அருஞ்சொல் பொருள்
அசார்சமாய் – ஈடுபாடு காட்டாமல், கவலையற்று
அமரிக்கை – அமைதி
ஆதிக்யம் – தலைமை
இடை – எடை
உதாரத்தன்மை – பெருங்கொடைத் தன்மை
உத்திரணி – பஞ்ச பாத்திரக் கரண்டி, தீர்த்தம்,
எடுத்தற்குரிய சிறுகரண்டி
ஐஸ்வர்யம் – செல்வம்
கனப்படவில்லை – இறுமாப்படையவில்லை
கியாதி – புகழ்
கெண்டி – கமண்டலம்
சிக்ஷித்து – தண்டித்து
சுயகாரிய சித்திபெற – தன் காரியம் கைகூட
தர்க்கிக்கப்படுதல் – விவாதித்தல்
தற்பித்து – பயிற்சி, தகுதியாக்கல்
தனிகர் – செல்வர்
தியங்கும்படி – கவலையடையும்படி
திரவிய சகாயம் – பொருளுதவி
நிர்த்தாக்ஷண்யம் – இரக்கமின்மை
நிஷ்டூரம் – கொடுமை, வெறுப்பு
பத்ததி – ஒழுங்கு
பலவைகளை – பலவற்றை
பாஷ்யம் – விளக்கவுரை
புனருத்தாரணம் – மீணிலை நிறுத்தம்
முடத்தெங்கு – கோணலாக வளர்ந்த தென்னை
முச்சலிக்கை – உடன்படிக்கை
ரக்ஷிப்பது – காப்பாற்றுவது
வதிந்து – தயங்கி
வியக்தமாய் – பெருமையாய்
வியாகூலம் – கவலை