காந்தி படுகொலை நாள் சிந்தனை: பாசிசத்தை தமிழகம் ஏற்காது
‘விடியல்’ ஜனவரி மாத இதழில் விடுதலை இராசேந்திரன் எழுதிய கட்டுரை. ஜனவரி 30, காந்தி, கோட்சேயின் துப்பாக்கிக் குண்டுக்கு பலியான நாள். அந்த நாளை நியாயமாக இந்துத்துவா எதிர்ப்பு நாள் என்று அறிவித்திருந்தால் சரியாக இருக்கும். ஆனால், தீண்டாமை எதிர்ப்புக்கு அரசு ஊழியர்கள் உறுதி ஏற்கும் நாளாக அது குறுக்கப்பட்டது. பார்ப்பனியத்தின் திட்டமிட்ட ஒரு சதி தான். இந்திய வரலாற்றில் காந்தியின் ஆளுமை பாத்திரத்தை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. அவருடன் உடன்படுகிற முரண் படுகிற கருத்துகள்; அவரை உறுதியாக ஆதரித்தவர்கள், எதிர்த்தவர்கள் இருவருக் குமே உண்டு. தவறான புரிதல்களில் அவ்வப் போது குழப்பமான கருத்துகளை வெளிப் படுத்தியவர்தான் காந்தி. ஆனால் அதற்கு உள்நோக்கம் அவரிடம் ஏதும் இல்லை என்றுதான் மதிப்பிட வேண்டியிருக்கிறது. இந்தியாவை இந்துக்களின் இராஷ்டிர மாக்குவதே – சித்பவன் பாப்பனரான திலகர் கேட்ட சுயராஜ்யம். திலகர் காலத்துக்குப் பிறகுதான் காங்கிரஸ் தலைமை காந்தியிடம் வருகிறது. காந்தி தனது சுதந்திரப் போராட்...