தமிழர் போர் மூண்டுவிட்டது எதற்காக?
~subhead
தமிழுக்காக
~shend
தமிழர் தன்மானத்துக்காக தமிழர் அறிவு, கலை, வீரம் ஆகியவற்றிற்காக,
எனவே
~subhead
தமிழா உன் கடமை என்ன?
~shend
மாதம் 75 ரூபாய் காசுக்கு எதிரியின் காலை நக்குவதா? அற்ப பதவிக்காக சகலத்தையும் உதிர்த்து தமிழை, தமிழனை, தமிழ்நாட்டை காட்டிக்கொடுத்துவிட்டு வளையல் போட்டுக்கொண்டு முக்காட்டிட்டு மூலையில் குந்தி இருப்பதா? சீச்சீ இது சிற்றினப் பிழைப்பல்லவா?
~subhead
மற்றென்ன உன் கடமை?
~shend
எதிரியின் கூட்டுறவை ஒழி.
வீரத்துடன் வெளியில் வந்து மார்தட்டு.
கிளர்ச்சிப் போரில் முன்னணியில் நில்லு.
எதிரி வெட்கப்பட, அறிவு பெற, ஓடி ஒழிய
உன் உயிர்விடத் தயாராகு.
இவை உன்னால் ஆகாவிட்டால் காசுகொடுத்து ஆதரித்து நீ தமிழன் என்பதையாவது காட்டிக்கொள்.
குடி அரசு – அறிவிப்பு – 29.05.1938