Tagged: ஆவணப்படம்

‘எஸ்.வி.ஆர்.’ ஆவணப்  படம் திரையிடல்

‘எஸ்.வி.ஆர்.’ ஆவணப் படம் திரையிடல்

சென்னை சந்திரசேகர் திருமண மண்டபத்தில் 4.6.2016 மாலை 4.30 மணியளவில் நடைபெற இருந்த “மனித நேயப் போராளி தோழர் எஸ்.வி.ஆர். ஆவணப் படத் திரையிடல் நிகழ்ச்சிக்கு காவல் துறை அனுமதி மறுத்தது. உடனே கழகத் தலைவர் ஆலோசனைப்படி கழகத் தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகரன் இல்லத்தில் மாலை 6.30 மணிக்கு நிகழ்ச்சிக்கான இடம் மாற்றப்பட்டது. இரவு 7.15 மணிக்கு இந்தியகம்யூனிஸ்ட் கட்சி மூத்த தோழர் நல்லகண்ணு வெளியிட ஆவணப் படத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி பெற்றுக் கொண்டார் நிகழ்வில் த.பெ.தி.க. பொதுச் செயலாளர் கோவை இராமகிருஷ்ணன், தியாகு, வ.கீதா, ஓவியர் டிராட்ஸ்கி மருது, பேராசிரியர் வீ.அரசு மற்றும் பல தோழர்கள் இயக்க நண்பர்கள் பங்கேற்றனர். கீழே காவலர்கள் நின்றிருக்க வீட்டின் மாடியில் ஆவணப் படம் திரையிடப்பட்டது. பெரியார் முழக்கம் 09062016 இதழ்

காவல்துறையின் கடும் எதிர்ப்பையும் மீறி அதிரடியாக நடைபெற்ற எஸ்.வி.ஆர். ஆவணப்பட வெளியீடு !

கழக தலைவர் வெளியிட தோழர் நல்லக்கண்ணு பெற்றுக்கொண்டார் ! 04.06.2016 சனிக்கிழமை, மாலை ”மனிதநேயப் போராளி தோழா் எஸ்.வி.ஆா்.” எனும் ஆவணப்பட வெளியீடு மற்றும் திரையிடல் சென்னை மேற்கு மாம்பலம்,சந்திரசேகர் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. நிகழ்சிகள் துவங்கும் நிலையில் திடீரென வந்த காவல்துறை நிகழ்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் இந்த திருமண மண்டபத்தில் நிகழ்சியை நடத்தக்கூடாது எனவும் மிரட்டல் விடுத்தது.அப்பட்டமான ஜனநாயக விரோதமாக நடந்து கொண்ட காவல்துறையின் அடாவடித்தனத்தை முறியடித்து குறும்பட வெளியீட்டை,திரையிடலை எப்படியும் நடத்தி விடுவது என தோழர்கள் முடிவு செய்தனர். உடனடியாக கழக தோழர் அன்பு தனசேகர் அவர்களின் இல்லத்தின் மேல் மாடியில் நிகழ்சியை நடத்த மாற்று ஏற்பாடு செய்தனர்.தோழர் அன்பு தனசேகர் அவர்கள் காவல் துறையின் மிரட்டகளை புறந்தள்ளி தன் வீட்டில் நிகழ்சியை நடத்த மகிழ்சியுடன் ஒப்புக்கொண்டு நிகழ்சிக்கான ஏற்பாடுகளை செய்தார். உடனடியாக நாற்காலி, ஒலிபெருக்கி, விளக்கு அனைத்தும் தயார் செய்யப்பட்டு 100 பேர்...

காந்தி படுகொலை ஆவணப்படம் வெளியீடு

காந்தி படுகொலை ஆவணப்படம் வெளியீடு

காந்தி படுகொலை குறித்து ஆவணப் படம் வெளியீடும், அதன் ‘உண்மை-பின்னணி’ என்ற தலைப்பில் கருத்தங்கமும் எஸ்.டி.பி.அய். கட்சி சார்பில் 3.2.2016 அன்று மாலை சென்னை எழும்பூர் இக்சா அரங்கில் சிறப்புடன் நடைபெற்றது. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எ°.எம். தெகலான் பாகவி ஆவணப்பட குறுந்தகட்டை வெளியிட பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பெற்றுக் கொண்டார். நிகழ்வில் கட்சியின் மண்டல செயலாளர் ஏ.கரீம், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, பொதுச் செயலாளர் சேக் முகம்மது அன்சாரி ஆகியோர் பேசினர். விடுதலை இராசேந்திரன், ஒரு மணி நேரம் சிறப்புரையாற்றினார். அரங்கம் முழுதும் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஏராளமாக பெண்களும் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 11022016 இதழ்

‘அகமணமுறை’ பாதிப்புகளை விளக்கிடும் ‘தீவரைவு’ ஆவணப்படம் திரையீடு

‘அகமணமுறை’ பாதிப்புகளை விளக்கிடும் ‘தீவரைவு’ ஆவணப்படம் திரையீடு

கருந்திணை தயாரிப்பில் தோழர் பூங்குழலி இயக்கத்தில் உருவான “தீவரைவு” ஆவணப் படத்தின் திரையிடல் கடந்த 9-05-2014, வெள்ளிக் கிழமை மாலை 6.30 மணிக்கு, சென்னை பனுவல் புத்தகக் கடை அரங்கில் நடைபெற்றது. நமது பண்பாட்டில் உறவுகளை நிலை நிறுத்துவதற்கும், புதிய உறவுகளை உருவாக்கு வதற்கும் திருமணம் ஒரு முக்கிய களமாக இருக் கிறது. இந்த திருமணமுறையானது உறவுகளை மட்டுமல்ல, ஜாதியையும் நிலைநிறுத்தி வருகிறது. பல நூற்றாண்டுகளாக ஜாதிக்குள் நாம் ஏற்படுத்திக்கொள்ளும் மண உறவுகள், சமுதாயத்தில் உடல் ஊனம், மன ஊனம், மருத்துவ ஊனங்களை அதிகமாக்கி வருகிறது. தொடர்ச்சியாக ஜாதிக்குள் நடைபெற்று வரும் திருமண முறையால், உருவாகும் அடுத்தத் தலைமுறை, உளவியல், உடலியல் ரீதியாக எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுகிறது என்பதை மருத்துவ, மரபணு மற்றும் மானுடவியல் அறிஞர்களின் மூலம் விளக்குகிறது இந்த ஆவணப்படம். கருந்திணையும் பனுவலும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இத்திரையிடல் நிகழ்வில் தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் துணைத் தலைவரும், இந்த...