Tagged: இந்தி திணிப்பு

வரலாறு ஒரே ஓட்டு வித்தியாசத்தில் ஆட்சி மொழியானது இந்தி

  மத்திய பா.ஜ.க ஆட்சி இந்தித் திணிப்பை தீவிரமாக்கி வரும் நிலையில் இந்த வரலாற்றுப் பின்னணியை அரசியல் நிர்ணயசபையில் நடந்த விவாதங்களை விளக்குகிறது. இந்தக் கட்டுரை; கட்டுரையை படிப்பதற்கு முன் சில விளக்கங்கள் தேவைப்படுகிறது. இந்தியா “சுதந்திரம்“ பெறும் 1947 ஆகஸ்ட் 15க்கு முன்பே 1946ம் ஆண்டிலேயே அரசியல் நிர்ணயசபை அமைக்கப்பட்டுவிட்டது. இந்த அரசியல் நிர்ணயசபையில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் யார்? 1935ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சி, இந்தியர்களுக்காக ஒரு அரசியல் கூட்டத்தை தயாரித்து அதனடிப்படையில் தேர்தல்களை நடத்தியது. அந்தத் தேர்தலில் அனைத்து குடிமக்களுக்கும் வாக்குரிமை கிடையாது சொத்து-கல்வி அடிப்படையில் நூற்றுக்கு 14 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்து தேர்ந்தெடுத்து நாடாளுமன்றம் அப்படியே அரசியல் நிர்ணயசபையாக மாற்றப்பட்டது. இதில் பெரும்பான்மை எண்ணிக்கையில் இடம் பெற்றிருந்தவர்கள் காங்கிரஸ் கட்சியினர்; 1946ம் ஆண்டில் அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணயசபை அரசியல்சட்டத்தைதயாரித்து -1949ம் ஆண்டு நவம்பர் 26ஆம் நாள் அரசியல் நிர்ணயசபையின் ஒப்புதலைப் பெற்றது. அரசியல் நிர்ணயசபையின் தலைவர்...

தமிழர் பண்பாட்டு பாதுகாப்பு மாநாடு – சென்னை சுவரொழுத்து பணிகள்

திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம்…. “இந்தி திணிப்பை எதிர்ப்போம் – இழந்து வரும் உரிமைகளை மீட்போம்” “தமிழர் பண்பாட்டு பாதுகாப்பு மாநாடு” சென்னை திருவான்மியூர் பகுதியில் “ஜீன் 04″ல் நடைபெறவிருக்கும் மாநாட்டிற்கான சுவர் விளம்பரம் தென்சென்னை பகுதியை சுற்றிலும் எழுதப்பட்டது…… முந்தைய நாள் தொடர்ச்சியாக 20052017 அன்று இரவும் தோழர்கள் சுவர் விளம்பரத்திற்காக பணிகளை மேற்கொண்ட போது….. திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

இந்தி திணிப்பு எதிர்ப்பு மாநாடு சென்னை 04062017

வெகுஜன மக்களின் மனதில் இந்தி படிப்பது அறிவென்றும், இந்தியை படித்தால் உயர்வென்றும் திட்டமிட்டு திணிக்கப் பட்டிருக்கிறது. ஆனால் இந்தியை மொழியாக வட மாநிலத்தவர்கள் பிழைப்பிற்காக தென் மாநிலங்களில் கூலி வேலைக்கும், கட்டிட வேலைக்கும் என புலம் பெயர்ந்தபடி உள்ளனர். வட மாநிலங்களில் பொருளாதாரத்தில் உயர்ந்துள்ளவர்கள் கூட, தரமான கல்விக்கு தென் மாநிலங்களை, குறிப்பாக தமிழ்நாட்டிலுள்ள கல்லூரிகளை தேர்ந்தெடுக்கின்றனர். காரணம் தமிழர்களுக்கு என்று தனித்துவமாக கலாச்சாரம், நாகரிகம் போன்றவையே காரணம். இந்தி படிப்பதில் என்ன தவறு இருக்கிறது? நிச்சயம் இல்லை அந்நிய மொழி அறிதல் அறிவே. ஆனால் அதுவே கட்டாயமாக்கப்பட்டு திணிக்கையில் நிச்சயமாய் எதிர்க்கக் கூடியதே . இந்தி ஏன் திணிக்கப்படுகிறது. பெரிதாய் ஆய்வுகள் தேவையில்லை. தனக்கென நாடில்லா ஆரியம், அகன்ட பாரத கனவிற்கு இந்து மதம் கொண்டு இந்தியாவை வடிவமைப்பது போலவே, அதை மேலும் பலப்படுத்தும் வண்ணம் ஒருமொழி கலாச்சாரத்தை கொண்டுவர முயலும் மொழி திணிப்பே இந்தியை அறிவென்பது. உலகத்தின் ஆதி...

இந்தி எதிர்ப்பு இயக்க பரப்புரை துண்டறிக்கை

திராவிடர் விடுதலைக் கழகத்தலைமை அறிவித்துள்ள ’இந்தி எதிர்ப்பு இயக்க பரப்புரைக்கான துண்டறிக்கை அச்சிட கழகத்தோழர்கள் கீழ் காணும் மாதிரியை பயன்படுத்திக்கொள்ளும் படி கேட்டுக்கொள்கிறோம் : இந்தித் திணிப்பை எதிர்ப்போம்! இழந்து வரும் உரிமைகளை மீட்போம்! இந்தியாவின் எத்தனையோ மாநிலங்களில் நமது தமிழ்நாட்டுக்குத் தனித்த சிறப்புகள் பல உண்டு. நம்மை வழிநடத்திய தலைவர்கள் நமக்காக போராடிப் பெற்றுத் தந்த உரிமைகள்தான் அதற்குக் காரணம்.ஒரு காலத்தில் நமது நாட்டுக்குப் பெயர் ‘சென்னை மாகாணம்’ என்பதுதான். அண்ணா முதலமைச்சராக வந்த பிறகு நாம் நமது நாட்டை ‘தமிழ்நாடு’ என்று அறிவித்துக் கொண்டோம். இந்தியாவின் ஆட்சி மொழி இந்தி என்று அரசியல் சட்டம் கூறுகிறது. ஆனாலும் நமது தமிழ்நாட்டின் எல்லைக்குள் இந்திக்கு இடமில்லை என்று அறிவித்து, தமிழும் ஆங்கிலமும் எமக்குப் போதும் என்ற இரு மொழிக் கொள்கையை உருவாக்கிக் கொண்டோம். பார்ப்பனிய ஜாதி அமைப்பு, ஒருவனை மேல் ஜாதி; ஒருவனைக் கீழ் ஜாதி என்று பாகுபடுத்தியது. படிக்கவும்,...

தமிழகத்தில் இந்தியைத் திணிப்பதை அனுமதிக்க முடியாது! ஜூன் 5இல் சென்னையில் மத்திய அரசு பெயர்ப் பலகையில் இந்தி அழிப்பு கழக தலைமைக் குழுவின் முக்கிய முடிவுகள்

சென்னையில் மத்திய அரசு அலுவலக வளாகமான சாஸ்திரி பவனில் உள்ள உள்துறை அமைச்சகத்தின் பெயர்ப் பலகையில் உள்ள இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்தை ஜூன் 5இல் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்துகிறது. இந்தியே இந்தியாவின் ஆட்சிமொழி என்பதை வலியுறுத்தும் 1976ஆம் ஆண்டு ஆட்சி மொழி விதிகள் இந்தியாவில் தமிழ்நாட்டுக்கு மட்டும் பொருந்தாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அதிகார பூர்வ அறிவிப்பிலேயே 1 (ii)ஆவது பிரிவில் “They shall extend to the whole of India, except the state of Tamil Nadu” – என்று தெளிவாக குறிப்பிடப்பட் டிருந்தது.  1987, 2007, 2011இல் திருத்தங்கள் செய்யப் பட்டன. 2007ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழ்நாட்டுக்கு தந்த விதிவிலக்கை நீக்கிவிட்டார்கள். இந்த உள்துறை அமைச்சக ஆவணத்தில் மாநில ஆட்சி மத்திய ஆட்சி களில் இந்தியைப் பயன்படுத்துதல் இரண்டு ஆட்சி களுக்கிடையிலான தகவல் தொடர்புகளில் இந்தியைப் பயன்படுத்துதல் குறித்து ஆட்சி...

இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் விரைவில்…

இந்திய அரசின் அலுவல் மொழி சட்டம் 1976 பிரிவு 1.ii. தமிழகம் நீங்கலாக அனைத்து இந்திய பகுதிகளுக்கும் என்று தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. இதை மீறி மத்திய அரசு தமிழகத்தில் எழுதும் ஒவ்வொரு இந்தி எழுத்தும் திணிப்பே. சட்ட விரோதமே. போராட்டங்கள் விரைவில்…