அருஞ்சொல் பொருள்
அகவிலை – தவச விலை
அக்ஷராப்பியாசம் – எழுத்துப் பயிற்சி
அடி வண்டல் – நீர் ஒதுக்கிவிட்ட மண்
அடிமாய்ந்து – அறவே ஒழிந்து
அத்தியந்த – மிகவும்
அநுகுணம் – ஏற்ப உள்ளது
அந்தகாரம் – இருள், அறியாமை
அநித்தியம் – நிலையாமை, நிலையற்றது, பொய்
அபயஸ்தம் – அடைக்கலம்
அபிமானித்தது – ஆதரித்தது
அபீஷ்டம் – மிகு விருப்பம்
அமிதமாக – அளவில்லாமல்
அயனம் – பிறப்பு, வரலாறு
அரிவரி கணக்கு – நெடுங்கணக்கு (அரிச்சுவடி)
அனந்தம் – பயனற்றது, எல்லையில்லாதது
அனாதரவு – உதவியின்மை
ஆக்கினை – கட்டளை
ஆக்கினை – கட்டளை, ஆணை
ஆயுள் பரியந்தம் – ஆயுள்வரை, ஆயுள் முழுதும்
ஆவலாதி – அவதூறு, குறை கூறுதல்
ஆவலாதி – குறை கூறுகை, அவதூறு
ஆஸ்பதம் – இடம், பற்றுக்கோடு
இச்சகம் – நேரில் புகழ்தல்
உபாதானம் – அரிசிப் பிச்சை
உருப்படுத்தி – சீர்படுத்தி
ஊட்டுப்புரை – உணவளிக்கும் சாலை
ஏகாக்கிரஹிகள் – ஒன்றிலே மனம் ஊன்றியவர்கள்
கடவை – வழி, வாயில்
கட்டியம் – புகழ்மொழி
கலகாஸ்பதம் – கலகத்துக்கு இடம்
கனபாடி – மறையுரை வல்லான்
குச்சிக்காரி – விலை மகளிர்
குச்சிக்காரி – விலைமகளிர்
குமரி இருட்டு – விடியலுக்கு முன் உள்ள இருட்டு
கூளாங்காலன், ஜம்புலிங்கம் – அந்த நாளைய பிரபலமான கொள்ளைக்காரர்கள்
க்ஷேமாபிவிர்த்தி – நல மேம்பாடு
கிப்பாத்து – ஊதியம்
கிரியாம்சை – செய்கை
கிரியாம்சை – செய்கை
கிராமாதிகாரிகள் – ஊர்த் தலைவர்கள்
கிரேயசு – கடவுள் புண்ணியம், அருட்கொடை
காபர் – இஸ்லாமியர்கள் பிற மதத்தினரை இழித்து கூறும் சொல்.
காலதேசவர்த்தமானம் – கால இடங்களின் நிலைமை
காஷ்டத்தில் – சிதை நெருப்பில்
கொடிவழிப்பட்டி – மரபுவழி, பரம்பரை
சங்கற்பம் – மனக் கற்பனை
சம்பத்து – செல்வம், பொன், பேறு
சம்ரக்ஷணை – காப்பாற்றுகை
சரீரப்பிரயாசை – உடலுழைப்பு
சன்னை – சமிக்கை, எள்ளுதற் சொல்
சுணங்கன் – நாய்
சுண்டாங்கி – சிக்கனமாய் வாழ்பவர்
சுணை – சுரணை, அறிவு
சுதர்மம் – இயல்பு, நல்லறம்
சுதினம் – நல்ல நாள்
சுதாவில் – தன்னளவில்
சுதாவில் – தன்னளவில், நேரில்
சூசனை – குறிப்பு
சூசனை – குறிப்பு, திட்டம்
சித்திரான்னம் – புளி, எள், சர்க்கரை முதலியன கலந்து செய்யப்பெற்ற கூட்டு சோறு
சின்னபின்னம் – கண்டதுண்டம்
சீஷன்கள் – மாணாக்கர்கள்
சாங்கேதிகக் கல்விச் சாலை – கட்டுப்பாட்டில் உள்ள கல்விச்சாலை
சாமக்கிரிகை – துணைக் கருவி
செளகார் – பணப் பேரத்தன்
தகரப்போகணி – தகர நீர்க்கலம்
தகரப்போகணி – தகர நீர்க்கலம் (தகர பாண்டம்)
தத்தாரி – கண்டபடி திரிவோர்
ததாஸ்து – அவ்வண்ணமே ஆகுக
தம்பிடி – ஒரு காசு ( அணா)
துவஜாரோகணம் – கொடியேற்றம், தொடக்கம்
துறவை – இரகசியத்தை
திரணமாய் – அற்பமாய், துரும்பாய்
திரவிய சகாயம் – பொருள் உதவி
திருஷ்டாந்தம் – எடுத்துக் காட்டு
தாம்பிர நாணயம் – செப்பு நாணயம்
தாரதம்மியம் – ஏற்றத் தாழ்வு
தேசோத்தாரண – நாட்டு வளர்ச்சி
தேஜோமயமாய் – எழில் மயமாய்
நசுங்குச் சேட்டை – தொடர்ந்து குறும்பு செய்தல்
நிரைச்சல் – ஓலை முதலியவற்றால் இடும் அடைப்பு
நிவேதனம் – படையலமுது
நிஷ்காமிய கர்மம் – பயன் கருதாத செயல்
நிஷ்டூரம் – கொடுமை
பங்கா – பட விசிறி
பங்கா – படவிசிறி
பசலி – கி.பி. 591 முதல் தொடங்கப்பட்டதும் பேரரசர் அக்பரால் நடைமுறைப்படுத்தப் பட்டதுமான அலுவலாண்டு
பச்சவாதம் – ஒரு சார்பாக
பர்த்தி – இணை, ஒப்பு, படி
பரிகரித்து – நீக்கி
பரிசாரம் – ஏவல் தொழில், சமையல் தொழில்
பரிபாலித்தல் – பாதுகாத்தல், அருளுதல்
பலிதம் – பயன்
பஸ்மீகரம் – சாம்பல்
புரோக்ஷணம் – மந்திர நீர் தெளிப்பு
புனருத்தாரணம் – மீண்டும் நிலை நிறுத்துகை
பூளைப் பூவு – வெற்றிப்பூ, இலவமரப் பூ
பிரதிக்கினை, பிரதிக்ஞை – சூளுரை, உறுதிமொழி
பின்னப்படுத்தினால் – சிதைத்தால்
பாஷாணம் – நஞ்சு
பொக்கம் – பொய், வஞ்சகம், குற்றம்
பொக்கு – பொருக்கு (தானிய நொறுங்கு)
பொக்கிகள் – தறுதலைகள்
பேணி – பணியாரம்
மண்டூகம் – தவளை, மடயன்
மனோகரமான – இன்பமான, இனிப்பான
ரயத்துகள் – உழவர்கள், குடியானவர்கள்
லளிதம் – இனிமை, எளிமை
வியக்தமாக – வெளிப்படையாக
வியக்தமாய் – வெளிப்படையாய்
வியாபகம் – எங்கும் நிறைந்த தன்மை
வாக்கின் – ஙிச்ஞ்ணிண, தொடர்வண்டியில் பொருளேற்றிச் செல்ல பயன்படுத்தப்படும் பெட்டி
வாயலில் – வாயிலில்
ஸரஸம் – பரிகாசம், இனிமை, காம விளையாட்டு
ஸ்பஷ்டம் – தெளிவாக
ஸ்வரம் – உயிரெழுத்து
ஜபம் – மந்திரம், வழிபாடு