஸ் சி.ஐ.டி

  காந்தியார் மந்திரிகள் ஒழுக்கமுடையவர்களாக இருக்க வேண்டுமென்று எச்சரிக்கை செய்திருப்பதாக பத்திரிகைகளில் பார்த்தேன். இதற்குக் காரணம் சில நாட்களுக்கு முன் சென்னையில் ஒரு மந்திரி தனது அந்தரங்க நண்பனுடன் நடு ஜாமத்தில் பெண் வேட்டைக்குச் சென்று திரும்பும் வேகத்தில் ஒரு நபரின் மீது மோட்டாரை விட்டுத் தள்ளினதோடு அந்த அடிபட்ட நபரை சிகிச்சைக்கு வேண்டிய காரியம் கூட செய்யாமல் விட்டு விட்டு ஓடிப்போய் விட்டதாகக் கூறப்படும் விஷயம் காந்தியாருக்குத் தெரிந்துதான் இம்மாதிரியான எச்சரிக்கை விட்டிருக்கலாம் என்று கருதுகிறேன். போலீஸ் இலாக்கா கமிஷனருக்குக்கூட இது சேதி எட்டி கவர்னர் பிரபு காதுக்கு எட்டி இருப்பதாகவும் சொல்லிக் கொள்ளப்படுகிறது. குடி அரசு – செய்திக் குறிப்பு – 01.05.1938

   வேண்டுகோள்

  வேண்டுகோள்

  சுயமரியாதை இயக்க கிளைச் சங்கத்தாரும், தென் இந்திய நல உரிமைச் சங்க கிளைச் சங்கத்தாரும் தயவு செய்து அந்தந்த முக்கிய பட்டணங்களிலுள்ள நீதி நிர்வாகப் போலீசு, போஸ்டாபீசு முதலிய எல்லா உத்தியோகஸ்தர்களிலும், குமஸ்தாக்களிலும் பார்ப்பனர்கள் எவ்வளவு பேர் பார்ப்பனரல்லாதார் எவ்வளவு பேர் இருந்து வருகிறார்கள் என்பதையும் வக்கீல்கள் எவ்வளவு பேர்கள் இருக்கிறார்கள் என்பதையும் பற்றிய லிஸ்டு ஒன்றை குடி அரசு பத்திரிகைக்கு அனுப்பிக் கொடுக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதை தயவு செய்து கவனிக்க வேண்டுகிறோம். குடி அரசு  வேண்டுகோள் 21.04.1935

ஜாதியை ஒழிப்பதால்  மதம் அழிந்து விடுமா?

ஜாதியை ஒழிப்பதால் மதம் அழிந்து விடுமா?

  ஓர் சமதர்மி இந்துக்களுக்குள் இன்றைய பழக்கங்களில் உள்ள ஜாதிப் பிரிவுகளுக்கு இந்து மதத்தில் ஏதாவது ஆதாரமிருக்கின்றதா என்று பார்ப்போமானால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்து வேதத்தில் பிராம்மணன் பிராமணரல்லாதார் என்கின்ற ஜாதிகள் தான் காணப்படுகின்றது. ருக் வேதத்தில் ஓரிடத்தில் நான்கு சாதிகள் கூறப்பட்டிருப்பதாகவும், அதுவும் இடையே பிற்காலத்தாரால் நுழைக்கப்பட்டதென்றும் ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். அந்த இரண்டு ஜாதியும் எப்படித் தெரிகின்றது என்று பார்ப்போமே யானால் பிராமணர்கள் இந்திரன் முதலிய தேவர்களைச் செய்யும் பிரார்த்தனைகளில் தஸ்யுகள் என்ற ஒரு சமூகம் அந்த பிராமணர்களுக்கு விரோதமாய் இருந்து அவர்களைத் துன்பப்படுத்துவதாகவும் அவர்கள் பிராமணர்களுடைய சுகபோகங்களுக்கு விரோதமாய் இருப்பதாகவும், ஆதலால் அந்த தஸ்யூகளை அழிக்க வேண்டும் என்றும் பிரார்த்திப்பதே பெரிதும் அந்தப் பிரார்த்தனையில் இருந்து வருவதால் அப்பிரார்த்தனைகளே வேதத்தின் பெரும் பகுதியை ஆக்கிரமித்திருப்பதால் வேத காலத்திலும் வேத ஆதாரத்திலும் இந்தியாவில் ஆரியர், ஆரியர் அல்லாதார் என்கின்ற இரண்டு ஜாதிகள் மாத்திரமே இருந்ததாக விளங்குகின்றது. ஆகவே...

வக்கீலும் வட்டிக்கடைக்காரனும் பொதுநல சேவைக்கு லாயக்கானவர்களா?

வக்கீலும் வட்டிக்கடைக்காரனும் பொதுநல சேவைக்கு லாயக்கானவர்களா?

  இந்திய நாட்டில் பொதுநல சேவை, ஜனப் பிரதிநிதித்துவம் என்பவை எல்லாம் 100க்கு 99 பாகம் வக்கீல் தொழில் செய்கின்றவர்களிடமும் பண லேவாதேவிக்காரர்களிடமும் தான் இருந்து வருகின்றன. வக்கீல்கள் என்பவர்கள் தம் தொழிலை நாணையம் ஒழுக்கம் என்பவைகளை ஒதுக்கி வைத்துவிட்டு எப்படி நடந்தால் பணம் சம்பாதிக்கலாம் என்கின்ற முறையையே முதலாக வைத்து வாழ்க்கை நடத்தும் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். இந்த தொழிலில் வெற்றி பெறுவதற்கும், விர்த்தி அடைவதற்கும் ஆகவே இவர்கள் பொதுநல சேவை என்கின்ற வேஷத்தை கையாள வேண்டியவர்களாகிறார்கள். இவர்களில் யாருக்காவது தற்செயலாக வக்கீல் தொழிலில் கிடைக்கும் ஊதியத்தைவிட இந்தப் பொதுநல சேவை வேஷத்திலேயே முழு நேரத்தையும் செலவழிப்பதின் மூலம் அதிக ஆதாயம் கிடைப்பதாய் இருந்தால் அப்படிப் பட்டவர்கள் வக்கீல் தொழிலை விட்டு விட்டு “”பொதுநல சேவைக்காரர்களாகவே” ஆகி விடுகிறார்கள். ஆன போதிலும் இவர்களது வக்கீல் தொழிலுக்காக தங்களை தகுதியாக்கிக் கொள்வதற்குப் பயன்படுத்திக் கொண்ட யோக்கியதைகள் இவர்கள் பொதுநல சேவை வேஷம் போட்டுக்...

காங்கிரஸ் ஒரு வியாதி

காங்கிரஸ் ஒரு வியாதி

  இந்திய தேசீய காங்கிரஸ் என்பது இந்தியாவுக்கு ஏற்பட்ட ஒரு வியாதியேயாகும். அது ஆரம்பித்த காலம் முதல் மனித சமூக முற்போக்கைத் தடை செய்து கொண்டே வருகிறது. அது ஏற்பட்ட இந்த 50 வருஷ காலத்தில் இந்திய நாடு பிற்போக்கடைந்திருக்கிறது என்று கூட சொல்ல வேண்டும். முதலில் காங்கிரசை ஏற்படுத்தியவர்களது நோக்கம் படித்தவர் களுக்குப் பெரிய பெரிய உத்தியோகம் வேண்டும் என்பதாக இருந்தது என்றாலும் அது நாளாவட்டத்தில் சமூகத் துறையில் பார்ப்பனர்களுக்கு உள்ள ஆதிக்கமும் மேன்மையும் குறையாமல் காப்பாற்றப்படவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. உதாரணம் வேண்டுமானால் இந்த 50 வருஷ காலத்தில் காங்கிரசினால் ஏதாவது ஒரு சமூக சம்பந்தமான காரியம் செய்யப்பட்டிருக்கின்றதா என்று பார்த்தால் நன்றாய் விளங்கும். அது மாத்திரமல்லாமல் சமூக சீர்திருத்த சம்பந்தமாக வந்த தீர்மானங்களை யெல்லாம் காங்கிரஸ் தலைவர்கள் என்று சொல்லப்படும் படியான தோழர் சத்தியமூர்த்தி அய்யர் போன்றவர்களும், காங்கிரஸ் தேசீயப் பத்திரிகைகளான இந்து, சுதேசமித்திரன் போன்ற பத்திரிகைகளும் எதிர்த்தும்...

ஜனநாயகமா? தடிநாயகமா?

ஜனநாயகமா? தடிநாயகமா?

  ஜனநாயகம் அல்லது குடி அரசு தோல்வியடைந்து விட்டது. முடி அரசு அல்லது யதேச்சாதிகார ஆட்சிதான் சிறந்தது என்கிறார் அந்தப் பழைய ஹோம்ரூல் வாதி திருவிதாங்கூர் திவான் ஸர்.ஸி.பி. ராமசாமி அய்யர், ஆனிபெசண்டு அம்மையாரின் பிரதம தளகர்த்தராய்- வலக்கையாய் இருந்த தோழர் ஸி.பி. ராமசாமி அய்யர் இப்பொழுது இவ்வாறு கூறக் காரணம் என்ன? அவரது சொக்காரரான சென்னை அக்ரகார மந்திரிகளின் யதேச்சாதிகாரப் போக்கைப் பார்த்து – ஹிட்லரிஸத்தைக் கண்டு வெறுப்படைந்து தான் அவர் ஒருகால் அப்படிச் சொல்லுகிறாரோ என்ற சந்தேகம் நமக்கு உண்டாகிறது. ஜனநாயக ஆட்சி நல்லதுதான். இதுவரை கண்டு பிடிக்கப்பட்டுள்ள ஆட்சிகளில் அதுவே சிறந்த ஆட்சியாம். அதைக் கண்டிப்பவர்கள் பிரதியாக ஒரு நல்ல ஆட்சிமுறையை இதுவரைக் கண்டு பிடிக்கவில்லையாம். இவை ஜனநாயக பக்தர்கள் கூறும் வாதங்கள். ஆனால் ஜனநாயக ஆட்சியை நடத்தி வைப்போர் ஜனநாயக தத்துவத்தையே அறியாமலிருந்தால் – அல்லது அறிந்திருந்தும் வேண்டுமென்றே யதேச்சாதிகாரத் தோரணையில் தர்பார் நடத்தினால் –...