காங்கரஸ்வாதிகள் மதுபானம் செய்வதுண்டா?

– ஓர் சந்தேகி

நமது சென்னை மாகாணத்தில் காங்கரஸ் மந்திரிகள், இவர்கள் காரியதரிசிகள், சட்டசபை (மேல்சபை கீழ்சபை) மெம்பர்கள், தலைவர்கள், உபதலைவர்கள், காங்கரஸ்கமிட்டித் தலைவர்கள், உபதலைவர்கள், காரியதரிசிகள், மெம்பர்கள், கதர் போர்டு நிர்வாகஸ்தர்கள், ஊழியர்கள், சாய நெசவு நூல் நூற்கும் வேலைக்காரர்கள், மது விலக்குப் பிரசாரகர்கள், கதர் பிரசாரகர்கள், ஹிந்தி பிரசாரகர்கள், ஹரிஜன ஊழியர்கள், நாலணா காங்கரஸ் மெம்பர்கள், மற்றும் பிரபல வட நாட்டு – தென்னாட்டுத் தலைவர்கள், தேசீயப் பத்திரிகை ஆசிரியர்கள் ஆகிய இவர்களில் உள்நாட்டுக் கள், சாராயம், வெளிநாட்டு பிராந்தி, பீர், உஸ்கி மதுவகைகள் உபயோகப்படுத்தாமல் பதிவிரதைகளாயிருப்பவர்கள் எத்தனை பேர்கள்? மதுபான வகைகள் அவசியம் உபயோகிக்காமலிருக்க முடியாது. அதுதான் என் உயிர். அதில்லாமல் நான் உயிர்வாழ முடியாது என்று மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் குடிப்பவர்கள் – மது வகைகளை உபயோகப் படுத்துகிறவர்கள் எத்தனை பேர்கள்? இவைகளை புள்ளி விபரங்களுடன் பிரதம மந்திரி கனம் ஆச்சாரியார் தெரிந்து வெளியிடுவாரா?

குடி அரசு – கட்டுரை – 10.10.1937

You may also like...