காங்கிரசுக்கு ஏன் ஓட்டு செய்யக்கூடாது?
- அதற்கு கொள்கை இல்லை
- அது ஒரு சமூகம் தவிர மற்ற சமூக முன்னேற்றத்தைத் தடுக்கவே வேலை செய்கிறது.
- வருணாச்சிரமம் சம்மந்தப்பட்ட பழைய முறைகளை புதுப்பிக்கவே வேலை செய்கிறது.
- அதனிடத்தில் ஒரு காலத்திலாவது நாணயம் இருந்ததில்லை.
- அதில் சமய சஞ்சீவிகளும், காலிகளும், வருணாச்சிரமிகளுமே ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.
- அதன் தலைவர்கள் சொல்லுகின்ற காரியங்கள் எதுவும் அனுபவ சாத்தியமானதல்ல.
- அதனால் இதுவரை ஒரு பலனும் ஏற்பட்டதில்லை.
- அது ராஜபக்தி – சர்க்கார் பக்தி பிரமாணம் செய்து ராஜாவை சர்க்காரை கவிழ்த்து விடுகிறேன் என்று பொய் சொல்லுகிறது.
- ஓட்டு செய்துவிட்டு பின்னால் முட்டாள் தனமாக ஏமாந்து போனோமே என்று விசனப்படப் போகிறீர்கள்.
குடி அரசு – வேண்டுகோள் – 17.01.1937
~cstart
ஜஸ்டிஸ் கட்சிக்கு ஏன் ஓட்டு செய்ய வேண்டும்?
~cmatter
- அது சமூக முன்னேற்றத்தையும் மக்கள் சமத்துவத்தையும் கொள்கையாய் கொண்டு பாடுபடுகிறது.
- வருணாச்சிரம முறையை மாற்றி மக்களை சுயமரியாதையுடன் வாழ வேலை செய்து கொண்டு வருகிறது.
- ஆரம்பகாலம் முதல் இதுவரை நாணயமாகவும் குறிப்பிட்ட கொள்கையில் ஏமாறாமலும் வேலைசெய்து வந்திருக்கிறது.
- தீண்டாமையை படிப்படியாய் ஒழித்துக் கொண்டுவருகிறது.
- சகல மக்களுக்கும் அரசியலில் பிரதிநிதித்துவம் வழங்கி இருக்கிறது.
- ஜனங்களை அது ஒரு நாளும் ஏமாற்றவில்லை.
- பொட்டுக்கட்டுவதை ஒழித்தது, கோவில் தாசி முறையை ஒழித்தது, விபசாரத்தை ஒழித்தது, கல்வியை அதிகரித்தது, கட்டாயக் கல்வி ஏற்படுத்திற்று, ஆஸ்பத்திரிகளை அதிகப்படுத்தியது, தமிழ் வைத்தியத்தை பிரபலமாக்கியது, சுங்கத்தை எடுத்தது, குடியானவர்களுக்கு இனாம் பூமி சட்டம் ஏற்படுத்திற்று, 100க்கு 12லீ வரி குறைத்தது, மலையாள குடிவார மசோதா செய்தது, விவசாயிகளுக்கு கடன் உதவச் செய்தது, அதிக தூரம் ரோட்டுகள் ஏற்படுத்திற்று, பாலங்கள் ஏராளமாய் கட்டிற்று, புதிய வரிகளைத் தடுத்து வந்திருக்கிறது, சம்பளங்களை குறைத்துக் கொண்டது.
- அது ராஜபக்தி – சர்க்கார் பக்தி பிரமாணம் செய்து ராஜாவை சர்க்காரை கவிழ்த்து விடுகிறேன் என்று பொய் சொல்லவில்லை.
- ஓட்டு செய்துவிட்டு பின்னால் முட்டாள்தனமாக ஏமாந்து போனோமே என்று விசனப்பட மாட்டீர்கள்.
குடி அரசு – வேண்டுகோள் – 17.01.1937